கறிக்குழம்பு வச்சதுக்காக ஒரு யூடியூபரை அரெஸ்ட் பண்ணிருக்காங்க. கறிக்குழம்புக்கு கைதா? நாடு எங்க சார் போகுதுனு அதிர்ச்சியா இருக்குல. அவர் வச்சது மயில் கறிக்குழம்பு.
சவுக்கு சங்கர், சாட்டை துரைமுருகன், பிரியாணி மேன் இந்த மாதிரி சட்டவிரோதமா பேசியோ பண்ணியோ அரெஸ்ட் ஆகுறது ஒரு கேட்டகிரினா… சேட்டையா எதாவது பண்ணப்போய் அரெஸ்ட் ஆகுறது இன்னொரு கேட்டகிரி. அந்த அகராதி கேட்டகிரில இந்தியா முழுக்க நிறைய யூடியூபர்ஸ் அரெஸ்ட் ஆகிருக்காங்க. அவங்களைப் பத்திதான் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.
அந்த லிஸ்ட்ல நமக்கு தெரிஞ்ச உதாரணம் தலைவன் டி.டி.எஃப். அண்ணனை அரெஸ்ட் பண்ணாத செக்சனே கிடையாது. ஆனா, அவரும் சும்மாவே இருக்குறதில்ல. திருப்பதிக்கு போனா சும்மா சாமி கும்பிட்டு வரவேண்டியதுதான… அங்க போய் பிராங்க் பண்றேன்னு சேட்டை பண்ணாரு. கேஸை போட்டாங்க.
இவரு மட்டும்தான் இப்படியானு கேட்டா இல்லை. இந்தியா முழுக்க இந்த லிஸ்ட் ரொம்பவே பெருசு.
தெலுங்கானால பிரணய் குமார்னு ஒரு யூடியூபர் ஶ்ரீடிவினு ஒரு சேனல் வச்சி ‘இன்னைக்கு ஒரு புடி’னு கிராமத்து சமையல் வீடியோக்கள் போடுவாரு. சிக்கன், மட்டன்லாம் சமைச்சு போரடிச்சுப் போய் ஒரு நாள் மயில்கறிக் குழம்பு… செம்மையா சமைக்கிறோம். சூப்பரா ருசிக்குறோம்னு வீடியோ போட்டாப்ல. மயில் இந்தியாவோட தேசிய பறவையாச்சே… அதை குழம்பு வச்சா சும்மா இருப்பாங்களா? கேஸை போட்டு உள்ள தள்ளிட்டாங்க.
பெங்களூர்ல அருண் கத்தாரேனு ஒருத்தர். பிசினஸ்மேன்னு அவரோட இன்ஸ்டா ப்ரொஃபைல்ல இருக்கும். தான் ஒரு பெரிய பணக்காரன்னு காட்டுறதுக்கு கழுத்து நிறைய நாலு கிலோ நகை போட்டுக்கிட்டு காஸ்ட்லியான கார், பாடி கார்டுலாம் சுத்தி நின்னு வர்ற மாதிரியான ரீல்ஸ்லாம் போடுவாரு. அதுல என்ன ப்ரோ பிரச்னை அப்டினா? அந்த பாடி கார்டு சும்மா நின்னா நல்லாருக்காதேனு கே.ஜி.எஃப் ராக்கி பாய் கணக்கா ஆளுக்கு ஒரு துப்பாக்கிய பிடிச்சுட்டு நிப்பாங்க. அவ்ளோதான் போலீஸ் அரெஸ்ட் பண்ணீட்டாங்க. அப்பறம்தான் தெரிஞ்சது. துப்பாக்கி மட்டுமில்ல, அந்த நகை, பாடிகார்டு, கார் எல்லாமே டம்மினு.
நம்மலாம் சின்ன வயசுல ரயில்வே டிராக்ல ஒரு ரூபா காயினை வச்சி அதுமேல ரயில் போனா என்னாகும்னு பாப்போம்ல. அதையே கான்சப்டா வச்சி யூடியூப் சேனல் நடத்துனவருதான் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த குல்சார் ஷேக். அட எத்தனை நாளைக்குத்தான் காசையே வைக்கிறதுனு எதாச்சும் வித்தியாசமா பண்ணுவோம்னு ஒரு பெரிய கல்லு, பூட்டு, குக்கரு, கோழினு ஆரம்பிச்சு பண்ணாரு. உச்சகட்டமா ஒரு பெரிய சைக்கிள், கேஸ் சிலிண்டர்னு போக போலீஸ் கொத்தோட அள்ளிட்டு போய் உள்ள போட்டாங்க.
சிவனேனு கல்யாணத்துக்கு போனதுக்குக்கூட ஒரு யூடியூபரை அரெஸ்ட் பண்ணிருக்காங்கனு சொன்னா நம்புவீங்களா? ஆந்திரால வெங்கடேஷ் நரசய்யா அல்லூரினு ஒரு யூடியூபர் ஒரு கல்யாணத்துல கலந்துக்கிட்டாரு. இன்விடேசன் இல்லாம யாரைக்கேட்டு கல்யாணத்துக்கு வந்தீங்கனு அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அவர் போனது அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு.
கேரளால தொப்பினு ஒரு யூடியூபர், சேட்டன் பண்றது எல்லாமே டிட்டோ நம்ம டி.டி.எஃப் டெக்னிக்தான். புதுசா ஒரு கடை திறந்துருக்காரு. திறப்பு விழாவுக்கு அவரோட ஃபேன்ஸ்னு சொல்லி ஊரு ஜனமே திரண்டுருச்சு. அது ஒரு பெரிய கலவரமாகி போலீஸ் அரெஸ்ட் பண்ண வந்தப்போ கடைக்குள்ள போய் பூட்டிக்கிட்டு உள்ளே இருந்தே லைவ் பண்ணி பரபரப்பாக்கிருக்காப்ல. போலீஸ் அள்ளிட்டு போயிடுச்சு.
Also Read – பைபிள், ஜாதகம், ஃபெவிகால் டப்பா… விஜய் கட்சிக்கொடி அலப்பறைகள்!
Fourweekmba Awesome! Its genuinely remarkable post, I have got much clear idea regarding from this post . Fourweekmba
Fourweekmba This is my first time pay a quick visit at here and i am really happy to read everthing at one place