ரெட் பால் கிரிக்கெட்டைப் பொறுத்த வரைக்கும் இந்தியாவோட செகண்ட் மோஸ்ட் விக்கெட் டேக்கிங் பௌலரா இருந்தும் தொடர்ந்து ரெண்டு வேர்ல்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செலெக்ட் ஆகாதவர். ஆஸ்திரேலியா சீரிஸைத் தவிர்த்துப் பார்த்தா கடைசி 5 வருஷத்துல ரெண்டே ரெண்டு ODI-ல மட்டுமே விளையாடியிருக்க ஒருத்தர், டி20 இண்டர்நேஷனல்ஸை எடுத்துக்கிட்டா இந்தியன் டீமோட ரெகுலர் பிளேயரா விளையாடாதவர், அதேநேரம் கடைசி 2 எடிஷன் டி20 வேர்ல்டு கப் டீம்லயும் இருப்பார். இப்படியொரு விநோதமான டிராக் ரெக்கார்டு இருக்க நம்ம அஸ்வின் அண்ணா, திரும்பவும் டாக் ஆஃப் தி டவுன் ஆகியிருக்கார். ஏசியா கப் டோர்னமெண்டுக்கு முன்னாடி வரைக்கும் ஓடிஐ வேர்ல்டு கப் சீனுக்குள்ள, ஏன் டிஸ்கஷன்ஸுக்குள்ளேயே வராத ஒருத்தர், திடீர்னு கம்பேக் கொடுத்திருக்கார். இப்படி நிலைமை மாற என்ன காரணம்… சொல்லுங்க நீங்க பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்கங்குற மாதிரி இந்தியன் டீம் மேனேஜ்மெண்டைப் பார்த்து அஸ்வின் கேட்ட ஒரு உலுக்கலான கேள்வினு, அஸ்வின் அண்ணாவோட ஓடிஐ கம்பேக் மேஜிக் எப்படி நிகழ்ந்துச்சுனுதான் இந்த வீடியோல பார்க்கப் போறோம்.

ஏசியா கப் குரூப் 4 மேட்ச்ல ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் இஞ்சுரியாகவே, யாருடா ரீப்ளேஸ்மெண்டுன்னு பார்த்தப்போ சீனுக்குள்ள வந்தவர்தான் அஸ்வின். ஆனா, அந்த டைம்ல இந்தியன் டீம்ல இருந்து கூப்பிட்டப்போ, எனக்கு மேட்ச் டைம் வேணும்னு அவர் கேக்கவும் ஃபைனல்ஸ்ல வாஷிங்டன் சுந்தர் உள்ளே வந்தார். சொந்த ஊர்ல நடக்குற சீரிஸ்ல உள்ளூர் தாதா அஸ்வினை செலெக்ட் பண்ணலியேப்பானு ஒரு விமர்சனம் வந்துடக் கூடாதுனு டீம் மேனேஜ்மெண்ட் நினைச்சிருக்கலாம். அதை கேப்டன் ரோஹித்தும் சீஃப் செலக்டர் அகர்கரும் வேற மாதிரி வெளிப்படுத்துனாங்க. அஸ்வின் பத்தி பிரஸ்மீட்ல பேசும்போது, எக்ஸ்ஃபீரியன்ஸ்ங்குறதை ஸ்ட்ரெஸ் பண்ணி மூணு தடவை சொன்னதை நாம கேட்டோம்.
