லோ – பட்ஜெட்டில்லும் சம்மர் வெக்கேஷன் போகலாம் – இந்தியாவில் பெஸ்டான 5 இடங்கள்!

சம்மர் தொடங்கியதுமே எழும் முதல் கேள்வி, இந்த வருஷம் எங்கே வெக்கேஷன் போகப்போறோம்ங்கிறதுதான்… கொரோனாவால் இரண்டு ஆண்டுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிலைமை மெல்ல சீராகத் தொடங்கியிருக்கிறது. சம்மர் வெக்கேஷன் ஸ்பாட்டைத் தேர்வு செய்வதில் பல காரணங்களை நாம் கருத்தில் கொண்டாலுமே, முக்கியமான முதல் காரணமாக நாம் பட்டியலிடுவது பட்ஜெட்டைத்தான்.

அப்படி இந்தியாவில் குறைந்த பட்ஜெட்டில் சம்மர் வெக்கேஷன் செல்ல ஏற்ற 5 இடங்கள் பற்றிதான் நாம் இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கப் போறோம்.

கூர்க்

கூர்க்
கூர்க்

கர்நாடக மாநிலத்தில் அமைந்திருக்கும் எழில்மிகு மலைகள் சூழ்ந்த கூர்க் பகுதி, சம்மர் வெக்கேஷனுக்கு சிறந்த இடம். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் இந்தப் பகுதியில் கோடைகாலத்தில் நல்ல சீதோஷ்ண நிலை நிலவும் என்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகம்தான். எல்லா பட்ஜெட்டிலும் இங்கு தங்குமிடம் தொடங்கி உணவு வகைகள் வரை கிடைக்கும் என்பதால், இந்தியாவின் மிகச்சிறந்த லோ-பட்ஜெட் சம்மர் வெக்கேஷன் ஸ்பாட்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

டார்ஜிலிங்

டார்ஜிலிங்
டார்ஜிலிங்

இமயமலைச் சாரலில் அமைந்திருக்கும் டார்ஜிலிங்கின் கிளைமேட்டை வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் அனுபவித்து விட வேண்டும் என்பார்கள். மலைச்சாரலோடு தேயிலைத் தோட்டங்களும் உங்களை வரவேற்கும். நம்மூர் மலை ரயிலைப் போலவே டார்ஜிலிங் மலை ரயிலும் யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. மேகங்கள் கடந்து செல்லும் மலை முகடுகள், உள்ளூர் உணவுகள் என பல விஷயங்களுக்கு டார்ஜிலிங் புகழ்பெற்றது. பட்ஜெட்டும் பெரிதாக நம் கையைச் சுடாது என்பது கூடுதல் ஸ்பெஷல்.

வர்க்கலா

வர்க்கலா
வர்க்கலா

கேரள தலைநகர் திருவனந்தபுரத்துக்கு அருகே அமைந்திருக்கும் கடற்கரை நகரம்தான் வர்க்கலா. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வர்க்கலாவுக்கு நேரடியாக ரயில் சேவை இருக்கிறது. கடற்கரையை ஒட்டிய மலை, கலங்கரை விளக்கம், நீர் விளையாட்டுகள், இயற்கையாக மீன் பிடிக்கும் முறை என பல விஷயங்களை வர்க்கலாவில் நீங்கள் அனுபவிக்க முடியும்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்கு முனையில் அமைந்திருக்கும் நகரம் கன்னியாகுமரி. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என்பதால், இங்கு ஆண்டுதோறும் வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுமே அதிகம். கன்னியாகுமரி கடலில் இருக்கும் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, பகவதி அம்மன் கோயில் மட்டுமல்லாமல், அதை ஒட்டியுள்ள பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும் புது அனுபவத்தை உங்களுக்கு அளிக்கும்.

மணாலி

மணாலி
மணாலி

கோடைகாலம் என்றதுமே நமக்கு நினைவுக்கு முதலில் வரும் இடம் மணாலிதான். இமயமலைத் தொடரில் அமைந்திருக்கும் இந்த நகரம், இந்தியாவின் லோ-பட்ஜெட் சம்மர் வெக்கேஷன் ஸ்பாட்டுகளில் முக்கியமானது. வானுயர்ந்த சிகரங்கள், இயற்கையான சூழல், பட்ஜெட் ஃப்ரண்ட்லி ஆக்டிவிட்டீஸ் என மணாலியில் கண்டுகளிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதேபோல், பட்ஜெட் விலையில் தங்குமிடங்களும், உணவும் இதன் ஸ்பெஷல்.

Also Read – ஒரே நாளில் மொத்த ஊரையும் சுத்திடலாம்… இந்தியாவின் 7 அழகான நகரங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top