செல்வராகவன் படங்கள்ல நம்மதான் ஹீரோ… ஏன் தெரியுமா?

அன்புக்காக ஏங்குற ‘காதல் கொண்டேன்’ வினோத், வாழ்க்கைல ஜெயிக்கவே முடியாது, எனக்கு எதுவுமே வராதுனு ஊதாரித்தனமா சுத்துற ‘7 ஜி ரெயின்போ காலனி’ கதிர், ஒவ்வொரு நாளும் அடிபட்டு, மிதிபட்டு சர்வைவலே சவாலா இருக்குற ‘புதுப்பேட்டை’ கொக்கி குமார், வாழ்க்கைல ஜெயிக்கலைனாலும் பரவால்ல. ஆனால், புடிச்சத மட்டும்தான் செய்யணும்னு நினைக்கிற ‘மயக்கம் என்ன’ கார்த்திக், சாதாரண வாழ்க்கைக்கு ஏங்குற ‘நானே வருவேன்’ கதிர்.

இவங்க எல்லாத்துக்கும் பொதுவா ஒருக்குற ஒரு விஷயம் அன்புக்கான ஏக்கம், டிப்ரஷன். அதுக்கு ஆறுதலா இருந்து தலைகோதி கொடுக்குற பெண் கேரக்டர்ஸ். இப்படி செல்வராகவனோட கேரக்டர்ஸ சொன்னாலே, நாமளும் இப்படிதான இருக்கோம்னு நம்மள ஏதோ ஒரு டயலாக் / சீன் நினைக்க வைக்கும். அந்த கேரக்டர்ஸ் பத்திதான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

நமக்குள்ள இருக்குற ஒவ்வொரு குணங்களோட எக்ஸ்ட்ரீம் வெர்ஷனுக்கும் ஒரு பெயர் வைச்சு, உருவம் கொடுத்து அதை இன்னொரு மனுஷனா எதிர்ல நின்னு பார்த்தா எப்படி இருக்கும்? அதுதான் செல்வராகன் கதாபாத்திரங்கள். இதை மனசுல வைச்சுட்டு, நான் சொல்லப்போறதையும் இதையும் ஒப்பிட்டுப் பாருங்க. அப்போ, செல்வா கேரக்டர்ஸ் ஏன் நமக்கு அவ்வளவு நெருக்கமா இருக்குனு உங்களுக்கே புரியும். எப்பவுமே முதல் படத்துல இருந்து ஆரம்பிப்போம். இப்போ, கடைசி படத்துல இருந்து போவோம்.

கதிர் – ‘நானே வருவேன்’ படம் பார்த்துட்டு வந்த எல்லாருக்குள்ளயும் பதிந்த ஒரு கேரக்டர், கதிர்தான். அந்த கேரக்டருக்கு பெருசா பின்கதையை செல்வா படத்துல சொல்லியிருக்க மாட்டாரு. அதுவே படத்துக்கு மைனஸா இருந்துச்சு. ஆனால், அந்த பையன் ஏன் இப்படி ஆனான்னு நம்மளால புரிஞ்சிக்க முடியும். ஒரு விஷயத்தை சொல்லாமல் அவனோட உணர்வை புரிஞ்சிக்க முடியுதுனா, ஒண்ணு அவன் இடத்துல இருந்து நாம அவன் பண்றதை புரிஞ்சுக்கனும். இல்லைனா, அவன் அனுபவிச்ச விஷயங்களை ஏதோ ஒரு கட்டத்துல நாம அனுபவிச்சுருக்கனும். கதிர் கேரக்டரை பார்க்கும்போது இந்த ரெண்டுமே நம்மள கனெக்ட் பண்ணும். கதிர் கேரக்டரை சின்ன வயசில இருந்தே, “அவனை மாதிரி ஏன் இவன் இல்லை?”னு கேட்டுதான், அம்மாப்பா வளர்ப்பாங்க. செல்வராகவன் இந்த கேரக்டர் பத்தி பேசும்போது, “அவனை மாதிரி இருனு சொல்றதைவிட கொடுமையான விஷயம் இந்த உலகத்துல வேற இல்லை”னு சொல்லுவாரு. இந்த கேள்வியை எதிர்கொள்ளாத குழந்தைகள் இருக்கவே முடியாது. அதுதான் அவனை இன்னும் மூர்க்கமான ஒரு ஆளா மாத்துது. அதனாலயே அந்த கேரக்டர் நம்மக்கூட டக்னு கனெக்ட் ஆயிடுது. சின்ன விஷயமா தோணும். ஆனால், உளவியல் ரீதியா அது மனசுல ஏற்படுத்துற தாக்கம் ரொம்ப பெருசு.

