சத்யம் தியேட்டரோட ஓனருக்கு ஒரு மெயில் வந்தது. அதில் ஒருவர் ‘சார், நான் ஒரு படம் பார்க்க வந்தப்போ சத்யம் தியேட்டர்ல பாப்கார்ன் வாங்கினேன். திடீர்னு பார்த்தா என் பர்ஸ்ல காசு கொஞ்சம் கம்மியா இருந்துச்சு. உங்க ஸ்டாஃப் கொஞ்சம்கூட யோசிக்காம பரவாயில்ல சார்னு எனக்கு பாப்கார்ன் கொடுத்துட்டு என்கிட்ட இருந்த காசை மட்டும் வாங்கிக்கிட்டாரு. உண்மைல நெகிழ்ச்சியாகிடுச்சு சார்.’ என்று சொல்லியிருந்தார். இது சத்யம் தியேட்டரில் கஸ்டமர்களை எப்படி நடத்துவார்கள் என்பதற்கு ஒரு சின்ன சாம்பிள். சென்னையில் இருப்பவர்களுக்கு சத்யம் தியேட்டர் எப்போதுமே ஃபேவரிட் ஸ்பாட்தான். ஏன் சத்யம் தியேட்டர் அவ்வளவு ஸ்பெஷல்? சத்யம் தியேட்டரின் வரலாறு என்ன? குறிப்பா சத்யம் தியேட்டர் பாப்கார்ன் அவ்ளோ டேஸ்ட்டா இருக்க அதுல சேர்க்கப்படுற ரகசிய இன்கிரிடியண்ட் என்ன? எதனால அந்த தியேட்டர் கைமாறுச்சு அப்போ ரசிகர்கள் என்னவெல்லாம் திட்டம் போட்டு அந்த ஓனருக்கு உதவ நினைச்சாங்க? இதெல்லாம்தான் இந்த வீடியோல பார்க்கபோறோம்.

1974-ல வேங்கடகிரி ராஜா சென்னைல ‘ராயல் தியேட்டர் காம்ப்ளக்ஸ்’ அப்படினு ஒரு மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர் கட்டுறாரு. அதாவது அப்போவே ஒரு தியேட்டர்ல மூணு ஸ்கிரீன்ஸ் இருக்கும். 1980-கள்ல எஸ்.பி.ஐ க்ரூப் இந்த தியேட்டரை விலைக்கு வாங்கி ‘சத்யம் சினிமாஸ்’னு பேர் மாத்தி நடத்திட்டு வர்றாங்க. அப்போலாம் இது சென்னைல அவ்வளவு பிரபலமில்லாத கூட்டத்துல ஒரு தியேட்டராதான் இருந்தது. சொல்லப்போனா நஷ்டத்துலதான் ஓடிட்டு இருந்துச்சு. சரி இனி வச்சு மெயிண்டெயின் பண்றது ரொம்ப கஷ்டம். இதை இடிச்சுட்டு வேற எதாச்சும் காம்ப்ளக்ஸ் கட்டலாம்னு முடிவு பண்றாங்க. அப்போதான் 1999-ல எஸ்.பி.ஐ குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தருக்கு இதுமேல சின்னதா ஒரு இண்ட்ரஸ்ட் வருது. அவர் பெயர் கிரண் ரெட்டி. இந்த கிரண் ரெட்டி, ஏற்காடு ஸ்கூல் முடிச்சுட்டு சென்னைல இன்ஜினியரிங் படிச்சுட்டு, அமெரிக்காவுல போய் எம்.பி.ஏ படிச்சுட்டு திரும்ப வர்றாரு. வந்தா அவங்க குடும்பத்தோட ஏகப்பட்ட பிசினஸ் அவர் பாத்துக்குறதுக்கு ரெடியா இருக்கு.

