Dil Raju

வாயைத் திறந்தாலே பஞ்சாயத்துதான்.. வாரிசு `கில்’ ராஜு சேட்டைகள்!

* தில் ராஜு இல்லை கில் ராஜு. நான் சொல்லலை. மாஸ்டர் ரிலீஸ் அப்போ, விஜய் படங்களுக்கு அதிகமா தியேட்டரை தில் ராஜு ஒதுக்க சொல்லியிருக்காரு. அதைப் பார்த்து கடுப்பாகி புரொயூஸர் ஸ்ரீனு, “அவரு கில் ராஜு, படங்களோட ரெவனியூவையே கில் பண்றாரு”னு கொதிச்சிருந்தாரு.

* தமிழ்நாட்டுல என் ஹீரோதான் நம்பர் 1-னு சொன்ன மாதிரி, தெலுங்குல பவன் கல்யாண்தான் நம்பர் 1-னு சொல்லி வாங்கிக் கட்டிக்கிட்டாரு. இப்படி, அவர் யாரை வைச்சு புரொடியூஸ் பண்றாங்ரோ, அவங்கதான் அந்த இன்டஸ்ட்ரீல இவர் கணக்குபடி நம்பர் 1.

* இன்னைக்கு வாரிசு படத்துக்கு நிறைய தியேட்டர்களை ஒதுக்கணும்னு சண்டை போட்டுட்டு இருக்குற நம்ம தில் ராஜு, ஒரு காலத்துல, “இந்த பண்டிகைகள்லாம் வரும்போது மற்ற மொழி படங்களை அதிகமா ஸ்கிரீன் பண்ணக்கூடாது. குறிப்பா தமிழ் படங்களை ரிலீஸ் பண்ணக்கூடாது”னு ஸ்ட்ரிக்டா சொல்லியிருக்காரு.

* மகேஷ் பாபுவோட ஸ்பைடர், பவன் கல்யாணோட அங்யாதவாசி, ரெண்டு படமும் மிகப்பெரிய லாஸ் கொடுத்ததா ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தாரு. வேற யாராவது என் இடத்துல இருந்துருந்தா செத்தே போய்ருப்பாங்கனு தைரியமா சொல்லிருந்தாரு. அந்த போல்ட்னஸும் அவருக்கு இருக்கு.

* வம்சியும் தில் ராஜுவும் சேர்ந்து எவடுனு படம் பண்ணாங்க. காக்டெய்ல் பார்ட்டி ஒண்ணு மீடியாவுக்காக அப்போ வைச்சாங்க. படம் பத்தின காண்ட்ரோவர்ஸி பத்தி மீடியா நபர்கள் கேள்வி கேட்க, “குடிக்க தான வந்தீங்க. குடிச்சிட்டு கிளம்புங்க”னு சொல்லிருக்காரு. வைச்சு செய்தாங்க!

* கார்த்திகேயா 2 படம் ரிலீஸ் ஆகி செம ஹிட் ஆச்சு. அந்தப் படம் ரிலீஸ் ஆக நிறைய தடைகள் பண்ணாங்க அப்டினு ஹீரோ நிகில், டைரக்டர் எல்லாம் சொன்னாங்க. அந்த ஆள் தில் ராஜுதான்னு சோஷியல் மீடியால செம வைரல் ஆச்சு. அப்புறம் சக்ஸஸ் மீட்டுக்கு வந்து விளக்கம் கொடுத்து சமாளிச்சாரு.

* தில் ராஜு எடுத்த தேங்க்யூ படம், கார்த்திகேயா 2 படம் ரிலீஸ் ஆக வேண்டிய தேதில ரிலீஸ் ஆச்சு. அதை தொடர்ந்துதான் நான் சொன்ன காண்ட்ரோவர்ஸி வந்துச்சு. அப்போ, அவரை தெலுங்கு சினிமால இருந்து புறக்கணிக்கணும்னு Anti Dil Raju movementலாம் நடக்கப்போகுதுனு பேசிக்கிட்டாங்க.

தில் ராஜு
தில் ராஜு

* தில் ராஜு புரொடியூஸ் பண்ண பல படங்கள் கடைசியா வெற்றிபெறலை. மக்கள்தான் காரணம்னு அதுக்கு சொன்னாரு. அதுக்கூட பரவாயில்லை. என்னோட படங்கள் மக்களுக்கு புரியலைனுலாம் சொல்றாரு. அதே மாதிரி டைரக்டர்ஸ், நடிகர்கள் சம்பளத்தையும் குற்றம் சொன்னாரு. கண்டண்ட் பத்தி பேசவேயில்லை.

