அசல் கோளாறு… நீங்க உண்மையிலேயே கோளாறா?

பிக்பாஸ்ல எப்பவுமே சில கன்டஸ்டன்ட் கோளாறாதான் இருப்பாங்க. கோளாறே கன்டஸ்டன்ட் ஆனது இந்த தடவைதான். அதாங்க, நம்ம அசல் கோளாறு. குவின்சி கை முட்டி தடவுனது, மகேஷ்வரியோட கால் முட்டி தடவுனது, நிவாஷினி தோளை கடிக்கிறது, ஜனனிக்கு காய்ச்சல் அடிக்குதானு பார்க்குறது, மைனா கையை புடிச்சி இழுக்குறதுனு அசல் கோளாறு பண்ண சில்மிஷ வேலைகள் கொஞ்சம் இல்லை. வெகுளியாதான்ப்பா பண்றாருனு ஆரம்பத்துல சப்போர்ட் பண்ணவங்களே, இவன் என்ன சும்மா தடவிட்டே இருக்கான்னு இப்போ கடுப்பாகி கமெண்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.

Asal kolaar
Asal kolaar

அசல் கோளாறை முதல்நாள்ல இருந்து கவனிச்சவங்களுக்கு தெரியும். மனுஷன் உள்ள நுழைஞ்சதுல இருந்து ஒருமாதிரிதான் சுத்திட்டு இருக்காப்ல. உள்ள வந்த பெண்கள் ஒருத்தரை விடாமல் என்னன்னமோ பண்ணிட்டு சுத்தினிருந்தாரு. ‘இவனோட பிகேவியரே இப்படித்தான்னு’ பிக்பாஸ் பிரியர்கள் சிலர் போஸ்ட் போட்டு அப்படி லைட்டா டீல் பண்ணிட்டு கடந்து போய்ட்டாங்க. ஆனால், முதல்ல பெரிய சம்பவமா பேசப்பட்டது குவின்சி கை முட்டியை போய் தடவினதுதான். சிலர் என்னென்னலாம் அதுக்கு முட்டுக் கொடுத்து போஸ்ட் போட்டுனு இருந்தாங்க. அந்தப் பொண்ணு போட்ருக்க டிரெஸ்ல டிசைன் சொரசொரப்பா இருக்கும். அப்போ கையை வைச்சு தடவுறதுக்கு ஜாலியா இருக்கும். அப்படித்தான் அசல் கோளாறும் பண்ணிட்டு இருக்காரு. அதனால, இதைப் போய் பெருசா நினைச்சு, அந்தப் பையனையும் தப்பா நினைச்சு பேசிட்டு இருக்கீங்களேனு போஸ்ட் போட்டாங்க. அதைப் பார்த்துட்டு ஆமால்ல, அப்டினு தோணுச்சு. ஆனால், அதுக்கப்புறம் உள்ள நடவடிக்கைகள் எல்லாம் இன்னும் மோசமாதான் இருந்துச்சு.

இலங்கைல இருந்து வந்த ஜனனிதான் இன்னைக்கு சோஷியல் மீடியால டிரெண்டிங் க்ரஷ். அவங்கள அசல் கோளாறு டச் பண்ணதும், அவங்க ஆர்மி ஷாக் அடிச்சு மண்டை சூடாகி வைச்சு செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. ஃபஸ்ட் என்னனா, ஜனனின்னு காய்ச்சல் அடிக்குதானு முதுகை டச் பண்ணி அசல் கோளாறு பார்ப்பாரு. ஏன்டா, காய்ச்சல நீ அங்க தொட்டுதான் பார்ப்பியானு செய்தாங்க. ரைட்டு இதை விடுங்க. அடுத்து, கை கொடுக்குறதுல உள்ள வெரைட்டீஸ், கை எப்படி கொடுத்தா என்ன அர்த்தம்னு ஜனனிக்கு கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சாரு, அசல் கோளாறு. அண்ணன் மாதிரி நினைச்சுக்கோ, சொல்லித்தறேன்னு ஆரம்பிக்கிறாரு. ஆனால், ஃபினிஷிங் சரி இல்லையே. சொல்லி கொடுக்க வந்தது சரி, அந்த கன்டன்ட் சரி, ஆனால், பண்றது பூரா காஜி மென்டாலிட்டில பண்ற மாதிரில இருக்கு? ஆனால், ஜனனியை அசல் கோளாறு நெருங்கும்போது, அந்தப் பொண்ணு விலகி போகுது. இருந்தாலும் இவரு விடுறதா இல்லை. புடிச்சு இழுத்து சொல்லி தராரு. அதைப் பார்த்துட்டு ஏன்டா பேருதான் கோளாறா இருக்குனா, ஆளு, அதைவிட பெரிய கோளாறா இருக்கியே அப்டினுதான் சொல்லத்தோணுச்சு. வன்மம் இல்லை. ஆத்திரங்கள். அவ்வளவே.

