நா முத்துக்குமார்

நா.முத்துக்குமாரின் வரிகளை எவ்வளவு மிஸ் பண்றோம்?

இன்னைக்கு இருக்குற முன்னணி கவிஞர் ஒருத்தர் இன்னொரு கவிஞருக்கு சில பல வருஷங்கள் முன்னாடி ஃபோன் பண்ணி, “சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது அறிவிச்சுருக்காங்க”னு சொல்லியிருக்காரு. அதுக்கு அந்த கவிஞர், “ரொம்ப சந்தோஷம்ப்பா உனக்கு கிடைக்கும்னு நினைச்சேன். வாழ்த்துக்கள்”னு சொல்லியிருக்காரு. அதைக் கேட்டுட்டு ஃபோன் பண்ண கவிஞர், “எனக்கில்லைப்பா.. உன்னோட பெயர் வருது. உனக்குதான் அறிவிச்சிருக்காங்க”னு சொல்லியிருக்காரு. சந்தோஷம்னு சொல்லிட்டு ஃபோனை கட் பண்ணியிருக்காரு. அடுத்த வருஷம் மீண்டும் அந்த கவிஞருக்கு தேசிய விருது அறிவிக்கிறாங்க. முதல் தேசிய விருது அறிவிப்பை எந்த கவிஞர் சொன்னாரோ, அதே கவிஞர் இந்த முறையும் ஃபோன் பண்ணி, “தேசிய விருது அறிவிச்சிருக்காங்க”னு சொல்றாரு. உடனே அவர், “ஷ்ப்பா, இந்த தடவை கொடுத்துட்டாங்களா, வாழ்த்துகள்”னு சொல்லியிருக்காரு.

 ஃபோன் பண்ண கவிஞர், “இந்த தடவையும் உனக்கு தான் விருது கொடுத்துருக்காங்க”ன்றுக்காரு. அதுக்கு யோசிக்காமல், “எப்பப்பா நீ வாங்குவ?”னு கேட்ருக்காரு. அதுக்கு ஃபோன் பண்ண கவிஞர், “வருஷா வருஷம் நீயே விருது வாங்கிட்டு இருந்தா, நான் எப்போ வாங்குறது”னு கேட்ருக்காரு. ஒருசில நொடிகள் யோசிச்சுட்டு, “வேணும்னா இந்த வருஷம் நான் பாடல்கள் எழுதலை. நீயே எழுதி வாங்கிக்கிறியா?”னு கேட்ருக்காரு. இந்த சம்பவத்தை சொல்லும்போதே கண்டுபிடிச்சிருப்பீங்க. அந்தக் கவிஞர்கள் யாருனு.. ஃபோன் பண்ண கவிஞர் யுகபாரதி.. பேசுன கவிஞர் நா.முத்துக்குமார். அவருக்கு பிறகு எத்தனையோ கவிஞர்கள் தமிழ் சினிமாவுக்கு வந்துட்டாங்க. ஆனாலும், நா.முத்துக்குமாருக்கான இடம் வெற்றிடமாதான் இருந்துட்டு இருக்கு. நாம ஏன் முத்துக்குமாரை அவ்வளவு மிஸ் பண்றோம்னு யோசிச்சா சில பாயிண்ட்ஸ் தோணிச்சு, அதைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

டிரெண்டை எழுத மாட்டாரு.. எழுதுறதை டிரெண்டாக்குவாரு..!

தமிழ் சினிமால இன்னைக்கு வெளியாகக்கூடிய பெரும்பாலான பாடல்களின் வரிகள் சோஷியல் மீடியால வைரலான வார்த்தைகள், விஷயங்களை வைச்சுதான் எழுதியிருக்காங்க. சில பாடல்கள் கேட்க நல்லாருந்து, அந்த டைம்ல நல்ல வைப் மூட் ஒண்ணை கிரியேட் பண்ணாலும், காலம் கடந்து அந்தப் பாடல்கள் எப்பவுமே நிக்கிறதில்லை. அடுத்த பாட்டு வைரல் ஆகும்போது முந்தின பாட்டு காணாமல் போயிடுது. அந்த டைம்ல நா.முத்துக்குமாரை ரொம்பவே மிஸ் பண்றோம். ராம்.. யுவன்.. நா.மு கூட்டணில வந்த எல்லா பாடல்களையும் இதுக்கு பெஸ்ட்டான எக்ஸாம்பிளா சொல்லலாம். இவங்க கூட்டணில கடைசியா வந்த தரமணி ஆல்பமை எழுத்துப்போம். யாரோ உச்சிக்கிளை மேலேன்ற பாட்டுல அந்த முதல் மூணு வார்த்தையே அவ்வளவு பவர் ஃபுல்லா இருக்கும். மொத்த பாட்டும் அவ்வளவு அழகான வார்த்தைகள் இருக்கும்.

