எப்படித்தான் இப்படி படம் எடுக்குறாரோ.. அல்போன்ஸ் புத்திரன் மேஜிக்!

நேரம், பிரேமம், கோல்டுனு எடுத்தது முணே படம். நேரம் பிளாக்பஸ்டர் ஹிட்டு. பிரேமம் இண்டஸ்ட்ரி ஹிட்டு. கோல்டு அல்போன்ஸ் ஃபேன்ஸ்க்கு சின்ன ட்ரீட்டு. எடிட்டிங்க், டார்க் காமெடி, மியூசிக்னு குட்டி குட்டியா ரசிக்கும் படியான எக்கச்சக்க விஷயங்கள் அவர் படத்துல எப்பவும் இருக்கும். என்னத்தையாவது செஞ்சு நம்மள என்கேஜ் பண்ணி என்டர்டெயின் பண்ற அல்போன்ஸ் புத்திரன்கிட்ட இருக்குற யூனிக் மேஜிக், அப்புறம் அவரோட டிராவல் பத்திதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.

Neram
Neram

அல்போன்ஸ் புத்திரனோட முதல் மேஜிக் அவரோட பாடல்கள்தான். என்னடா, அவர் படத்துல பாட்டு நல்லா இருக்குனா மியூசிக் டைரக்டர்தான காரணம்னு கேக்கலாம். அங்கதான், இந்த மேஜிக் பத்தி டிஸ்கஸ் பண்ண வேண்டியது இருக்கு. எவ்வளவு நல்ல மியூசிக் டைரக்டரா இருந்தாலும், மியூசிக் டேஸ்ட் உள்ள நல்ல டைரக்டராலதான் நல்ல பாடல்களை வாங்க முடியும். மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் – வெங்கட் பிரபு, அனிருத் – விக்னேஷ் சிவன் கூட்டணிலாம் ஏன் ஜெயிக்குதுனா அதுதான் காரணம். அப்படி பார்த்தா அல்போன்ஸ் – ராஜேஷ் கூட்டணி அட்டகாசம். சினிமா படிக்கும்போதுல இருந்தே அல்போன்ஸ்கூட ராஜேஷ் இருக்காரு. பிஸ்தா படத்தை ரெட் ஜெயிண்ட் மூவீஸ்தான் ரிலீஸ் பண்ணாங்க. அதுக்கு முக்கியமான காரணம், பிஸ்தா பாட்டுதான்.

அனிருத்லாம் அந்த பிஸ்தா பாட்டைக் கேட்டுட்டு உதயநிதிக்கு ஃபோன் பண்ணி, என்னங்க பாட்டுலாம் தாறுமாறா இருக்குனு சொல்லியிருக்காரு. பிஸ்தா பாட்டு ஏன் எல்லாருக்கும் புடிச்சிருக்குனு கேட்டா, உதயநிதி சொன்னதுதான் காரணம். அந்தப் பாட்டுல ஒண்ணுமே இருக்காது. கண்ணை மூடிட்டு குத்து டான்ஸ் ஒண்ணு போடலாம். அவ்ளோதான். அந்த வீடியோக்கு யாரும் கோரியோகிராஃப் பண்ண வேணாம். என்ன தோணுதோ, அதை ஆடுங்கனு சொல்லிதான் எடுத்தாராம், சபரீஷ் லிரிக்ஸ் எழுதும்போதும் இஷ்டத்துக்கு அர்த்தம் இல்லாமல் எழுதுனு சொன்னாராம். காதல் என்னுள்ளே, காற்று வீசும்னு, எவன் அவன் அவன் பாட்டு எல்லாம் செம மாஸான பாட்டு. இப்படி நேரம் பெஸ்ட் சாங்ஸ் பத்தி சொல்லிட்டே போகலாம்.

