அன்னா பென்

கொட்டுக்காளி’ அரக்கி… யார் இந்த அன்னா பென்?

யார்ரா இந்த சைக்கோனு கும்பளாங்கி நைட்ஸ் படம் பார்த்துட்டு ஃபகத் ஃபாஸிலை திட்டாத ஆள்களும் இல்லை, என்னடா இந்தாளு இப்படி நடிக்கிறான்னு பாராட்டாத ஆள்களும் இல்லை. ஃபகத் ஃபாஸிலுக்கு சமமா ஷேன் நிகம், அன்னா பென், சௌபின் சாஹிர்னு எல்லாரும் பின்னியிருப்பாங்க. ஆனால், அன்னா பென் ஸ்பெஷல். ஏன்னா, அன்னா பென்னுக்கு முதல் படம் இதுதான். படம் ரிலீஸ் ஆனதும், கும்பளாங்கி நைட்ஸ் ஃபகத் ஃபாஸில் மாதிரி அதாவது ஷம்மி மாதிரி ஒரு கணவன் உங்களுக்கு வந்தா என்ன பண்ணுவீங்கனு அன்னா பென்கிட்ட கேட்டாங்க. அதுக்கு அவங்க சொன்ன பதில் இருக்கே? அதுமட்டுமில்ல அன்னா பென்னை ஏன் வினோத் ராஜ் செலக்ட் பண்ணாரு?

அன்னா பென் பதிலை தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி ஒரு ஃப்ளாஷ் பேக் போய்ட்டு வந்துடுவோமா?

இன்ஸ்டாகிராம்ல, புது படத்துக்கான ஆடிஷன் நடக்குது. இந்த வயசுல உள்ள பொண்ணுங்க அப்ளை பண்ணலாம்னு போஸ்ட் ஒண்ணு அன்னா பென் பார்க்குறாங்க. நடிக்கணும்னு ஆசை. ஆனால், நடிக்க வருமான்ற பயம்… சரி, என்ன நடக்குதோ பார்த்துக்கலாம்னு ஃபோட்டோஸ் அனுப்புறாங்க. செலக்ட்லாம் ஆகுறாங்க. அவங்க அப்பா மிகப்பெரிய சினிமா ரைட்டர் மம்முட்டில இருந்து திலீப் படங்கள் வரைக்கும் எழுதியிருக்காரு. ஏகப்பட்ட ஹிட்ஸ் கொடுத்துருக்காரு. அப்பாகிட்ட போய், நான் நடிக்கப்போறேன்னு சொன்னதும்… இதெல்லாம் நமக்கு தேவைதானா? நடிக்க வருமா? கேவலப்படுத்திடுவியானு ஜாலியா கேட்ருக்காரு. சரி, ஆடிஷன் போய்ட்டு வானு சொல்லி அனுப்புறாரு.

ஆடிஷன்ல செலக்ட் ஆனா மட்டும்தான் உங்க பெயர் சொல்லுவேன். இல்லைனா, அப்டியே கப்சிப்னு கிளம்பி வந்துடுவேன்னு அப்பாக்கு சத்தியம் பண்ணிட்டு கிளம்புறாங்க. 4 ரௌண்ட் ஆடிஷன் நடக்குது.. எல்லாம் பார்த்துட்டு நல்லா நடிக்கிறீங்க. நீங்க செலக்ட்னு சொல்றாங்க. சரி, உங்க அப்பா யாரு? என்ன பண்றாரு? அப்டினு கும்பளாங்கி நைட்ஸ் டீம் கேள்வி கேட்கும்போது, பென்னி பி நாயரம்பலம்னு அப்பா பெயரை சொல்றாங்க. எல்லாரும் ஷாக்… ஏன், இதை முதல்லயே சொல்லல? அப்டினு இப்டினு பாராட்டி, அவங்கப்பாக்கு ஃபோன் பண்ணி செமயா நடிக்கிறாங்கனு டீம் பேசுறாங்க.

பேபி மோள் கேரக்டரை இவங்கள தவிர வேற யார் பண்ணியிருந்தாலும் அவ்வளவு நல்லாருக்காதுனு சொல்ற அளவுக்கு தரமான நடிப்பை கொடுத்துருப்பாங்க. ஃபகத் வந்து என்ன பேசிட்டு இருந்தீங்கனு கிச்சன்ல கேட்கும்போது, பெர்சனல்னு சொல்ற சீனா இருக்கட்டும்… ஷேன் நிகம்கூட வர்ற காதல் சீன்ஸா இருக்கட்டும், கிளைமாக்ஸ்ல எதிர்த்து பேசுறதா இருக்கட்டும், லவ் லெட்டர் கொடுத்த சம்பவத்தை சொல்ற ஜாலியான சீனா இருக்கட்டும் எல்லாத்துலயும் பேபி மோளா பின்னியிருப்பாங்க.