உன் பதில் வேண்டி.. யுகம் பல தாண்டி, காதல் ஒரு கட்டுக்கதை, கொஞ்சி பேசிட வேணாம், ஏயா என் கோட்டிக்காரா, ஆனந்த யாழை மீட்டுகிறாய், நதிவெள்ளம் மேலே என் மீனே மீனே, மனசெல்லாம் மழையே, வெண்ணிலவே தரையில் உதித்தாய், வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே, ஒரு பாதி கதவு நீயடி, மனசெல்லாம் மழையே, ஒரு குரல் கேட்குது பெண்ணே, விழிகளில் ஒரு வானவில், வெண்மேகம் பெண்ணாக உருவானதே, மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம், அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும், தேவதையைக் கண்டேன், நினைத்து நினைத்து பார்த்தால், கனா காணும் காலங்கள், சுட்டும் விழிச்சுடரே – இப்போ நான் சொன்ன பாடல்களோட அந்த 2,3 வார்த்தையை மட்டும் யோசிச்சாலே அவ்ளோ பவர்ஃபுல்லா இருக்கும். அந்தப் பாட்டை முழுசா கேட்டு முடிக்கணும்னு தோணும், முடிஞ்சதும் திரும்ப கேட்க ஆசையா இருக்கும். திடீர்னு எங்கயோ தூரமா அந்தப் பாடல்கள் கேட்டோம்னா, அடுத்த பல நாள்களுக்கு அந்தப் பாட்டுதான் நம்ம வைப் மெட்டீரியல்ல இருக்கும். அந்த மேஜிக் இன்னைக்கு வரக்கூடிய பாடல்களில் ரொம்பவே மிஸ் பண்றோம்.

உறவுகளை அழகா எழுதுறதுல அவரை அடிச்சுக்க முடியாது!

தமிழ்நாடுனு சொன்னாலே உறவுகள்தான். அந்த உறவுகளை அணிலாடும் முன்றில்ல அவ்வளவு அழகா எழுதியிருப்பாரு. அந்த புக்கை படிச்சோம்னா.. எவ்வளவு கொடூரமான செய்வினைகளை சொந்தக்காரன் நமக்கு செய்து வைச்சிருந்தாலும், அவன்கிட்ட போய் பேசலாம்னு தோணும். இதையேதான் பாடல் வரிகள்லயும் மேஜிக் மேன் மாதிரி எழுதி உறவுகளை ஸ்ட்ராங் ஆக்கினாரு. இன்னைக்கும் தந்தையர் தினம் வந்தா எல்லாரோட ஸ்டேட்டஸ்லயும் தவறாமல் இடம் பிடிக்கிற பாட்டு தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே பாட்டுதான். இதை அடிச்சுக்க இன்னொரு பாட்டு இன்னும் வரலை. இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லைனு ஆனந்த யாழை பாட்டுல அவர் எழுதுன வரிகள் தான் இன்னைக்கும் தந்தை – மகள் பாசத்தை பறைசாற்றும் பாறை மேல எழுதப்பட்ட கல்வெட்டு மாதிரி அழுத்தமா அப்பாக்கள் மனசுல பதிஞ்சு கிடக்குது. அப்பா – மகள் உறவை அடிச்சுக்க இந்த பாட்டுக்கு நிகரா இன்னொரு பாட்டு இன்னும் வரலை. சைவம்ல அழகே அழகேதான் எல்லாருக்கும் டக்னு மைண்டுக்கு வரும். ஆனால், உறவுகள் எவ்வளவு அழகானதுனு ஒரே ஒரு ஊரில் ஒரு வீடு பாட்டுல அப்படி சொல்லியிருப்பாரு.

