சான்ஸே இல்லை… பிரபல நடிகர்களின் பிரமாதமான விளம்பரங்கள்!

இன்னைக்கு நிறைய விளம்பரங்களை பார்த்து நீங்க தலைல கைய வைச்சுட்டு யார்ரா நீங்கனு உட்காரலாம். இல்லைனா, ஸ்கிப் பண்ணிட்டு போகலாம். ஆனால், ஒரு காலத்துல தளபதி விஜய் நடிச்ச சென்டிமென்டான விளம்பரங்களைப் பார்த்து கண்கலங்காதவங்க கிடையாது.அதுவும் ஃபகத் ஃபாஸில் விஜய்கூட சேர்ந்து நடிச்ச விளம்பரம் சான்ஸே இல்லை. ரஜினி நடிச்ச விளம்பரம் பார்த்துருக்கீங்களா? என்னது தல அஜித் விளம்பரம் நடிச்சிருக்காரா? ஷாக் மட்டும் இல்லை. அந்த விளம்பரம் எவ்வளவு லவ்லியா இருக்கும் தெரியுமா? சூர்யா தன்னோட காதலை காஃபி வழியா எவ்வளவு அழகா வெளிப்படுத்துவாருல? தனுஷ் நடிச்ச விளம்பரம் தெரியுமா?

விஜய்யோட படங்கள்ல சென்டிமென்ட், காமெடி, டான்ஸ்னு எல்லாமே பக்காவா இருக்கும். அதேமாதிரிதான் அவர் பண்ற விளம்பரங்கள்லயும் எல்லாமே இருக்கும். குறிப்பா நிறைய விளம்பரங்கள்ல சென்டிமென்ட் வேறமாறி இருக்கும். ஜோஸ் ஆலுக்காஸ்க்கு நிறைய விளம்பரங்கள் விஜய் பண்ணிருக்காரு. ஃபகத் ஃபாஸில் கூட சேர்ந்து பண்ண விளம்பரம் செமயா இருக்கும். “நாங்க வாழ்றதே உன் டீல தான்டா”னு விஜய்யோட டயலாக்ல இருந்து விளம்பரம் ஆரம்பிக்கும். விஜய் அதுல மியூசியன். கிட்டார்னா அவருக்கு உயிர். ஆனால், ஃப்ரெண்டோட வீட்டு விஷேசத்துக்கு கிஃப்ட் பண்ணனும்ன்றதுக்காக அந்த உயிரான கிட்டாரையே வித்துட்டு நகை வாங்கிட்டு போவாரு. ஃபகத் அழுதுட்டு வந்து கட்டிப் பிடிக்கும்போது செம எமோஷனலா இருக்கும். அப்புறம் டொகொமோ விளம்பரம் செம ஃபன்னா இருக்கும். ஃபோன் நம்பர் நியாபகம் வைச்சிக்க திரும்ப திரும்ப சொல்லுவாங்க. அப்போ, சர்வர் வந்து பிளேட் எடுக்கும்போது மறந்துருவாங்க. அப்போ, பக்கத்து டேபிள்ல இருந்த இன்னொரு விஜய் வந்து நியாபகப் படுத்துவாரு. கியூட்டா இருக்கும்.

ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம்ல நிறைய பேருக்கு புடிச்சது, டிரைவர்- விஜய் காம்போ விளம்பரம்தான். விஜய் கிளம்பி வந்து ஜோஸ் ஆலுக்காஸ் போங்கனு சொல்லுவாரு. டிரைவர் வந்ததுல இருந்து தன்னோட மகள் ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணிட்டானு சொல்ல ட்ரை பண்ணிட்டே இருப்பாரு. ஆனால், விஜய் பிஸியாவே இருப்பாரு. ஜோஸ் ஆலுக்காஸ்ல எது நல்லாருக்குனு கம்மலை செலக்ட் பண்ண சொல்லுவாரு. அப்புறம் மூர்த்தி வீட்டுக்கு வழியை சொல்லுவாரு. வீட்டுக்குப் போய் அவரோட டிரைவர் மகளுக்கு அந்த கம்மலை கிஃப்ட் பண்ணுவாரு. “நமக்காக நம்மளோட இருக்குறவங்களும் நமக்கு சொந்தம்தான?”னு டயலாக்கோட அந்த விளம்பரம் முடியும். செம டச்சிங்கா இருக்கும். அதேமாதிரி விஜய் – அமலா பால் வெட்டிங் ஆனிவர்ஸரிய மறந்துட்டாருனு இருக்கும்போது நகையோட வந்து சர்ப்ரைஸ் பண்றது, கேங்கா போய் வாட்டர் பலூனை விஜய் மேல டிக்க ட்ரை பண்ணும்போது அதுல இருந்து எஸ்கேப் ஆகி போற டொகொமோ விளம்பரம்லாம் அட்டகாசமா இருக்கும்.

