மங்காத்தா விநாயக் மகாதேவ்

விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி… பெஸ்ட் வில்லன் யார்?

மங்காத்தா விநாயக், தி கோட் ஜீவன், நானே வருவேன் கதிர், மாஸ்டர் பவானி… இந்த லிஸ்ட்ல யார் பெஸ்ட் வில்லன்னு கேட்டா என்ன சொல்லுவீங்க? ஒவ்வொரு வில்லன் கேரக்டருக்கும் உள்ள யுனிக்னஸ் என்ன?

மங்காத்தா விநாயக் மகாதேவ்

சுதா கொங்கரா… ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரைக் கூட்டிட்டு வந்து, unapologetic வில்லனா நடிக்க வைக்கிறாரு. அவரும் அந்த வில்லன் ரோலை பண்றாரு. இவரும் பண்ண வைக்கிறாரு. செமயா இருந்துச்சுனு சொன்னாங்க. எப்படிப்பட்ட வரிகள்? இன்னைக்கு டாப் ஹீரோக்கள்ல, கொடூரமான வில்லன் யாருனு கேட்டா, விநாயக் மகாதேவ்தான் நியாபகம் வருவாரு. அந்த ரோலுக்கு இன்னொருத்தரை யோசிக்க வைக்க முடியாத அளவுக்கு சம்பவம் பண்ணியிருப்பாரு. ஈவில் வில்லனுக்கு பெஸ்ட் எக்ஸாம்பிள். பணம்தான் அவருக்கு எல்லாம். அதைத்தவிர நண்பர்கள், காதலி, வேலை, குடும்பம் எதையும் கொஞ்சம்கூட மதிக்காத வில்லனா அவன் பண்றதெல்லாம் பார்க்கும்போது… வில்லன்னா விநாயக்தான்னு தோணும். இண்டர்வெல்லா சிரிக்கிறது, ட்ரெயின்ல மிரட்டுறதுனு ஒவ்வொண்ணும் பக்கா… இந்தியால ஒரேயொரு மங்காத்தாதான், ஒரேயொரு விநாயக்தான், சந்தேகமே இல்லை.

தி கோட் ஜீவன்

விஜய் வில்லனா பண்ண ரெண்டு, மூணு கேரக்டர்ஸ்ல பெஸ்ட். அழகிய தமிழ் மகன்லலாம் சுத்தமா வொர்க் ஆகியிருக்காது. இதுல கொஞ்சம் வொர்க் ஆகியிருக்கும். மெட்ரோ ஃபைட், ஹலமதி ஹபிபோ டான்ஸ், காதலிச்சவங்களையே கொல்லும்போது பண்ற நக்கல்லாம் ஓகே. படம் ரிலீஸ் முன்னாடி பயங்கரமா ட்ரோல் பண்ண கேரக்டரும் இவர்தான், படம் ரிலீஸானப்பிறகு பயங்கரனா கொண்டாட வைச்ச கேரக்டரும் இதுதான்னு மீம் ஒண்ணு டிரெண்டாச்சு உண்மைதான். ஆனால், வெங்கட்பிரபு சொன்ன அளவுக்கு சைக்கோ கேரக்டர்லாம் இல்லை. கொல்றதைத்தவிர வேற எதுவும் பண்ணலன்றதுதான் உண்மை. ஆனால், பயங்கரா டிவிஸ்ட் வில்லனா இருந்தது பிரபிதேவாதான். அஜ்மலை கவனிச்சு உங்களை கோட்டைவிட்டு மன்னிக்க முடியாத சினிமா ஃபேனா தலைகுனிஞ்சு உட்கார்ந்துருக்கேண்னு டாக்டர் டெம்ப்ளேட்லாம் பக்கா!

நானே வருவேன் கதிர்

கடந்த சில வருடங்கள்ல… என்னடா இவ்வளவு டெரரா இருக்குனு நினைக்க வைச்சுது நானே வருவேன் கதிர்தான். அதுவும் அந்த டிரான்ஸ்ஃபர்மேஷன் சீன்ல தலையை தூக்கிட்டு கண் மட்டும் இறக்கி.. ரன்னு சொல்றதுலாம்… யார்ரா நீ சைக்கோனுதான் சொல்லத்தோணும். அதேமாதிரி அவர் புள்ளைங்க, மனைவியெல்லாம் மிரட்டுறது எல்லாமே கொடூரமாதான் இருக்கும். தனுஷுக்கு அந்த வில்லன்னு கேரக்டர் அவ்வளவு பெர்ஃபெக்ட்டா செட் ஆகும். சைக்கோ வில்லனுக்கான பத்து பொருத்தமும் பக்காவா இருக்குனு அந்த கேரக்டரைப் பார்த்து சொல்லலாம். அதுக்கூட யுவனோட மியூசிக் சேரும்போது, பெஸ்ட்.

மாஸ்டர் பவானி

நக்கல், சைக்கோ, சுயநலம் எல்லாம் கலந்த எக்ஸ்ட்ரீம் வில்லனா பவானி கலக்கியிருப்பாரு. எவ்வளவு பெரிய சைக்கோவா இருந்தா ஒருத்தனை கையால அடிச்சே சாகடிக்கணும்னுலாம் ஒருத்தனுக்கு தோணும். அந்த ஒரு பாயிண்ட் போதும். அதேமாதிரி இன்னொரு எக்ஸ்ட்ரீம்… குளிக்கும்போது தலைல கொம்பு மாதிரி வைச்சு நக்கலா மாஸ்டர்ட்ட பேசுறது. பவானியைப் பொறுத்த வரைக்கும், மாஸ்டர்… அவன் வாழ்க்கைல பாஸிங்க்ல போர ஒரு கேரக்டர் அவ்வளவுதான். அதை அவ்வளவு ஈஸியா ஹேண்டில் பண்ணிட்டு இருப்பான். அந்த ஈஸி ஹேண்டில்தான் இன்னும் கொடூரமா இருக்கும். பவானி இஸ் ஆல்வேஸ் அல்டிமேட்.

விநாயக், ஜீவன், கதிர், பவானி இந்த நாலு பேர்கிட்டயும் யுனிக்னஸ்னு ஒண்ணு இருக்கு. அதுனால கம்பேர் பண்ண முடியாது. ஆனால், ஒரு ரேட்டிங்கா வைச்சா… முதல்ல விநாயக், ரெண்டாவது பவானி, மூணாவது கதிர், நாலாவது ஜீவன்னு சொல்லலாம். 

Also Read – ரஜினியின் ‘மனசிலாயோ’… மலேசியா வாசுதேவன் சம்பவங்கள்!

6 thoughts on “விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி… பெஸ்ட் வில்லன் யார்?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top