ஜேம்ஸ் பாண்ட் 007 படங்களை எந்த OTT-யிலும் பார்க்க முடியவில்லையே என்று ஒரு பூமர் அங்கிள் சில மாதங்கள் முன்பு ட்விட்டரில் அணத்திக்கொண்டிருந்தார். பூமர் அங்கிள்களுக்கெல்லாம் பூமர் அங்கிளாக MGM studios ஜேம்ஸ் பாண்ட் படங்களை எந்த ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபாரிமிலும் வெளியிடாமல் பத்திரமாக வைத்துக்கொண்டிருந்தார்கள். அமேசான் சில மாதங்களுக்கு முன்பு ஒட்டுமொத்தமாக MGM studios-யை வாங்கி விட்டதால், இப்போது வந்துவிடும், இந்த மாதம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், ஒட்டுமொத்தமாக இறுதியாக வெளியான No Time To Die தவிர மீதமுள்ள EON Productions தயாரித்த 24 பாண்ட் படங்களும் அமேஸான் பிரைமில் வெளியாகி இருக்கின்றன. 

ஜேம்ஸ் பாண்ட் 007

அட்டகாச கேட்ஜெட்கள், அழகழகான பெண்கள், பவர்புல் கார்கள், அதிரடி ஆக்‌ஷன், ஆக்ரோஷ வில்லன்கள், சிறப்பான டைட்டில் பாடல்கள், உலகளவில் வித்தியாச லொக்கேஷன்கள் இப்படி வரிசையாக இன்னும் பலவற்றை பட்டியலிடலாம்.

அல்லது ஒரே விஷயமாக 'ஜேம்ஸ் பாண்ட்' படங்கள் என்று சொல்லலாம்.

 

ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம், Ian Fleming 1952-ம் ஆண்டு எழுதிய  Casino Royale நாவலில் அறிமுகமாகியது. பிரிட்டனின் உளவு அமைப்பான MI6-ன் முக்கியமான உளவாளிகளில் ஒருவர் பாண்ட். 1962-ம் ஆண்டு Sean Connery நடிப்பில் வெளியான முதல் பாண்ட் படமான Dr. No முதல் கடந்த மாதம் Daniel Craig நடிப்பில் வெளியான No Time to Die வரைக்குமாக மொத்தம் 25 படங்கள் EON productions மூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. Casino Royale (1967) மற்றும் Never Say Never Again (1983) ஆகிய இரண்டு படங்கள் வேறு சில நிறுவனங்கள் மூலமாக வெளியாகி இருக்கின்றன. இவை தவிர, Animation படங்கள், ஜேம்ஸ் பாண்ட்டிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட படங்கள், Spoof செய்யப்பட்ட படங்களும் ஏராளம்.

Dr. No (1962)

“பாண்ட்… ஜேம்ஸ் பாண்ட்…” குரல் முதலில் திரையில் ஒலித்த திரைப்படம் இது. ஜமைக்காவில் பிரிட்டன் உளவாளி கொல்லப்பட, அங்கு செல்கிறார் பாண்ட். Dr. No என்ற ஒரு கிறுக்கு scientist-க்கு எதிராக அவர் சண்டையிடுவது தான் கதை. பாண்ட் படங்களில் அடிக்கடி வரும் Spectre அமைப்பைச் சேர்ந்தவர் Dr.No.

From Russia with Love (1963)

From Russia With Love(1963)

முந்தைய படத்தில் பாண்டால் கொல்லப்பட்ட DR.No-விற்காக Spectre அமைப்பு எடுக்கும் பழிதீர்க்கும் முயற்சிகளை பாண்ட் எப்படி முறியடிக்கிறார என்பது தான் கதை.

GOLDFINGER (1964)

GOLDFINGER (1964)

பாண்டின் முக்கியமான வில்லன்களில் ஒருவரான Goldfinger-க்கு எதிரான Neck To Neck போராட்டம் தான் கதை. ஜேம்ஸ் பாண்டின் புகழ்பெற்ற “A martini. Shaken, not stirred” டயலாக் இடம்பெற்ற முதல் படம் இதுதான். அதேபோல, விதவிதமான கேட்ஜெட்கள் அணிவகுக்கத் தொடங்கியதும் இந்தப் படத்தில் இருந்துதான்.