வேறெங்கும் நில்லாத, வேறாரும் சொல்லாத, இதிகாசம் இந்த பாசம்தான் வரிகள்லாம் ஸ்ட்ரெயிட்டா ஹார்ட்டுக்குள்ள போய் நம்மள போட்டு தாக்கி ஆனந்தக் கண்ணீர் வர வைக்கிற வரிகள். அப்படியே உறவுகள் இல்லைனா, நம்ம மனநிலை என்னவாகும்னு ஆராரோ பாட இங்கு தாயுமில்லை பாட்டு வரிகள்ல சொல்லியிருப்பாரு. அந்தப் பாட்டை முழுசா கேட்டு முடிச்சுட்டு அழாமல் எவனாலயும் இருக்க முடியாது. குறிப்பா, விதி கண்ணை மூடிக்கொண்டு தெருவில் எறிந்ததொடு வானவில்லை வரிகள் எல்லாம் லிட்டரலா லிட்டர் கணக்குல கண்ணீட் வர வைக்கும். அதுவும் யுவன் மியூசிக் + வாய்ஸ் வேற.. சான்ஸ்லெஸ்! இந்த மாதிரி இன்னொரு பாட்டு நா.முத்துக்குமாரால மட்டுமே கொடுத்துருக்க முடியும். ஏன்னா, அம்மா இல்லைன்ற வலியை நிஜமாவே அவ்வளவு உணர்ந்து வளர்ந்த மனுஷன். ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு பாட்டெல்லாம் எல்லாருக்கும் வாழணும்னு மனசுக்குள்ள ஆசை வர வைக்கிற பாடல்.

காதலை கொஞ்சாமலேயே சொல்லுவாரு!

காதலை எல்லார் போலவும் தான் நா.மு எழுதுனாரு.. அதுல என்னத்த ஸ்பெஷலைக் கண்டனு நீங்கலாம் கேக்கலாம். ஆனால், அந்த காதல்லயும் மனுஷன் பண்ண விஷயங்கள் இருக்கே, அவ்வளவு இருக்கு. காதலை யாராவது கதவுக்கூட போய் கம்பேர் பண்ணுவாங்களா? மனுஷன் பண்ணியிருப்பாரு. ஒரு பாதி கதவு நீயடி, மறு பாதி கதவு நானடினு அந்த வரிகளை கம்பேர் பண்ணதே அவ்வளவு சிம்பிளாவும் சூப்பராவும் இருக்கும். ஒரு பிரம்மாண்டமான காதல் பாட்டுனா தேசிங்கு ராஜா தேசிங்கு ராஜா பாட்டுதான். கொஞ்சி பேசிட வேணாம்னு சேதுபதில ஒரு பாட்டை எழுதியிருப்பாரு. ஓ.. இப்படியும் காதலை சொல்லலாம் போலயேனு நம்ம மனசை டச் பண்ற மாதிரி ஏகப்பட்ட பாடல்களை சொல்லியிருப்பாரு. தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழானு தெரிஞ்சுக்கனு நா.மு எழுதுன பாட்டுல, எல்லா தேரடி வீதிகள்லயும் தேவதைகள் நிரம்பி வழிந்தாங்கனு சொல்லலாம். சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே, நினைத்து நினைத்து பார்த்தேன், காதல் படத்துல வர்ற உனக்கென இருப்பேன், கண்மூடி திறக்கும்போதே, காதல் யானை வருகிற ரெமோ, உன்னைக் கண்டனே முதல் முறை, வசந்த முல்லை, அன்பே என் அன்பே, விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய், ஒரு தேவதை பார்க்கும் நேரமிது, ஒரு கல் ஒரு கண்ணாடி இப்படி அவரோட பெஸ்ட் பாடல்களை சொல்லிட்டு போய்கிட்டே இருக்கலாம். இதெல்லாம் காதலை இப்படியும் சொல்லலாமானு நம்மளை கேட்ட உடனே நினைக்க வைச்ச பாடல்கள்.