ஏசியா கப் தொடங்குறதுக்கு 2 வாரங்கள் முன்னாடி ஏசியா கப் சிச்சுவேஷன் பத்தியும் வேர்ல்டு கப் டீம் செலெக்ஷன் பத்தியும் வழக்கம்போல அனலைஸ் பண்ணி தன்னோட யூடியூப் சேனல்ல ஒரு வீடியோ பண்ணிருந்தாரு அஸ்வின். அந்த வீடியோல அவர் பேசியிருந்த விஷயம் ரொம்பவே முக்கியமானது. `Tail Begins at 8′ அப்படிங்குற விவாதத்தை எடுத்துக்கிட்டு ஃபேக்ட்ஸை வைச்சு அனலைஸ் பண்ணிருந்த அவர், மாடர்ன்டே கிரிக்கெட்ல நம்பர் 8 எவ்ளோ முக்கியம்னு பேசிட்டு, அப்டியே அந்த இடத்துக்கு யார் பெஸ்டுனு அக்ஸர், ஷ்ரதுல் தாக்குர்லாம் வைச்சு பேசிருந்தாரு. ஆனா, எந்த இடத்துலயும் அவர் தன்னை அந்த பொசிஷனுக்கு முன்னிறுத்தவே இல்லை. அதேமாதிரி ஆஃப் ஸ்பின்னர் பத்தியும் பேசியிருந்தாரு. இந்த அனலைஸ் ஒருவகையில அவருக்கே ஹெல்ப் பண்ணிருக்குனுதான் சொல்லணும். பிளேயிங் லெவன்ல அஸ்வின் இருந்தா அவர் நம்பர் 8 பேட்டராத்தான் களமிறக்கப்படுவாரு.
2011, 2015னு ஏற்கனவே ரெண்டு வேர்ல்டு கப்ல விளையாடியிருக்கும் அஸ்வின், 2019 வேர்ல்டு கப்ல விளையாடலை. இன்னும் சொல்லப்போனா போன ஆகஸ்ட்ல வெஸ்ட் இண்டீஸ் டூர் முடிஞ்ச இருந்தே அஸ்வின் டீம் மேனேஜ்மெண்டோட கனெக்ட்ல இருந்திருக்கார். கேப்டன் ரோஹித்தும் தொடர்ச்சியா அஸ்வின்கூட பேசிட்டு இருந்தாராம். வேர்ல்டு கப் டீமோட பிளேயிங் லெவனுக்கு முன்னோட்டமா ஆஸ்திரேலியா சீரிஸ் அஸ்வினுக்கு அமைஞ்சது. ரொம்ப டிஃபன்ஸிவ் எப்படியான ஒரு விமர்சனத்தை அவர் மேலை வைப்பாங்களோ அப்படியான ரிசல்டுதான் முதல் மேட்ச்ல நடந்துச்சு.

ஆனா, அதுக்கப்புறம் நம்மாளு பண்ண சம்பவம் வேற லெவல். மொஹாலில மேட்ச் முடிஞ்ச அதேநாள் நடு ராத்திரினு கூட பார்க்காம பேடைக் கட்டிட்டி பிராக்டீஸ் பண்ண கிரவுண்டுக்குள்ள இறங்குனார். இதைப் பார்த்து கமெண்ட்ரில இருந்த மார்க் வாக்கும் அபிஷேக் நாயரும் தங்களோட ஆச்சர்யத்தை அப்போவே வெளிப்படுத்துனாங்க. இன்னும் சொல்லப்போனா டீம் ஹெட் கோச்சான டிராவிட்டே அஸ்வின் பேட் பண்ணப்போ ஸ்கொயர் லெக்ல ஃபீல்ட் பண்ணாருனா பார்த்துக்கோங்க. `கப்பு முக்கியம் பிகிலு’ மாதிரி பிளேயிங் லெவன்ல ஒரு ஸ்பாட் எனக்கு நிச்சயம் இருக்கு. குறிச்சு வைச்சுக்கோங்கனு அவர் சொன்ன மாதிரியே இருந்து அந்த அசாதாரண லேட் நைட் பிராக்டீஸ்.
Also Read – DRS-ல மாற்றம் வரவே `தோனி’தான் முக்கியமான காரணம்… Dhoni செய்த சம்பவம் தெரியுமா?!
