சென்னை சேப்பாக்கம் மைதானம்

நாங்கலாம் அப்போவே அப்படி.. சென்னை ஃபேன்ஸ் பண்ண தரமான சம்பவங்கள்!

`எங்க அப்பா, அம்மா உ.பியைச் சேர்ந்தவங்க. பின்னாடி அது உத்ராகண்ட் ஆச்சு. நான் ராஞ்சில பிறந்தேன். ஆரம்பத்துல அது பீகார்ல இருந்துச்சு. பின்னாடி அது ஜார்க்கண்ட் மாநிலத்துக்குள்ள வந்துச்சு. 18 வயசுல நான் ரயில்வேல வேலை கிடைச்சு போனது வெஸ்ட் பெங்கால்.. கோரக்பூருக்கு. அதுக்கப்புறம் நான் சென்னைக்கு வந்தேன். சென்னையும் சரி; தமிழ்நாடும் சரி எனக்கு நிறையவே சொல்லிக் கொடுத்திருக்கு. நான் எப்படி நடந்துக்கணும்; நல்ல கிர்க்கெட்டுக்கு எப்படி ஆதரவு கொடுக்கணும்னு நிறைய சொல்லிக்கொடுத்திருக்கு. சேப்பாக்கத்துல நாங்க விளையாடுற ஒவ்வொரு மேட்ச் அப்பவும் போட்டியைப் பார்க்க வர்ற ஃபேன்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய சப்போர்ட் கொடுப்பாங்க. அவங்க எப்பவும் குட் கிரிக்கெட்டுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க. மேட்ச்னு வந்துட்டா உங்க டீம் எப்பவும் நல்லா விளையாடணும்னு நினைப்பீங்க. அதுக்காக உங்க எதிர் டீம் நல்லாவே விளையாடக் கூடாதுனும் நினைப்பீங்க. சென்னை ஃபேன்ஸைப் பொறுத்தவரைக்கும் அவங்க எப்பவுமே அப்படி நினைச்சதுல்ல…’ சென்னை ஃபேன்ஸ் பத்தி சிஎஸ்கே கேப்டன் தோனி சொன்ன வார்த்தைகள்தான் இது. நம்மளோட லோக்கல் டீம் ஃபேன்ஸ்னு அவர் சும்மா போறபோக்குல சென்னை ஃபேன்ஸை புகழ்ந்துட்டுப் போகலை. சென்னை ஃபேன்ஸை ஏன் Knowledgeable Cricket கிரவுட்னு சொல்றாங்கங்குறதுக்குப் பின்னாடி இருக்க எஸ்.டி.டி ரொம்பப் பெருசு. அகமதாபாத் கிரவுண்ட்ல நடந்த விரும்பத்தகாத சம்பவங்களுக்குப் பின்னாடி பாகிஸ்தான் ரெண்டு மேட்சுகளை சென்னைலதான் விளையாடப்போறாங்க. சென்னை ஃபேன்ஸுக்கான ரெக்வெஸ்டா ஒரு ட்வீட்டும் வைரலாச்சு. அப்படியான நம்ம சென்னை ஃபேன்ஸ் பத்தியும் சேப்பாக்ல நடந்த சில ஐகானிக் மேட்சப்ப நம்ம ஃபேன்ஸ் பண்ண தரமான சம்பவங்கள் பத்தியும்தான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

Knowledgeable Cricket கிரவுட்னு சென்னை ஃபேன்ஸுக்குப் பேர் வர முக்கியமான காரணம் 1999 இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட்னு தெரிஞ்சிருக்கும். ஆனா, அந்த டைம்ல இருந்த இன்னொரு வித்தியாசமான கான்செப்ட் பத்தின சுவாரஸ்யமான தகவல் வீடியோவோட கடைசில இருக்கு.