எனக்கு தெரிஞ்சு கண்ணதாசன், வைரமுத்துக்குலாம் அடுத்து ஆல்பமா நிறைய ஹிட்டு கொடுத்தது இவர் தான்னு நினைக்கிறேன். சும்மா மைண்டுக்கு தோணுறத டக்னு சொல்றேன். தரமணி, கற்றது தமிழ், ஒரு கல் ஒரு கண்ணாடி, இது என்ன மாயம், ஆல் இன் ஆல் அழகு ராஜா, தலைவா, வழக்கு எண் 18/9, தங்க மீன்கள், வெப்பம், தெய்வ திருமகள், பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசப்பட்டிணம், களவானி, பையா, அங்காடி தெருனு லிஸ்ட் போய்கிட்டே இருக்கும். இதுல நிறைய படங்கள் ரொம்பவே சுமாராதான் இருக்கும். ஆனால், அந்த ஆல்பம்ல வந்த எல்லா பாட்டும் காலத்துக்கும் நின்னு பேசுற விதமாதான் இருக்கும். நிறைய பாடல்கள் நா.முத்துக்குமார் எழுதுனதானு ஆச்சரியமாவும் இருக்கும். அதுக்கு பெஸ்ட்டான எக்ஸாம்பிள், சிவாஜி படத்துல ரஜினியோட ஓப்பனிங் சாங். நிறைய பேர் அதை வைரமுத்து எழுதுனாருனு இன்னும் நினைச்சுட்டு இருக்காங்க. ஆனால், அது நா.முத்துக்குமார் எழுதுனது. புள்ளினங்கால், உன்னாலே என் ஜீவன், முத்தம் கொடுத்த மாயக்காரி, காக்கா முட்டைல வரக்கூடிய பாடல்கள், ஏக் தோ தீன் சார் பாடல்கள்லாம் கூட இவர் எழுதுனதுதான். நா.முத்துக்குமார் எழுதுன வரிகளை அவரே பொய்யாக்கிட்டார்னு அவர் இறந்தப்பவும் சரி, அவரோட நினைவு வரும்போதும் சரி நிறைய பேர் போஸ்ட் பண்ணுவாங்க. என்ன வரினா..

Also Read – அருண் அண்ணன் சிரிப்பு இனி இல்லைல… லோகேஷை அழவைத்த நடிகர்!

ஒருநாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது. மறுநாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராதுன்ற வரிகள்தான். என்ன விஷயம்னா, நா.முத்துக்குமார் ஒரு பேட்டில எந்த துன்பமும் மூன்று நாளைக்கு தான் இருக்கும். நிறைய நாள் தொடராதுனு சொல்லியிருப்பாரு. ஆனால், நா.முத்துக்குமாரை மிஸ் பண்ற துயரம் இன்னும் பலர் மனசுல இதய துடிப்பு மாதிரி இருந்துட்டேதான் இருக்குது. அதுக்கு அவரோட பாடல்களை குறிப்பிட்டு இன்னைக்கும் ரைட்டப்களை சோஷியல் மீடியால பலரும் எழுதுற விஷயம் ஒண்ணே போதும். இந்தப் பாடல்கள் எல்லாம் கேட்கும்போது ஒவ்வொரு பாட்டையும் கடந்து வர முடியலைன்றதுதான் உண்மை. புதிய பாடல்களை கேட்கும்போது அவரோட வரிகளை மிஸ் பண்றோம் இன்னும் இன்னும் இன்னும்.

நீங்க நா.முத்துக்குமாரை எவ்வளவு மிஸ் பண்றீங்கன்றதை கமெண்ட்ல சொல்லுங்க. 

33 thoughts on “நா.முத்துக்குமாரின் வரிகளை எவ்வளவு மிஸ் பண்றோம்?”

  1. buying prescription drugs in mexico [url=https://foruspharma.com/#]mexico pharmacy[/url] purple pharmacy mexico price list

  2. canadian pharmacy sarasota [url=http://canadapharmast.com/#]canadian medications[/url] canadian pharmacy in canada

  3. canada drugs online review [url=http://canadapharmast.com/#]pet meds without vet prescription canada[/url] canadapharmacyonline com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top