சோ மிட்டாய்

கிஸாவுல சொருவுது கண்ணு.. காரணம் ஜாயிண்டு ஒண்ணு.. மஜா சாங்க்ஸ்!

லவ் டுடே படம் ஏகப்பட்ட டிரெண்டை ஆரம்பிச்சு வைச்சுச்சு. அதுல ஒண்ணு தான் புரோமோ சாங்கா வந்த.. பச்சை இலையை தட்டி.. ஓ.சி.பில ஒட்டி பாட்டு. அந்தப் பாட்டைக் கேட்டாலே டிரிப்பாக சும்மா வைப் மோட்ல மிதப்போம். பச்சை இலையை தட்டி, ஓசிபில ஒட்டி மாதிரியான வார்த்தைகள் எல்லாம் மெயின்ஸ்ட்ரீம்லலாம் அவ்வளவு சீக்கிரம் பயன்படுத்த மாட்டாங்க. ஆனால், இந்தப்பாட்டுல.. அட்டி போட்ட கிஸா, கிஸா போட்ட குட்டி, குட்டி போட்ட டோப்பு, டோப்பு தரும் டாப்பு வரிகள்லாம் டாப் டிரிப்பை தரும் வரிகள். ஆனால், இதுக்கு முன்னாடி நிறைய கானாக்கள் ஜாயிண்ட் பத்தி வந்துருக்கு. மில்லியன் வியூஸ்களை குவிச்சிருக்கு.

இன்ட்ரஸ்டிங்கான ஜாயிண்ட் பாடல்கள் என்னென்ன? அந்த பாடல்கள் ஏன் இவ்வளவு கொண்டாடுறாங்க?

ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்ல நம்ம ஃபேவரைட்டான ஒரு பாடலை எப்படி மாத்தி வைச்சிருக்காங்க தெரியுமா?

நமக்கு தெரிஞ்ச போதையெல்லாம் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் பாடல்கள்தான். அதையெல்லாம் ஓவர்டேக் பண்ணி இன்னைக்கு இருக்குற 2’கே கிட்ஸ் ஸ்ட்ரெயிட்டாவே டோப்பை பாடல்களா பாட தொடங்கி வேறமாறி வைப்ரேஷன்ல இருக்காங்க. சுமார் 4 வருஷத்துக்கு முன்னாடி சிம்பான்ற படத்துல டோப் ஆந்தம்னு பாட்டு ஒண்ணு வந்துச்சு. விஷால் சந்திர சேகர் மியூசிக்ல ஒரு பக்கம் உதடு, மறு பக்கம் நெருப்புனு பாட்டு ஸ்டார்ட் ஆகும்போதே வைப் சும்மா செமயா இருக்கும். தனிமைல ஒரு இரவுல மழை பெய்யும் போது சன்னல் பக்கம் நின்னு பாட்டு கேட்டீங்கனு வைங்க, மனசுக்கு அவ்வளவு ஆறுதலா இருக்கும். பாட்டு கேட்டோமா, படுத்து தூங்குனோமானு இருக்கனும்.. பாட்டைக் கேட்டு எதாவது பண்ணீங்க.. சிவன் செஞ்சு விட்ருவாப்புல.

எனக்கு தெரிஞ்சு வந்த டோப் அந்தம்ல அதிகமா வியூஸ் போன பாட்டுனா கான சல்லுவோட சோ மிட்டா சாய் பாபா பாட்டுதான். கிட்டத்தட்ட 1 கோடி பேர் இந்த பாட்டைக் கேட்ருக்காங்க. இந்தப் பாட்டுலதா  தம்மு, கிஸா, போதை வரிகள் வரும். கொட்டையைப் போட்டு செடிய வளர்த்து, பாப் மார்லி போல முடியை வளர்த்துனு சில வரிகள் வரும். அப்போதான், இவங்க பாப் மார்லியோட எந்த விஷயத்தை ரோல் மாடலா எடுத்துக்கணுமோ, அந்த விஷயத்தை விட்டுட்டு பெர்சனலா அவர் பண்ற வேலைகளை ரோல் மாடலா எடுத்து பாடினு இருக்காங்க. பாப் மார்லியே இதெல்லாம் பார்த்தா.. என்னடா என்னை வைச்சு இப்படிலாம் பண்ணிட்டு இருக்கீங்க, பாப்லோ எஸ்கோபரா நானுதான் கேப்பாரு. அவ்வளவு பண்றானுங்க. அதே சல்லு பாயோட 2.0 வெர்ஷன்தான், தராரா துருரு பாட்டு. அபாவா இருக்கு நாய்டே.. சல்லுது 2.0 கேளுடா, கிஸாவா இருக்கும்னு பில்டப் கொடுத்து வெளியிட்டாங்க. சொன்னது போலவே அவ்வளவு மாஸா இருந்துச்சு. இப்பவும் சொல்றேன்.. பாட்டை கேட்டுனு எதாவது பண்ணீங்கோ.. சிவன் செஞ்சு விட்ருவாப்புல.

