கிட்ஸ் லைக் வாழை டீச்சர்…
மென்ஸ் லைக் ராஜாவின் பார்வையிலே டீச்சர்…
லெஜண்ட்ஸ் லைக்… இந்த இடத்துல ஒரு பாஸ் விடுவோம். லெஜண்ட்ஸ் லைக் பண்ற டீச்சர் யார்னு கடைசி பார்ப்போம்.
ராஜாவின் பார்வையிலேல வர்ற டீச்சர் – வடிவேலு ரிலேஷன்ஷிப் வெறும் சீன் லவ் இல்லை. சின்ஸியர் லவ். டீச்சர் ஊரைவிட்டு போற சீன்ல வர்ற கான்வர்சேஷன் மட்டும் போது, கொய்யால… மனிதர் உணர்ந்துகொள்ள மனிதக்காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது… புனிதமானது… புனிதமானதுனு சொல்ல.
வடிவேலு அழுதுகிட்டே ஓடி வந்து… டீச்சர் உங்களுக்கு கேன்சர் வந்து ஊர விட்டே போறீங்களாமேன்னுவாரு. அது கேன்சர் இல்லை டிரான்ஸ்ஃபர். டிரான்ஸ்ஃபர்னா? ஊரைவிட்டு ஊரு போறது. ஐயோ, இது அதைவிட ரொம்ப கொடியதாச்சேன்னுவாரு. அந்த வலி இருக்கே… நீ ஒரு மாணவன், நான் ஒரு டீச்சர், நீயும் நானும் கல்யாணம் பண்ணிகிட்டா, இந்த ஊரு உலகம் எவ்வளவு தப்பா பேசும். நீ மட்டும் எப்படியாவது கஷ்டப்பட்டு படிச்சு எட்டாவது பாஸ் பண்ணிட்டு வா, நாம கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழலாம்ன்னுவாங்க. கள்ளக்காப்பியடிச்சாவது பாஸ் பண்ணி, பந்தைக் கேட்ச் புடிச்ச இதே இடத்துல வெயிட் பண்றேன்னுவாரு.
தமிழ் சினிமால இந்த சீன் ரொம்பவே முக்கியமானது. ஏன்னா, எந்த மாணவனும் டீச்சர்கிட்ட போய் உங்கள கல்யாணம் பண்ணனும்னு சொல்ல மாட்டான். எந்த டீச்சரும் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அக்சப்ட் பண்ண மாட்டாங்க. அதுவும் எட்டாவது படிக்கிற பையன. அதை கற்பனையாவும் நகைச்சுவாயும் வெளிப்படுத்தி இந்த சீனை பார்க்கும்போதெல்லாம் நாமளே நம்ம லவ் பண்ண டீச்சர்கிட்ட அந்த காதலை சொன்ன மாதிரி ஃபீல் பண்ண வைக்கிறதுலாம் அல்டிமேட் விஷயம்ல? அதான் முக்கியம்ன்றேன்.
மாரி செல்வராஜ் படங்கள்ல டீச்சர்ஸ் எப்பவும் ஸ்பெஷல். ஆனால், ஃபஸ்ட் பிளேஸ் கொடுத்தா வாழைதான். நம்ம எவ்வளவு சேட்டைப் பண்ணி, படிக்காமல் சுத்திட்டு, ஃபெயில் ஆகிட்டு இருந்தாலும் ஸ்கூல்ல அந்த ஒரு டீச்சர் மட்டும் நம்ம மேல அன்பா இருப்பாங்க. அந்த டீச்சரோட சாயல் வாழை பூங்கொடி டீச்சர்கிட்ட இருக்கு. அதுனாலதான் அவ்வளவு ரைட்டப்ஸ்களை நம்மளால பார்க்க முடிஞ்சுது. எல்லாருக்கும் கனெக்ட் ஆகுற மாதிரியான பாயின்ட்ஸை இந்த டீச்சரை வைச்சு பேச முடியாது. ஏன்னா, வெவ்வேறு சூழல்ல அந்த டீச்சரை கனெக்ட் பண்ணியிருப்பாங்க. சாயல் மட்டும்தான் இங்க செட்டாகும். அதுனால, வாழை டீச்சர் எப்பவுமே எல்லாருக்குமே ஸ்பெஷல் தான். லவ் யூ டீச்சர்!
ராட்சசில வர்ற ஜோதிகாவும் செம டீச்சர். ஸ்கூலயே அழகா மாத்தியிருப்பாங்க. அதுலயும் மாற்றுத்திறன் கொண்ட டீச்சர் ஒருத்தங்க வருவாங்க. அவங்க இந்தியா மேப் சொல்லிக்கொடுக்குற சீன் ஒண்ணு வரும். அவ்வளவு சூப்பரான சீன். பரியேறும் பெருமாள்ல வர்ற தேவதை டீச்சர், மாஸ்டர்ல வர்ற மாளவிகா டீச்சர், பட்டாளம் படத்துல வர்ற நதியா டீச்சர், ஹரிதாஸ் படத்துல வர்ற சினேகா டீச்சர்னு நாம லவ் பண்ற நிறைய டீச்சர்ஸ் தமிழ் சினிமால இருக்காங்க.
எல்லாம் ஓகே தான். ஆனால், லெஜண்ட்ஸுக்கு எப்பவுமே புடிச்ச டீச்சர்னா, நாட்டாமை டீச்சர்தான். பெர்சனல் வாழ்க்கையோட இந்த டீச்சரைக் கனெக்ட் பண்ணிக்க முடியாது. ஆனால், தமிழ் சினிமா டீச்சர்ஸ்னு சொன்னா, இவங்களைத் தவிர்த்துட்டு பேசவும் முடியாது. நாட்டாமைல அண்ணனையும் தம்பியையும் பிரிச்சு, பல இளசுகளை ஏங்க வைச்சு, ஊரையே ஒரு வழி பண்ண டீச்சர்னா சும்மாவா? கறிக்கொழம்பு பாட்டுலாம் சான்ஸே இல்லை. முந்தானை முடிச்சு படத்துல வர்ற டீச்சரும் இவங்களை மாதிரிதான். பல பெருசுகளை ஏங்க வைச்ச டீச்சர். இப்படி பல படங்கள்ல கிளாமரா டீச்சர்ஸை வைச்சு வைரல் ஆக்கியிருப்பாங்க. இவங்களை ஜாலியான, படத்துக்கு தேவையான டீச்சர்ஸா வைச்சுக்கலாம்.
வாழை டீச்சர் கேரக்டர்ல என்ன இருக்கு? என்னதான் இருந்தாலும் ஒரு டீச்சரை இப்படிலாம் லவ் பண்றது தப்புலனு பேசுற பூரா பயலும் யாரு? ஒருகாலத்துல இந்த நாட்டாமை டீச்சருக்கும், முந்தானை முடிச்சு டீச்சருக்கும் ஃபயர் விட்டு பேசிட்டு இருந்தவங்கதான். என்னைப் பொருத்தவரைக்கும் லெஜண்ட்ஸா இருக்குறதைவிட கிட்ஸா இருந்தா ஏகப்பட்ட அழகான மெமரீஸ் நம்ம கூடவே இருக்கும்?
நான் இப்போ சொன்ன லிஸ்ட்ல பெண் டீச்சர்ஸ்தான் இருக்காங்க. ஆண் டீச்சர்ஸ் லிஸ்ட் ஒண்ணு இருக்கு. வேணும்னா கமெண்ட்ல சொல்லுங்க.