Kadhir
Kadhir

நமக்குள்ளயும் அந்த மாதிரி மூர்க்கமான குணங்கள் சின்ன வயசுல இருந்தே இருக்கும். ஆனால், நம்மள சுத்தி இருக்குற அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, டீச்சர்னு யாரோ ஒருத்தர் அதை கண்ட்ரோல் பண்ணி அடி தந்தாலும் அப்புறமா அரவணைச்சு கொண்டு போய்டுவாங்க. ஆனால், இங்க கதிருக்கு அரவணைப்புக்கு பதிலா தனிமைதான் கிடைக்குது. அந்த தனிமையும், பிறக்கும்போதே அவன் அப்நார்மலா இருக்குறதை கவனிக்காமல் அவனை இன்னும் ஒருவிதமான மனஅழுத்தத்துக்கு தள்ளுனதும், அவங்க அப்பாவை கொலை பண்ண வைக்குது. அம்மாவே அவனை வீட்டைவிட்டு வெளிய கொண்டு போய் விடுறாங்க. ஏதோ, ஒரு கட்டத்துல அவன் மத்தவங்கள பார்த்து சாதாரண வாழ்க்கைக்கு ஏங்க ஆரம்பிக்கிறான். தனிமை, பசி, அன்பு எல்லாத்துக்கும் ஏங்குறான். மத்தவங்கள மாதிரி எனக்கு ஏன் சாதாரண ஒரு வாழ்க்கை கிடைக்கலைனு நினைக்கிறதைவிட கொடுமையான விஷயம் இந்த உலகத்துல வேற இல்லைனு தோணும். ஆனால், கதிருக்கு ஒரு கட்டத்துல அது கிடைக்குது. கைவிட்டு அந்த வாழ்க்கை போகுதுனு நினைக்கும்போது அவனுக்குள்ள இருந்த அந்த ஈவில் வெளிய வரான். நமக்கு புடிச்ச விஷயம் நம்ம கைவிட்டு போகும்போது நாமளும் அப்படிதான இருப்போம். அதுதான் கதிர் கேரக்டர் நமக்கு கனெக்ட் ஆகுறதுக்கு காரணம்.

கார்த்திக், கதிர், வினோத் கேரக்டர்கூடலாம் எப்படி கனெக்ட் ஆகுறோம்னு தான கேக்குறீங்க?

Also Read -கண்ணு நடிக்கும் பார்க்குறியா… தனுஷ் கண்கள் ஏன் அவ்வளவு பவர்ஃபுல்?

