IPL Betting

ஐபிஎல் லோக்கல் பெட்டிங் எப்படி நடக்கிறது… பின்னணி என்ன?

ஒருபக்கம் தேர்தல் பரபரப்பு ரிசல்ட் வரை இருக்கும். இன்னொருபக்கம் கொரோன இரண்டாம் அலை. கடந்த ஆண்டை விடவும் சமீபகாலமாக பாசிட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எது எப்படி இருந்தால் என்ன… இந்த முறை ஐபிஎல் 2021 கப் எங்களுக்குத்தான்னு அந்தந்த டீம் ஃபேன்ஸ் ஒருபக்கம் ஆர்மியோட வலம் வர்றாங்க. ஆமா, ஐபிஎல் ஃபீவர் தொடங்கிடுச்சு. ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி ஃபைனல் நடக்குற மே 30-ம் தேதி வரைக்கும் ஐபிஎல் ஜூரம் ரசிகர்களை ஆட்டிப்படைக்கும்.

இங்கே நாம், எந்த டீம் கப் ஜெயிக்கபோகுது, எந்த பிளேயர் ஆரஞ்சு கேப் வாங்கபோறாருனு அதைப்பற்றி பேசப்போவதில்லை. அப்புறம்… என்னன்னு கேட்கிறீர்களா? ‘ஐபிஎல் பெட்டிங்’…. சர்வதேச, தேசிய அளவில் நடக்குற பெட்டிங் இல்லை. லோக்கல்ல எப்படி பெட்டிங் நடக்குதுனு பார்க்கப் போகிறோம். லோக்கல் பெட்டிங்கில் நிறைய பேர் பெரிய அளவில் பணம் பார்த்திருக்கிறார்கள். பல பேர் வாழ்க்கையையே தொலைத்த வரலாறும் இருக்கு. இப்படியும் இருக்கானு நீங்க யோசனைகூட பண்ணியிருக்க முடியாது. லோக்கல் ஐபிஎல் பெட்டிங் எப்படி இது நடக்குதுனு பார்க்கலாம் வாங்க.

ஐபிஎல் பெட்டிங்

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இதுவும் ஒருவகை போதைதான், `அட்ரினலின் போதை’. பணம் கட்டிவிட்டு ஜெயிக்க வேண்டுமென்று பரபரப்போடு மேட்ச் பார்ப்பார்கள். மற்றொன்று ஆஃப்லைன் பெட்டிங். ஆன்லைன் பெட்டிங் பலரும் அறிந்ததே. அவற்றில் சிலவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பல முறைகளிலும் பெட்டிங் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் பார்க்க இருப்பது ஆஃப்லைன் பெட்டிங்.

பெட்டிங் செய்யும் முறை

மேட்ச் தொடங்கும் முன்பே பெட்டிங் செய்ய ஸ்டார்ட் பண்ணிடுவாங்க. `புக்கி பெர்சன்’ இவர்தான் பெட்டிங் தொகை நிர்ணயம் செய்வது. இவரை வாட்ஸ்அப் அல்லது போன் காலில் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். மேட்ச்சில் டாஸை எந்த அணி வெல்லும் என்பது தொடங்கி மேன் ஆஃப் தி மேட்ச் வரை பெட்டிங் தொடரும்.

பெட்டிங் ஆப்ஷன்ஸ்:

*மேட்ச்சில் டாஸை வெல்லப்போவது யார்?

செஷன்ஸ்

*சூப்பர் ஓவரில் எத்தனை ரன்கள் எடுப்பார்கள், எத்தனை விக்கெட்டுகள் இழப்பார்கள். உதாரணத்துக்கு 50 ரங்களுக்கு மேல் அல்லது அதற்கு கீழ் என பெட் செய்யவேண்டும். அதேபோல் 2 விக்கெட்டுகளுக்கு மேல் அல்லது கீழ் இதுதான் செஷன்ஸ் முறை.

இதில்…

  • முதல் 10 ஓவர்கள்
  • ஒரு ஓவருக்கான ரன்கள் அல்லது விக்கெட்
  • ஒரு அணியின் டாப் ஸ்கோரர்
  • 20 ஓவர்களுக்கான டார்கெட்டை முன்பே கணிப்பது அல்லது கடைசி ஓவரில் கணிக்கலாம்.

பெட்டிங் தொகையானது மேட்ச் நடக்கும் மைதானம், பேட்ஸ்மேன், மற்றும் பௌலரைப் பொறுத்து மாறுபடும்.