ஒரு பவர் ப்ளாண்டை செலக்ட் பண்ணி அங்க வொர்க் பண்ணிட்டு இருந்தவருக்கு இந்த தியேட்டரை இடிக்கப்போற விஷயம் தெரியவருது. அவருக்கு பெருசா சினிமால ஆர்வம் இருந்ததில்ல ஆனா இந்த தியேட்டரை கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணா பிசினஸ் நல்லா போகும்னு தோணுது. எங்க தப்பு நடக்குதுனு இறங்கி பார்த்தப்போ அவர் ஒரு விஷயத்தை நோட் பண்றாரு. அந்த காலத்துல படம் பார்க்குறது அவ்ளோ பெரிய எக்ஸ்பீரியன்ஸா இல்ல. தியேட்டர் சேர்கள் கன்னாபின்னானு இருக்கும். பாத்ரூம் சுத்தமா இருக்காது. இப்படி அடிப்படைல நிறைய பிரச்னைகள் இருந்தது. கிரண் சத்யம் சினிமாஸ் கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ்ல ஃபோகஸ் பண்றாரு. சுத்தமான சேர், பாத்ரூம். பொறுமையான மரியாதையான ஸ்டாஃப்னு மாத்த அது எல்லாருக்கும் பிடிக்க ஆரம்பிக்குது. சத்யம் தியேட்டர் கொஞ்சம் கொஞ்சமா மக்கள் மத்தில பிரபலமாகுது. ஒரு கட்டத்துல சென்னையோட அடையாளமா மாறுது.
கிரண் ரெட்டி நினைச்சதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். ஒருத்தர் படம் பார்க்க வர்றாங்கனா பார்க்கிங்ல வண்டியை நிறுத்திட்டு உள்ளே போறதுல இருந்து படம் பார்த்துட்டு திரும்ப வெளில வந்து வண்டியை எடுத்துட்டு போற வரைக்கும் ஒரு குவாலிட்டியான சௌகரியமான எக்ஸ்பீரியன்ஸை கொடுக்கணும். இன்னைக்கும் சத்யம் தியேட்டர்ல பார்க்கிங் டிக்கெட் 10 ரூபாய்தான். அங்க இருக்குற ஸ்டாஃப் அவ்ளோ மென்மையாவும் நடந்துக்குவாங்க. டிக்கெட் கவுண்டர்ல கூட ஏ.சி இருக்கும். தியேட்டர்க்குள்ள போனா சுத்தம் சுத்தம் சுத்தம். சேர்கள் அவ்வளவு வசதியா இருக்கும். கை வைக்கிறதுக்கு அவ்வளவு விலாசமானதா இருக்கும். முக்கியமா ஒரு வரிசைக்கும் இன்னொரு வரிசைக்கும் நல்ல உயரம் இருக்கும். முன்னாடி இருக்குறவங்க தலை மறைக்குதுங்குற கம்ப்ளைண்ட்லாம் இருக்காது. 10 மணிக்கு ஷோனா கரெக்டா 10 மணிக்கு சென்சார் கார்டு வரும். விளம்பரங்கள் அதுக்கு முன்னாலயே முடிஞ்சிடும். படம் முடியுற வரை மிதமான கூலிங் இருந்துட்டே இருக்கும். ரெஸ்ட்ரூம் அவ்வளவு க்ளீனா இருக்கும். இப்படி சத்யம் கொடுக்கும் எக்ஸ்பீரியன்ஸை ஒரு முறை ஃபீல் பண்ணிட்டா உங்களால மறக்கவே முடியாது. இதையெல்லாம் கொடுத்துட்டு டிக்கெட் விலையும் ஒரு சராசரி தியேட்டர் அளவுக்குதான் இருக்கும்.
சத்யம் பாப்கார்ன் பலருக்கும் ஃபேவரிட். அதற்குக் காரணம் அதன் தனி சுவை. சத்யம் தியேட்டரின் ஃபுட் வெண்டாராக இருந்த பவேஷிடம் ஒரு கோரிக்கை வைத்தார் கிரண். உலகிலேயே சிறந்த பாப்கார்ன் எதுனு கண்டுபிடிச்சு அதை சென்னைக்கு கொண்டு வரணும் என்பதுதான் அது. தேடித்தேடி கடைசியில் அமெரிக்காவில் நப்ராஸ்கா பகுதியில் கிடைக்கும் பாப்கார்ன்தான் சிறந்தது கண்டுபிடித்தார்கள். மைனஸ் 18 டிகிரி குளிரில் நப்ராஸ்காவில் தங்கியிருந்து அந்த பாப்கார்ன் செய்யும் வித்தையை கற்றுக்கொண்டு வந்திருக்கிறார். அந்த பாப்கார்னுக்கான ஃப்ளேவர்ஸூம் இதேபோலதான் ஒரு தேடுதல் வேட்டை நடந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.
