நான்லாம் ரொம்ப கல்நெஞ்சுக்காரன், எதுக்காகவும் கலங்க மாட்டேன் அப்படினு நினைச்சுக்கிட்டு இருப்போம். ஆனா னஅப்படிப்பட்டவங்களையே கலங்க வைச்ச, கண்ணீர் விட வைச்ச படங்களும் இங்க இருக்கு. அதுலயும் அம்மா சென்டிமெண்ட் தொடங்கி பல வெரைட்டி சினிமாக்கள் இருந்தாலும், காதல்னு வர்றப்போ வயசு வித்தியாசம் பார்க்காம கண்ல கண்ணீர் வரும். காதலுக்கு எப்போதுமே முன்னுரை தேவையே இல்லை. ஏன்னா கோபம், விருப்பு, வெறுப்பு, ஆக்ஷன் உள்ளிட்ட உணர்ச்சிகளைவிட காதல்ங்குற உணர்வு, எத்தனையோ எதிர்ப்புகளை சந்தித்தாலும் இன்னைக்கும் புனிதமான ஒன்னாவே பர்க்கப்படுது. காதல்ல வெற்றி, தோல்வி எதுவா இருந்தாலும், சினிமாவா சொல்ற விதம்தான் மாறியிருக்கே தவிர, காதல்ங்குற உணர்வு அழிவதே இல்லை. அப்படிப்பட்ட காதல் சினிமாக்கள் பல வந்திருந்தாலும், அதுல தோல்வியடைஞ்சு நம்மளை கண்கலங்க வைச்ச படங்கள் நிறையவே இருக்கு. அது என்னங்குறதைப் பத்தித்தான் இந்த வீடியோவுல பார்க்கப் போறோம். சினிமாக்கள் ஆரம்பக் காலம் தொட்டு நிறைய படங்கள் வந்திருக்கு. ஒரு காலக்கட்டத்துல காதல் தோல்விப் படங்களை ரகம்ரகமா பண்ணுவேன்னு டி.ஆர் குத்தகைக்கு எடுத்ததெல்லாம் தமிழ் சினிமாவோட வரலாறுகள்ல அழிக்க முடியாது. ஆனா 2000-ம் வருஷத்துக்குப் பின்னால அப்படிப்பட்ட படங்கள் ரொம்பவே குறைவுனுதான் சொல்ல முடியும்.
காதல்!

கதாநாயகன் பரத்தை தவிர, எல்லாமே புதுமுகங்கள். உண்மையான காதல் கதையை சினிமாவாக அற்புதமாக இயக்கியிருப்பார், பாலாஜி சக்திவேல். 2004 -ம் ஆண்டு வெளியான ‘காதல்’ படம், பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. வசதியான, அதிகார செல்வாக்கில் பெரும்புள்ளியின் மகள் சாதாரன பைக் மெக்கானிக்கை காதலிக்கிறது மாதிரியான கதைக்களம். க்ளைமாக்ஸ் வரைக்கும் பெரிசா கண்கலங்க வைக்க மாட்டாங்க. க்ளைமாக்ஸ்ல ஹீரோவோட நிலையை பார்க்கிற ஹீரோயின், கணவன், குழந்தைகளைப் பார்க்கிறதா, இல்லை முன்னாள் காதலனை பார்க்கிறதானு சந்தியா பிரிச்சு விட்டிருப்பார், கூடவே பரத்தோட நடிப்பும் பிரமாதமா இருக்கும். அந்த ஒரு ஷாட்ல காதலின் புனிதத்தையும், ஜாதிக் கொடுமையோட வீண் வரட்டு கெளரவத்தின் உச்சத்தையும் வெளிக்காட்டப்பட்டிருக்கும். கல்நெஞ்சுக்காரர்களையும் கரையவைக்கும் சினிமா இந்த காதல்.
ஆட்டோகிராஃப்!

2004-ம் ஆண்டு சேரன் இயக்கத்து கோபிகா, சினேகா, கனிகா, மல்லிகா உள்ளிட்ட பலர் நடிப்புல காதலர் தினத்தன்னைக்கு வெளியானப் படம் ‘ஆட்டோகிராஃப்’. பள்ளிப்பருவ காதலையும், கல்லூரி காதலையும் மையமாக வைத்து வெளிவந்தது படம். இந்தப் படத்ததுல, கேரள மாநிலப் பெண்ணுக்கும், தமிழ் பையனுக்கும் இடையேயான காதலை, மொழிகள் கடந்து உருக்கமாகச் சொல்லி, ரசிகர்களை உண்மைக் கதை மாதிரியே உருக வைச்சிருப்பார், சேரன். அதிலும், பரத்வாஜின் இசை 4 விதமான பெண்களை வெவ்வேறு காலக்கட்டங்களில் சந்திக்கிறப்போவும் க்கவேற வேற மாதிரி இருக்கும். இடைவேளை வரைக்கும் பழைய நாஸ்டால்ஜியாவை தொடுற மாதிரிபோற படம் அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமாக மனசுக்குள்ள வலியை உருவாக்க ஆரம்பிக்கும். இண்டர்வெல்லுக்குப் பின்னால ஆரம்பிக்கிற ‘நினைவுகள் நெஞ்சினில் புதைந்திதனால்’ ஒத்தபாட்டு போதும். கண்கள்ல தானாவே கண்ணீர் சுரக்க ஆரம்பிக்கும். இந்தப் படம் பார்க்கிறப்போ பழைய நியாபகங்களை நினைக்காம இருக்கவே முடியாது. இந்தக் கதை நடிகர் விஜய்க்கும் சொல்லி, பிடிச்சுப்போய், அதுக்குப் பின்னால பண்ண முடியாம போயிடுச்சு.
மைனா!

ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் காதல். அந்தக் காதலுக்கு இடையே வருகிறார், ஹீரோயின் அம்மா.. அதன் பின் எழும் பிரச்னைகளும், அதற்கான தீர்வுகளும்தான் மொத்தக்கதை. சுருளியாக விதார்த், மைனாவாக அமலாபால், இருவருக்கும் இடையேயான அந்தக் காதல், அந்த மேற்கு தொடர்ச்சி மலைகளை போல பசுமையிலும் பசுமை. மைனா படிப்பதற்காக சுருளி மின்மினி பூச்சிகளை கொண்டு வெளிச்சத்தை உருவாக்க, அந்த வெளிச்சத்தில் இருவரையும் இணைத்து வைக்கும் அந்த முத்தம் தித்திக்கும் பரவசம். குறைந்த பட்ஜெட்டில் அழகாக நெய்யப்பட்ட சேலை மைனா. இப்படி சொல்லிட்டே போகலாம். இந்தப்படமும் க்ளைமாக்ஸ் வரைக்கும் கொஞ்சம் மனதை வருடினாலும், அந்த இறுதி முடிவுல அமலாபால் முகத்துல காட்டுற ஒரு ஷாட், அது ஈ ஓடுற சத்தம், நம்மை அறியாமலே கண்கள்ல கண்ணீர் வர்ற அளவுக்கு இருக்கும். அதுதான் அந்தப்படத்தோட வெற்றினு கூட சொல்லலாம். ஒரு காதல் ஜோடிக்காக கண்ணீர்விடணும்னா அதுக்கு முன்னால இருந்தே ஆடியன்ஸை நாம தயார் படுத்தணும்னு இறங்கி அடிச்சிருப்பார், பிரபு சாலமன்.
96!

பள்ளிப் பருவக் காதலை, வித்தியாசமான முறையில் சொல்லியிருந்தப் படம் ‘96’. விஜய்சேதுபதி, த்ரிஷாவின் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில், பள்ளிப் பருவ காதலியாக இருந்தாலும், அவரின் நினைவால் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் கதாநாயகனை, மீண்டும் கதாநாயகி சந்திக்கும்போது நிகழும் ஒருவிதமான புரிதல்களை மிகவும் அழகாக காட்டியிருப்பார் இயக்குநர் பிரேம். காதலர்கள் மட்டுமின்றி, பள்ளிப் பருவ நண்பர்களை மீண்டும் சந்திக்க தோன்றும்விதமாக இந்தப் படம் அமைந்திருந்ததும் தனிச்சிறப்பு. வசந்த காலங்கள் கசந்து போகுதே, இரவிங்கு தீயாய் நமை சூழுதே மாதிரியான பாடல்கள் காதலின் வலியை, பிரிவின் துயரை அற்புதமாக கடத்தியிருக்கும். இன்றைய சூழலில் காதல் தோல்வியை சந்தித்த இளைஞர்களோட இரவு கீதமாக இந்தப் பாடல்கள் ஒலிச்சுக்கிட்டே கொண்டே இருக்கும். விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் பேசிக்கிறப்போ வர்ற எமோஷன் ஆடியன்ஸை உருகி அழ வைக்கும். சில காட்சிகளில் நமக்குள் இருக்கும் ராமை நினைவுபடுத்துனதாலயோ என்னமோ விஜய்சேதுபதி நடிப்புலயே நம்மை கரைச்சார். சிங்கிள் டேக்ல ஒரு சீன், கார்ல இறங்கிக் கண்ணீரோட ஓடி, குளியலறையில உடைஞ்சு அலறும் காட்சி உடைந்து அழுதது மொத்த தியேட்டரும். அப்படிப்பட்ட தரமான எமோஷனல் சினிமா.. நவீன இதயம்னுகூட சொல்லலாம்.
இந்த லிஸ்ட்ல பிரபு சாலமனோட கும்கியும் சேரும். இதுபோக ‘கஜினி’, ‘பருத்திவீரன்’, ‘இயற்கை’, ‘மின்னலே’ உள்பட பல படங்கள் இந்தலிஸ்ட்ல இருக்கு. இதுல உங்களுக்கு ஃபேவரெட் படம் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://www.binance.info/de-CH/register-person?ref=UM6SMJM3