இந்தக் கதை கொஞ்சம் விநோதமா இருக்கலாம். ஆனா.. 40 வருஷத்துக்கு முன்னாடி சென்னையில நடந்ததா சொல்லுறாங்க…
அப்போது.. மக்கள் சைக்கிள் அதிகமா பயன்படுத்திக் கொண்டிருந்த நேரம்.. இரவு வேலையை முடித்துவிட்டு ஒரு பாலம் வழியாகத்தான் வீட்டுக்கு போகணும். பாலத்துக்கு கீழேயே சுடுகாடு இருக்குறதுனால, மிட் நைட்டுல அந்தப் பக்கம் யாருமே போக மாட்டாங்க.. ஏன்னா… சுடுகாட்டுல புதைக்கப்பட்டவங்களாம் பாலத்துல தான் நைட்டு வாக்கிங் போவாங்கன்னு மக்களுக்கு ஒரு பயம். அப்படியான ஒருநாள்… ஒருத்தரு வேலைய முடிச்சுட்டு பாலம் வழியா வீட்டுக்கு போய்ட்டு இருந்திருக்காரு. பாலத்தோட பாதி வந்துட்டாரு.. அதுக்கு மேல யாரோ அவரை கூப்பிடுறமாதிரி இருந்திருக்கு. திரும்பி பார்க்க பயம். சைக்கிளை வேகமா ஓட்டலாம்னு பார்த்திருக்காரு.. அதுவும் முடியலை… உறுமல் சத்தம் கேட்டிருக்கு.. டபுள்ஸ் இல்ல.. ட்ரிப்பிள்ஸ் வச்ச மாதிரி ஒரு கணம் சைக்கிள்ள இருந்திருக்கு. சைக்கிளோட தடுமாறி கீழ விழுந்தவரு ஓடியடிச்சு பாலத்தை தாண்டி கீழ இறங்கிருக்காரு. அங்க ஒரே சுருட்டு வாசம்.. தூரத்துல வெள்ளை வேட்டி சட்டையில கம்பீரமான வயசான தாத்தா ஒருத்தரு இருந்திருக்காரு.
இந்தியன் தாத்தானு நினைச்சிக்காதீங்க. அவரு இல்ல.. அவரு தான்.. யார் நீன்னு மிரட்டலா கேட்டிருக்காரு. இவரும் நடந்ததை சொல்லிருக்காரு. வா என்னென்னு பாப்போம்னு பாலத்து மேல கூட்டிட்டுப் போயிருக்காரு. யாருமே அங்க இல்ல.. அந்த ஆளோட சைக்கிள் மட்டும் இருந்திருக்கு. அந்த ரோட்டோட எல்லை வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டு இதோட என் எல்லை முடிஞ்சது.. திரும்பி பாக்காம வீட்டுக்கு போன்னு சொல்லி அனுப்பி வச்சிருக்காரு அந்த பெரியவர். அந்த ஆள் வீடு போய் சேர்ர வரைக்கும் சுருட்டு வாசம் கூட வந்துச்சாம்..
இப்படியொரு கதை சென்னைல நடந்ததா ஒருத்தர் என்கிட்ட சொன்னாரு. அது நடந்த இடம் செண்ட்ரல். அந்த பாலம் மவுண்ட் ரோடையும் செண்ட்ரலையும் கனெக்ட் பண்ணுற பாலம் தான். அந்த பெரியவர்.. `பாடிகாட் முனீஸ்வரர்’ அப்டின்னும் சொன்னாரு.
கேட்க கொஞ்சம் டரியலா இருந்தாலும், இது உண்மையான்னு கூட தோணலாம். சென்னைக்குள்ள எத்தனையோ முனீஸ்வரர் கோயில் இருந்தாலுமே சென்னை மக்களோட ஃபேவரைட் பாடிகாட் முனீஸ்வரர் கோயில் தான். ஊர்ல இருந்து சென்னைக்கு வர்ர நிறைய பேர் எம்.ஜி.ஆர். சமாதிய பார்க்குற கையோட.. இந்த பாடி காட் முனீஸ்வரரையும் பார்த்திடணும்னு நினைப்பாங்க. அந்த அளவுக்கு தம்ழி நாட்டு மக்களோட கனெட்க் ஆன இந்த கோவிலுக்கும் ஆங்கிலேயருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு. அதுமட்டுமில்ல.. இது சென்னையோட ஆச்சரியம்னே சொல்லலாம்.
