லட்சக்கணக்கில் பணம் மிச்சம்..! G Square Triumph அதிரடி ஆஃபர்!

`10 வருஷத்துக்கு முன்னாடியே சிட்டி அவுட்டர்ல இடம் வாங்கியிருக்கலாம். இன்னைக்கி என்ன ஒரு வளர்ச்சி’னு நினைக்காதவங்களை சென்னையில் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு ஓ.எம்.ஆருக்கு நிகரான ஐ.டி. துறையின் வளர்ச்சியும், பெருநிறுவனங்களின் வருகையும் இன்று செங்கல்பட்டு வரை ஹைடெக் இடமாக மாற்றியிருக்கின்றன. நகரம் விரிவடைந்து கொண்டே போவதால் அதிகமான ஐ.டி கம்பெனிகள் சென்னை புறநகர் பகுதிகளில் செயல்படுகின்றன. சென்னை புறநகர் பகுதிகளில் முக்கியமாக மேடவாக்கம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளின் வளர்ச்சி இன்னும் தீவிரமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது.

மாடம்பாக்கம் எதற்கு?

மாடம்பாக்கம்
மாடம்பாக்கம்

மாடம்பாக்கத்தைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்வதற்கு முக்கியமான காரணம். இதுவரை அந்த பகுதி அடைந்துள்ள வளர்ச்சியும், இனிமேல் அடையப்போகும் பிரம்மாண்ட வளர்ச்சியும் முக்கியமான காரணம். இன்னும் அடுத்த 5 ஆண்டுகளில் ஓ.எம்.ஆருக்கு நிகரான வளர்ச்சியை இப்பகுதி அடையும். மாடம்பாக்கத்தைச் சுற்றிலும் குறிப்பாக zion இண்டர்நேஷனல், Harizon International, FIITJEE Global என உலகத்தரம் வாய்ந்த பள்ளிகள், VIT, IIIT என கல்லூரிகள், மருத்துவமனைகள், ஷாப்பிங் செய்ய கடைகள், உலகத் தரமான விடுதிகள், உணவகங்கள், பொழுதுபோக்கு இடங்கள் என 360 டிகிரி வளர்ச்சியை எட்டி பிரமிக்க வைக்கிறது. அதிலும் மாடம்பாக்கத்தைச் சுற்றிலும் சிறியதும், பெரியதுமாக 4,000-க்கும் மேற்பட்ட ஐ.டி கம்பெனிகள் இயங்கி வருகின்றன என்பது கூடுதல் தகவல். இப்படி மாடம்பாக்கம் சத்தமே இல்லாமல் வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது.

G Square Triumph
G Square Triumph

மாடம்பாக்கத்தின் வருங்கால வளர்ச்சி!

மாடம்பாக்கத்தில் மிகப்பெரிய அதி நவீன அரசு மருத்துவமனை அமைய இருக்கிறது. தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இடத்தை பார்வையிட்டு அரசு மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்படும் என அறிவித்தார். அதன்பின்னர் மாநகராட்சி மேயர் பிரியா இடத்தைப் பார்வையிட்டு சென்றிருக்கிறார். இப்படி மாநில அரசின் திட்டம் ஒருபுறம் இருக்க, மத்திய அரசின் ‘அம்ரூத்’ திட்டமும் மாடம்பாக்கத்தில் அமைய இருக்கிறது.

‘அம்ரூத்’ வளர்ச்சி திட்டம்

மாடம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நகர்ப்புற நில மேம்பாட்டிற்காக 740 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில், தரமான சாலை, பூங்காக்கள், பள்ளிகள் அமைக்கப்படுவதுடன் சகல வசதிகளுடன் தலை சிறந்த குடியிருப்பு பகுதிகளாக மாற்றும் பணி துவங்கியுள்ளது. தமிழகத்தில், தரமான சாலை, பூங்கா, பள்ளி, சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்கள் என சகல வசதிகளுடன் கூடிய திட்டமிட்ட நகர் பகுதியை உருவாக்கும் வகையில், நகர்ப்புற நில தொகுப்பு மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இங்கு, முழுமையான நகர்ப்புற வளர்ச்சி ஏற்படும் போது தேவைப்படும் சாலைகள், வடிகால்கள், பூங்காக்கள் ஆகியவை ஆரம்பத்திலேயே திட்டமிடப்பட்டு, அதற்கான மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஒரே சீரான முறையில் சாலைகள், தெருக்கள் வரையறுக்கப்பட்டு பிரிக்கப்படும். இதன் ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன. இன்னும் சரியாக சொல்லப்போனால் மாடம்பாக்கம் இன்னும் சில ஆண்டுகளில் சென்னையின் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஒன்றாக இருக்கும். முறையான மழைநீர் வடிகால் வசதிகளுடன் கூடிய சாலைகள், பொது பூங்காக்கள் என திட்டமிடப்பட்டுள்ளது.

G Square Triumph
G Square Triumph

G Square Triumph அதிரடி ஆஃபர்!

கை நிறைய சம்பளம் வாங்கி அப்பார்ட்மெண்ட்களில் வாழ்ந்தாலும், சொந்தமாக நிலம் வாங்கி அதில் வீடுகட்டுவதுதான் நிரந்தரமான ஒன்று. இதனை கருத்தில் கொண்டும், மாடம்பாக்கம் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் ஜி ஸ்கொயர் நிறுவனம், G Square Triumph என்ற திட்டத்தின்கீழ் வீட்டு மனை விற்பனையை மாடம்பாக்கத்தில் துவங்கியுள்ளது. இதற்காக மேடவாக்கம் ஜங்க்‌ஷனில் இருந்து 5 நிமிட பயண தொலைவில் 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. அந்த நிலத்தில் 900 சதுர அடி முதல் 2400 சதுரஅடி வரை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகிறது. இதில் உங்களுக்கு பிடித்த வீட்டுமனைகளை தேர்வு செய்து கொள்ளலாம். 5 வருட இலவச பராமரிப்பு, 24×7 சிசிடிவி கண்காணிப்பு, வீட்டு மனைகள் முழுவதும் தெருவிளக்குகள், அகலமான உள்சாலைகள் என அதிநவீன கட்டமைப்பில் மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன. மனை வாங்கியவுடன் தாராளமாக கட்டுமானத்தை ஆரம்பிக்கலாம். அதேபோல் மனை வாங்கியவுடன் குறைவான செலவில் வீடு கட்ட ஆலோசனையும் தருகிறார்கள். மடம்பாக்கம் – மேடவாக்கம் மெயின் ரோட்டில் இருந்து 500 மீ தொலைவிலும், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து 20 நிமிட தொலைவில் அமைந்துள்ள G Square Triumph-ல் வீட்டுமனைகள் வாங்குவது எதிர்காலத்துக்கான நல்ல முதலீடாக இருக்கும். வீட்டு மனையின் விலை ரூபாய் 46 லட்சத்தில் இருந்து துவங்குகிறது. ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்குவதை விட குறைவான விலையில் விற்பனை செய்யப்படுவதால் உடனடியாக வீட்டுமனை வாங்கலாம். சென்னையில் கனவு இடத்தை இப்போதே புக் செய்யுங்கள். பணத்தை மிச்சப்படுத்தி இடத்தை சொந்தமாக்கி கொள்ளுங்கள்.

G Square Triumph
G Square Triumph

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் உங்கள் விவரங்களைப் பதிவு செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்புகொள்ளுகிறோம் –

[ninja_form id=3]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top