வாட்டர் ஸ்போர்ட் லவ்வர்கள் விரும்பும் Kayaking செய்ய இந்தியாவின் 5 பெஸ்டான இடங்கள் பத்திதான் நாம இந்தக் கட்டுரையில தெரிஞ்சுக்கப் போறோம்.
கங்கை, ரிஷிகேஷ்
வாட்டர் ஸ்போர்ட்ஸ் விரும்பிகளின் சொர்க்கபுரி ரிஷிகேஷ் கங்கையாறு. இந்தியாவில் Kayaking செய்ய பெஸ்டான ஸ்பாட் என்றால், இதுதான். வாட்டர் ஸ்போர்ட்ஸ் அட்வெஞ்சர் விரும்பிகள் இதற்காகவே ரிஷிகேஷ் படையெடுப்பார்கள். ஆசிரமங்கள், கோயில்கள் பின்னணியில் பாறைகள் நிறைந்த கங்கையாறு உங்களுக்கு வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும். வாட்டர் ஸ்போர்ட்ஸ் உங்க ஃபேவரைட்னா ரிஷிகேஷை மிஸ் பண்ணிடாதீங்க.
மாண்டோவி, கோவா
பீச்சுகள், ரெஸார்ட்டுகள் என கோவாவை நீங்கள் இதுவரை வேறு மாதிரி கற்பனை செய்து பார்த்திருக்கலாம். ஆனால், Kayaking லவ்வர்களுக்கு கோவா தனி அனுபவத்தைக் கொடுக்கும். Mandovi அல்லது Nerul ஆற்றில் மலைகள் சூழ் நிலப்பரப்பில் வாட்டர் ஸ்போர்ட் கொடுக்கும் எக்ஸ்பீரியன்ஸ் நிச்சயம் உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாததாக இருக்கும்.
ஜன்ஸ்கர், லடாக்
இந்தியாவின் அழகிய நிலப்பரப்புகளில் முக்கியமானது லடாக். எத்தனையோ மலைச்சிகரங்கள் அமைந்திருக்கும் இந்தப் பகுதி அட்வெஞ்சர் சீக்கர்களின் ஆதர்ஸமான ஸ்பாட். பைக் டிராவல் முதல் மலையேற்றம் வரை எத்தனையோ அட்வெஞ்சர்கள் லடாக்கில் இருந்தாலும், ஜன்ஸ்கர் ஆற்றில் கரடுமுரடான பாறைகளுக்கு மத்தியில் Kayaking செய்வது அதன் உச்சமாகும். சோ, லடாக் போன இந்த எக்ஸ்பீரியன்ஸை மிஸ் பண்ணிடாதீங்க.
அந்தமான், நிகோபர் தீவுகள்
அந்தமான், நிகோபர் தீவுகள் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அதன் கடற்கரைகள்தான். அமைதியான கடல் முதல் ஆர்ப்பரிக்கும் கடல் வரை உங்களின் அட்வெஞ்சர் உணர்வுகளுக்கு நிச்சயம் தீனி போடும் இடமாக இது இருக்கும். அதேநேரம், Kayaking செய்யவும் இங்கே வாய்ப்புகள் உண்டு. ஆர்ப்பரிக்கும் ஆற்றில் செய்வது போன்ற எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்காவிட்டாலும், கடல் உங்களுக்குப் புதுவிதமான அனுபவம் கொடுக்கும்.
பீஸ் ஆறு
லே – மணாலி நெடுஞ்சாலையில் இருக்கும் Rohtang Pass-ல் இருந்து தொடங்கும் Beas ஆறு, ராஃப்டிங் மற்றும் Kayaking செய்ய ஏற்ற இடமாகக் கொண்டாடப்படுகிறது. குலு, மணாலி வழியாக இந்த ஆறு பாய்கிறது. மற்ற இடங்களைக் காட்டிலும் வேகம், த்ரில் என உங்கள் அட்ரீனலின் பம்ப் ஆக எல்லாவிதமான வாய்ப்புகளையும் வழங்கும் பீஸ் ஆற்றில் Kayaking நல்லதொரு அனுபவமாக இருக்கும் என்பது நிச்சயம்.
Also Read –