மொஹாலில அப்படினா இந்தூர்ல அதையே தூக்கி சாப்பிடுற மாதிரியா ஒரு சம்பவத்தை நிகழ்த்திக் காட்டுனாரு. லெஃப்ட் ஹேண்டர்ஸ் அஸ்வினோட பாலை ஃபேஸ் பண்ண தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் கஷ்டம்தான். ஆனா, இதை வேற மாதிரி பிளஸ்ஸாக்கி ரைட் ஹேண்ட் பேட்டாராவே மாறி களத்துல நின்னார் டேவிட் வார்னர். ஆரம்பத்துல லெஃப்ட் ஹேண்ட் பேட்டிங்ல தடுமாறுன அவரு, திடீர்னு ரைட் ஹேண்ட் பேட்டரா மாறி அஸ்வின் பௌலிங்கை எதிர்க்கொள்ள ஆரம்பிச்சார். ஒரு பௌண்டரி அடிச்சிருந்தாலும் அந்த மைண்ட் கேம்ல ஜெயிச்சது அஸ்வின்தான். ஏற்கனவே ரிவர்ஸ் பேட் பண்ணிட்டு இருந்த அவர் ரிவர்ஸ் ரிவர்ஸ் ஸ்வீப் பண்ணி ஆட முயற்சி பண்ணி எல்பிடபிள்யூவாகி வெளியேறியிருப்பார். `நீ அப்படினு நினைச்சா நான் இப்படினு நினைப்பேன். நீ இப்படினு நினைச்சா… நான் வேற மாதிரி நினைப்பேன்டா’னு தன்னோட 37 வயசுலயும் மைண்ட் கேம் ஆடி ஜெயிச்சாரு அஸ்வின் அண்ணா. முதல் ரெண்டு மேட்ச்லயுமே ஆஸ்திரேலியா டீமோட முக்கியமான பேட்ஸ்மேன்கள்ல ஒருத்தரான லாபுஷேனை வீழ்த்துனது அஸ்வின்தான்.

வேர்ல்டு கப் டீம்ல ஆஃப் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டர் இல்லங்குற குறையை அஷ்வினோட செலெக்ஷன் நீக்கும்னு ஒரு தரப்பும், அமித் மிஸ்ரா மாதிரியான இன்னொரு தரப்பினர் இது டி20 இல்ல; 10 ஓவர் போட்டதோட 40 ஓவர் ஃபீல்டு பண்ணனும்; அஸ்வின் பெஸ்ட் பௌலர்தான். ஆனா, அவரோட ஸ்லோ ஃபீல்டிங்னாலதான் அவரை விட யங் ஸ்டர்ஸை செலெக்ட் பண்றாங்கங்குற மாதிரியான விமர்சனத்தையும் முன்வைக்குறாங்க. வேர்ல்டு கப் டீம்ல அஸ்வினோட செலெக்ஷன் குறித்தான விவாதங்களைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க. அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க!
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.
sustanon dianabol cycle
References:
Beginner dianabol cycle – socialbookmark.Stream –
Excellent Brooklyn cleaning, understands our brownstone perfectly. This is Brooklyn’s best cleaning. Appreciate the community service.
Dry Cleaning in New York city by Sparkly Maid NYC
We are looking for partnerships with other businesses for mutual promotion. Please contact us for more information!
Business Name: Sparkly Maid NYC Cleaning Services
Address: 447 Broadway 2nd floor #523, New York, NY 10013, United States
Phone Number: +1 646-585-3515
Website: https://sparklymaidnyc.com
We pay $10 for a google review and We are looking for partnerships with other businesses for Google Review Exchange. Please contact us for more information!
Business Name: Sparkly Maid NYC Cleaning Services
Address: 447 Broadway 2nd floor #523, New York, NY 10013, United States
Phone Number: +1 646-585-3515
Website: https://sparklymaidnyc.com
We pay $10 for a google review and We are looking for partnerships with other businesses for Google Review Exchange. Please contact us for more information!
Business Name: Sparkly Maid NYC Cleaning Services
Address: 447 Broadway 2nd floor #523, New York, NY 10013, United States
Phone Number: +1 646-585-3515
Website: https://sparklymaidnyc.com