சிறப்பான, தரமான சம்பவம்… ஜிகர்தண்டா சக்ஸஸ் சீக்ரெட்ஸ்!

ஜிகர்தண்டா – 2 படத்துக்கான டீசர் பார்த்துட்டு, என்னடா இவ்வளவு மாஸா இருக்குனு நினைக்கும்போதே, கண்டிப்பா, ஜிகர்தண்டா ஃபஸ்ட் பார்ட்டை இன்னைக்கு பார்க்கணும்னு மனசுல ஃபிக்ஸ் பண்ணியாச்சு. அதே, எக்ஸைட்மெண்ட், சுவாரஸ்யம், மாஸ், எனர்ஜி, இண்ட்ரஸ்டிங் மியூசிக், எதிர்பார்க்காத கிளைமாக்ஸ்னு எப்பப்பார்த்தாலும் புதுசாவே இருக்குற ஜிகர்தண்டா – 1 ஏன் ஸ்பெஷல்னு இந்த வீடியோல பார்க்கலாம்.

Jigarthanda
Jigarthanda

சந்தோஷ் நாராயணன் மியூசிக்தான் இப்பவும் ஜிகர்தண்டானு சொன்னா நியாபகம் வரும். அவ்வளவு தரமா பண்ணியிருந்தாரு. சந்தோஷை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டுப் போன படம், ஜிகர்தண்டா. எனக்கு மாஸா மியூசிக் போட தெரியும். அதுவும் நீங்க நினைக்க முடியாத அளவுக்கு மாஸா போட முடியும்னு காமிச்ச படம் ஜிகர்தண்டா. இந்தப் படத்தோட இசை வெளியீட்டு விழால பாலாஜி சக்திவேல் பேசும்போது, “சந்தோஷ் நாராயணன் பார்க்க கேணையன் மாதிரி சும்மா பேனு நின்னுட்டு இருப்பாரு. ஆனால், எமன். டெக்னிக்கல் எமன்”னு சொல்லுவாரு. படத்தைப் பார்த்தா நமக்கும், “இந்த ஆளு சரியான எமனா இருக்கான்யா”னுதான் தோணும். சின்ன சின்ன இடங்கள்லகூட வெரைட்டியா மியூசிக் போட்டு ஒவ்வொரு சீனையும் இண்ட்ரஸ்டிங்கா கொண்டு போய்ருப்பாரு. அசால்ட் சேது ஆளுங்க படம் தொடங்கும்போது பாலத்துக்கு கீழ வைச்சு ஒருத்தனை அடிப்பாங்க, அப்போ டெரர் வாய்ஸ்ல பி.ஜி.எம் போகும். புதுசா இருந்துச்சு. பேய் படத்துக்குதான் இப்படிலாம் போடுவாங்கனு நினைக்கும்போது அடிக்கிற சீனுக்கு அப்படி போட்டதுலாம் செம ஐடியா. அப்புறம், அசால்ட் சேது இண்ட்ரோ, கருணாகரன் வர்ற காமெடி தீம், லவ் தீம், இண்டர்வெல் சீன் தீம், ஃப்ளாஷ் பேக் தீன், நடிப்பு டிரெயினிங் தீம், அசால்ட் சேதுவோட அம்மா பேசும்போது வர்ற தீம், கிளைமாக்ஸ்ல உயிர் பிச்சை போடுறேன்னு சேது பேசும்போது வர்ற தீம் இப்படி செதுக்கியிருப்பாரு மனுஷன். தீம் மியூசிக்கே இப்படினா, பாட்டுலாம் சொல்லவா வேணும். டிங் டாங் பாட்டு, மாஸுக்கெல்லாம் மாஸ். இறங்கி குத்தாட்டம் போடணுமா பாண்டி நாட்டு கொடியின் மேல பாட்டு. காதல்ல விழுந்து உருகியே சாவணுமா, கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாளா பாட்டு. இளம் காதல் அப்படியே பாட்டுல துடிக்கும். ஜிகர்னு பாட்டு ஒண்ணு வரும். பிரதீப் பாடியிருப்பாரு, அட்டகாசமா இருக்கும். ஆசை வந்து யாரை விட்டுச்சு பேபினு காமெடியான பாட்டு வரும், இதெல்லாம் சந்தோஷால மட்டுமே போட முடிஞ்ச பாட்டு. பிரிவை, காதல் வலியை சொல்ற மாதிரி திசையும் இழந்தேன் பாட்டு. இப்படி பாட்டுலயும் வெரைட்டி காமிச்சு பிரிச்சு விட்ருப்பாரு.

