இன்று தன் 68-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் செந்தில். தமிழ் சினிமாவில் நகமும் சதையுமாக ஒட்டிக்கொண்டு வலம்வந்தவர்கள் செந்தில் – கவுண்டமணி காம்போ. இந்த ஹிட் கூட்டணி, ஏகப்பட்ட ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறது. இன்றளவும் அது எவர்க்ரீன் காமெடியாகவும், எப்போது பார்த்தாலும் சிரிப்பு வரும் காவியக் காமெடிகளாக உள்ளது. கோலிவுட்டின் ஒட்டிப் பிறக்காத மாற்றான் இவர்கள். செந்திலின் பிறந்தநாளான இன்று அவரது ஃபேமஸ் வசனங்கள் சில!