சூர்யா

சூர்யாவுக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது?!

ஒரு சிலர் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு Effort எடுப்பாங்க. அது சக்ஸஸ் ஆகுற நேரத்துல குறுக்க எதாவது வந்து குட்டையக் குழப்பிடும். இந்த மாதிரி மொமன்ட்ஸ் சூர்யாவுக்கு நிறைய முறை நடந்திருக்கு. அவர் வித்தியாசமான கான்சப்ட்ல படம் பண்றப்போலாம் அதே மாதிரி ஜானர் படம் அவருக்கு முன்னாடியே ரிலீஸ் ஆகிடும். உதாரணத்துக்கு ஒரு மூணு படம் சொல்றேன். 

மாற்றான்… இந்தப் படம் 2011-ல அனவுன்ஸ் பண்ணாங்க. அப்போ இந்தியாவுலயே Conjoined Twins கான்சப்ட்ல வர்ற முதல் படமா இதுதான் இருந்தது. ஆனா நடுல கொஞ்சம் டிலே ஆகி 2012 அக்டோபர்லதான் இந்தப் படம் ரிலீஸ் ஆனது. அதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி 2012 செப்டம்பர்ல ப்ரியாமணி நடிச்ச ‘சாருலதா’ படம் ரிலீஸ் ஆகிடுச்சு. அதுவும் இதே மாதிரியான கான்சப்ட்ல வந்ததுல மாற்றான் ரெண்டாவது படமாகிடுச்சு.

24.. டைம் டிராவல் பத்தின கதையை 2010-லயே எடுக்கணும்னு நினைச்சாரு டைரக்டர் விக்ரம் குமார். முதல்ல விக்ரம்தான் ஹீரோவா நடிக்க வேண்டியது. சில ரீசன்னால தள்ளிப்போய் 2014 ஆகஸ்ட்ல சூர்யா இந்தப் படத்துல நடிக்கப்போறதா அறிவிப்பு வந்தது. இது நடந்து சில மாசம் கழிச்சுதான் 2014 அக்டோபர்ல  இன்று நேற்று நாளை படத்தோட அறிவிப்பு வந்தது. இதுவும் டைம் டிராவல் கான்சப்ட்தான். இதுல சங்கட்டம் என்னன்னா.. இன்று நேற்று நாளை 2015 ஜூன்ல ரிலீஸ் ஆனது. சூர்யாவோட 24 படம் கிட்டத்தட்ட ஒரு வருசம் கழிச்சு 2016 மே மாசம் ரிலீஸ் ஆச்சு. ஆனா டைம் டிராவல் கான்சப்ட் முதல்ல பண்ணது இந்தப்படம்தான்.

இதே மாதிரி NGK படத்துக்கும் நடந்தது. ரகுல் ப்ரீத் சிங் எலெக்சன் வொர்க் பண்ணித் தர்ற மாதிரி கான்சப்ட் தமிழ்ல புதுசா பண்ணிருந்தாங்க. ஆனா அதே கான்சப்ட்ல LKG வந்து ஹிட் ஆகிருச்சு. இங்கயும் முதல்ல அனவுன்ஸ் பண்ணது சூர்யாவோட NGK பட் முதல்ல ரிலீஸ் ஆனது ஆர்.ஜே. பாலாஜியோட LKG. 

இப்போ சூர்யா ஃபேன்ஸ் வேண்டுதல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். ‘கங்குவா’க்கு இப்படி எவனும் குறுக்க வந்துடக்கூடாதுனுதான். ஆனா ஜூனியர் என்.டி.ஆரோட தேவாரா படத்தோட டிரைலரும் கங்குவா டிரைலரும் ஒரே மாதிரி இருக்குனு விமர்சனங்கள் வருது. ஒரு ஷாட் ரெண்டும் அப்படியே ஒரே மாதிரி இருக்கு. இப்பவும் தேவாராதான் முதல்ல ரிலீஸ் ஆகப்போகுது.

Also Read -AI முதல் DeAging வரை… 2024 தமிழ் சினிமாவில் நடந்த புதுமைகள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top