பாகிஸ்தான் பிளேயர்ஸ் பலருக்கும் மறக்கமுடியாத கிரவுண்ட்னா அது சென்னைதான். 1999 டெஸ்ட் ஒரு காரணம், அதேமாதிரி இன்னொரு சம்பவம்னா அது சயீத் அன்வர் 194 ஸ்கோர் பண்ண மேட்ச். இந்தியன் டீமை எதிர்த்து விளையாடுற அது பரம எதிரி டீமோட பேட்டர் 194ல அவுட் ஆனதும் மொத்த கிரவுடுமே அவருக்காக வருத்தப்படுவாங்க. அதுதாங்க சென்னை ஃபேன்ஸோட ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப். அந்த மேட்சுக்கு அப்புறம் பாகிஸ்தான் பிளேயர்ஸ் பலரும் நியூ காலேஜ் மசூதில போய் வழிபாடு நடத்தினதை ஒரு ஃபேன் நெகிழ்ச்சியா பகிர்ந்திருக்காரு. இந்த வேர்ல்டு கப்ல பாகிஸ்தான் சௌத் ஆப்பிரிக்கா மேட்ச்தான் சேப்பாக்ல நடந்த கடைசி மேட்ச். அந்த மேட்ச்சும் சரி அதுக்கு முந்துன பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் மேட்ச்லயும் சரி பாகிஸ்தான் டீமுக்கு சொந்த ஊர் டீம் அளவுக்கு சப்போர்ட் இருந்துச்சு. ரெண்டு மேட்ச்லயுமே பாகிஸ்தான் தோத்திருந்தாலும் கிரவுட் மொத்தமும் ஒவ்வொரு ஸ்பெஷல் மொமண்டையும் சியர் பண்ணி கொண்டாடுனாங்க. இதுல ஒரு ஃபேன் பாகிஸ்தான் டீஷர்ட் கிடைக்குறதே கஷ்டமா இருக்குங்க. அதை மொதல்ல சரி பண்ணனும்னு உண்மையான அக்கறையோட பேட்டி கொடுத்திருந்தாரு.

1999 டெஸ்ட்ல பாகிஸ்தான் கேப்டனா இருந்த வாசிம் அக்ரமுக்கு இன்னொரு பெர்சனல் கனெக்டுமே சென்னை கூட இருக்கு. அதை தன்னோட புத்தகத்துலயும் அவர் சொல்லிருப்பாரு. 2009 வாக்குல வாசிமோட மனைவியை ட்ரீட்மெண்டுக்காக சிங்கப்பூர் கூட்டிட்டுப் போயிருக்காங்க. இடையில ஃப்யூல் நிரப்ப சென்னைல ஃப்ளைட் நிக்கும்போது வாசிம் அக்ரமோட மனைவி திடீர்னு மயக்கமாயிட்டாங்களாம். இந்தியன் விசாவும் இல்லையே என்ன பண்றதுன்னு அந்த இடத்துலேயே வாசிம் அக்ரம் கதறி அழுதிருக்கார். அப்போ கூட இருந்த மக்களும் சரி அதிகாரிகளும் சரி. முதல்ல போய் உங்க வொய்ஃபை ஹாஸ்பிட்டல்ல சேருங்க. மத்ததை நாங்க பார்த்துக்குறோம்னு தைரியம் சொல்லி அனுப்பி வைச்சிருக்காங்க. அந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு சென்னை அப்போலோல அவரோட மனைவி சிகிச்சை பலனில்லாம இறந்திருப்பாங்க. ஆனாலும் அந்த மொமண்ட்ல தனக்கு சப்போர்ட்டா நின்ன சென்னை மக்களை என்னைக்குமே மறக்க மாட்டேன்னு சொல்லி நெகிழ்ந்திருப்பாரு வாசிம் அக்ரம்.

மொயின் அலிகிட்ட வலிமை அப்டேட் கேட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனா, அதுக்கெலாம் முன்னாடியே இன்னொரு தரமான சம்பவத்தையும் சென்னை மக்கள் சேப்பாக்ல பண்ணிருக்காங்க. பவுண்டரி லைன்ல எதிர்டீமோட ஒரு குறிப்பிட்ட பிளேயர்தான் நிக்கணும் ஆப்போஸிட் கேப்டனுக்கு ரெக்வெஸ்ட் கொடுத்த ரெக்கார்டெல்லாம் நம்ம பயகளுக்குத்தான் இருக்கு பாஸ். 2016ல கருண் நாயர் டிரிபிள் செஞ்சுரி அடிச்ச டெஸ்ட் மேட்ச்ல இன்னொரு இண்ட்ரஸ்டிங்கான சம்பவமும் சேப்பாக்ல நடந்துச்சு. இங்கிலாந்து பிளேயர் ஜோஸ் பட்லர் அந்த மேட்ச் முழுக்கவே கிரவுடோட ஃபேவரைட் பிளேயரா நின்னாரு. மேட்சோட செகண்ட் டே அவர் ஸ்கொயர் லெக்ல ஃபீல்ட் பண்ண வந்தப்ப இருந்து, அவர் என்ன பண்ணாரோ அதை அப்படியே ரிப்பீட்டடா பெரிய லெவல்ல ஆடியன்ஸ் திரும்பக் கொடுத்தாங்க. பௌலரை என்கரேஜ் பண்ண அவர் கை தட்டுனா, அவர் தட்டுற ரிதம்லயே கைதட்டுறது, எதாவது சான்ஸ் மிஸ்ஸான அவரை மாதிரியே தலைல கை வைச்சு சோக எமோஜி விடுறதுனு செம ஜாலியா போச்சு. பட்லருமே அதை என்ஜாய் பண்ணிருப்பாரு போல… பல இடங்கள்ல திரும்பி திருப்பி அவர் ஆடியன்ஸுக்கு தம்ஸ் அப் காட்டிட்டே இருந்தாரு. இன்னும் ஒரு படி மேல போய் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக், பட்லரோட ஃபீல்டிங் பொஷிஷனை மாத்தும்போதெல்லாம் அவரை ஓட்டிட்டு இருந்தாங்க. ஒரு கட்டத்துல மிட் விக்கெட் பக்கத்துல இருந்த ஃபேன்ஸ் எங்களுக்கு பட்லர்தான் வேணும் `we want Butler’னு சவுண்டே கொடுக்க அந்த மேட்ச் அதகளமா போச்சு.