Asal kolaar
Asal kolaar

பாய் பெஸ்ட்டிக்கு பெர்ஃபெக்டான எடுத்துக்காட்டு, இந்த அசல் கோளாறுதான்னு சில பதிவுகளை பார்க்க முடிஞ்சுது. ஆனால், இந்த கருத்தை நான் ஏற்கவில்லை. உடனே, நீயும் பாய் பெஸ்ட்டியா இருப்பனு கமெண்ட் பண்ணாதீங்க. “எல்லா பாய்பெஸ்ட்டியும் பாய்பெஸ்ட்டி இல்லை. பெஸ்ட்டாக இருப்பவர்களே பெஸ்ட்டி”னு நம்ம திருவள்ளுவரே சொல்லிருக்காரு. அதைத்தான் நானும் சொல்றேன். சரி, நம்ம கோளாறு கதைக்கு வருவோம். ஒருநாள் நிவாஷினி பக்கத்துல படுத்துட்டு மல்லாக்க படுத்து, “எனக்குனு யாருமே இல்லைங்க”னு பேசிட்டு இருந்தாரு. நீங்க தடவுற தடவுக்கு துணையா இருந்தாலும் துண்டக்காணும், துணியக்காணும்னு ஓடி போய்ருப்பாங்க. அப்புறம் எப்படி யாராவது இருப்பாங்க? அசல் கோளாறை ஆரம்பத்துல கலாய்ச்சவங்கள்ல நிறைய பேர் பயந்தது “ரேனே ஃபேன்ஸ்”க்குதான். இப்போ என்னத்த சொன்னாலும் வந்து கடிச்சு வைப்பானுங்களேனுதான் சொல்லிட்டு சுத்தினு இருந்தாங்க. “முதல்ல இவனை வீட்டை விட்டு வெளிய அனுப்புங்க. போட்டிக்கு வந்தானா? மாவு பிஸய வந்தானா?” இப்படிலாம் கேட்டு வறுத்தெடுத்தாங்க. கமல் எதாவது கேப்பாருனு பார்த்தா அவரும் கண்டுக்குற மாதிரி இல்லை.

Also Read – கவுண்டர் டு கோளாறு… செலிபிரிட்டி மா.கா.பா-வின் பயணம்!

குயின்சி சோபால உட்கார்ந்து இருக்கும்போது அவங்க கால் மேல கால் போடுறாரு. பெரிய பிரபு தேவா கால ஆட்டாமல் சும்மா இருக்க முடியாதானு வெளிய கேக்குறாங்க. குயின்சியையும் ஒருதடவை கடிக்கப் போவாரு. இவன் ஒருத்தன் எங்க இருந்து வந்தானோனு காண்டாகி கத்தாம, சிரிச்சிட்டே திட்டுவாங்க. முதல் நாளே, பளார்னு ஒண்ணு வைச்சிருந்தா, இன்னைக்கு இப்படி வளர்ந்து நிப்பானா? என்னத்த விளையாடுறீங்க? திடீர்னு, ஒரு மைனா, மைனா குருவி மனசார பாடுதுனு பாடிட்டு இருக்கும்போதே மைனா மேலயும் அசல் கோளாறுக்கு கண்ணுனு புரிஞ்சிருக்கணும். மைனாவ கட்டிப் புடிச்சிட்டு நின்னதுலாம் எதுக்குனே தெரியாது. ஏன்டா, உன்னோட ஷோல்டரை அமுக்கி விடவா பிள்ளை குட்டியெல்லாம் விட்டுட்டு பிக்பாஸ்க்குள்ள வந்துருக்காங்கனு அசல் கோளாறை மைனா ஃபேன்ஸ் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. மகேஷ்வரியும் அசலை நம்பாத அவன் ஆள மாத்துவான்னு சொல்லி “தம்பி நீ நல்லாருந்தா சந்தோஷம்டா”னு சொல்லுவாங்க.

