ஐபிஎல் சர்க்கிள்லயும் சரி, டொமஸ்டிக் சர்க்கிள்லயும் சரி வெடித்துக் கிளப்பிக் கொண்டிருப்பவர் சஞ்சு சாம்சன். அவருக்கு, சர்வதேச அரங்கில் சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு கடந்த சில ஆண்டுகளாகவே முன்வைக்கப்பட்டுட்டே வருது. ரஞ்சி மேட்ச்கள்லயும் சையது முஷ்டாக் அலி டிராஃபி மேட்ச்கள்லயும் தரமான ரெக்கார்டு வைச்சிருக்க சஞ்சு, இண்டர்நேஷனல் மேட்சுனு வந்தா எங்க சொதப்புறாரு… வொயிட் பால் கிரிக்கெட்ல ரிஷப் பன்ட்டை விட நல்ல ஆவரேஜ் வைச்சிருக்க அவரைத் தேர்வு செய்றதுல பாரபட்சம் காட்டுறாங்களா… அவரு இந்திய கிரிக்கெட்டோட ராசியில்லாத ராஜாவா? இதையெல்லாம் பத்திதான் நாம பார்க்கப்போறோம்.
ஒரு கிரிக்கெட்டரைப் பத்தி எப்போ டிஸ்கஷன்ஸ் வரும். ஒண்ணு பெரிய அளவுல அவர் சாதிச்சிருக்கணும், இல்ல எதாவது ஒரு சர்ச்சைல அவர் சிக்குனா விவாதிப்பாங்க. ஆனால், இந்திய கிரிக்கெட் சர்க்கிள்ல சஞ்சு சாம்சனைச் சுத்தி எப்பவுமே ஒரு விவாதம் இருந்துட்டே இருக்கும்னு சொல்வாங்க. அவருக்குப் போதிய வாய்ப்புகள் வழங்கப்படலைங்குறது அதுக்கு முக்கியமான காரணமாச் சொல்றாங்க. 2015-16 சீசன், அடுத்த சீசன்னு ரெண்டு ரஞ்சி சீசன்லயும் டபுள் செஞ்சுரியைப் பதிவு செஞ்ச சஞ்சு விளையாடிய முதல் இண்டர்நேஷனல் சீரிஸையே இதுக்கு உதாரணமா சொல்ல முடியும். 2015-ல ஜிம்பாப்வே டூர் போன டீம்ல ஒன்டே மற்றும் டி20னு ரெண்டு டீம்லயும் அவரை செலெக்ட் பண்ணிருந்தாங்க. ஆனால், கடைசி டி20ல மட்டும்தான் அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுச்சு. 9 ஓவர்கள்ல 69/5 என்கிற நிலைமைல சாம்சன் களமிறங்குவார். லோ ஸ்கோரிங் மேட்சான அதுல சாம்சன் 24 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுப்பார். இந்த மேட்சுக்குப் பிறகு சர்வதேச மேட்ச் விளையாட சாம்சன் 2019 டிசம்பர் வரைக்கும் காத்திருக்க வேண்டி இருந்துச்சு.
இப்படியான ஒரு சூழல்ல பெரும்பாலான கிரிக்கெட்டர்கள் தங்களோட ரிதம் போயிடுச்சுனு அமைதியாவதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், சாம்சன் has other Plans. ஐபிஎல் – உள்ளூர் கிரிக்கெட்டுனு ரெண்டு பக்கம் ஸ்கோர் பண்ணி தன்னோட திறமையை நிரூபிச்சுட்டே இருந்தார். கோவாவுக்கு எதிராக 2019ல நடந்த விஜய் ஹசாரே டிராஃபி மேட்ச்ல 128 பந்துகளுக்கு 212 அடிச்சு மிரட்டுனாரு. 2013லயே ஐபிஎல்ல ராஜஸ்தான் டீமுக்காக ஆட ஆரம்பிச்ச அவர், தான் விளையாண்ட ரெண்டாவது மேட்சுலயே 41 பந்துகளுக்கு 63 ரன் அடிச்சு ஐபிஎல்லோட இளம் வயது அரை சதமடித்தவர்ங்குற பெருமை பெற்றார். 2016, 2017 சீசன்களைத் தவிர எல்லா ஐபிஎல் சீசன்களையும் சஞ்சு சாம்ஸனோட ஸ்பெஷலான இன்னிங்ஸ்கள் விரவிக்கிடக்கும்.
