Airtel

5.5 கோடி வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் கொடுத்த சர்ஃப்ரைஸ் கிஃப்ட்!

கொரோனா பெருந்தொற்று சூழலில் குறைந்த வருமானம் கொண்ட ஊரகப்பகுதியில் வசிக்கும் 5.5 கோடி வாடிக்கையாளர்களுக்கு இலவச பிளான் ஒன்றை ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது.

கொரோனா இரண்டாவது அலையால் இந்தியாவின் பல மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், அடித்தட்டு மக்கள் கடுமையான இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி வரும் நிலையில் தன்னார்வலர்களும் பிரபலங்களும் உதவிக் கரம் நீட்டி வருகின்றனர்.

Airtel

இந்தநிலையில், நாட்டின் முன்னணி செல்போன் நிறுவனமான ஏர்டெல் வருமானம் குறைந்த வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ரூ.49 ரீசார்ஜ் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் ஊரகப் பகுதிகளில் வாழும் வருமானம் குறைந்த 5.5 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.49 மதிப்பிலான ரீசார்ஜை விலையில்லாமல் வழங்க இருக்கிறது ஏர்டெல். இதன்மூலம், ரூ.38 டாக்டைம், 100 எம்.பி டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டியும் கிடைக்கும். ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் இந்த ரீசார்ஜ் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வரும் வாரங்களில் கிட்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பெருந்தொற்று காலத்தில் தங்கள் அன்பானவர்களுடன் இணைந்திருக்க மக்களுக்கு உதவும் வகையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக ஏர்டெல் கூறியிருக்கிறது.

அதேபோல், வாடிக்கையாளர்களுக்கு இரட்டைப் பயன் சலுகையையும் ஏர்டெல் அளிக்கிறது. உதாரணமாக ரூ.79-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதன் பலன் இரட்டிப்பாக வழங்கப்படும் என்றும் ஏர்டெல் அறிவித்திருக்கிறது. கொரோனா பொதுமுடக்க சூழலில் வாடிக்கையாளர்களின் பயன்பாடு அதிகரித்து, அவர்களுக்கான தேவையும் உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு இதைச் செய்வதாகவும் ஏர்டெல் கூறியிருக்கிறது. ரூ.270 கோடி மதிப்பிலான இந்த சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த கடினமான சூழலில் தங்கள் விருப்பமானவர்களோடு இணைந்திருக்க ஏர்டெல் உதவுவதாகவும் அந்த நிறுவனம் சார்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Also Read – 6 மாதத்தில் ரூ.6.60 லட்சத்துக்கு இலவச உணவு! – கே.எஃப்.சியைக் கலங்கடித்த சீன மாணவர்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top