ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

Ola S1, S1 Pro: ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலை, ஸ்பெக்ஸ்… டெலிவரி எப்போ?!

Ola நிறுவனம் S1, S1 Pro என இரண்டு வேரியண்ட்க்ளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ரூ.99,000, ரூ.1,29,000 என்ற எக்ஸ் ஷோரும் விலையில் ஸ்கூட்டர்களை சந்தைப்படுத்தியிருக்கிறது அந்த நிறுவனம்.

ஆட்டோமொபைல் துறையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் ஆதிக்கம் மேலோங்கி வரும் சூழலில் இந்த ஸ்கூட்டர்களை ஓலா, கிருஷ்ணகிரியில் அமைந்திருக்கும் Ola Future Factory-ல் தயாரித்து வருகிறது. ஆண்டுக்கு ஒரு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முன்பதிவு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பெரிய அளவு வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 15-ல் இரண்டு வேரியண்ட்களை ஓலா அறிமுகப்படுத்தியிருக்கிறது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

Ola S1

இந்திய சந்தையில் ரூ.99,000 என்ற விலையில் பொஷிஷன் செய்யப்பட்டிருக்கும் ஓலாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இது. 8.5 கிலோவாட் அதிகபட்ச திறனை வெளிப்படுத்தும் இந்த ஸ்கூட்டர் 2.9 கிலோவாட் பேட்டரியுடன் வருகிறது. ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் 121 பயணிக்க முடியும் என்கிறது ஓலா. தற்போது விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அதிக ரேஞ்ச் கொண்ட ஸ்கூட்டர்களில் இதுவும் ஒன்று. பிக்-அப்பைப் பொறுத்தவரை 0-40 கி.மீ 3.6 விநாடிகளிலுஇம் 0-60 கி.மீ 5 விநாடிகளிலும் எட்டலாம் என்கிறது ஓலா. இந்த வேரியண்டின் டாப் ஸ்பீட் 90 கி.மீ என்கிறது அந்த நிறுவனம். 10 நிறங்களில் வெளிவரும் இந்த வேரியண்டில் நார்மல், ஸ்போர்ட் என இரண்டு மோடுகளில் ஓட்ட முடியும்.

இதுதவிர 7 இன்ச் டச் ஸ்கிரீன் வசதியுடன் ஃப்ளூடூத், வைஃபை கனெக்டிவிட்டியும் இருக்கிறது. எல்.இ.டி ஹெட்லைட்ஸ், MoveOS இயங்குதளத்தில் இயங்குகிறது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பிசிக்கல் கீ எதுவும் இல்லை. உங்கள் மொபைல் போனுடன் இணைத்துக் கொண்டு அதன் மூலமே ஸ்டார்ட் செய்ய முடியும். அதேபோல், தானாகவே ஆஃப் ஆகும் வசதியும் இருக்கிறது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

Ola S1 Pro

S1 வேரியண்டை விட சில கூடுதல் வசதி, திறனுடன் வெளிவரும் இந்த மாடலை ரூ.1,29,000 (எக்ஸ் ஷோரும்) என்ற விலையில் ஓலா அறிமுகப்படுத்தியிருக்கிறது. 181 ரேஞ்ச், 3.9 கிலோவாட் பேட்டரி, டாப் ஸ்பீடு 115 கி.மீ என்கிறது ஓலா. 0-40 கீ.மீ 3 விநாடிகளில் எட்டிவிடலாம் என்று சொல்லப்பட்டிருக்கும் இந்த வேரியண்டில் நார்மல், ஸ்போர்ட், ஹைப்பர் என 3 மோடுகளில் டிரைவ் செய்ய வசதி இருக்கிறது.

சார்ஜிங்

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரோடு கொடுக்கப்பட்டிருக்கும் சார்ஜரை வழக்கமாக வீடுகளில் இருக்கும் 5 Amp ஷாக்கெட் மூலம் சார்ஜ் செய்யலாம். முழு சார்ஜிங்குக்கு 6 மணி நேரம் எடுக்கும். மேலும், நாடு முழுவதும் 400 நகரங்களில் இருக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஓலா ஹைப்பர் சார்ஜ் ஸ்டேஷன்களில் 75 கி.மீ ரேஞ்சுக்கான சார்ஜிங்கை 18 நிமிடங்களில் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்குத் தனியாகக் குறைந்த அளவு கட்டணம் செலுத்த வேண்டும்.

விலை

Ola S1 – ரூ.99,000

Ola S1 Pro – ரூ.1,29,000. இவையிரண்டும் எக்ஸ் ஷோரும் விலைகள்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விலை
விலை

டெலிவரி

டீலர்கள் இல்லாமல் நேரடியாக வீடுகளில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், சர்வீஸைப் பொறுத்தவரை வீடுகளுக்கு வந்தே செய்து தரப்படும் என்றும் ஓலா தரப்பில் சொல்லப்படுகிறது. இதற்காக தனி செயலியும் இருக்கிறது.

முன்பதிவு அடிப்படையில் ஷோரூம்களில் செப்டம்பர் 4-ம் தேதி முதல் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கலாம். அதேபோல், டெலிவரி அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்கும் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

கனெக்டிவிட்டி

ஸ்கூட்டரின் இண்டர்நெட் வசதி இருக்கிறது என்பதால், அதை உங்கள் மொபைலோடு வைஃபை அல்லது ப்ளூடூத் மூலம் இணைத்துக் கொள்ள முடியும். 3 ஜிபி ரேம், ஆக்டோ கோர் புராசஸர், 4ஜி, ஜி.பி.எஸ், அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டெண்ட், பில்ட் இன் ஸ்பீக்கர்கள், 7 இன்ச் டிஸ்பிளே வசதிகளை உள்ளடக்கியது. உங்கள் மொபைல் போனை கனெக்ட் செய்துகொண்டு ஸ்கூட்டரை முழுமையாக நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க… உங்க கருத்துகளை கமெண்ட்ல சொல்லுங்க!

Also Read – 2 விநாடிக்கு ஒரு வாகனம்; 10,000 வேலைவாய்ப்பு – ஓலாவின் கிருஷ்ணகிரி ஃபேக்டரியில் என்ன ஸ்பெஷல்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top