நேரம் படத்துக்கு அப்புறம் அதே கூட்டணி பிரேமம் படத்துக்காக சேர்ந்தாங்க. எதிர்பார்ப்பு எகிறுச்சு. பாட்டு ஒவ்வொண்ணும் பட்டாசா இருக்கும்னு சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அல்போன்ஸ் ராஜேஷ்கிட்ட கதையே சொல்லலையாம். சின்ன வயசுல இருக்குற பையன் மூட், அந்த பொண்ணு பின்னால நிறைய பேர் சுத்துறாங்க, காலேஜ்ல இப்படி ஒரு சம்பவம் நடக்குதுனு சொல்லி ஒவ்வொரு பாட்டையும் அல்போன்ஸ் வாங்கியிருக்காரு. காலேஜ்ல ஷூட் நடக்கும்போது மத்த பசங்க எல்லாரும் பெஞ்ச்ல கொட்டடிச்சு பாடிட்டு இருந்துருக்காங்க. அதை அல்போன்ஸ் கவனிச்சு ராஜேஷ்கிட்ட சொல்லிருக்காரு. உடனே, ராஜேஷ் மைக் கொண்டு வந்து கிளாஸ் ரூம்ல வைச்சு அந்தப் பாட்ட ரெக்கார்ட் பண்ணிருக்காங்க. நிவின் கிளாஸ்க்கு வர்ற  மியூசிக்தான் அது. படத்துல செம மாஸா இருக்கும். இதைத்தான் நான் அல்போன்ஸ் மேஜிக்னு சொல்றேன். குட்டியான விஷயம்தான் அதை கவனிச்சு மியூசிக் டைரக்டர்கிட்ட இருந்து மியூசிக் வாங்கியிருக்காரு.

மலரே பாட்டுக்கும் பட்டாம்பூச்சி மாதிரி இந்தப் பாட்டு ஹேப்பியா இருக்கணும்னு சொல்லியிருக்காரு, ஆலுவா புழையுட தீரத்து பாட்டுலாம் கேட்டா அப்படியொரு ஃப்ரஷ் ஃபீலிங் கொடுக்கும். அதுவும் அந்த கைய வைச்சு ஸ்டெப் ஒண்ணு போட்ருப்பாங்க. அடிபொலி. கலிப்புலாம் பலபேரோட ரிங்டோனா இன்னைக்கும் இருக்கு. மலர் டான்ஸ் ஆடுற மியூசிக், காலேஜ் ஸ்டேஜ் டான்ஸ், பிராக்டிஸ் மியூசிக் எல்லாமே மேஜிக்தான். கோல்டுலயும் தன்னே தன்னே பாட்டு, பிரித்விராஜ் மாஸ் பி.ஜி.எம், டான்ஸ் பிராக்டிஸ் பாட்டுனு எல்லாமே ராஜேஷ் பட்டையை பிரிச்சு தள்ளியிருப்பாரு. அடுத்து மியூசிக் படமே பண்ணப்போறாரு. சும்மாவே அவர் படத்துல பாட்டு நல்லாருக்கும், பாட்டுனே படம் எடுக்குறாரு. வெயிட்டிங்.

Premam
Premam

இரண்டாவது மேஜிக் காமெடி. குட்டி குட்டி விஷயங்கள்தான் அவர் படத்துல இருக்கும். ஆனால், அப்படி நம்மள சிரிக்க வைக்கும். நேரம் படத்துல ஃபோன் பண்ணனும்னு பாபி சிம்ஹா ஃபேனை வாங்குவாரு, என்னடா ஃபோன், எவ்வளவுனு கேப்பாரு, 10,000னு சொன்னதும். அவ்வளவு ரூபாய் கொடுத்து வாங்கியிருக்க பட்டனே இல்லைனு சொல்லுவாரு. சீரியஸா அதை பேசிகிட்டு இருப்பாங்க. ஆஃபீஸ்ல நிவின்பாலி ஃப்ரெண்ட மீட் பண்ண் போகும்போது, அங்க இருக்குற மேனேஜர் ஏன் ஷேவ் பண்ணல, கம் டு மை கேபின்னு சொல்லுவாரு. உடனே, நிவின் ஃப்ரெண்ட், “ஷேவ் பண்ணிவிட கூப்பிடுறான். போய்ட்டு வறேன்”னுவாரு. போலீஸ் பேருகூட காமெடியாதான் இருக்கும். நிவின்ட்ட கம்ப்யூட்டர்ல் என்னலாம் தெரியும்னு தாதா ரேஞ்ச்ல இருக்குறவரு கேப்பாரு. அப்போ, நிவின், சி, சி++, ஃபோட்டோஷாப்லாம் தெரியும்னு சொல்லுவாரு. உடனே, சி.டி காப்பி பண்ண தேரியுமானு கேள்வி கேப்பாரு. அதுக்கு எக்ஸ்பீரியன்ஸ் வேற கேப்பாங்க. நேரம் படம் முழுக்க நம்மள அறியாமல் சிரிச்சிட்டே இருப்போம்.

