1990-களின் ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கிய அமலா, ஏன் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்… கொல்கத்தாவுல இருந்து சென்னை வந்து இப்போ ஹைதராபாத்ல செட்டில் ஆகியிருக்க அவங்களோட திரைப்பயணம், ஆரம்ப வாழ்க்கை எப்படி இருந்துச்சு… எந்த சூழ்நிலைல அவங்க நடிக்க வந்தாங்க… இப்படி கிளாசிக்கலான நடிகை அமலாவோட ஸ்டோரியைப் பத்திதான் இந்த வீடியோவுல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

நடிகை அமலா தமிழ் போலவே மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார். அதனாலேயே, இவரை மலையாளி எனப் பலர் நினைத்துக் கொண்டிருந்தனர். உண்மையில், இவர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். இவரோட அப்பா கப்பற்படையில் பணியாற்றியவர். தாய் அயர்லாந்தைச் சேர்ந்தவங்க. கொல்கத்தாவுல பிறந்திருந்தாலும் இவங்க வளர்ந்தது படிச்சது எல்லாமே நம்ம சிங்காரச் சென்னைலதாங்க. தேர்ந்த பரதநாட்டியக் கலைஞரான அமலா, கலாஷேத்ராவில் பரதநாட்டியத்தில் இளங்கலை பட்டம் பெற்றவங்க… கலாஷேத்ரா குழுவினரோட பல இடங்களுக்குப் பயணிச்சு, பல்வேறு மக்களோட கலாசாரங்கள், அவங்களோட பழக்க வழக்கங்கள்னு அவங்களோட வாழ்வியலை நேரடியாப் பார்த்த அனுபவம் கொண்டவங்க. இதுதான் பின்னாட்கள்ல ஒரு நடிகையா மாறுறதுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணுச்சுனு ஒரு பேட்டில கூட சொல்லிருந்தாங்க.
திரையுலகில் பயணிக்குறவங்களுக்கு ஒரு முன்மாதிரி Couple-ஆ இருக்கவங்க நாகர்ஜூனா – அமலா ஜோடி. 1992-ம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து வாழ்கிறார்கள். இதைப் பல நடிகர்கள் பல இடங்களில் தங்களோட இன்ஸ்பிரேஷன்னு குறிப்பிட்டிருக்காங்க. அப்படியான நாகர்ஜூனா, ஒரு விஷயத்துல அமலா மேல கோபப்பட்டு 10 நாட்களுக்கும் மேலா பேசாமலே இருந்திருக்காராம். அவர் கோபத்துக்கான காரணம் என்ன தெரியுமா.. அதற்கான பதிலை பின்னாடி பார்க்கலாம்.

பரத நாட்டியக் கலைஞரான அமலாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியது இயக்குநர் டி.ராஜேந்தர்தான். அவர், தன்னுடைய மனைவி உஷாவோடு நேரடியாக அமலாவின் வீட்டுக்கே போய், மைதிலி என்னைக் காதலி படத்தில் நடிக்க அமலாவையும் அவரது குடும்பத்தினரையும் கன்வின்ஸ் பண்ணியிருக்கார். இது நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் கதை. இதில், உங்கள் மகள் நடித்தால் பொருத்தமாக இருக்கும்’ என்று அமலாவின் குடும்பத்தினரிடம் பேசி சம்மதிக்க வைத்திருக்கிறார். அமலா நடிக்க, 1986 பிப்ரவரியில் ரிலீஸான அந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஹிட்டடித்திருக்கிறது. அதன்பிறகு, மெல்லத் திறந்தது கதவு, ஒரு இனிய உதயம் என ஒரே ஆண்டில் 5 படங்களுக்கும் மேல் நடித்தார். அடுத்த ஒரே ஆண்டில் ரஜினியுடன் வேலைக்காரன், கமலுடன் பேசும் படம் என இரண்டு முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தார். ஆனால், ஹீரோயினாக இவருடைய சினிமா கரியர் ஆறு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. 1992 ஜூன் 11-ல் நாகர்ஜூனாவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இவர் கடைசியாகத் தமிழில் ஹீரோயினாக நடித்த படம் 1992-ல் வெளியான கற்பூர முல்லை. அதன்பிறகு, சமீபத்தில் வெளியான கணம் படம் மூலம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் கம்பேக் கொடுத்திருக்கிறார். இதுபற்றி ஒரு பேட்டியில் கூறுகையில்,
சென்னைக்கு வருவதைத் தாய்வீட்டுக்கு வருவதைப் போல உணர்கிறேன்’ என்று நெகிழ்ந்திருந்தார்.

