மேலூர் கணேஷ் தியேட்டர்

மொக்கை படங்களும் ஹிட்டாகும்… மேலூர் கணேஷ் தியேட்டரின் ‘ஜில்ஜில்’ சீக்ரெட்! 

எவ்ளோ மொக்கை படமா இருந்தாலும் மேலூர் கணேஷ் தியேட்டர்ல கூட்டம் கூடிடும். ஏன்னா மதுரை மேலூர் கணேஷ் தியேட்டருக்கு படம் பார்க்க வர்ற கூட்டத்தைவிட அங்க ஐஸ்கிரீம் சாப்பிட வர்ற கூட்டம் அதிகம். அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். கிட்டத்தட்ட 50 வருசமா பல பிளாக்பஸ்டர் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்தான் மேலூர் கணேஷ் தியேட்டர். இந்த தியேட்டருக்கு இன்னொரு ஸ்பெஷல் இருக்கு. நடிகர் ராமராஜன் இந்த தியேட்டர்லதான் டிக்கெட் கொடுக்கிற வேலை பார்த்தாரு. இந்த தியேட்டரோட ஓனர் சினிமா பொட்டி வாங்க அடிக்கடி சென்னைக்கு வருவாரு. அப்படி வரும்போது ராமராஜனையும் கூட்டிட்டு வருவாரு. அப்படித்தான் சினிமாக்காரங்களோட நட்பு ஏற்பட்டு நடிகரா மாறுனாரு ராமராஜன்.

Melur, Madurai : மேலூர்: கணேஷ் திரையரங்கில் ஆன்லைன் குற்றங்களை தடுப்பது  குறித்த விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட மாவட்ட சைபர் கிரைம் போலீசார் ...

அதுமட்டுமில்லாம பெரிய நடிகரானபிறகு சொந்தமா தியேட்டர் கட்டுற அளவுக்கு வளர்ந்தாரு. இயக்குநர் சேரனும் நான் பார்த்து வளர்ந்த தியேட்டர்னு மேலூர் கணேஷ் தியேட்டரை ரொம்ப பெருமையா சொல்வாரு.1976-ல இருந்து செயல்படுற அந்த தியேட்டர்ல 1986 வரைக்குமே கேண்டீன் வெளில ஒருத்தருக்கு காண்ட்ராக்ட் கொடுத்து பண்ணிட்டு இருந்தாங்க. அந்த டேஸ்ட் சரியா வரல, நாமளே கேண்டீன் எடுத்து நடத்தலாம்னு முடிவு பண்றாங்க. மதுரை சினிப்ரியா தியேட்டர்ல வேலை பார்த்த தன்னோட ஃப்ரெண்ட்கிட்ட ஐஸ்கிரீம் எப்படி தயாரிக்குறதுனு கத்துக்கிறாங்க. அவங்களோட பண்ணைலயே உற்பத்தியாகுற பால்ல ஐஸ்கிரீம் தயாரிக்குறாங்க. டேஸ்ட் அள்ளுது. ஒரு ஐஸ்கிரீம் ஒரு ரூபாய்னு கொடுக்க ஆரம்பிக்குறாங்க. இன்னைக்கு அங்க ஐஸ்கிரீமோட விலை 20 ரூபாய்தான். இந்த கோன் ஐஸ் சாப்பிடுறதுக்காகவே மொக்கை படத்துக்கு தியேட்டர்ல கூட்டம் குவியுது.

100 பேர் படம் பார்க்க வந்தா 95 பேர் ஐஸ்கிரீம் வாங்குவாங்களாம். அப்போ பார்த்துக்கோங்க.  கொரோனா காலத்துல தியேட்டர்கள்லாம் மூடி இருந்தது. அப்போ மக்களே போய், படம்தான் போடல, ஐஸ்கிரீமாச்சும் விக்கலாம்லனு ஐடியா கொடுக்க, லாக்டவுன் டைம்ல கேண்டீனை மட்டும் திறந்து கோன் ஐஸ் வித்துருக்காங்க. அதுவும் அந்த டைம்ல 20 ரூபாய் ஐஸ்கிரீமை 15 ரூபாய்க்கு வித்துருக்காங்க. சென்னை மக்களுக்கு எப்படி சத்யம் தியேட்டர் பாப்கார்ன் ஃபேவரிட்டோ அப்படி மேலூர் மக்களுக்கு கணேஷ் தியேட்டர் ஐஸ்கிரீம் ஃபேவரிட்னு சொல்லலாம். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top