Also Read – `பாபா படம் நல்லா இல்லப்பா!’ – ஷுட்டிங்கின்போதே கணித்த கவுண்டமணி 

பிரேமம்ல எமோஷனல் காதல் சீனைத் தவிர எல்லாமே சிரிப்புதான். மாவானு சொல்றது, பிரேக் டான்ஸ் ஆடுறது, அனுபாமா அப்பாக்கிட்ட அடி வாங்கிட்டு வர்றவனைப் பார்த்து ஓடுறது, பிரின்சிபல் ரூம்ல அப்பா பேசுறதுனு எல்லாமே அப்படி சிரிக்க வைக்கும். மலர் டீச்சரை கரெக்ட் பண்ண என்னலாம் பண்ணனும்னு கேண்டின்ல போற கான்வர்சேஷன்லாம் ரிப்ளை போட்டு சிரிக்கலாம். ஊட்டில 900 ஏக்கர் ஏலத்தோட்டம், குளம், முதலை அப்படி இப்படினு கலாய்ச்சு தள்ளியிருப்பாரு. அப்படியே கோல்டுக்கு வந்தோம்னு வைங்க, அதே மேஜிக் இருக்கும். பிளாக் மணியை கைமாத்துவாங்க. கேப்ஷன்ல, பிளாக் மணியை கைமாத்துறதால, பிளாக் அண்ட் வொயிட்ல சீன் இருக்கட்டும்னு போடுவாரு, கடைசில ஓடிடில போனஸ் இருக்கு, 7 வருஷம் கழித்து வந்ததுக்கு நன்றினுலாம் அல்போன்ஸ் பண்ண அட்டகாசங்களுக்கு அளவே இல்லை. இதெல்லாம் அல்போம்ஸ் படத்துல மட்டுமே இருக்குற மேஜிக்.

காதல் சீனையும் அவர் மாதிரி எடுக்க முடியாது. அதைப் பார்த்தா நமக்கு லவ் பண்ணனும்னு தோணும். மூணாவது எடிட், எல்லா படத்துக்கும் அவர்தான் எடிட்டர். இஷ்டத்துக்கு எடிட் பண்ணுவாரு மனுஷன். ஃபார்வேட்ல வருவாங்க. திடீர்னு எல்லாரும் பேக்வேர்ட்ல போவாங்க. ஒரே ஃப்ரேம்ல நின்னு பேசுவாங்க. ஆனால், நடுவுல கட் போடுவாரு. ஸ்கிரீன் கலரை மாத்திகிட்டே இருப்பாரு. மதில் ஏறி குதிக்கிறான்னா, பத்து தடவை ஜம்ப் பண்ணுவான். அப்படி எடிட் பண்ணுவாரு. இப்படி படம் பார்க்குற நம்மள எடிட்ல என்கேஜ் பண்ணுவாரு. அதுதான் அந்த ஆளோட வேறலெவல் மேஜிக். கேரக்டர் செலக்ட் பண்றதுலயும் மனுஷன் வேறலெவல். மலர் டீச்சர் கேரக்டருக்கு இன்னொரு ஆல்டர்னேட்டை யோசிக்ககூட முடியாது. ஜார்ஜ், ஷம்பு, கோயா, ஜோஷி, வெற்றி, வட்டி ராஜா, வேணி எல்லா கேரக்டருக்கும் பத்து பொருத்தமும் பக்காவா இருக்கும். எப்படித்தான் செலக்ட் பண்றாரோ! ஆனால், இன்னொரு விஷயமும் இருக்கு. அவர் பண்ற கதைகள் எல்லாமே அல்போன்ஸ் மேல நம்பிக்கை உள்ளவங்களால மட்டும்தான் செய்ய முடியும். மரணம் தப்புனா கரணம்ன்ற கதைதான் அவர் கையில் எடுக்குறது. அவர் மேஜிக்லாம் சொல்லும்போது சிம்பிளா இருக்கும் வீட்டுக்கு போய் உட்கார்ந்து யோசிச்சாதான் புரியும்.