இன்ஸ்டால கடந்த சில பல வாரங்களா செம டிரெண்ட்ல இருக்குற பாட்டு, கிஸால சொருவுது கண்ணு.. காரணம் ஜாயிண்ட் ஒண்ணுதான். எந்தப் பாட்டை இப்படி பண்ணி வைச்சிருக்காங்க தெரியுமா? காதலர் தினம், நம்ம எல்லாருக்கும் புடிச்ச படம். ரிப்பீட் வேல்யூ அதிகமா இருக்குற படம். அதுக்கு முக்கியமான காரணம், ஏ.ஆர்.ரஹ்மான். எல்லா பாட்டும் பட்டாசா இருக்கும். அந்த லிஸ்ட்ல இருக்குற முக்கியமான பாட்டு தான் கிஸால சொறுவுது கண்ணு.. ச்சீ, சாரி.. தாண்டியா ஆட்டமும் ஆட.. தசரா கூட்டமும்கூட பாட்டு. செம வைப் ஒண்ணை அந்த பாட்டு கிரியேட் பண்ணும். அதை அப்படியே உல்ட்டா பண்ணி கிஸால சொருவுது கண்ணுனு எடுத்து வைச்சிருக்காங்க. ஒருதடவை கேட்டா, நம்ம மைண்ட்லயும் அந்தப் பாட்டு சும்மா ஓடுது. அப்போதான் மியூசிக்கோட பவரை புரிஞ்சுகிட்டேன். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாட்டை கேட்காதீங்க. அப்புறம் நம்ம பாட்டா இது, அந்த வெர்ஷனை விட இந்த வெர்ஷன் நல்லாருக்கேனு அடிக்ட் ஆகிடுவீங்க.

உங்களுக்கு ஒரு ஹோம் வொர்க்.. இந்தப் பாட்டை ஒரிஜினலா யாரு பாடுனானு கரெக்ட்டா சொல்லுங்க.

யுவன் ஷங்கர் ராஜாவோட சாதாரண பாட்டே நமக்குலாம் டோப்பாதான் இருக்கும். ஆனால், அவரே அதை டோப் டிராக்னு சொல்லி ஒரு பாட்டை ரிலீஸ் பண்ணா சும்மா தீ வைபா இருக்காது? அப்படியான பாட்டுதான் பியார் பிரேமா காதல் படத்துல வர்ற டோப் டிராக். படத்துல வரக்கூடிய விஷுவல் ஒண்ணு இருக்கும். அதை அப்படியே அவாய்ட் பண்ணிடுங்க. தலைவன் இறங்கி வந்து பியானோலாம் வாசிச்சு தெறிக்க விட்ட வீடியோ ஒண்ணு இருக்கும். அதை விஷுவல் எஃபக்ட்டோட சேர்த்து கேளுங்க. உடம்புல இருந்து உயிரை மட்டும் பிரிச்சு எடுத்துட்டு போவாங்கனு வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்ல டயலாக் ஒண்ணு வரும்ல. அப்படியே அது நிஜமா நடந்த மாதிரி இருக்கும். ஆரம்பத்துல யுவன் வந்து லிரிக்ஸை சைலண்டா பாடுவாரு. அப்பவே காலிதான் நாம. பாடி முடிச்சதும் பியானோ நோட்ஸ் வரும். உடம்புலாம் சிலிர்த்து சும்மா வைப் அப்படி ஏறும். அதுதான் யுவன் டோப் டிராக். அப்புறம் அவர் வாய்ஸ்.. வேற என்ன வேணும் ஃபேன்ஸுக்கு.

Also Read – சின்னதா வந்து சில்லறையை சிதறவிட்ட குட்டி வில்லன்களைத் தெரியுமா?

பாட்டைக் கேட்டோமா, எஞ்சாய் பண்ணோமா, வைப்ல இருந்தோமானு போணும். சும்மா எதையாவது ட்ரை பண்ணி யார்கிட்டயாவது வாங்கிகட்டிகாதீங்க. அப்புறம் என்ன, எந்தப் பாட்டுக்கு நீங்க அதிகமாக வைப் பண்ணீங்கனு கமெண்ட்ல சொல்லிட்டு போங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top