டிக்‌ஷனரி

டிக்‌ஷனரியில் ஒரு வார்த்தை எப்படி சேர்க்கப்படுகிறது… நடைமுறை என்ன?

நமக்கு எதாவது ஒரு வார்த்தைக்குப் பொருள் தெரியவில்லை என்றால், அகராதிகள் எனப்படும் டிக்‌ஷனரியைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம். ஒரு வார்த்தை டிக்‌ஷனரியில் எப்படி சேர்க்கப்படுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கீறீர்களா… ஒரு வார்த்தையை டிக்‌ஷனரியில் சேர்க்கலாம் என்பதை ஒருவர்தான் முடிவெடுப்பாரா… அல்லது ஒரு குழுவா.. எப்படி சேர்க்கப்படுகிறது ஒரு வார்த்தை என்பதைத்தான் இந்த கட்டுரையில் நாம் தெரிஞ்சுக்கப்போறோம்.

டிக்‌ஷனரி
டிக்‌ஷனரி

டிக்‌ஷனரியில் சேர்க்கப்படும் வார்த்தை

ஒரு வார்த்தையில் பாப்புலராகப் பயன்படுத்தப்படும்போது அந்த வார்த்தை இயல்பாகவே டிக்‌ஷனரியில் சேர்க்கப்படுகிறது. ஸ்லாங்க், அப்ரிவேஷன்கள் எனப்படும் குறியீடு வார்த்தைகள் (Lol, Rofl) போன்றவை பல்வேறு தளங்களிலும் பயன்படுத்தப்படும்போது முக்கியத்துவம் பெறுகின்றன. பயன்பாட்டின் மூலம் ஒரு வார்த்தை பாப்புலராகி, அதற்கான அர்த்தமும் பொதுவாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் இது எளிதாக நடக்கும். இது உடனடியாக நடக்காது. இந்த நடைமுறைக்கு ஆண்டுக்கணக்கில் காலம் எடுக்கும்.

டிக்‌ஷனரியில் ஒரு வார்த்தையைச் சேர்ப்பது யார்?

டிக்‌ஷனரியில் ஏற்கெனவே இருக்கும் வார்த்தைகளோடு புதிய வார்த்தைகளைச் சேர்ப்பவர் lexicographer என்றழைக்கப்படுகிறார். டிக்‌ஷனரியில் அந்த வார்த்தையைச் சேர்க்கும் முன்னர், பிரிண்ட், டிஜிட்டல் மற்றும் பேச்சு வழக்கில் அந்த வார்த்தை எந்த அளவுக்குப் பயன்படுத்தப்படுகிறது அல்லது பிரபலமாக இருக்கிறது என்பதை அவர் கவனிப்பார். அதன் பொருளும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் அவர் ஆய்வு செய்வார். இதற்கென தனியாக ஒரு டேட்டாபேஸ் ஆய்வு பல்வேறு தளங்களைப் பயன்படுத்தியும் நடத்தப்படும். பல்வேறு தளங்களில் அந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது அல்லது மக்களிடையே பிரபலமாகியிருக்கிறது என்பதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டால், லேட்டஸ்ட் எடிஷன் டிக்‌ஷனரியில் அந்த வார்த்தையை சேர்க்க அவர் பரிந்துரை செய்வார். பிரபல ஆங்கில அகராதியான Oxford English Dictionary இப்படியாக புதிய வார்த்தைகளைச் சேர்த்து ஆண்டுக்கு 4 முறை புதுப்பிக்கப்படுகிறது.

டிக்‌ஷனரி
டிக்‌ஷனரி

ஒரு டிக்‌ஷனரிதான் இருக்கிறதா?