அல்போன்ஸ் புத்திரன்
அல்போன்ஸ் புத்திரன்

அல்போன்ஸ் பத்தாவது படிக்கும்போது நடிகராகணும்னுதான் ஆசைபட்ருக்காரு. அப்புறம், சினிமாவைப் தெரிஞ்சுக்க தொடங்கியிருக்காரு. காலேஜ் படிக்கும்போது சினிமாவைப் பத்தி பேச யாருமே இல்லை. அவருக்கு ஜூனியர்தான் கிருஷ்ணா, சபரீஷ். அதாவது ஷம்பு, கோயா. இவங்க கூட சேர்ந்து டீக்கடைல அட்டி போட்டு பயங்கரமா சினிமாவைப் பத்தி பேசுவாங்களாம். அந்த டீக்கடைல அரசியல் பேசுறவங்க, ரௌடிகள், பெண்களைப் பத்தி பேசுறவங்க எல்லாருமே இருப்பாங்களாம். அவங்க, இவங்களைப் பார்த்துட்டு இவனுங்க எங்க உருப்படப்போறானுங்கனுதான் பார்ப்பாங்களாம். அப்புறம், அல்போன்ஸ் சென்னைக்கு சினிமாவைப் படிக்க வராரு. நாளைய இயக்குநர்ல கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, விஜய் சேதுபதினு எல்லார் ஃப்ரெண்ட்ஸும் கிடைக்குது. படம் பண்ணலாம்னு யோசிக்கும்போது, சரி ஷார்ட் ஃபிலிம்ல இருந்து தொடங்கலாம்னு நேரம் எடுத்துருக்காரு. 25 வயசுல முதல் ஷார்ட் ஃபிலிம். சபரீஷ் ஹீரோ, கிருஷ்ணா கேமரா மேன், நிவின் புரொடியூஸர். ஆனால், படம் வந்தப்ப எல்லாரோட ரோலும் மாறிச்சு. காரணம், அந்த ஃப்ரெண்ட்ஷிப்தான். அப்புறம் பிரேமம் படம் எடுக்க போறாருனு சொன்னதும் பெருசா ஆ… ஓ…னு ரெஸ்பான்ஸ் இல்லை. ஆனால், ட்ரெய்லர் வந்ததும் வேறலெவல் ரெஸ்பான்ஸ். சென்னைலயே 250 நாள் ஓடிச்சு. இன்னும் லவ்வர்ஸ் டேக்கு, நிவின் பாலி பிறந்த நாள்க்குலாம் ரீ ரிலீஸ் பண்றாங்க. அப்படி ஹிட்டாச்சு. அப்புறம் அடுத்து எப்போ படம் பண்ணப்போறாருனு எல்லாரும் வெயிட் பண்ணும்போது, 7 வருஷம் கழிச்சு கோல்டு ரிலீஸ் பண்ணியிருக்காரு.  

இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து டைரக்டருக்கு அவ்வளவு ஃபேன்ஸ் வந்து பீக்ல இருக்கும்போதே மனுஷன் 7 வருஷம் கழிச்சுதான் படம் ரிலீஸ் பண்ணியிருக்காரு. ஃப்ளாப்லாம் ஆச்சுனா, அவ்ளோதான். கோல்டு படம் புடிக்கலாம், புடிக்காமல் போகலாம். ஆனால், அடுத்து வரப்போற பாட்டு, மாஸ் ஹிட்டா இருக்கும்னு எக்ஸ்பெக்ட் பண்ணலாம். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top