மதுரையை கதைக்களமா எடுத்துக்கிட்டது ஜிகர்தண்டா ஃபேன்ஸ்க்கு ரொம்பவே ஸ்பெஷலா இருந்துச்சு. குறிப்பா, நானும் மதுரைக்காரன்தான்டானு சொல்ற எல்லாருக்கும் இந்தப் படம் அவ்வளவு புடிக்கும். படத்தோட ஷூட்டிங் அப்போ, மூணு வேளை நல்ல சாப்பாடு, ஜிகர்தண்டானு நல்லா வாழ்ந்தோம்னு அந்த டீம்ல வேலைப் பார்த்த எல்லாரும் சொல்லுவாங்க. சந்தோஷமா, மனமும் வயிறும் நிறைவா வேலை பார்த்ததாலதான், இப்படியொரு படத்தை அந்த டீமால கொடுக்க முடிஞ்சுதுபோல. படத்துல வரக்கூடிய சீன்ஸ் இல்லைனா ஸ்கிரீன்பிளே அல்டிமேட்டா இருக்கும். ஓப்பனிங்க்ல பாபி சிம்ஹாவை கொல்ற மாதிரி ஆரம்பிக்கும். அப்போ, உண்மையாகவே அவனை கடைசில கொல்லப்போறாங்கனுதான் நினைச்சு படம் பார்க்க ஆரம்பிப்போம். ஆனால், வேற சஸ்பென்ஸ் நமக்கு படத்துல இருக்கும். சேது கூட்டத்துல இருக்குற ஒவ்வொரு ஆளையும் கரெக்ட் பண்ண வைச்சிருக்குற டெக்னிக்லாம் ஒருபக்கம் சிரிப்பு வரும், இன்னொரு பக்கம் அடேய், எங்க போய் மாட்டிக்கப்போறியோன்ற பயமும் இருக்கும். ஆனால், அதுக்கும் சஸ்பென்ஸ் வைச்சிருப்பாரு. வந்துட்டான், காதல்ல விழுந்துட்டான், இனி விட்ருவான்னு நினைப்போம். அப்பவும் அங்க சஸ்பென்ஸ் இருக்கும். இண்டர்வெல்க்கு முன்னாடி சேகரை தூக்குறதுக்கு பிளான் வரும். அந்த சீன் எங்க போய் முடியும்னு நம்ம யோசிப்போம். அங்கயும் சஸ்பென்ஸ். கதையெல்லாம் சொல்ல ஆரம்பிச்ச பிறகு படம் எடுத்து பிளாக்பஸ்டர் ஆகும்னு நினைப்போம். அங்கயும் சஸ்பென்ஸ். அப்புறம், சேதுவை ஹீரோவா வைச்சு படம் எடுப்பாங்க. சரி, சேதுவை வைச்சு சீரியஸ் படம் எடுத்து பிளாக்பஸ்டர் ஆகும்னு யோசிப்போம். அங்க கதையே சஸ்பென்ஸ். கிளைமாக்ஸ்ல எப்பவும் கொன்றுவான்னு நினைப்போம். ஆனால், அங்கயும் சஸ்பென்ஸ். கடைசில விஜய் சேதுபதிக்கிட்ட கதை சொல்லும்போது, அவர் அக்சப்ட் பண்ண மாட்டாரு. அப்பவும் ஒரு சஸ்பென்ஸ். இப்படி சீனுக்கு சீன் சஸ்பென்ஸ் வைச்சு, நாம நினைக்கிற எதுவும் இல்லாமல் படம் எடுத்து கிளீஷேக்களை கார்த்திக் சுப்புராஜ் உடைச்சுருப்பாரு.

Jigarthanda
Jigarthanda

தமிழ் சினிமால வந்த பெஸ்ட் இண்டர்வெல் சீன்களை லிஸ்ட் எடுத்தோம்னா, ஜிகர்தண்டா சீன் கண்டிப்பா இருக்கும். மழைல கார்த்திக் கதவை திறந்து தப்பிக்கலாம்னு பார்த்தா, வெளிய அசால்ட் சேது வந்து நிப்பான். அப்படியே படத்தை அந்த சீன் தூக்கி நிறுத்தும். டேய், விளம்பரம்லாம் வேணாம். படத்தைப் போடுங்கன்ற மோட்லதான் பார்க்கும்போது இருந்துச்சு. அந்த சீன் எடுக்கும்போது கார்த்திக் சுப்ராஜ் நிறைய சிரமங்களை சந்திச்சு டென்ஷன் ஆயிட்டாராம். என்னனா, அந்த ஷார்ட் வரும்போது, தொடர்ந்து 4, 5 நாள் ஷூட் பண்ண முடியாமல் தள்ளி போய்ட்டே இருந்துருக்கு. கடைசில இன்னைக்கு எப்படியாவது அந்த சீனை ஷூட் பண்ணிடணும்னு நினைக்கும்போது டெக்னிக்கல் சிக்கல் ஒண்ணு வந்துருக்கு. பின்னால கார் ஒண்ணு நிக்கணும். ஆனால், கார் வேற லொகேஷன்ல நின்றுக்கு. அந்த கார் கீயை இன்னொருத்தர் எடுத்துட்டு வேற ஊருக்கு போய்ருக்காரு. என்னப் பண்றதுனு தெரியாமல் முழிக்கும்போது, சரி கார் லைட் அடிக்கிற மாதிரி செட் பண்ணுவோம்னு வைச்சு அந்த சீனை ஷூட் பண்ணியிருக்காங்க. இப்படி நிறைய சம்பவங்கள் ஷுட் அப்போ, நடந்துச்சுனு சொல்லுவாங்க. படத்துக்கு மூணாவது பிளஸ், நடிகர்கள்தான். ஃபஸ்ட் பாபியோட ரோல்ல விஜய் சேதுபதி நடிக்கிறதா இருந்துச்சாம், சித்தார்த் ரோல்ல பாபி நடிக்கிறதா இருந்துச்சாம். பாபியே கார்த்திக்கிட்ட போய், நான் சேது கேரக்டர் பண்றேன்னு சொல்லியிருக்காரு. லுக் விட்டுட்டு நீ தாங்க மாட்டணுதான் முதல்ல சொல்லியிருக்காரு. அப்புறம், லுக் டெஸ்ட்லாம் எடுத்து பார்த்துட்டு நடிக்க வைச்சிருக்காரு. அல்போன்ஸ் புத்திரன்தான் ஃபஸ்ட் ரெக்கமண்ட் பண்ணியிருக்காரு. ஆனால், மனுஷன் பேய் மாதிரி நடிச்சு நேஷனல் அவார்ட் வாங்கிட்டாரு. சித்தார்த் சொல்லுவாரு, பாபி பண்ணியே எனக்கு படத்துல பெருசா வேலை இல்லை. விஜய் சேதுபதிலாம் பண்ணிருந்தா, நான்லாம் காணாமல் போய்ருப்பேன்”னு சொல்லுவாரு. அப்போதான் சே, விஜய் சேதுபதி பண்ணியிருந்தா இன்னும் மாஸா இருந்துருக்கும்னு தோணும்.