Also Read : தமிழ் சமூகத்துக்கு ஆண்ட்ரியா கொடுத்த 11 சர்ப்ரைஸஸ்! #HBDAndrea

THUNDERBALL (1965)

THUNDERBALL (1965)

இரண்டு அணுகுண்டுகளைத் தாங்கிய ஜெட் ஒன்றை Spectre அமைப்பு கடத்திவிட்டு திரும்பத் தருவதற்குப் பேரம் பேசுகிறார்கள். ஜேம்ஸ் பாண்ட் எப்படி பேரம் பேசுகிறார் அல்லது ஆக்‌ஷன் அதகளம் புரிகிறார் என்பதுதான் கதை.

You Only Live Twice (1967)

You Only Live Twice (1967)

அமெரிக்க விண்வெளி வீரரையும் ஒரு ஸ்பேஸ்கிராஃப்ட்டையும் Spectre அமைப்பு கடத்திவிட வழக்கம் போல அதை மீட்கப் போராடுகிறார் James Bond. ஜப்பானில் நடக்கும் கதையில் ninja-க்களுடன் எல்லாம் சண்டையிடுவார் பாண்ட்.

On Her Majesty’s Secret Service (1969)

On Her Majesty's Secret Service (1969)

படத்தோட கதையை விடுங்க… அது வழக்கம் போல பாண்ட் சண்டையிட்டு தப்பிக்கிறதுதான். இந்தப் படத்தில் வேற ஒரு சங்கதி இருக்கு. You Only Live Twice படத்துக்குப் பிறகு இனி ஜேம்ஸ் பாண்டாக நடிக்கப்போவதில்லைனு Sean Connery அறிவிக்க இந்தப் படத்தில் திரை அனுபவம் இல்லாத விளம்பர மாடலான George Lazenby-யை இந்தப் படத்தில் பாண்டாக நடிக்க வைக்கிறார்கள். படப்பிடிப்பின் போது, அவரும் ஒரு படத்துக்கு மேல் பாண்டாக நடிக்க முடியாது என அறிவிக்கிறார்.

இந்தப் படத்தில் திருமணம் செய்து கொண்டு அமைதியாக செட்டில் ஆக விரும்புகிறார் பாண்ட். அவர் மனைவியை Spectre அமைப்பினர் கொலைசெய்துவிட ஜேம்ஸ் பாண்ட் மீண்டும் ஆக்‌ஷனில் இறங்குகிறார்.

Diamonds Are Forever (1971)

 

Diamonds Are Forever (1971)

George Lazenby ஒரு படத்துக்கு மேல் பாண்டாக நடிக்க மாட்டேன் என கைவிரிக்கிறார். படத்தின் வசூலும் மகா மட்டமாகிவிட ஸ்டுடியோக்கள் “உங்களில் யார் அடுத்த பாண்ட்?” என தேடுதல் வேட்டை நடத்த, ஸ்டுடியோவும் தெருத்தெருவாக அலைய… வேறு வழியில்லாமல் பெருந்தொகையுடன் Sean Connery-யை அனுகுகிறார்கள். அவரும் இதுதான் கடைசிப்படம் எனச் சொல்லி நடித்துக்கொடுத்த திரைப்படம் இது.

வைரக் கடத்தல்காரராக பான்ட் கடத்தல் குழுவுக்குள் ஊடுருவி அவர்களைக் கழிப்பதுதான் கதை.

Live and Let Die (1973)

Live and Let Die (1973)

Sean Connery பாண்ட் படங்களில் இருந்து வெளியேறிய பிறகு அடுத்த பாண்ட் யார் என்ற கேள்விக்கு கிடைத்த பதில் தான் “Roger Moore”. 24 மணி நேரத்தில் படுகொலை செய்யப்பட்ட மூன்று MI6 உளவாளிகளுக்கு என்ன ஆனது என பாண்ட் தேடிச்செல்ல… வழக்கம் போல படம் முடியும்.