கார்த்திக் – எல்லாருக்குமே வாழ்க்கைல என்ன ஆகணும்னு கனவு இருக்கும். நிறைய பேரால குடும்ப சூழ்நிலையால அது ஆக முடியாமல் வேறவேலை பார்த்துட்டு இருப்போம். என்ன ஆனாலும் பரவால்ல பார்த்துக்கலாம். எனக்கு புடிச்சதைதான் செய்யப்போறேன்னு ஒருநாள் திடீர்னு தோணும். ஆனால், அதை நாம பெரும்பாலும் பண்ண மாட்டோம். அந்த எண்ணத்துக்கு ஒரு உருவம் கொடுத்தா எப்படி இருக்கும்? அதுதான் ‘மயக்கம் என்ன’ கார்த்திக். சிலர் தைரியமா அந்த முடியை எடுத்துருவாங்க, அந்த மொமண்ட்ல. எங்கப்போனாலும் ரிஜெக்‌ஷன், வாழ்க்கைல அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் ஸ்டக் ஆகி நிக்கிறது, நம்மள உழைப்பைத் திருடி இன்னொருத்தன் பெயர் வாங்குறதுனு நிறைய விஷயங்களை அவங்க ஃபேஸ் பண்ணுவாங்க. தினமும் நைட்டு வாழ்க்கை இப்படியே போய்டுமா?ன்ற கேள்வியோட தூக்கம் வராமல் டிப்ரஷன்ல திணறிட்டு இருப்பாங்க. இருந்தாலும் எனக்கு புடிச்சதை நான் செய்றேன்ற ஒரு சின்ன சந்தோஷம் அவங்களை இயக்கும். “வாழ்க்கைல நாம எஞ்சாய் பண்ற வேலையை செய்யணும். இல்லைனா செத்தர்னும், நான் பெரிய ஆளா வரவே வேணாம். ஆனால், வாழ்க்கை ஃபுல்லா இந்த வேலையை சந்தோஷமா செய்துட்டே இருப்பேன்.”னு சொல்றதுக்கு பின்னாடி எவ்வளவு வலி இருக்கும். அந்த வலியை ஒரு டயலாக்ல நம்மள ரெப்ரசண்ட் பண்ற கேரக்டர் சொல்லுதுனா, வேற என்ன வேணும் ஆறுதலுக்கு?

Nane Varuven
Nane Varuven

கதிர் – எதார்த்தமான, லாஸ்ட் பெஞ்ச்க்கு முந்தின பெஞ்ச்ல இருக்குற ஒருத்தனோட வாழ்க்கைதான். 2 பாடத்துல பாஸ் ஆவான். ஃப்ரெண்ட்ஸ் பெருசா இருக்க மாட்டாங்க. ஸ்போர்ட்ஸ் வராது. எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்னு எதுவும் இருக்காது. வீட்டுல தண்டம்னு திட்டுவாங்க. அப்பாம்மாவும் காசுக்கு கஷ்டப்படுவாங்க. வேலை கிடைக்காது. ஷார்ட்டா சொல்லணும்னா, ‘7 ஜி ரெயின்போ காலனி’ கதிர் கேரக்டர். ஆவரேஜ் ஆன, லோயர் மிடில் கிளாஸ் பசங்கதான் வாழ்க்கைல ரொம்ப திணறுவாங்க. தனக்கு எதுவுமே வராதுன்ற எண்ணம் அவங்கள பேய் புடிச்ச மாதிரி போட்டு தாக்கும். நம்ம கேங்க்லயும் ஒருத்தன் அப்படி நினைச்சுட்டு இருப்பான். அந்த ஒருத்தன் நாமளா கூட நிறைய சூழ்நிலைல இருந்துருப்போம். அதனாலதான் கதிர் நிறைய பேருக்கு ஃபேவரைட்.

Vinodh
Vinodh

வினோத் – ‘நானே வருவேன்’ கதிர் கேரக்டரோட யங் வெர்ஷன்தான் வினோத். வினோத் கேரக்டரோட எக்ஸ்டண்ட் வெர்ஷன்தான் கதிர்னும் சொல்லலாம். அவன் உலகமே வேற. அவனுக்கு நார்மல் வாழ்க்கைனா வேற. அந்த உலகத்தைவிட்டு, படிக்க சென்னை வரும்போது அங்க எல்லாமே அந்நியமா அவனுக்கு இருக்கு. கிட்டத்தட்ட அடையாளம் தெரியாத ஊர்ல இருந்து சிட்டிக்கு கிளம்பி வர்றவங்க நிறைய பேரோட மைண்ட் செட் இதுவாதான் இருக்கும். ஆனால், வினோத் இங்க உளவியல் ரீதியா, உறவு ரீதியா நிறைய சிக்கல்களை சந்திச்சவன். வினோத்தை சுத்தி இருக்குறவங்களுக்கு நார்மலா இருக்குற விஷயங்கள் அவனுக்கு கஷ்டம். ஆனால், அவங்களுக்கு கஷ்டமா இருக்குற விஷயங்கள் இவனுக்கு நார்மல். எவ்வளவு பெரிய முரணுக்குள்ள அவன் வாழ்க்கை டிராவல் ஆகுது. கிளாஸே சேர்ந்து அவனை கிண்டல் பண்ணும், அவமானப்படுத்துவாங்க எல்லாத்தையும் தாண்டி அவங்கிட்ட ஒரு பொண்ணு வந்து அவனை அரவணைச்சு பேசும்போது, அவன் வாழ்க்கைல முதல்ல வந்த தேவதையா அவங்களதான வினோத் பார்ப்பான். நட்பா? காதலா?-னு தெரியாம தவிக்கிற அந்த உணர்வு நமக்குள்ள இருக்கும்ல. அதை வினோத்தின் வழியா சொன்னது செல்வாதான். அந்த நமக்குள்ள இருக்குற தவிப்புக்கு உருவம்தான் வினோத்.