ஐபிஎல் பெட்டிங்

மேட்ச் பெட்டிங்

இதுதான் எல்லாரும் காசு அதிகம் புழங்குற மெயின் மேட்ச். இந்த பெட் தொகை 1:2 ‘ரேஷியோ’ முறையில் நிர்ணயிக்கப்படும். ஒரு ஷேருக்கு ரூ.5,000 அதிகபட்ச பெட் தொகையாக இருக்கும். ஒருவேளை புக்கி பர்சனிடம் முன்பே குறிப்பிட்ட தொகை கொடுத்திருந்தால், அதற்குள் எத்தனை ஷேர் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் (ஒரே மேட்சில் திரும்ப பெட் செய்வது) . இதில் ஸ்ட்ராங்கான அணியின் ரேஷியோ ரூ.5000-த்துக்குக் குறையாது. வீக்கான அணியின் ஷேர் ரூ.4,500 அல்லது ரூ.4000 -இல் இருந்துகூட தொடங்கும். உதாரணத்துக்கு ஸ்ட்ராங்கான அணியின் மீது பெட் செய்யவேண்டுமென்றால் ஒரு ஷேர் 5000 ரூபாய் கொடுத்தால், வெற்றிபெற்ற பிறகு 10,000 ரூபாய் கிடைக்கும். தோற்றால் 5000 ரூபாய் காலி. இதே வீக்கான அணியின் மீது பெட் செய்தால் ஒரு ஷேர் 4,000 ரூபாய் என்றால், வெற்றிபெற்றால் 5000+4000 சேர்த்து 9000 ரூபாய் கிடைக்கும். இந்த பெட்டிங் தொகை என்பது ரேஷியோ மாறுவதைப் பொறுத்து. ஒரு அணி ரேஷியோ ஏறுவது, இறங்குவது அந்த மேட்ச் போகும் விதம், ஆடுகளத்தில் இருக்கும் பேட்ஸ்மேன் மற்றும் பௌலர் முக்கியமாக ஸ்கோர் ஆகியவற்றைப் பொறுத்தது. இந்த ரேஷியோவை முடிவு செய்யவே பல ஆப்கள், பல சைட்டுகள் இருக்கின்றன. சிக்ஸர்கள், ஃபோர் மற்றும் விக்கெட்டுகளுக்கு ஏற்றார்போல் ரேஷியோ மாறும். அதற்கேற்றார்போல் பெட்டிங் தொகையும் மாறும். டிவியில் வரும் லைவ் மேட்சை விட இந்த ரேஷியோ வேகமாக அப்டேட் ஆகும். அதைவைத்து சிக்ஸரா இல்ல விக்கெட்டான்னு நம்மால் சொல்ல முடியும். மேட்ச் டையானால், எதுவும் கணக்கில் வராது.

பெட்டிங் பரிதாபங்கள்

எந்த ஒரு விஷயமும் பிளான் பண்ணி பண்ணனும்’ என்பார் வடிவேலு. அதேபோல், கிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுபடும் அனைவரும் கிரவுண்ட் வொர்க் நிறையவே பண்ணுவார்கள். சும்மா காசு போட்டுட்டு,ஐயோ போச்சே’ன்னு புலம்புகிறவர்களும் இருக்கிறார்கள். இந்த பெட்டிங் பரிதாபங்களை டார்கெட் செய்றவங்கதான் ‘ப்ரெடிக்டர்ஸ்’ (கணிப்பவர்கள்). சில பேர் ஒரிஜினல் கிரிக்கெட் ப்ரெடிக்டர்ஸை ரெகுலரா ஃபாலோ பண்ணி பெட் பண்ணுவாங்க. அதேநேரம், சில ப்ரெடிக்டர்ஸ் காசுக்காகவே, `என்னை ஃபாலோ பண்ணு. குறிப்பிட்ட தொகை கொடுத்தால் டிப்ஸ் தரேன். டீடெயில்டு மேட்ச் ரிப்போர்ட் தரேன்’ என சோஷியல் மீடியால கம்பு சுத்துவதையும் பார்க்க முடியும். நிறைய ப்ரெடிக்ஷன் வீடியோஸ், நியூஸ் பார்த்திருப்போம். அந்தப் பதிவுக்குக் கீழே கமென்ட்டைப் போய் பார்த்தால், இவ்வளவு நடந்திருக்கும். அதற்குப் பின்னால், இத்தனை பரிதாபங்கள் இருக்கு.

வெற்றித் தொகை

கிரிக்கெட் பெட்டிங்கைப் பொறுத்தவரை தோற்றாலும் ஜெயித்தாலும் உடனடி பணம். ‘புக்கி பர்சன்’ ஒரு இடத்தைச் சொல்லி, அவருடைய ஆட்களை அனுப்புவார். அவங்ககிட்ட தோற்ற பணத்தைக் கொடுத்து விட வேண்டும். நாம் வெற்றி பெற்றிருந்தால் அவர்கள் பணம் கொடுத்து விட்டு போவார்கள். தோற்ற தொகையை கொடுக்கவில்லை என்றால், அடுத்த மேட்ச்சுக்கு நாம பெட்டிங் செய்ய முடியாது.

ஐபிஎல் பெட்டிங்

‘ஐபிஎல்’ – இதைச் சுற்றி இன்னும் எவ்வளவோ நடக்குது. இதுவே இப்படின்னா, இதை பெரிய லெவல்ல செய்றவங்க வேற என்ன முறையெல்லாம் கையாண்டிருப்பாங்க..!. இப்ப நானே இதெல்லாம் செய்யாதீங்கனு சொன்னா யாரும் கேட்கப் போறதில்ல. `பெட்டிங் பண்ணாம என்னால இருக்க முடியாது’ என்பவரா நீங்கள்? நண்பர்கள்கிட்ட பிரியாணியையோ அல்லது குறிப்பிட்ட பொருளையோ பெட் பண்ணிக்கலாம். அதனால், உங்க இரண்டு பேருக்குமே லாபம்தானே?.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top