குழந்தை

வறுமையால் குழந்தையை விற்ற தாய் – தொடரும் அவலம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஊரடங்கு பல மாதங்களாக இருந்து வருகிறது. இதனால், மக்கள் பலரும் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். குறிப்பிட்ட சொல்ல வேண்டுமெனில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் அன்றாட செலவுகளுக்கே தவித்து வருகின்றன. இந்த நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பிறந்து சில நாள்களே ஆன தனது குழந்தையை வறுமையின் காரணமாக ரூபாய் 3000-க்கு விற்பனை செய்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் பகுதியில் உள்ள பச்சுபள்ளி (Bachupally) பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. வெளியான தகவல்களின்படி, ராதா வீடற்ற பெண்மணி ஆவார். ஊரடங்கு போன்ற பிரச்னையின் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியை அனுபவித்து வந்துள்ளார். இதனால், குழந்தையை அவரால் சரியாக கவனித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பிறந்து சில நாள்களே ஆன தனது குழந்தையை விற்க முடிவு செய்துள்ளார்.

ராதா தனது குழந்தையை கடந்த வியாழக்கிழமை அன்று சாந்தி என்பவருக்கு ரூபாய் 3000-க்கு விற்பனை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராதா சாந்தியிடம் தொடர்ந்து அதிக பணம் கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பணம் தொடர்பான பிரச்னையை அடுத்து ராதா குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளை அணுகி சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து குழந்தையை அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஊரடங்குக்கு பிறகு இதே மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது குழந்தைகள் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரின் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : என்னதான் ஆச்சு கார்த்திக் சுப்புராஜூக்கு… எங்கே போச்சு அந்த மேஜிக்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top