Jigarthanda
Jigarthanda

பாபி சிம்ஹாவை நடிகனா எல்லாருக்கும் புடிக்க ஆரம்பிச்சது இந்தப் படத்துல இருந்துதான். அப்புறம், குரு சோம சுந்தரம் கேரக்டர். ஆரண்ய காண்டம்லா செமயா பண்ணிருந்தாலும், இப்படியொரு நடிகன் இங்க இருக்கான்யானு தெரிய வந்தது இந்தப் படத்துக்கு பிறகுதான். பெட்டிக்கடை பழனி நிறைய பேருக்கு கனெக்ட் ஆகுற கேரக்டர். அதுவும் அந்த அட்வைஸ் பண்ற சீன்லாம் செமயா இருக்கும். இந்தப் படம் சக்ஸஸ் ஆனதுக்கு நான்காவது காரணம் டயலாக்ஸ். கார்த்திக் சுப்புராஜ் ஓவர்டோஸ் ஆகாமல், மாஸா, கிளாஸா டயலாக் எழுதியிருந்தாரு. “நான் செஞ்ச முதல் சம்பவம், சிறப்பான, தரமான சம்பவம்”னு டயலாக் வரும், இது வந்த பிறகுதான் சம்பவம்ன்ற வார்த்தையே டிரெண்ட் ஆச்சுனு சொல்லலாம். கார்த்தி உடைஞ்சு கண்ணுல கண்ணீர் கட்டி உட்கார்ந்திருக்கும்போது பெட்டிக்கடை பழனி வந்து, “உங்களப் பொருத்தவரை வாழ்க்கைல நான் தோத்தவன்தான். ஆனால், என்னைப் பொருத்தவரை வாழ்க்கைல ஜெயிச்சவன். நீ தோத்தியா இல்லை ஜெயிச்சியானு அடுத்தவன் சொல்லக்கூடாது. உனக்குள்ள இருக்குறவன் சொல்லணும்”னு பேசுவாரு. தூக்கி போட்டுட்டு போய் புடிச்ச வேலையை செய்யணும்னு தோணும். எல்லாத்தையும்விட “நாம வாழணும். செமயா வாழ்ந்தாண்டான்ற மாதிரி வாழணும். அவ்வளவுதான். அதுக்கு தேவைனா எதையும் செய்யலாம். எவனையும் கொல்லலாம். தப்பில்ல”ன்ற டயலாக் இன்னைக்கும் நிறைய பேர் ஸ்டேட்டஸ்ல பார்க்க முடியும். இப்படி எல்லா விஷயங்களும் சேர்ந்துதான் ஜிகர்தண்டாவை மறக்க முடியாத படமா மாத்தியிருக்கு.

Also Read – விஜய், அஜித் ஒரு நாளைக்கு ரூ.25 லட்சம் சம்பாதிக்குறாங்க… டியர் ஃபேன்ஸ் நீங்க?!

ஜிகர்தண்டா – 1 மாதிரியே, ஜிகர்தண்டா – 2 படமும் செம மாஸா, கிளாஸா இருக்கும்னு எதிர்பார்ப்போம். ஆல்ரெடி, சந்தோஷ் மியூசிக் கேட்டு நிறைய பேர் வைப் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. வெயிட்டிங்கல்யே வெறியாகுது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top