Also Readதமன்னா ஃபேனா நீங்க… அவங்களைப் பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும்… டெஸ்ட் பண்ணிடலாமா? :

The Man with the Golden Gun (1974)

 

The Man with the Golden Gun (1974)

சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி ஆற்றல் தேவையை சமாளிக்க ஒரு கருவியைக் கண்டறிகிறார்கள். “ஆங்… அதேதான்… என்ன நடக்கும்னு நீங்க கண்டுபுடிச்சிட்டா, நீங்க மொத்த ஜேம்ஸ் பாண்ட் படங்களையும் பார்க்க தயார்னு அர்த்தம்.”

கதை கிடக்கட்டும், இந்தப் படம் இரண்டு விஷயங்களுக்காக ஃபேமஸ், “1) ரோஜர் மூர் நடிப்பில் வெளியான படங்களில் The Worst எனப் புகழப்படும் படம், 2) பாண்டின் மிகச் சிறந்த வில்லன்களில் ஒருவரான Baddie- ஆக நடித்த Christopher Lee-யின் நடிப்பு.”

The Spy Who Loved Me (1977)

The Spy Who Loved Me (1977)

முந்தைய படம் தந்த தோல்வியில் இருந்து மீண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு கூடுதல் பட்ஜெட்டுடன் தயாரானது The Spy Who Loved Me படம். பிரிட்டன் மற்றும் சோவியத் யூனியனின் நீர்மூழ்கிக் கப்பல்கள் கடத்தப்பட, ஜேம்ஸ் பாண்ட் என்ட்ரி தர… KGB-யின் உளவாளி ஒருவருடன் இணைந்து சாகசங்கள் புரிந்து…………………. சுபம்.

Moonraker (1979)

Moonraker (1979)

ஸ்பேஸ் ஷட்டில் ஒன்று களவாடப்பட, இனி சாகசங்கள் புரிய பூமியில் இடமில்லை என்று நம்ம ஜேம்ஸ் பாண்ட், விண்வெளிக்கு கிளம்பிய படம் தான் Moonraker.

For Your Eyes Only (1981)

For Your Eyes Only (1981)

உளவறியும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மூழ்கிவிட, அதிலிருந்து ரஷ்யர்கள் சில கருவிகளைக் கைப்பற்றுவதற்கு முன்பாக அவற்றைக் கைப்பற்றிவிட ஜேம்ஸ் கடலுக்குள் புரியும் சாகசங்கள்.

Octopussy (1983)

Octopussy (1983)

கிழக்கு ஜெர்மனியில் ஒரு சர்க்கஸில் கோமாளி வேடம் அணிந்தவர் கொல்லப்படுகிறார். அந்த கோமாளி வேடம் அணிந்தவர் 009. ஏதோ தவறாக இருப்பதை மோப்பம் பிடித்து ஜேம்ஸ் பாண்டு சர்க்கஸிற்குள் ஊடுருவ… அது வெறும் சர்க்கஸ் அல்ல, ரஷ்யர்களின் சதிக்கூடம் என்பதைக் கண்டறிந்து அதகளம் புரிகிறார் Bond… James Bond.

A View to a Kill (1985)

A View to a Kill

ரோஜர் மூர் நடிப்பில் வெளியான கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் இது. ஒரு காலத்தில் ரஷ்ய KGB-யின் கையாளாக இருந்த Max Zorin, அந்த அமைப்பிலிருந்து வெளியேறி ‘மைக்ரோ சிப்’ தயாரிக்கும் தொழிலதிபராக மாறி, தொழில் போட்டியாளர்களான அமெரிக்க சிலிக்கன் வேலியை அழிக்கும் முயற்சியில் இறங்குகிறார். ஜேம்ஸ் பாண்டிற்கு ஒரே வேலைதான் “எதிரியைக் கொன்றழிப்பது!”

Timothy Dalton, Pierce Brosnan, Daniel Craig ஆகியோர் நடிப்பில் உருவான அடுத்த 11 படங்கள் பற்றிய அறிமுகம் அடுத்தது…

ஜேம்ஸ் பாண்ட் படங்களை எங்கு பார்க்கலாம்?

அமேசான் பிரைம் தளத்தில் 24 ஜேம்ஸ் பாண்ட் படங்களையும் The James Bond Collection பிரிவில் பார்க்கலாம்.

Related Posts

Scroll to Top