லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ்ல முதல் மியூசிக் டைரக்டர் சாம்.சி.எஸ், அடுத்த மியூசிக் டைரக்டர் அனிருத், `கடைசியாத்தான் வந்தாரு விநாயக்’ன்ற மாதிரி சமீபத்துல இணைந்த மியூசிக் டைரக்டர்தான் சாய் அபயங்கர். பென்ஸ் படத்தோட டைட்டில் டீசர் பார்த்துட்டு, என்னடா எல்லாமே வெறித்தனமா இருக்கு. அதுவுமே மியூசிக் சும்மா பின்னியிருக்காங்க. அனிருத்தான்னு எல்லாரும் பேசிட்டு இருக்கும்போது, வெல்கம் ஆன் போர்ட்னு லோகி வந்து அபயங்கர இண்ட்ரோ பண்ணாரு. ப்ரோ நீங்களா மியூசிக் பண்ணிங்க… வேறமாறி வேறமாறி.
அம்மாவும் அப்பாவும் பாடகர்கள் அதுனால சின்ன வயசுல இருந்து இயல்பாவே பாடுற பையனாதான் இவரு இருந்துருப்பார். ஆனால், அதை மெருகேற்றிக் கொண்டு வந்து வரிசையா ஹிட்டு கொடுக்குறதுதான் மாஸே. தினமும் வழக்கமா மியூசிக் பிராக்டிஸ் பண்றப்போ, ஒரு வார்த்துல கிட்டத்தட்ட எட்டு டியூன் போட்ருக்காரு. அதுல சில பாட்டுக்கு அவரோட நண்பர்களை வைச்சு வரியையும் எழுதியிருக்காரு. சரி, இதை வெளியிடலாம்னு முடிவு பண்ணி வந்தப் பாட்டுதான் கட்சி சேர, வந்த முதல் வாரமே பாட்டு ஹிட்டு.
கட்சி சேர பாட்டு அவ்வளவு பெப்பியா, புதுசா இருந்தாலும் இன்ஸ்டா முழுக்க இந்தப் பாட்டு சுத்த ஹுக் ஸ்டெப் தான் காரணம். சின்னக் குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் இந்தப் பாட்டுக்கு அவ்வளவு வைப் பண்ணி சுத்திட்டு இருந்தாங்க. தனுஷ் இந்தப் பாட்டைக் கேட்டுட்டு அவருக்கு ஃபோன் பண்ணு அதைப் பத்தி ரொம்ப நுணுக்கமா பேசியிருக்காரு. நீங்க இந்தப் பாட்டுல பெர்ஃபாமராவும் இருக்கணும். அதுதான் ரொம்ப முக்கியம்னு சொல்லியிருக்காரு. செலிபிரிட்டீஸ்லாம்கூட இதுக்கு வைப் பண்ணாங்க. கட்சி சேர வைப் முடியுறதுக்குள்ள் அடுத்த பாட்டை இறக்கி எல்லாரையும் வைப் பண்ண வைச்சாரு.
ஆசைக்கூட, கட்சி சேர பாட்டைவிட ஹிட்டு. எந்த அளவுக்குனா, ஆசைக்கூட வார்த்தைக்கு அர்த்தம் என்ன சவுண்ட் நல்லாருக்குனு மற்ற மொழிக்காரங்க கூகுள்ள தேடுற அளவுக்கு ஹிட்டு. அதுலவும் அந்த டான்ஸ்ல வர்ற ஹுக் ஸ்டெப் இன்னும் இன்ஸ்டால டிரெண்டாகிட்டு இருக்கு. அடுத்தப் பாட்டு எப்போ ரிலீஸ் பண்ணப் போறீங்கனு எல்லாரும் கேட்கும்போதுதான், தலைவன் லோகிகூட கூட்டணி அமைச்சு அவரோட யுனிவர்ஸ் பக்கம் வந்துட்டாரு நம்ம அபய். இவருக்கு மாஸா மியூசிக் போட வரும்னு யோசிச்சுக்கூட பார்த்துருக்கலாம் மாட்டோம். ஆனால், நிஜமாவே இந்த டீசர் மியூசிக்ல சம்பவம் பண்ணிட்டாரு.
சாய்யோட நண்பர் ஒருநாள் ஒரு நல்ல கதை இருக்கு. உனக்கு சர்பிரைஸும் இருக்குனு இவரை கூட்டிட்டுப் போயிருக்காரு. அங்கப்போனால், பாக்யராஜ் கண்ணன். சார் உங்கப் படமா கதை கேட்காமலேயே பண்ணி இருப்பேன்னு சொன்னதும், இல்லை கதை கேளுங்கனு முழுக் கதையும் சொல்லியிருக்காரு. இவரும் அதை புடிச்சுப் போய் அக்சப்ட் பண்ணியிருக்காரு. அப்புறம் அந்த டீசர் மியூசிக்லாம் கேட்டு சாய் அபயங்கரை லோகேஷ், பாக்கியராஜ் எல்லாரும் பாராட்டியிருக்காங்க். எல்.சி.யுக்குள்ள இன்னொரு மியூசிம் டைரக்டர், அதுவும் புது மியூசிக் டைரக்டர் மாஸ்ல?
இன்னொரு இண்ட்ரஸ்டிங்கான விஷயம் ஆசைக்கூட பாட்டு ரிலீஸானப்போதான் பென்ஸ் படத்துக்கு இவர் கம்மிட் ஆகியிருக்காரு. அவர்கிட்ட இருக்குற ஸ்பெஷலே பல்ஸ புடிக்கிறதுதான். அதை ரொம்ப அழகா எல்லாருக்கும் புடிக்கிற மாதிரி மாத்திடுறாரு. அந்த மேஜிக் சாய்க்கு கண்டிப்பா கை கொடுக்கும். வாழ்த்துகள்!
Also Read – கிரிஞ்சுகளுக்கு நடுவுல கோல்டு… அல்டி இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்ஸ்!
Noodlemagazine I appreciate you sharing this blog post. Thanks Again. Cool.