Mushroom kingdomல Princess Peachesஐ காப்பாற்றப் போகும் மரியோவுக்கு பின்னால ஒரு பெரிய கதை இருக்கு தெரியுமா?… 90ஸ் கிட்ஸின் Mr.Favourite மரியோக்கு ஏன் மரியோனு பேரு வந்துச்சு தெரியுமா? மரியோ Carpentera? Plumbera? மரியோவின் முதல் Debut எப்போ தெரியுமா?… வாங்க தெரிஞ்சுக்கலாம்!
இவர்தான்ப்பா மரியோனு உலகத்துக்கு தெரியுறதுக்கு முன்னாடியே விடியோ கேம் உலகத்திற்கு “ஜம்ப்மேனாக” அறிமுகம் ஆயிட்டாரு நம்ம மரியோ. இந்த ஜம்ப்மேன் – மரியோ ஆன கதை சுவாரஸ்யமானது அதை அப்பறம் சொல்றேன். அதுக்கு முன்னாடி இந்த ஜம்ப்மேன்/ மரியோவை உருவாக்கினது யாரு தெரியுமா?
Shigeru Miyamoto என்ற வீடியோ கேம் டிசைனர் – நிண்டொண்டோ கம்பெனிக்காக சிறப்பா ஒரு வீடியோ கேமை உருவாக்கனும்னு ஆசைப்பட்டாரு. அதுக்கு அவருக்கு முதல் சாய்ஸ இருந்தது யாரு தெரியுமா? Popeye – Pluto – Olive தான். ஆனா, அந்த கேரக்டர்ஸ் யூஸ் பண்ண Licence கிடைக்காதனால, அவரால அது முடியாம போச்சு. மனசு உடைஞ்சு போகாம புது கேரக்டர்ஸ் உருவாக்கலாம்னு முயற்சி செஞ்சு மரியோ, டாங்கி காங் மற்றும் பவுலின் கேரக்டரை உருவாக்கினாரு Miyamoto!
சரி.. கேரக்டரை உருவாக்கியாச்சு.. ஜம்ப்மேனை மற்ற கேரக்டர்ல இருந்து வித்தியாசப்படுத்த என்ன பண்றதுனு யோசிச்சாங்க. Bright Red – Blue Jumsuit type dress, white Gloves போட்டு ஒரு ரெட் கேப் போட்டாங்க.. இந்த ரெட் கேட் எதுக்கு போட்டாங்க தெரியுமா? அப்போ இருந்த Graphical Limitations காரணமா மரியோவின் முடி – forehead – eyebrowsஐ Realistica கொண்டு வர முடியல. அதுமட்டுமில்லாம மரியோக்கு ஏன் இவ்வளவு பெரிய மீசை இருக்கு தெரியுமா? வீடியோவின் கடைசில சொல்றேன்..
மியாமோட்டோ உருவாக்கிய எல்லா விடியோ கேம்லையும் ஜம்ப்மேனை யூஸ் பண்ணாங்க.. மரியோக்கு முதல்ல வெச்ச பேரு என்ன தெரியுமா? “ Mr Video” ஆனா அப்போ Nintendo warehouse உரிமையாளரா இருந்த Mario Segale வாடகைப் பிரச்சனை பண்ணாரு.. அவரை சமாதானப் படுத்த Nintendo பணியாளர்கள், Mr Video கேரக்டருக்கு மரியோனு பேரு வெச்சுட்டாங்க.. மனுஷனும் கூள் ஆயிட்டாரு!
1981ல இந்த Donkey Kong கேம் ரொம்ப ஃபேமஸா இருந்தது. ஒரு Construction Site la பெரிய கொரில்லா.. மரியோவின் girlfriend “Pauline”அ கடத்தி வெச்சிருக்கும்.. அதை mario காப்பாத்தனும். Donkey Kong ல மரியோ introduce அகும் போது carpentara இருந்துச்சு. அதுக்கு அவங்க சொன்ன காரணம் பார்க்க ஒரு சாமானியன் மாதிரி இருந்த Easy Reach இருக்கும்னு. ஆனா Miyamoto கூட வேலை பார்த்தவரு “ஏன்ப்பா மரியோவை பார்த்தா carpentar மாதிரியா இருக்கு? லைட்டா Plumber மாதிரில இருக்குனு சொல்லவே.. Miyamoto வும் அப்படியா தெரியுது..சரி Plumber ஆகிடுவோம்னு அடுத்து வந்த மரியோ சீரிஸ்ல இருந்து Carpenter Mario – Plumber Mario ஆயிட்டாரு.
இந்த Donkey Kong பயங்கர ஹிட் அடிக்கவே..1982 Donkey Kong Sequel – Donkey Kong Jr ரிலீஸ் பண்ணாங்க. ஆனா அதுல ட்விஸ்ட் என்னனா மரியோ தான் வில்லன். மரியோ கிட்ட இருந்து குட்டி குரங்கு தன் அப்பா குரங்க காப்பாத்தனும்.
நாமலாம் கொண்டாடின.. இப்பவும் கொண்டாடும், இன்னும் அங்க இங்க தேடி விளையாடும் மரியோக்கு பின்னாடி இவ்வளவு பெரிய கதை இருக்கு. இப்போக்கூட ஆன்லைன் ஓல்ட் மரியோ ப்ராஸ் விளையாட முடியும். எத்தனை தடவை ப்ரின்சஸ் Peachesயை ஃபைனல் லெவல் வரைக்கும்போய் காப்பாற்றினாலும் இந்த கேம் மட்டும் சலிக்கவே சலிக்காதுல்ல?
Also Read : உருட்டு, கிரிஞ்ச், பூமர் அங்கிள், கம்பி கட்ற கதை’ – இந்த வார்த்தைக்குலாம் மீனிங் தெரியுமா?