Also Read – செல்வராகவன் படங்கள்ல நம்மதான் ஹீரோ… ஏன் தெரியுமா?
அரசியல் நெருக்கடியால் பட்ட மன உளைச்சலால் 2018-ஆம் ஆண்டு தனது SPI சினிமாஸை PVR சினிமாஸ்க்கு விற்றார் கிரண் ரெட்டி. அவ்வளவுதான் சென்னை ரசிகர்கள் கொதித்து எழுந்துவிட்டார்கள். ஆளாளுக்கு சத்யம் தியேட்டரில் அவர்களுக்கு நடந்த நல்ல நினைவுகளை பகிர்ந்துகொண்டார்கள். படம் ஓடும்போது ஐந்து நிமிடம் தடங்கல் ஏற்பட்டதற்கு அனைவருக்கும் ஃப்ரீ கோக் கொடுத்தார்களாம். திரைப்பட இயக்குநர் கேபிள் சங்கர் எடுத்த டிக்கெட்டை தொலைத்துவிட்டாராம். ஆனால் சீட் நம்பரைக் கேட்ட ஊழியர், ‘சார் நீங்க படம் பாருங்க ஆனா வேற யாராவது அந்த டிக்கெட் கொண்டு வந்தா நான் அவங்களைதான் அனுமதிக்க முடியும்’ என்று சொல்லிவிட்டு படம் போட்டு கொஞ்ச நேரம் வரை அவரை டிஸ்டர்ப் செய்யாமல் ஓரமாக நின்று கொண்டிருந்தாராம். யாரும் வரவில்லை என்பதை உறுதிசெய்துவிட்ட பிறகு அங்கிருந்து நகர்ந்துவிட்டாராம். வேறு தியேட்டராக இருந்தால் உள்ளேயே விட்டிருக்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதுபோன்ற நிறைய அனுபவங்கள் பகிரப்பட்டது. ஹைலைட்டாக சென்னையில் இருக்கும் ஒவ்வொருவரும் 1,200 ரூபாய் போட்டால் சத்யம் தியேட்டரை நாமே வாங்கலாம் என்று க்ரவுடு ஃபண்டிங் பேச்செல்லாம்கூட ஓடியது.

இன்றைக்கு பி.வி.ஆர் நிறுவனம்தான் தொடர்ந்து சத்யம் தியேட்டரை அதே பெயரில் நடத்திக்கொண்டிருக்கிறது. சத்யம் தியேட்டரின் கஸ்டமர் சர்வீஸூக்கு அப்படியே நேரெதிராக விமர்சிக்கப்பட்டதுதான் பி.வி.ஆர் நிறுவனம். இனி அந்த குவாலிட்டி அப்படியே தொடரும் என்று நினைக்கிறீர்களா என்று கிரண் ரெட்டியிடம் கேட்கப்பட்டபோது அவர் சொன்னது இதுதான்.
“இப்ப நடந்திருக்கிறது Reverse Acquisition. சத்யமை பி.வி.ஆர் வாங்கியிருந்தாலும் சத்யம் என்ன மாதிரியான ஒரு எக்ஸ்பீரியன்ஸை கொடுத்ததோ அதைத்தான் பி.வி.ஆரும் கொடுக்கவேண்டும் என்ற பிரசர் அவர்களுக்கு வந்திருக்கிறது. கொஞ்சம் குறைந்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று சொன்னார்.
நீங்க சத்யம் தியேட்டருக்கு போயிருக்கீங்களா? உங்க எக்ஸ்பீரியன்ஸை கமெண்ட்ல சொல்லுங்க. உங்க ஊர்ல என்ன தியேட்டர் இதுமாதிரி ஃபேமஸ்னும் சொல்லுங்க.





Hello my family member! I want to say that this article is amazing, great written and include almost all important infos. I would like to look more posts like this .
iwin – nền tảng game bài đổi thưởng uy tín, nơi bạn có thể thử vận may và tận hưởng nhiều tựa game hấp
Với giao diện mượt mà và ưu đãi hấp dẫn, MM88 là lựa chọn lý tưởng cho các tín đồ giải trí trực tuyến.
Đến với J88, bạn sẽ được trải nghiệm dịch vụ cá cược chuyên nghiệp cùng hàng ngàn sự kiện khuyến mãi độc quyền.