தில் ராஜு வாரிசு சம்பந்தமா மட்டும்தான் பஞ்சாயத்து பண்ணிருக்காருனு தேடிப் பார்த்தா, மனுஷன் வாய திறந்தாலே பஞ்சாயத்துன்ற ரேஞ்சுக்கு ஏழரை எல்லாத்தையும் இழுத்து பாக்கெட்ல போட்ருக்காரு. படத்தை கூவி கூவி விக்கிறாருனுலாம் அவரை போட்டு பொளந்துட்டு இருக்காங்க. அதுக்கு அவர்தான் முழுக்க காரணம். இருந்தாலும் தெலுங்கு சினிமால முன்னணி தயாரிப்பாளரா இருக்குறது தில் ராஜுதான். எல்லா விஷயத்தையும் ப்ராஃபிட்டோட பார்க்குறதாலயோ, என்னவோ, என்னத்தையாவது பேசி, வாங்கி கட்டிட்டு இருக்காரு. ஆக்சுவலா இவரோட டிராவலை கொஞ்சம் திரும்பி பார்த்தா, பரவால்லயேப்பா, வாயை மட்டும் கம்மி பண்ணிருந்தா, நல்லா பேர் எடுத்துருப்பியேப்பானுதான் நினைக்க தோணுது. 9-வது படிக்கும்போதே படங்கள் மேல தில் ராஜுக்கு செம ஆர்வம். தன்னோட கிராமத்துல இருந்து ஹைதராபாத் வந்து அவரோட ப்ரதர்ஸ்கூட சேர்ந்து டிராக்டரோட ஸ்பேர் பார்ட்ஸ்லாம் வித்துட்டு இருந்துருக்காரு. ஆர்.பி ரோடுலதான் அவர் கடை இருந்துருக்கு. இந்த ஆர்.பி ரோடு சினிமாக்கு செம ஃபேமஸ். அப்போ, சினிமா தொடர்புள்ள ஆட்கள்லாம் இவரோட கடைக்குலாம் வருவாங்களாம். அப்படி கொஞ்சம் பழக்கவழக்கம் ஏற்பட்ருக்கு.

தில் ராஜுவுக்கு ஆடியோ கம்பெனி ஆரம்பிக்கணும்னு ஆசை. ஏன்னா, மியூசிக்னா ரொம்பவே புடிக்குமாம். பாட்டு போட்டிலலாம் கலந்துக்குவாராம். 90 காலகட்டத்துல மகேந்திர ரெட்டினு புரொடியூஸர் இருந்தாரு. அவர் பிரதரோட இவங்களாம் பழக்கம். அவர்கிட்ட போய் ஆடியோ பிஸ்னஸ் பத்தி கேட்கும்போது, சரியான நேரம் இது இல்லைனு சொல்லிருக்காரு. மகேந்திர ரெட்டி புதுசா டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி ஸ்டார் பண்ண ஐடியா பண்ணும்போது, இவங்கக்கிட்ட பார்ட்னர்ஸா சேர்ந்துக்குறீங்களானு கேட்க, கிரீன் சிக்னல் கொடுத்து ஷேர்ஹோல்டரா மாறியிருக்காங்க. சிரஞ்சீவியோட அல்லுடா மசாகா படத்தை ஃபஸ்ட் வைசாக்ல ரிலீஸ் பண்ணியிருக்காங்க. அந்தப் படத்துல இருந்து டிஸ்ட்ரிபியூஷன் பத்தி கத்துக்குறாரு கொஞ்சம். மிகப்பெரிய லாபத்தை கொடுக்குது. அப்புறம், சிரஞ்சீவியோட பிக்பாஸ் படத்தை ரிலீஸ் பண்றாங்க. செம நஷ்டம். பிறகு, வழக்கம்போல பல படங்கள் லாபத்தையும் நஷ்டத்தையும் மாறி மாறி கொடுத்துட்டு இருந்துருக்கு. சிரு ஜல்லுனு ஒரு படம் எடுத்தாரு. அந்தக் கதை அவருக்கு புடிக்கலையாம். நட்புக்காக எடுத்தாரான். இதை ஏன் சொல்றேன்னா, அவர் வாழ்க்கைல பண்ண பெரிய தப்பா இதைதான் நினைக்கிறாராம்.

