நம்ம வாழ்க்கையோட பாடல்கள் ஒண்ணா கலந்துடுச்சுனு தைரியமா சொல்லலாம். ஏன்னா.. பாடல்களை கேட்காமல் ஒரு நாளைக்கூட நாம் கடப்பதில்லை. நம்மிடம் இருக்கும் பல வகையான உணர்வுகளையும் பெரும்பாலும் பாடல்களைப் பாடியோ அல்லது கேட்டோதான் வெளிப்படுத்துகிறோம். அந்த வகையில் உங்களது காலைகளை செம பவர்ஃபுல்லாகவும் கொஞ்சம் இதமாகவும் மாற்றும் பாடல்களின் தொகுப்பு இங்கே…
Elangaathu Veesudhey
இளையராஜா ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் எப்போதும் இருக்கும் இந்தப் பாடல் பிதாமகன் திரைப்படத்தில் இடம்பெற்றது. இந்தப் பாடலின் வரிகளை பழனி பாரதி எழுதியுள்ளார். இளங்காத்து வீசுவதைப் போலவே இப்பாடலின் இசையும் அவ்வளவு இதமாக இருக்கும். `உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே.. குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல..’ என ஒவ்வொரு வரிகளும் தனிமைக்கான துணையாக அமையும். காலையில் இந்தப் பாட்டைக் கேட்டால்.. மனசுல இருக்குற பாரம் எல்லாம் இறங்கி மிகவும் இதமாக உணர்வோம். இளையராஜா.. இளையராஜாதான்! யாரும் அடிச்சுக்க முடியாது.
yar yar sivam
மனுஷங்க மேல இருக்குற நம்பிக்கை போகும்போதெல்லாம் `அன்பே சிவம்’ படத்தை.. இல்லை இல்லை.. `யார் யார் சிவம்’ பாடலை கேட்டாலே போதும். மனுஷங்க மேல தானா நம்பிக்கை வரும். வித்யாசாகர் இசையில் உருவான இந்தப் பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். `இதயம் என்பது சதைதான் என்றால் எறிதழல் தின்றுவிடும்.. அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்’ என வரிகளாலும் சரி இசையாலும் சரி பாடல் வேறு தரத்தில் இருக்கும். இந்தப் பாடலை கேட்டால் அன்றைய நாள் முழுவதும் நம்முடன் பாஸிட்டிவ் வைப்ஸ் இருந்துட்டே இருக்கும். வேணும்னா.. ட்ரை பண்ணி பாருங்க!
Ella pugazhum
ஏ.ஆர்.ரஹ்மான் ஃபேன்ஸ் மற்றும் விஜய் ஃபேன்ஸ் என இருவருக்குமே மிகவும் பிடித்த பாடல் என்றால் அது `எல்லா புகழும்’ பாடல்தான். வாலி இந்தப் பாடலை எழுதியுள்ளார். செம எனர்ஜியான பாடல். விஜயோட டேன்ஸ் ரஹ்மானின் வாய்ஸ் வாலியின் வரிகள் என இந்தப் பாடலில் பல ஹைலைட்டுகள் உள்ளன. `உன்னால் முடியும், வெற்றி நமக்கே, இன்றை இழக்காதே’ போன்ற வார்த்தைகளால் ஃபுல் பாஸிட்டிவ் எனர்ஜியும் கேட்கும்போது நமக்குள் உருவாகும்.
June Ponal
உன்னாலே உன்னாலே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பா.விஜய் இந்தப் பாடலை எழுதியுள்ளார். `அறைக்குள்ளே மழை வருமா, வெளியே வா குதுகலமா’ என எளிமையான வரிகள், மெலடி டோனில் கேட்கும் இசை என பாடல் சும்மா வேற லெவல்ல இருக்கும். இந்தப் பாடலை கேட்கும்போது நமக்குள்ளேயே ஒரு எனர்ஜி உருவான ஃபீல் வரும். அந்த மேஜிக்காகவே ஹாரிஸ் ஜெயராஜ்க்கு கிளாப்ஸ் கொடுக்கலாம்.
Nenjey ezhu
வாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் உடைந்து போய் இருக்கும்போது மரியான் படத்தில் ரஹ்மான் இசையமைப்பில் வெளியான நெஞ்சே எழு பாடலைக் கேட்டால் போதும். நம்ம நெகட்டிவ் ஃபீலிங்க அப்படியே புறட்டிப்போட்ரும் இந்தப் பாடல். குட்டி ரேவதி மற்றும் ரஹ்மான் இரண்டு பேரும் சேர்ந்து இந்தப் பாடலை எழுதியிருக்காங்க. மிஸ் பண்ணாம கேளுங்க. அந்த உணர்வை நீங்களும் அனுபவியுங்கள்!
Unakkulle Mirugam
யுவனின் எல்லா பாடல்களும் அவரின் ரசிகர்களுக்கு ஸ்பெஷல்தான். அதுலயும் இந்தப் பாட்டு கூடுதலா கொஞ்சம் ஸ்பெஷல்னே சொல்லலாம். இந்தப் பாடலை நா.முத்துக்குமார் எழுதியிருப்பார். `இங்கு நண்பன் யாரும் இல்லையே.. எதிர்க்கும் பகைவன் யாரும் இல்லையே.. இனி நீதான் உனக்கு நண்பனே.. என்றும் நீதான் உனக்கு பகைவனே’ என மாஸான வரிகளும் மாஸான இசையும் நம்மையே மாஸாக உணர வைக்கும்.
The Life Of Ram
இந்தப் பாடலின் ஹைலைட்டே வரிகள்தான். கார்த்திக் மேத்தாவின் ஒவ்வொரு வரியும் அவ்வளவு எளிமையாக எதார்த்தமானதாக இருக்கும். இந்தப் பாடலுக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
Ullaallaa
பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் பாடலை அனிருத் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். காலையில் கேட்க ஒரு பக்காவான பாடல்னா அது உல்லாலாதான். ரஜினியின் எனர்ஜி பாடல் வரிகள் இசை என எல்லாமே அட்டகாசம்.
Rakida Rakida
இப்போ டிரெண்டிங்ல இருக்குற பாடல்னா அது `ரகிட ரகிட’தான். என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன்னுதான் இப்போ பலரும் சுத்துராங்க. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார்.
இதுல உங்க ஃபேவரைட் பாடல் எது? நீங்க வழக்கமா காலையில் கேக்குற பாடல் என்ன? அந்தப் பாடல் ஏன் உங்களுக்குப் பிடிக்கும்? அப்டின்றதை மறக்காமல் கமெண்ட்ல சொல்லுங்க!
Also Read : லவ்ல விழுந்துட்டீங்களா… சிம்பிளா கண்டுபிடிக்கலாம் வாங்க!