1987-ல் ஆர்.சி.சக்தி இயக்கிய கூட்டுப்புழுக்கள் படத்தில் ரகுவரனும் அமலாவும் ஜோடியாக நடித்தனர். குடும்பத்தில் இருக்கும் சிக்கல்களைப் பேசும் இந்தப் படத்தில் நடித்தபோது, அமலா மீது ஒருதலையாகக் காதல் கொண்டிருக்கிறார் ரகுவரன். காதலை அமலாவிடம் சொன்னபோது, அவர் மென்மையாக அதை மறுத்துவிட்டாராம். இதை ரகுவரனே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருப்பார். 1989-ல் சிவா தெலுங்குப் படத்தில் நாகர்ஜூனாவுடன் நடிக்கையில் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு, 1991 நிர்மயம் படத்தில் காதலாக மாறியது. இந்த ஜோடி 1992-ல் திருமணம் செய்துகொண்டது.
Also Read – கர்ஜனை மொழி… கனிமொழி – 5 தரமான சம்பவங்கள்!
நாகர்ஜூனாவும் சரி, அமலாவும் சரி விலங்குகள் மேல் கொள்ளைப் பிரியம் கொண்டவர்கள். ஹைதராபாத் Blue Cross அமைப்பை நிறுவியவர்களில் அமலா முக்கியமான நபர். அக்கினேனி குடும்பத்தினரின் அன்னப்பூர்ணா பிலின் இன்ஸ்டிடியூட்டைத் தனது மாமனார் மறைவுக்குப் பிறகு முழுமையாக நிர்வகித்து வருபவர் அமலாதான். நாகர்ஜூனாவின் மகன்களான நாகசைதன்யாவும், அகிலும் தெலுங்கின் முன்னணி நடிகர்கள். இதில், அகில் நாகர்ஜூனா – அமலா தம்பதியின் மகன். நாகர்ஜூனா வீட்டில் எத்தனையோ நாய்கள் இருந்தாலும் அவர் வீட்டில் வளர்ந்து வந்த லேப்ரடார் வகை நாய் அவருக்கு எப்பவும் ஃபேவரைட்டாம். அப்படி ஒருநாள் ஷூட்டிங்கில் இருந்து வந்தபோது, அந்த நாய் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதுபற்றி அகிலிடமும் அமலாவிடமும் கேட்டிருக்கிறார்.

ஒரு டிரெய்னிங்குக்காக அந்த நாயை அனுப்பியதாக அமலா சொல்லவும், தனக்குத் தெரியாமல் நாயை டிரெயினிங்குக்கு அனுப்பியதால் அவர் கோபமடைந்து, உன்னிடம் இனிமேல் பேசவே மாட்டேன் என்று அமலாவிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம். அவராகவே பேசுவார் என ஒருவாரம் வரையில் அமலா அமைதியாக இருந்திருக்கிறார். ஆனால், அவரது கோபம் குறையவில்லையாம். கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு நாகர்ஜூனாவே, தனது தவறை உணர்ந்து அமலாவிடம் பேசியிருக்கிறார். ஆறு ஆண்டுகள் மட்டுமே ஹீரோயினாக நடித்திருந்தாலும் தனது நாட்டியத் திறமையாலும் நடிப்பாலும் ஒரு கிளாசிக் ஹீரோயினாகவே கோலிவுட்டில் நிலைத்துவிட்டார். தமிழ் படங்கள் தவிர்த்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் அமலா நடித்திருக்கிறார்.
சத்யா கீதா நாயர் கேரக்டர், மெல்லத் திறந்தது கதவு நூர்ஜஹான் இந்த ரெண்டு கேரக்டர்களும் அமலா நடிச்சதுல எனக்கு பெர்சனல் ஃபேவரைட். அமலா நடிச்சதுல உங்களுக்குப் பிடிச்ச கேரக்டர் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.
Simply want to say your article is as astounding.
The clarity in your post is just spectacular and i can assume you’re an expert
on this subject. Well wwith your permission allow me to grab your RSS feed to keep up
to date with forthcoming post. Thanks a million and please carry on the rewarding work. https://Glassi-app.blogspot.com/2025/08/how-to-download-glassi-casino-app-for.html