தெலுங்குல சூப்பர் டைரக்டரான விநாயக் ஆடினு ஒரு படம் பண்ணும்போது, தில் ராஜுவை மீட் பண்ணி கதை ஒண்ணு சொல்லியிருக்காரு. அவர் அதை மறந்துருக்காரு. அப்புறம் மீட் பண்ணும்போது சீன்ஸ்லாம் காமிச்சிருக்காரு. அதைப் பார்த்துட்டு படம் பண்ண அட்வான்ஸ் கொடுத்துருக்காரு. அந்தப் படத்தோட கதை டிஸ்கஷன் எல்லாத்துலயும் உட்கார்ந்துருக்காரு. அப்படிதான், கதை எப்படி இருக்கணும், ஸ்கிரிப் எப்படி ரெடி பண்ணனும்னுலாம் கத்துருக்காரு. அந்தப் படம் ப்ளாக்பஸ்டர் ஆகுது. அதுதான் தில், அவர் பேரோட அந்த தில்லும் சேர்ந்த குட்டிக்கதை இதுதான். அப்புறம் ஆர்யா, பொம்மரில்லு, பருகுனு வரிசையா நிறைய பிளாக்பஸ்டர் கொடுத்துட்டாரு. இதுவரைக்கும் 50 படங்கள்கிட்ட பண்ணிட்டாரு. பெரிய ஹீரோக்கள்கூடவும் படம் பண்ணிட்டாரு. முன்னணி புரொடியூஸரா வலம் வந்துட்டு இருக்காரு. இன்னொரு முக்கியமான விஷயம் என்னனா, நாக சைத்தன்யாவை இண்ட்ரொடியூஸ் பண்ணதே இவர்தான். முதல்ல அந்த ஜோத் படக்கதைக்கு அல்லு அர்ஜூன், ராம் சரண்னு நிறைய ஹீரோக்கள்ட கேட்ருக்காங்க. யாரும் டேட் கொடுக்கலைன்றதால, கடைசில நாகார்ஜுனாக்கிட்ட வந்து பேசியிருக்காங்க. அவருக்கு கதை ரொம்ப புடிச்சுப்போக, நாக சைத்தன்யாகிட்ட கேட்ருக்காங்க. ஆனால், நாகர்ஜூனா, தன்னோட பையன புது டைரக்டரோட படத்துல அறிமுகப்படுத்தனுமானு யோசிக்க, தில் ராஜு, “புது டைரக்டர்ஸ் நிறைய பேர் கூட வேலை பார்த்துருக்கேன். செம டேலண்ட் அவங்க”னு கன்வைன்ஸ் பண்ணி நடிக்க வைச்சிருக்காரு.

தில் ராஜு
தில் ராஜு

தில் ராஜு இப்படி பல சிறப்பான சம்பவங்களையும் பண்ணியிருக்காரு. அவர் எடுத்த நிறைய படங்கள் பிளாக் பஸ்டர் ஆகியிருக்கு. என்ன ஒண்ணு, சென்டிமெண்ட்னு வைச்சே கொன்னெடுப்பாரு. எப்பவுமே சினிமா பத்திதான் யோசிச்சிட்டு இருப்பாராம். இந்தப் படம் கண்டிப்பா ஹிட் ஆகும்னு டபுள் பாஸிட்டிவா இருந்தால்கூட, எதாவது ஒரு சீன் ரீஷூட் பண்ணனும்னு சொன்னா, தயங்காமல் பண்ணுவாராம். அப்படி சினிமா மேல அவ்வளவு காதலோட மனுஷன் இருக்காரு. ஆனால், என்ன எக்கச்சக்கமா சண்டை போட்ருக்காரு. தில் படத்தோட டைரக்டர்ல தொடங்கி ஃபேமஸ் டைரக்டர்கள் வரைக்கும் எல்லார்கூடவும் எதாவது சண்டை போட்ருக்காரு. வாய் பேசுறதை கொஞ்சம் குறைச்சு, செண்டிமெண்டை தள்ளி வைச்சு, தரமான படைப்புகளைக் கொடுத்தால் எல்லாரும் அவரை கொண்டாடுவாங்க. ஆனால், சனிதான் வாய்ல சம்மணம் போட்டு உட்கார்ந்துருக்கு.

ஷங்கர் – ராம் சரண் படத்தையும் அவர்தான் புரொடியூஸ் பண்ராரு. இப்படி, லைன் அப்லயே பெரிய படங்களாதான் வைச்சிருக்காரு. அவரோட சர்ச்சைகளைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top