ரஜினி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்… அடுத்து யார்?

தமிழ் சினிமாவில் பொதுவாக ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு சூப்பர் ஸ்டார் உருவாவார்கள். ரஜினிக்கு அடுத்து, விஜய், விஜய்க்கு அடுத்து தனுஷ், தனுஷுக்கு அடுத்து சிவகார்த்திகேயன் என நீளும் இந்த வரிசையில், அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு அடுத்து ஒரு சூப்பர் ஸ்டார் உருவாக வேண்டிய காலகட்டம் இது. சமீபத்தில் ஏராளமான, நம்பிக்கைத் தரக்கூடிய வகையிலான இளம் ஹீரோக்கள் வருகை புரிந்திருந்தாலும் அவர்களில் யாருக்கு சிவகார்த்திகேயன் போன்று உச்சம் செல்லக்கூடிய தகுதிகள் இருக்கிறதென ஒரு சின்ன அலசல்.

ஹரீஷ் கல்யாண்

ஹரீஷ் கல்யாண்
ஹரீஷ் கல்யாண்

சிவகார்த்திகேயனைப் போன்று ஹரீஷ் கல்யாண் சுயம்புவாக சினிமாவுக்கு அடி எடுத்துவைக்காமல், சினிமாவில் இருக்கும் தனது குடும்ப பிண்னனியின் தயவால் நுழைந்திருந்தாலும் இவரும் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக தமிழ் சினிமாவில் போராடியவர்தான். சிந்து சமவெளி’,`சட்டப்படி குற்றம்’,’பொறியாளன்’ என தடுமாறிக்கொண்டிருந்த ஹரீஸ் கல்யாண், `பிக் பாஸ் சீசன்-1’ மூலம் வெளிச்சம் வெற்றார். அந்த சூட்டிலேயே வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படமும் ஹிட்டடிக்க லைம் லைட்டுக்கு வந்தார். அதைத் தொடர்ந்து,  ‘தாராள பிரபு’, ‘கசடதபற’ போன்ற படங்களின் மூலம் தனக்குக் கிடைத்த புகழை தக்க வைத்துவரும் ஹரீஷ் கல்யான், மேலும் தன்னை தகுதிப்படுத்திக்கொண்டால் அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டாராக உருவெடுக்கும் வாய்ப்புகள் ஏராளம்.

துருவ் விக்ரம்

துருவ் விக்ரம்
துருவ் விக்ரம்

உச்ச நட்சத்திரம் விக்ரமின் மகன் என்பதால் முதல் படம் வெளியாகும் முன்பே பரபரப்பைக் கிளப்பியவர் துருவ் விக்ரம். அதற்கேற்ப ‘அர்ஜூன் ரெட்டி’ ரீமேக்குகளில் சிறப்பாகவே நடித்திருந்தார் துருவ். அடுத்தடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘மகான்’, மாரி செல்வராஜ் இயக்கும் படம் என பலமான ரூட்டைப் போட்டிருக்கிறார்.   அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவை ஆள துருவ் விக்ரமிற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது.

கவின்

கவின்
கவின்

‘பீட்சா’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துவந்த கவின், ‘பிக் பாஸ் சீசன் – 3’ மூலம் புகழ் பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் நடித்த ‘நட்புன்னா என்னன்னுத் தெரியுமா’ படம் வெற்றிபெறவில்லை என்றாலும் சமீபத்தில் ஓடிடியில் வெளியான ‘லிஃப்ட்’ படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. மேலும் ஒரு ஹீரோவுக்குத் தேவையான முழுத் தகுதிகளும் அவருக்கு இருப்பதை நிரூபிக்கவும் செய்திருக்கிறது. இவரும் அடுத்தடுத்து சரியான படங்களை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகலாம்.

அஸ்வின்

அஸ்வின்
அஸ்வின்

இவரைப் பற்றி சொல்லவே வேண்டாம். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் ‘அஸ்வினே..’ என சிவாங்கி கூப்பிட்டு கூப்பிட்டே தமிழ்நாடு முழுக்க இவரைப் பிரபலப்படுத்திவிட்டார். அதைத் தொடர்ந்து வெளியான ‘குட்டி பட்டாஸ்’ பாடலும் படு ஹிட். விளைவு இப்போது ஏகப்பட்ட படங்கள் இவரது கைவசம்.  அருமையாக அமைந்திருக்கும் அடித்தளத்தை சரியாகப் பயன்படுத்தி கொண்டு சென்றால் அஸ்வினும் அடுத்த சூப்பர் ஸ்டார்தான்.

இவர்களில் அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார் ஆவதற்கான வாய்ப்பு யாருக்கு அதிக வாய்ப்பிருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்கள் என கமெண்டில் தெரியப்படுத்துங்கள்!

Also Read : ஏ.ஆர்.ரஹ்மானின் படையப்பா படத்தில் மாஸ் கூட்டிய ஹாரிஸ் ஜெயராஜ்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top