2019 அக்டோபர்ல நேஷனல் டீமுக்கு அவர் திரும்ப அழைக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் பெஞ்ச்லயே இருக்க வேண்டிய சூழல்தான் இருந்துச்சு. இடைல கிடைச்ச கொஞ்சமே கொஞ்ச வாய்ப்புகளிலும் அவரால் ஜொலிக்க முடியாத நிலைமைதான். இதையடுத்து மீண்டும் ஒராண்டு அவர் டீமுக்கு வெளியில் காத்திருக்க வேண்டியதாயிடுச்சு. 2021 ஜூன்ல இலங்கை சீரிஸுக்கான டீமில் இடம்பிடிச்ச அவர், தன்னோட முதல் ஒன்டே மேட்ச்ல 46 பந்துகளுக்கு 46 ரன்கள் அடிச்சார். ஆனால், அதுக்கப்புறமும் கன்சிஸ்டன்ஸி இல்லைனு அவரை பெஞ்ச்ல உட்கார வைச்சாங்க. இதனாலேயே அவரால டீம்ல நிரந்த இடத்தைப் பிடிக்க முடியலை. 2021 ஓட செகண்ட் ஹாஃப்ல அயர்லாந்துக்கெதிரா டி20 ஒரு அரைசதம், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சதம்னு ஃபார்ம் காட்டுனார். ஜிம்பாப்வே சீரிஸ்ல முதல் மேன் ஆஃப் தி மேட்ச் வாங்குனவரு, சௌத் ஆப்பிரிக்கா சீரிஸ்ல முதல் மேட்ச்ல 86 ரன்கள் எடுத்ததோட, அடுத்தடுத்த மேட்சுகள்ல இந்தியா ஜெயிச்சப்ப நாட்-அவுட்டா களத்துல நின்றிருந்தார். இப்படியான சூழல்ல, டி20 உலகக் கோப்பைக்கு முன்னதா நடந்த நியூசிலாந்து டி20 சீரிஸ்ல டீம்ல இருந்தும் ஒரு மேட்ச்ல கூட களமிறக்கப்படலை. இதுக்காக கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கம் கொடுக்க வேண்டிய நிலைமை வந்துச்சு. `எல்லாருக்கும் வாய்ப்புக் கொடுக்கணும் என்பதற்காக டீமை அடிக்கடி மாத்துவது நீண்டகால நோக்கில் பயனளிக்காது’னு பாண்டியா சொன்னதை பிசிசிஐயோட கருத்தாவே பார்க்க வேண்டியதா இருக்கு.
வொயிட் பால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை 35 ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பண்ட் 35தான் ஆவரேஜ் வைச்சிருக்காரு. ஆனால், 11 மேட்ச்ல சாம்சன் 60-க்கும் மேல ஆவரேஜ் வைச்சிருக்காரே… அவரை ஏன் செலெக்ட் பண்ண மாட்டேங்குறாங்கனு நியூசிலாந்து முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சைமன் டல், நம்ம ஊரு கமெண்டேட்டரான ஹர்ஷா போக்ளே கிட்ட ஒரு கேள்வியை முன்வைப்பாரு. ஆனால், அந்தக் கேள்விக்கு அவர் நேரடியா பதில் சொல்லாம, இந்தியா ஒரு டேலண்டட் பேட்ஸ்மேனை அந்த இடத்தில் நிரப்புவதற்காகத் தேடிட்டு இருக்கு. பன்ட், டெஸ்ட் கிரிக்கெட்ல 5 செஞ்சுரீஸ் அடிச்சிருக்காருங்குற மாதிரி மழுப்பலா ஒரு பதில் சொல்வாரு. அதுதான் இங்க நிதர்சனமும் கூட… மத்த இளம் வீரர்களுக்குப் போதிய வாய்ப்புகள் கொடுக்குற மாதிரி ஏன் சஞ்சு சாம்சனுக்குக் கொடுக்க மாட்டேங்கிறீங்க என்கிற கேள்வியை வெளிப்படையாகக் கேட்டாலும், மறைமுகமாகக் கேட்டாலும் கிடைக்குற பதில் எப்பவுமே மழுப்பலாகத்தான் இருக்கு. அடுத்து வர்ற உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் சாம்சனைச் சேர்க்கணும்ங்குற குரல் வலுவாக எழத் தொடங்கியிருக்கு..
`வாய்ப்புக் கிடைச்சாதான் சச்சின் டெண்டுல்கரே’னு சொல்வாங்க. அப்படியான ஒரு வாய்ப்பு சஞ்சு சாம்சனுக்கும் நியாயமாகக் கிடைக்க வேண்டும்தானே… இப்ப ஸ்ரீலங்கா சீரிஸ்ல முதல் மேட்ச்ல 5 ரன்ல அவுட் ஆன சாம்சன், காயம் காரணமா தொடரிலிருந்தே விலகியிருக்கார். இனி அவர் இந்தியாவுக்காக ஆட எத்தனை வருஷங்கள் காத்திருக்க வேண்டி இருக்குமோ… கத்தார்ல ஃபுட்பால் ஸ்டேடியத்துல சாம்சனுக்கு ஆதரவான ஃபிளக்ஸ்களைப் பார்க்க முடிஞ்சது… அதுதான் சாம்சனை நேசிக்கும் ஒவ்வொரு உண்மையான கிரிக்கெட் ஃபேனோட எண்ணமும்…
2023 வேர்ல்டு கப்புக்குப் பிறகான ஆஸ்திரேலியன் சீரிஸ்லயும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது இந்த விவாதத்தை மீண்டும் கிளப்பியிருக்கு. இதப்பத்தி காங்கிர எம்.பி சசி தரூர் உள்பட பலர் இந்த நேரத்துல கேள்வி எழுப்பிருக்காங்க.
சஞ்சு சாம்சனுக்குப் போதிய வாய்ப்புகள் கொடுக்கப்படுதுனு நீங்க நினைக்கிறீங்களா… இதைப்பத்தி உங்க ஒப்பீனியன் என்னனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.