ஆங்கிலத்தில் எத்தனையோ டிக்‌ஷனரிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆனால், Oxford English Dictionary – இதுதான் மிக நீண்டகாலம் பயன்பாட்டில் இருக்கும் டிக்‌ஷனரி. சுமார் 60 லட்சம் வார்த்தைகள், 30 மில்லியன் மேற்கோள்களோடு அந்த டிக்‌ஷனரி தொகுக்கப்பட்டிருக்கிறது. ஆக்ஸ்போர்டின் முதல் டிக்‌ஷனரி வெளிவர 10 ஆண்டுகள் உழைப்பு போடப்பட்டது. 1879ம் ஆண்டு ஆகஸ்டில் வேலை தொடங்கப்பட்டு, ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனரியின் கடைசி வால்யூம் வெளியாக 1928 ஆம் ஆண்டு ஆனது. சுமார் 50 ஆண்டுகள் இதற்கான வேலை தொடர்ந்து நடந்திருக்கிறது.

டிக்‌ஷனரியில் இருந்து ஒரு வார்த்தையை நீக்கும் வழக்கம் இருக்கிறதா?

டிக்‌ஷனரி என்பது தொடக்கம் முதலே பயன்பாட்டில் இருந்து வந்த, இருந்த வார்த்தைகளின் தொகுப்புதான். எனவே, ஒரு முறை டிக்‌ஷனரியில் ஒரு வார்த்தை இடம்பெற்று விட்டால், அதை நீக்கும் வழக்கம் பொதுவாக இல்லை என்றே சொல்லலாம். ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனரியில் இருந்து எந்த வார்த்தையுமே இதுவரை நீக்கப்பட்டதில்லை. வார்த்தைகளை ஆவணப்படுத்துவதுதான் டிக்‌ஷனரி. உதாரணமாக, 1920ம் ஆண்டு பிரிண்ட் செய்யப்பட்ட ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது அதில் இடம்பெற்றிருக்கும் ஒரு வார்த்தைக்கான பொருள் உங்களுக்குத் தெரியவில்லை என்றால், டிக்‌ஷனரியைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இதுதான் நடைமுறை.

டிக்‌ஷனரி ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?

மொழிகளை ஆவணப்படுத்துவது இன்றைக்கு நேற்றைக்குத் தொடங்கிய வழக்கமல்ல. பல நூறு ஆண்டுகளாக இருக்கும் ஒரு நடைமுறைதான். முதல் டிக்‌ஷனரி என்பது 1582-ல் Richard Mulcaster என்பவரால் உருவாக்கப்பட்டது. அதில், 8,000 ஆங்கில வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. முதல் ஆங்கில முழுமையான அகராதி என்பது 1604-ல் Robert Cawdrey என்பவரால் தொகுக்கப்பட்டது. அப்போது பயன்பாட்டில் இருந்த வார்த்தைகள் அதில் இடம்பெற்றிருந்தன. அதன்பின்னர், 1857-ல் Philological Society of London அமைப்பு 12-ம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வந்த ஆங்கில வார்த்தைகளைத் தொகுத்து வரலாற்று ஆவணமாக்க முயற்சி எடுத்தது. இதுவே ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனரி பிறப்புக்கு வழிவகுத்தது.

டிக்‌ஷனரி
டிக்‌ஷனரி

வார்த்தைகள் சேர்ப்பு

ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனரியில் சராசரியாகத் தற்போது ஆண்டுக்கு 500 முதல் 1,000 வார்த்தைகள் சேர்க்கப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டை விட தற்போது டிக்‌ஷனரியில் அதிக வார்த்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன. இது அவசியம் இல்லை என்றாலும், நமது தகவல் தொடர்பு சாதனமாகப் பயன்படும் மொழியின் பரிணாமம் எப்படி மாறி வருகிறது என்பதைக் காட்டும் கால ஆவணமாக டிக்‌ஷனரிகள் இருக்கின்றன.

முடிவாக என்ன சொல்ல வருகிறோம் என்றால், ஒரு வார்த்தை டிக்‌ஷனரியில் சேர்க்கப்பட வேண்டும் என்றால், அது முதலில் பாப்புலராக வேண்டும். அதுதான் முக்கியம்!

Also Read : 2 விநாடிக்கு ஒரு வாகனம்; 10,000 வேலைவாய்ப்பு – ஓலாவின் கிருஷ்ணகிரி ஃபேக்டரியில் என்ன ஸ்பெஷல்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top