சென்னைக்குள்ள எத்தனையோ முனீஸ்வரர் கோயில் இருந்தாலும் மக்களோட ஃபேவரைட் ஆன கோவில் பாடிகாட் முனீஸ்வரர் கோயில். எல்லா வர்கத்து மக்களையும் இங்க பார்க்கலாம். ஏன் அரசியல் தலைவர்கள்ள தொங்கி சினிமா பிரபலங்கள் வரைக்குமே அங்க தென்படுவாங்க.
புதுசா வாங்குற சைக்கிள்ல தொடங்கி காஸ்ட்லியான கார் வரைக்கும் இங்க பூஜை போட்டப் பெறகு தான் யூஸ் பண்ணுவாங்க. வண்டியையும், ஓட்டுற நபரையும் BodyGuard-ஆக இருந்து இந்த முனீஸ்வரர் சாமி காப்பாத்துறதா மக்கள் நம்புறாங்க.
நீங்க பல்லவன் சாலையை கடக்கும் போது குறைஞ்சது 20 வாகனத்துக்காவது பூஜை போட்டிட்டு இருப்பாங்க. அம்மாவாசை, பெளர்னமி டைம்னா டிராஃபிக் ஜோரா இருக்கும். சென்னையோட வரலாறுகள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோவிலும் அடக்கம் தான்.
ஆனா… இந்த கோயில் எப்போ வந்துச்சு, எப்படி வந்துச்சுன்னு இன்னைக்கு வர சரியான தரவு இல்லை. 1919கள்ல வட ஆற்காடுல இருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவர்கள், இந்த முனீஸ்வரர் கோயிலை அமைத்ததாவும் சொல்கிறார்கள்.
இன்னொரு சூப்பர் கதையும் இருக்கு. அதுக்கு ஆங்கிலேயேர் காலத்துக்கு போகணும். 1800கள்ல சென்னைய ஆண்ட கவர்னர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள்ள இருந்தாரு. அவருக்கு தோட்டத்தோட ஒரு பங்களா ஓவ்வெடுக்க வேணும்னு ஆசைப்பட்டாரு. அதுனால, ஜார்ஜ் டவுன்ல ஒரு மாளிகை கட்டுனாங்க. வீக்கெண்டுன இந்த மாளிக்கைக்கு வந்திடுவாராம். ராபர்ட் கிளைவின் மகன் எட்வர்ட் தான் அந்த மாளிகையை பெருசா உருவாக்கி பயன்படுத்திருக்காரு. அந்த மாளிகை இருந்த இடம் தான் கவர்மண்ட் எஸ்டேட். அங்க இருந்து தான் ஜார்ஜ் கோட்டைக்கு வேலைக்கு போவாராம். கவர்ணர் பாதுகாப்புக்கு பாடிகார்ட் எல்லோரும் தீவுத்திடல்ல வீடு கட்டி தங்க வச்சிருக்காங்க. அந்த இடத்துக்கு பாடிகார்ட் லைன்ஸ் அப்டின்னு ஒரு பெயரும் இருந்திருக்கு. அந்த பாடிகாட்டுல நிறைய முஸ்லீம்ஸ் இருந்திருக்காங்க. அவங்களுக்காக கட்டுன மசூதி தான் பாடிகார்ட் மசூதி.. இன்னமும் மவுண்ட் ரோடுல இருக்கு. அப்படி தான், இந்த முனீஸ்வரர் பெயரும் பாடி கார்ட் முனீஸ்வரர் ஆகியிருக்கணும்னும் சொல்லுறாங்க.
கலை ஓவியமோ, நீண்ட கோபுரம்னு எந்த பாரம்பரியமும் இல்லை. சென்னையோட வளர்ச்சியில , வரலாற்றுல காணாம போன பல அடையாள சின்னங்கள் இருந்தும், எளிய மக்களோட அடையாளமா இன்னமும் பாடிகாட் முனீஸ்வரர் இருக்கு. அதுனால தான் சொன்னேன். இது சென்னையோட ஆச்சரியம். இந்தக் கோயில் பத்தின உங்களுக்கு தெரிஞ்ச கதைய , தகவலை ஷேர் பண்ணுங்க…
Also Read – மதுரை மீனாட்சியம்மன் கோயில் பற்றி இந்த 20 தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?