1999 மேட்ச்ல இந்தியாவைத் தோற்கடிச்சிருந்தாலுமே சென்னை ஃபேன்ஸ் பாகிஸ்தான் பிளேயர்ஸுக்கு ஸ்டேண்டிங் ஓவியேஷன் கொடுத்திருப்பாங்க. அப்ப டீம்ல இருந்த கேப்டன் வாசிம் அக்ரம்ல இருந்து இன்சமாம் உல் ஹக் வரைக்கும் பலபேரும் அந்த மேட்ச்ல ஹோம் கிரவுண்ட் ஃபீலிங் இருந்துச்சுன்னு சிலாகிச்சிருப்பாங்க. மேட்ச் முடிஞ்ச பிறகும் கலையாம இருந்த கூட்டம் பாகிஸ்தான் பிளேயர்ஸுக்கு மிகப்பெரிய அளவுக்கு பாராட்டு கொடுத்தாங்க. பாகிஸ்தான் டீமுமே விக்டரி லேப் மூலம கிரவுண்டை வலம் வந்து ஃபேன்ஸுக்கு நன்றி சொல்லிருப்பாங்க. இதனாலதான் இந்த வேர்ல்டு கப்புக்கு முன்னாடி எங்க மேட்சுகளை சென்னைல இல்லாட்டி கொல்கத்தால வைங்கனு பாகிஸ்தான் டீம் மேனேஜ்மெண்ட் தரப்புலேயே ரெக்வெஸ்ட் வைச்சாங்க.

Also Read – 90ஸ் கிட்ஸ்… ஸ்கூல் டேஸ் Vs லீவ் டேஸ் அலப்பறைகள்!

அதேமாதிரி அந்த டைம்ல மேட்ச் ரெஃப்ரியா இருக்கவங்க பிளேயர் ஆஃப் தி மேட்சை ஜட்ஜ் பண்ணி அதை கமெண்டேட்டரோட மைக்ல ஓப்பனா அறிவிக்குற ஒரு வழக்கம் இருந்துச்சு. அந்த மேட்ச்ல சக்லைன் முஸ்டாக் விக்கெட், ஷாகித் அஃப்ரிடியோட செஞ்சுரி இதையெல்லாம் தாண்டி சச்சினோட ஃபைட்டிங் செஞ்சுரிக்குத்தான் மேன் ஆஃப் தி மேட்ச் கொடுப்பாங்க. அதை அறிவிக்குறப்போ மேட்ச் ரெஃப்ரியான கேலி ஸ்மித்துமே சென்னை கிரவுடுக்கு தம்ஸ் அப் கொடுத்திருப்பாரு. சேப்பாக்ல தோனி எண்ட்ரி அப்போ இருக்க வைபை நீங்க பாக்கணுமேனு கிட்டத்தட்ட அதை நேர்ல அனுபவிச்ச பெரும்பாலான பிளேயர்ஸ், கமெண்டேட்டர்ஸ்னு பல பேரு பல இடங்கள்ல அந்த வைபை நீங்க வேறெங்கயும் பார்க்கவோ கேக்கவோ முடியாதுனு பதிவு பண்ணிருப்பாங்க.

அதுவே கொஞ்சம் ஓவராப் போய் போன சீசன் ஐபிஎல்ல தோனி இறங்கணும்னு சொந்த டீம் பிளேயர் ஜடேஜாவையே சீக்கிரம் அவுட் ஆகிட்டு போங்க பாஸ்னு சொன்னப்போதான் என்னாச்சுப்பா இந்த சென்னை கிரவுடுக்குனு கொஞ்சம் ஜெர்க் ஆச்சு. இதுல சோகம் என்னான்னா இதை ஜடேஜாவே ஒரு இடத்துல பதிவும் பண்ணாரு.

சேப்பாக் கிரவுடோட உங்க ஃபேவரைட் மொமண்ட் எதுனு மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!

1 thought on “நாங்கலாம் அப்போவே அப்படி.. சென்னை ஃபேன்ஸ் பண்ண தரமான சம்பவங்கள்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top