புதுப்பேட்டைல வர்ற கொக்கி குமார் கேரக்டர் எழுதுன விதமா செமயா இருக்கும். ஆனால், அவன் ரௌடி ஆகுற வரைக்கும் நம்மளால அவங்கூட ஈஸியா கனெக்ட் பண்ணிக்க முடியும். அப்புறம் அவன் வேற டிராக்ல பயணிக்க ஆரம்பிச்சிடுவான். ஆனால், அவனுக்குள்ளயும் அன்புக்கான ஏக்கம், பதவி வெறி, பண வெறினு சொல்லி ஏகப்பட்ட விஷயங்கள் வழியா கொக்கி குமார்கூட நம்மள சில இடங்கள்ல கனெக்ட் பண்ணிக்க முடியும். நமக்குள்ள இருக்குற குணங்களோட எக்ஸ்ட்ரீம் வெர்ஷன் உருவம்தான் செல்வராகவன் பட கேரக்டர்னு சொன்னேன்ல. அந்த வகையில் பார்த்தா, ஆசைதான் கொக்கி குமார் கேரக்டர். அந்த ஆசை எதனால வந்துச்சு? அவன் துயரங்கள் என்ன? இதெல்லாமே ஏதோ இடத்துல கொஞ்சமா நாம அனுபவிச்சதுதான்.

Kokki Kumar
Kokki Kumar

பெண் கதாபாத்திரங்கள்தான் செல்வராகவன் படங்களோட இதயம்னு சொல்லலாம். ஏன்னா, வினோத், கதிர், கார்த்திக், கொக்கி குமார்னு எல்லாருக்குமே வாழ்க்கையை கற்றுக்கொடுத்தது அவனால தாங்கிக்கொள்ள முடியாத அன்பைக் கொடுத்தது திவ்யாவும், அனிதாவும், கிருஷ்ண வேணியும், யாமினியும்தான். இவங்களும் அவங்க காதலும் இல்லைனா, நான் மேல சொன்ன எந்த கேரக்டரும் கிடையாது. அவ்வளவு போல்டா இருந்து அவங்க கீழ விழுற இடத்துலலாம் தாங்கிப்பிடிக்கிறதும், தடுமாறுற எடத்துலலாம் ஓங்கி அரை விடுறதும் இவங்கதான். இவங்கள மாதிரி மனைவி வேணும்னுதான் எல்லா பசங்களும் நினைப்பாங்க. அவங்க காப்பாத்துவாங்கன்றதுக்காக சொல்லல. அவங்க தரும் அன்பைப்போல உலகத்துல வேற விஷயமே கிடையாதுன்றதுக்காக.

செல்வராகவன் கேரக்டர்ஸ்லாம் சொன்னேன்ல. எல்லா கேரக்டர்லயும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஒரு உருவம் கொடுத்தாதான் நாம. சில தருணங்கள்ல வினோத், சில் தருணங்கள்ல கதிர், சில தருணங்கள்ல கார்த்திக் இப்படிதான் இருந்துருப்போம். நாம அதுல எக்ஸ்ட்ரீம் ஸ்டேஜ்க்கு போகலை. அவ்வளவுதான். இப்படி எல்லா கேரக்டர்கூடவும் ஒரு கனெக்ட் இருக்குறதாலதான். செல்வராகவன் படங்கள்ல வர்ற கேரக்டர்ஸ் நமக்கு அவ்வளவு கனெக்ட் ஆகுது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top