உண்மையான நண்பர்கள் சில நேரங்களில் ரத்தத்தால் பிணைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைவிட ஒருபடி மேலே சென்றுவிடுவார்கள். குடும்ப உறவுகளை உங்களால் தேர்வு செய்துகொள்ள முடியாது. ஆனால், நல்ல நண்பர்களை உங்களால் தேர்வு செய்துகொள்ள முடியும். இதனால், அவர்கள் நமக்கு இன்னும் நெருக்கமானவர்கள் ஆகிறார்கள். எவ்வளவுதான் சிரிச்சு பேசினாலும் எல்லாரும் நண்பர்கள் ஆகிவிட முடியாது. அவ்வகையில், நட்பு என்றாலே கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்தான். அதிலும் ஆண் – பெண் நட்பு என்றால் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். உங்களுக்கு கேர்ள் பெஸ்டீஸ் இருக்காங்களா? அவங்க இருக்குறதால என்னென்ன நல்லதுலாம் இருக்கு தெரியுமா? அதைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப்போறோம்.
* பசங்க வாழ்க்கைல அப்பப்போ டிராக் மாறி போவதற்கான வாய்ப்புகள் அதிகம். அந்த நேரங்களில் கேர்ள் பெஸ்டி இருந்தா உங்க மண்டைலயே ரெண்டு தட்டு தட்டி உங்களது பாதைக்கே திரும்ப கூட்டிட்டு வருவாங்க. உங்களோட கோல் என்ன.. நீங்க இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்கனு உங்களுக்கு நினைவு படுத்துவாங்க.
* அம்மா, சகோதரி அல்லது காதலியுடன் முக்கியமான விஷயங்களை பேச வேண்டிய சூழல் ஏற்படும்போது அதனை நீங்கள் சரியாகக் கையாள முடியாமல் போகும் நிலை ஏற்படும். அப்போது, ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து உங்களுக்கு சிறந்த வழிகாட்டுதல்களை உங்களது கேர்ள் பெஸ்டி உங்களுக்கு தருவார்கள். உணர்ச்சிவசப்படுவதை அடக்கி வைத்துக்கொண்டு சொல்ல வந்த விஷயங்களை எப்படி சொல்வது என்பதை உங்களுக்கு சொல்லித் தருவார்கள்.
* பெண்கள் மீதான பார்வையை முழுவதுமாக மாற்றுவார்கள். மக்கள் மத்தியில் பெண்களைப் பற்றி பொதுவாக இருக்கும் கருத்துகளை நீங்கள் அவர்களுடன் பழகும்போது எளிதாக புரிந்துகொள்ளலாம். அதுவரை உங்கள் மனதில் பெண்கள் குறித்து இருந்த மொத்த மதிப்பீடுகளும் பெண்களுடன் பழக பழக மாறும். எடுத்துக்காட்டாக பெண்களுக்கு பிங்க் கலர் மட்டுமே பிடிப்பதில்லை என்பதை தெரிந்துகொள்வீர்கள். திரைப்படங்களில் காட்டப்படுவதுபோல பெண்கள் சீரியல்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பதை விரும்புவதில்லை.
* பெரும்பாலும் ஆண்கள் உணர்வுகளை அடக்கி வைத்துக்கொள்வார்கள். அவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் இருப்பார்கள். இது உண்மையிலேயே நல்லது அல்ல. பெண்கள் உணர்வுபூர்வமானவர்கள் என்பதால் உங்களையும் உணர்வுபூர்வமாக கையாள்வார்கள். இதனால், உங்களது உணர்ச்சிகளை உரிய நேரத்தில் வெளிப்படுத்த உதவி செய்வார்கள்.
* பெரும்பாலான ஆண்கள் ஃபேஷனில் கவனம் செலுத்தமாட்டார்கள். செட் ஆகுதோ இல்லையோ ஒரேமாதிரியான உடையையே அணிவார்கள். அப்படியான நபர்களுக்கு கேர்ள் பெஸ்டிகள் இருந்தால் அவர்களுடைய தோற்றத்தையே மாற்றிவிடுவார்கள். ஷாப்பிங் சமயங்களில் ஏற்படும் குழப்பங்களைப் போக்கவும் அவர்கள் உதவி செய்வார்கள். நல்ல பிராண்டுகள் மற்றும் சிறந்த கடைகளைக்கூட அவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள்.
* உங்களுடைய கேர்ள் பெஸ்டிகள் உங்களை ஒருபோதும் ஜட்ஜ் செய்யமாட்டார்கள். இதனால், எதை வேண்டுமானாலும் நீங்கள் அவர்களிடம் சொல்லலாம். எதைக் கூறினால் உங்களுடைய மனசு இதமாக உணரும் என்பது அவர்களுக்கு தெரியும். எனவே, உங்களுடைய ஃப்ரெண்ட்ஷிப் மீது நம்பிக்கையைப் போட்டுவிட்டு தயக்கமின்றி எதையும் கூறலாம்.
* உங்களுடைய கேர்ள் பெஸ்டி நீங்கள் தவறு செய்யும்போது அதை சுட்டிக்காட்ட தவறமாட்டாள். அதற்காக அவளை இரக்கமற்றவள் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் செய்த செயலில் உள்ள நியாயங்களை முடிந்தவரை மென்மையாக அவர் கூறுவார். நீங்கள் செய்த விஷயம் தொடர்பாக நேர்மையான கருத்தை யாரிடமாவது எதிர்பார்த்தால் தைரியமாக அதனை உங்களது கேர்ள் பெஸ்டியின் முன் வைக்கலாம். நீங்கள் அவரிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதிர்பார்ப்புகள் எதுவும் அவரிடம் இருப்பதில்லை.
நீங்கள் உங்களது கேர்ள் பெஸ்டியிடம் கவனித்த நல்ல விஷயங்களை கமெண்டில் பதிவிடுங்கள்!
Also Read : நீங்க 90ஸ் கிட்ஸ்னா… இந்த கம்ப்யூட்டர் கேம்ஸ்லாம் நிச்சயம் மறந்திருக்க மாட்டீங்க!