கும்பளாங்கி ஹிட்டாகி போய்ட்ருக்கும்போது ‘ஷம்மி மாதிரி ஹஸ்பண்ட் வந்தா, என்ன பண்ணுவீங்க’ அப்டினு கேள்வி கேட்குறாங்க. அந்த ஆளை சகிக்ககூட முடியல. இதுல ஹஸ்பண்ட் வேற… நான் ஓடிருவேன். எனக்கு பாபி மாதிரி ஹஸ்பண்ட்தான் வேணும்’னு சொல்லுவாங்க. சரி, பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதும் ஃபகத் இவங்களைக் கூப்பிட்டு, முதல் படம் உன்னை சூஸ் பண்ணியிருக்கு. இனி வரக்கூடிய படங்களை நீதான் சூஸ் பண்ணி நடிக்கணும்னு சொல்லியிருக்காரு. அதை இன்னைக்கு வரைக்கும் பெர்ஃபெக்ட்டா ஃபாலோ பண்றாங்கனே சொல்லலாம்.

ஹெலன், கப்பேலா, சாராஸ் இப்படி அடுத்தடுத்து அவங்க செலக்ட் பண்ண படங்கள் எல்லாமே வுமன் செண்டிரிக் படங்கள்தான். எல்லாமே பிளாக்பஸ்டர் ஹிட். இதுபோக நாரதன்ல தொடங்கி கல்கி வரை சில கேரக்டர்ஸும் பண்ணியிருக்காங்க. ஹெலன்லாம் ஒரு ரூமுக்குள்ள மாட்டிட்டு நடிக்கிறது… அட்டகாசம் பண்ணியிருப்பாங்க. எல்லாம் சரிதான், வினோத் ராஜ் நடிகர்களை வைச்சு கதை எழுதுற ஆள் இல்லை. கூழாங்கல்ல எல்லாமே அந்த நிலத்தைச் சேர்ந்தவங்க வந்து வாழ்ந்துட்டு போய்டுவாங்க. அப்படி இருக்கும் போது ஏன் அன்னா பென்னை வினோத் ராஜ் செலக்ட் பண்ணாருன்ற கேள்வி எல்லாருக்கும் இருக்கும். 

மதுரையை ஆண்டவங்க மீனாட்சி. மீனாட்சியோட கண்ணு ரொம்ப அழகா இருக்கும். அந்த கேரக்டர் பெயர் மீனா. எனக்கு அன்னா பென் கண்ணு ரொம்ப புடிக்கும். கண்ணு, ரியாக்‌ஷன்ஸ் வழியாவே படம் முழுக்க நிறைய விஷயங்களை கம்யூனிகேட் பண்ணனும். இதெல்லாம் யோசிக்கும்போது அன்னா பென் அவ்வளவு ஆப்டா அந்த கேரக்டருக்கு இருந்தாங்க. அதுனாலதான் அவங்களை செலக்ட் பண்ணேன்னு சொல்லுவாரு. 

சூரிக்குள்ள ஒரு லட்சம் பேர், அன்னா பென்குள்ள ஒரு லட்சம் பேர் நின்னு சண்டைப்போட்டா எப்படி இருக்குமோ, அந்த கேரக்டர்ஸ் அப்படிதான் இருக்கும்னு அவங்கக்கிட்ட எக்ஸ்பிளையின் பண்ணியிருக்காரு. ரெண்டு பேரும் அதை உள்வாங்கி கேரக்டரை பிரிச்சிருக்காங்கன்றதை அந்த ட்ரெயிலர்லயே முடிவு பண்ணிட்டோம். இப்படி அன்னா பென் தரமான பல சம்பவங்களை பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்சம் வருஷத்துல இதே மாதிரியான கேரக்டர்ஸ் செலக்ட் பண்ணி நடிச்சா… ஒன் ஆஃப் தி பெஸ் ஆக்டரா அவங்க இருப்பாங்கன்றதுல சந்தேகமே இல்லை. 

Also Read – பைபிள், ஜாதகம், ஃபெவிகால் டப்பா… விஜய் கட்சிக்கொடி அலப்பறைகள்!

1 thought on “கொட்டுக்காளி’ அரக்கி… யார் இந்த அன்னா பென்?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top