BYJU

பைஜூஸ்-ன் இயக்குநர் திவ்யா கோகுல்நாத் – யார் இவர்?

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பட்ட மக்களின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா ஊரடங்கு எப்போதும் இல்லாத வகையில் டிஜிட்டல் தளத்திற்கு அதிக வழிகளை வகுத்துள்ளது. அனைத்து தரப்புகளிலும் டிஜிட்டல் நடைமுறை முன்னெடுப்புகள் நடந்து வருகின்றன. கல்வியின் நிலைமையும் இதற்கு மாறுபட்டதல்ல. ஆன்லைன் வழியாக கல்வி கற்றலை மாநில அரசுகளே முன்னெடுத்து நடத்தி வருகின்றன. ஆன்லைன் கல்வியில் பல சிக்கல்கள் இருந்தாலும் இந்த கொரோனா காலத்தில் கல்வி கற்க வேறு வழிமுறைகள் இல்லாததால் ஆன்லைன் முறையையே மீண்டும் ஊக்குவிக்க வேண்டிய சூழ்நிலையில் கல்வியாளர்கள் உள்ளனர். இந்த நிலையில்தான், பைஜூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

யார் இந்த திவ்யா கோகுல்நாத்?

பைஜூஸ் என்ற கல்வி கற்றல் தொடர்பான நிறுவனத்தின் இணை நிறுவனர்தான், இந்த திவ்யா கோகுல்நாத். பெங்களூருவில் நடுத்தர வர்க்கத்தில் பிறந்தவர். பயிற்றுவிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட திவ்யா இளம் வயதில் பைஜூஸ் நிறுவனத்தில் ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார். கல்வியை முன்னோக்கி எடுத்து செல்லும் ஆசிரியர்களின் மையமாக இந்தியா இருக்க முடியும் என்பதில் திவ்யா மிகுந்த நம்பிக்கை உடையவராக இருக்கிறார். “ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது. கற்பிப்பதற்கான பொற்காலம் மீண்டும் வந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு. உலகத்துக்கு தேவையான மென்பொறியாளர்களை கடந்த 15 முதல் 20 ஆண்டுகளில் நாங்கள் உருவாக்கினோம். இப்போது, உலகத்துக்கான ஆசிரியர்களை உருவாக்கும் ஆற்றல் எங்களுக்கு உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒயிட் ஹேட் நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைனில் 11,000 ஆசிரியர்களை பைஜூஸ் நிறுவனம் திரட்டியது. அவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர். பெண்கள் ஆன்லைன் வழியாக பெரும் மிகப்பெரிய வாய்ப்பாக இதனை கருதுகிறார்கள்” என்று திவ்யா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

திவ்யா கோகுல்நாத்

“பைஜூஸ் தங்களுடைய பயன்பாட்டை 2015-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து மாணவர்களின் பக்கம் இருந்து வருகிறது. நாங்கள் கற்பித்தலில் சற்று வித்தியாசமாக இருக்கத் தொடங்கினோம். விருப்பத்துடன் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தினோம். நாங்கள் முதன்முதலில் தொலைக்காட்சி வழியாக கற்றலை விரும்புவது பற்றி பிரசாரம் செய்தோம். இது எங்களது கற்றல் தளத்திற்கு சுமார் 2 மில்லியன் மாணவர்களை வரவழைத்தது. எங்களது உள்ளுணர்வுகளை நாங்கள் மிகவும் நம்புகிறோம். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க இது எங்களுக்கு உதவுகிறது” என்றும் கூறியுள்ளார். திவ்யா தன்னுடைய 21 வயது முதல் கல்வி கற்பித்து வருகிறார். அவரது பெற்றோர்களும் அவரை ஊக்குவித்து வந்துள்ளனர்.

இந்தியாவின் பணக்கார பட்டியலில் பைஜூஸ் ரவீந்திரன் மற்றும் திவ்யா கோகுல்நாத் 46-வது இடத்தில் உள்ளனர். 2020-ன் நிலவரப்படி இவர்களது மொத்த சொத்து மதிப்பு 3.05 பில்லியன் டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 22.3 ஆயிரம் கோடி. ஒவ்வொரு மாணவரின் கற்றல் தொடர்பான பயணமும் தனித்துவமானது என்பதில் அதிக நம்பிக்கை உடையவர் திவ்யா. ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட 2020-ம் ஆண்டில் ஆசியாவின் சக்திவாய்ந்த பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் திவ்யாவும் இடம்பிடித்துள்ளார். டிஜிட்டல் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இருந்து இந்த புதிய இயல்பை சமாளிப்பது என்பது மிகவும் சவாலாக உள்ளது என்பதை திவ்யா கோகுல்நாத் ஒப்புக்கொள்கிறார். “என்னை மாதிரியான உழைக்கும் பெண்களுக்கு தொற்று நோய் காலமானது பெர்சனல் வாழ்க்கைக்கும் வேலைக்கும் இடையிலான வரியை ப்ளர் ஆக்குகிறது. ஆனால், நீங்கள் நேசிக்கும் வேலையை செய்யும்போது ஒருபோதும் இதனால்க் எரிச்சலாக உணரமாட்டீர்கள்” என்று தன்னுடைய பெர்சனங்கள் பக்கங்கள் குறித்து குறிப்பிடுகிறார், திவ்யா.

தொற்றுநோய் தொடர்பான காலம்குறித்து தொடர்ந்து திவ்யா யுவர் ஸ்டோரியிடம் பேசும்போது, “உங்களுக்காக நேரத்தை ஒதுக்கி செலவிடுவதும் சீரான தினசரி வழக்கங்களைக் கடைபிடிப்பதும் மிகவும் முக்கியமான ஒன்று என நினைக்கிறேன். நான் என்னைச் சுற்றி சில ஆர்ட்டிஃபிசியலான எல்லைகளை அமைத்துள்ளேன். இதனை என்னுடைய அம்மாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். இந்த எல்லைகள் என்னுடைய வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்க உதவுகின்றன. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது ஒரு நபருக்கு தேவையற்ற மன அழுத்தங்களை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். கடந்த ஆண்டை திரும்பி பார்க்கும்போது இன்று நாம் வாழும் முறையை யாரும் கணித்திருக்க முடியாது. நாம் உடல்நலம், பொருளாதாரம் மற்றும் சமூகம் சார்ந்த நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறோம். கல்வியைப் பொறுத்தவரை, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டையும் ஒருங்கிணைக்கும் வடிவம் ஒன்று வெளிப்படும் என நினைக்கிறேன். பைஜூவைப் பொறுத்தவரை சிறந்த கற்றல் வடிவங்களைக் கண்டறிய நாங்கள் பணியாற்றுவோம்” என்று கூறியுள்ளார்.

Also Read : `நாட்டுக்குள்ளே ஒரு நாடா?’ – மெட்ராஸ் மாகாணம் டு தமிழ்நாடு பெயர்மாற்ற சுவாரஸ்ய பின்னணி!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top