ஃப்ரெண்ட்ஸ் படத்துல வடிவேலுவை சுரண்டுவாங்கள்ல, அசல் கோளாறை பார்க்கும்போதுலாம் இப்போ அந்த சீன்தான் நியாபகம் வந்து போகுது. நிவாஷினியும் அசல் கோளாறும் உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க. அப்போ, திடீர்னு நிவாஷினி தோளை கடிச்சு சாப்பிட ஆரம்பிச்சிட்டாரு, இந்த அசல் கோளாறு. டேய், உனக்கு என்னதான்டா பிரச்னை. பிறவிலயே இப்படித்தானா நீ-னு கமெண்ட் போட்டு தெளிய வைச்சு தெளிய வைச்சு அடிக்க ஆரம்பிச்சாங்க. நிவாஷினி புள்ளயும் சும்மா இல்லாமல், அசல் கோளாறை நோண்ட ஆரம்பிச்சுது. நைட்டு லைட் ஆஃப் பண்ணதுக்கு அப்புறம், சேலைல நல்லாருக்க, வெளிய இருந்த உன்னை என்ன பண்ணிருப்பேன்னு, பீம் பேக்ல இருக்குறவங்களை இழுத்து கட்டிப்புடிச்சு அலப்பறை பண்றாரு. அதே மாதிரி, நீச்சல் குளத்துல அசல் கோளாறு நிவாஷினிகிட்ட என்னமோ பண்றது, நிவாஷினி மடில படுத்துக் கிடக்குறது, கைகோர்த்துட்டே சுத்துறது, போர்வைக்குள்ள போய் விளையாடுறதுனு இந்த சீசன்ல இவங்க பண்ற அட்டகாசம் தாங்க முடியலைனு கதறுறாங்க. இந்த சீசன் லவ் ஜோடி இவங்கதானாம்.

Asal kolaar
Asal kolaar

நம்ம கூல் சுரேஷே காண்டாகி, “நான் யாரயும் தடவ மாட்டேன். தடவுறதுக்குனே நிகழ்ச்சி இருக்கு. அதான், பிக் பாஸ். அதுல ஒரு பையன் தடவோ தடவுனு தடவுறான்னு”னு மனுஷன் பேசிட்டாரு. என்னை பிக்பாஸ்ல கூப்பிடலைனு காண்டுல பேசுறேன்னுவீங்க. ஆனால், நான் உண்மையை சொல்றேன்னு பேசியிருப்பாரு. ஆனால், இன்னும் சிலபேர், அதாங்க அசல் கோளாறு ஆக்ரோஷ படை, பிக் பாஸ் பரிதாபங்கள் கிளைகள் சேர்ந்து அவரை சேவ் பண்ண சப்போர்ட் பண்றாங்க. எதுக்கு சொல்றேன்னா. அதுக்கு சொல்றேன். அசல் கோளாறு பண்ற சேட்டையெல்லாம் ஒரே டயலாக்ல சொல்லணும்னா “அம்மாவை நீ அங்க புடிச்சுதான் தூக்குவியா”ன்றதுதான். அவன் கரெக்டாதான் பெயர்லயே சொல்லிட்டான். நீங்கதான்டா இன்னும் தப்பா புரிஞ்சிக்கிறீங்கனு சிலர் அல்டிமேட்டா போஸ்ட் போட்டு கலாய்ச்சு விட்ருந்தாங்க. எல்லாத்தையும் தாண்டி ஆண், பெண்ணை தொட்டா தப்பா?னு நீங்க கேக்கலாம். நிச்சயம் தப்பில்லை. ஆனால், தொடுற முறை யாரையும் முகம் சுளிக்க வைக்கக்கூடாதுல. அசல் கோளாறு பண்றது போட்டியாளர்களுக்கே புடிக்கலை. ஆனால், அவங்க கத்தாம தட்டி விடுறது, ஷாக் ஆகுறது மாதிரி பண்றாங்க. ரச்சிதால இருந்து ஜனனி வரை இதுவரை ஒருத்தரையும் அசல் கோளாறு விடாமல் வம்பு பண்ணிட்டு இருக்காரு.

கமல்தான் இதை கவனிச்சு கேள்வி கேட்ருக்கணும். ஆனால், அவர் கவனிச்சாரா இல்லையானு தெரியலை. அவரை மாதிரி பின்புலத்துல இருந்து வர்றவங்கள உங்களுக்கு புடிக்காதேனு சிலர் கமெண்ட் பண்ணலாம். நாம அவரோட செயல்களை வைச்சு, சோஷியல் மீடியால ஓடுற டாக் வைச்சும்தான் பேசுறோம். வாய்ப்பை அவரே கெடுத்துக்குற மாதிரிதான் இருக்கு. அதுமட்டுமில்ல, தேவையில்லாத வார்த்தைகளையும் யூஸ் பண்ர்றாரு. பிக்பாஸ்ல இதுக்கு முன்னாடி, கட்டிப்புடி வைத்தியம், முத்தம் ட்ரீட்மென்ட்லாம் நடந்துருக்கு. ஆனால், இப்படியொரு சம்பவம் இதுதான் முதல்முறை. அசல் கோளாறு வெளிய வரும்போது, போட்டியாளர் குடும்பத்துக்கிட்டயோ அவங்க, ஃபேன்ஸ் கிட்டயோ அடிவாங்காமல் இருந்தா சரிதான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top