ஒரு நடிகரின் படம் வெளியாகி, ஹிட்டாகி, அதே நடிகரின் அடுத்தப்படம் வர வரைக்கும் அந்தப் படம் தியேட்டரின் ஓடியிருக்கு என்கிற செய்திகளெல்லாம் இனிமேல் கேட்கவே முடியாது. அப்படி ஒரு செய்தியைத்தான் காதலுக்கு மரியாதை படம் கொடுத்தது. அதுவும் பலத்த போட்டிகளுக்கு இடையேயும்; பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இடையேயும் இந்த சாதனையை செய்தது. காதலுக்கு மரியாதை படம் ரிலீஸான டிசம்பர் 19 ஆம் தேதிக்கு முந்தைய வாரம்தான் மம்முட்டியின் அரசியல் என்கிற படமும் அஜித்தின் ரெட்டை ஜடை வயசு என்கிற படமும் ரிலீஸாகி இருந்தது. வருட கடைசியில் வெளியானாலும் ஸ்லோ பிக்கப் ஆக இல்லாமல் ஃபாசில், இளையராஜா என பெரிய படமாக இருந்ததால் முதல் வாரத்தில் இருந்தே பாஸிட்டிவ்வான ஓட்டமும் பேச்சும் படத்துக்கு கிடைத்தது. ஆனால், இரண்டு வாரங்களில் பொங்கல் ரிலீஸ் இருந்ததாலும் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது என்பதாலும் படத்தை தூக்கிவிடுவார்களோ என்கிற தயக்கம் இருந்திருக்கிறது.

ஆனால், 1998 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான சரத்குமாரின் மூவேந்தர், முரளியின் காதலே நிம்மதி, நெப்போலியனின் கிழக்கும் மேற்கும், மம்முட்டியின் மறுமலர்ச்சி, பிரபு தேவாவின் நாம் இருவர் நமக்கு இருவர், பிரபுவின் பொன்மனம், விஜயகாந்த்தின் உளவுத்துறை, கார்த்திக்கின் உதவிக்கு வரலாமா என தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸாகியும் காதலுக்கு மரியாதையின் ஓட்டத்தை நிறுத்த முடியவில்லை. ஜனவரி கடந்து பிப்ரவரி கடந்து மார்ச் மாதம் வரைக்கும் குடும்பங்கள் கொண்டாடும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடியது. மார்ச் மாத துவக்கத்தில் அஜித்தின் காதல் மன்னன் வெளியானது. ஆனால், அந்தப் படம் ஸ்லோ பிக்கப் என்பதால் ஏப்ரல் மாத துவக்கத்தில் காதலுக்கு மரியாதை படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டன. ஆனால், ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி விஜய்யின் அடுத்தப்படமான நினைத்தேன் வந்தாய் வெளியாகி விட்ட தியேட்டர்களை பிடித்துவிட்டது. இப்படி காதலுக்கு மரியாதை வெளியாகி 110 நாள்களுக்குப் பிறகு நினைத்தேன் வந்தாய் வெளியாகும் வரை வசூலில் சக்கைப்போட்ட விஜய்யின் முதல் படம் இது என்றே சொல்லலாம். அன்றைய சூழலில் 2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், சுமார் 16 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்த மாதிரி நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கான தகவல்கள் அடுத்தடுத்து சொல்லப்போறேன். அதுக்கு முன்னாடி நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தால் பண்ணிடுங்க.
நடிகர் விஜய்யின் காதலுக்கு மாரியாதை படம் எப்படி உருவாச்சு… அது ஏற்படுத்துன தாக்கங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல்னு அந்தப் படம் பற்றிய நம்முடைய Silver Jubilee எபிசோடைப் பார்க்க கீழ இருக்க லிங்கை கிளிக் பண்ணுங்க!



iwin – nền tảng game bài đổi thưởng uy tín, nơi bạn có thể thử vận may và tận hưởng nhiều tựa game hấp
kuwin sở hữu kho game đa dạng từ slot đến trò chơi bài đổi thưởng, mang đến cho bạn những giây phút giải trí tuyệt vời.
iwin – nền tảng game bài đổi thưởng uy tín, nơi bạn có thể thử vận may và tận hưởng nhiều tựa game hấp