ஸ்கூல் படிக்கும்போது பியூன் பண்ண தப்புக்காக அவரை ஒண்ணும் பண்ணாதீங்க நான் தான் அதைப் பண்ணேன்னு கையை தூக்கி முன்னால வந்து பழியை ஏத்துப்பாரு. ரொம்ப நாள் கழிச்சு பெரிய ஸ்டார் ஆனப்பிறகு அந்தப் பக்கம் போகும்போது ஸ்கூல்ல இறங்கி சுத்தி பார்த்துட்டு இருப்பாரு. அப்போ அந்த பியூன் வருவாரு. கட்சிப்புடிச்சிட்டு நீங்க தான் உண்மையான ஹீரோனு சொல்லுவாரு. அதுவும் செமயா இருக்கும். விஜய்யும் அவங்க அம்மாவும் வர்ற விளம்பரம் ஒண்ணு இருக்கு. ஒரு குழந்தைக்கு விஜய் அவங்க அம்மாவோட பெயர் வைக்கிற விளம்பரம். செமயா இருக்கும். கொககோல விளம்பரங்கள்ல நடிச்சிருப்பாரு. கத்ரினா கைஃப்லாம் அதுல நடிச்சிருப்பாங்க. சரி, அடுத்து நம்ம தல. தல முதல்ல நடிச்சது ஹவாய் செருப்புகள் விளம்பரம். உண்மையிலேயே இது நம்ம அஜித்தானானு தோணும். நெஸ்கஃபே சன்ரைஸ் விளம்பரத்துலயும் அஜித் நடிச்சிருப்பாரு. காதலை சொல்ல மனுஷன் யோசிச்சுட்டு இருக்கும்போது. காஃபி குடிச்சிட்டு அதை பாட்டாவே பாடி காமிச்சிருவாரு. அவர்கூட ஜோடியா சிம்ரன் வருவாங்க.

சூர்யாவும் ஜோதிகாவும் சேர்ந்த அங்க ரொமான்ஸ்க்கும் காதலுக்கும் பஞ்சம் இருக்குமா என்ன? அப்படி காதல் ரொமான்ஸ் எல்லாம் நிரம்புன ஒரு விளம்பரம்தான் நெஸ்கஃபே சன்ரைஸ் விளம்பரம். நிறைய விளம்பரம் நெஸ்கஃபேக்காக பண்ணிருக்காங்க. எல்லாமே காதல், குறும்பு தளும்ப தளும்ப இருக்கும். சூர்யா அந்த விளம்பரத்துல காஃபி போட்ட பிறகுதான் நிறைய ஆண்கள் வீட்டுல காஃபி போட ஆரம்பிச்சாங்க. அதேமாதிரி, காஃபியை ரொமாண்டிக் ஒண்ணா மாத்துனதுலயும் இவங்க பங்கு இருக்கு. அப்புறம் 2 பேரும் சேர்ந்து ஏர்செல் விளம்பரம் நடிச்சிருப்பாங்க. ஏர்செல்க்கும் நிறைய விளம்பரங்கள் பண்ணிருக்காரு. மாயா டீச்சர் செம எனர்ஜியா இருப்பாங்க. அந்த ஜோதிகாவை ஏர்செல் விளம்பரம் ஒண்ணுல நீங்க பார்க்கலாம். ரொம்பவே டச்சிங்கான விளம்பரம்னா, சூர்யாவை ஒரு குட்டி பையன் பார்க்கணும்னு நினைப்பான். அது தெரிஞ்சு அந்த கிராமத்துக்கே சூர்யா போய் பாராட்டுவாரு. அதெல்லாம் பார்த்தா, சூர்யாவை நமக்கே புடிச்சிரும். அப்புறம் சூர்யா சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்துல நடிச்சிருப்பாரு. நம்ம எல்லாருக்குமே இது நியாபகம் இருக்கும். ர ப ப ப ப பம் சவுண்ட்லா இன்னைக்கும் டிரெண்ட்தான?

ஜோதிகா மட்டும் நடிச்ச விளம்பரம், இன்னும் நம்ம மனசுல இருக்குறதுனா ‘இதயம் எண்ணை’ விளம்பரம் தான். குறிப்பா அந்த “தினந்தோறும் வாங்குவேன் இதயம்” பாட்டு. மாதவன் – சூர்யா சேர்ந்து நடிச்ச பெப்ஸி விளம்பரம், கஜினி ஸ்டைல்ல நடிச்ச டி.வி.எஸ் விளம்பரம், சன் ஃபீஸ்ட் பிஸ்கட் விளம்பரம் எல்லாமே 90’ஸ் கிட்ஸ்க்கு ரொம்பவே பரிட்சயம் ஆனதுதான். விக்ரம் பண்ற விளம்பரங்கள் எல்லாமே செம ஜாலியா இருக்கும். ஜோஸ்கோ ஜூவல்லர்ஸ் விளம்பரங்கள்லாம் காதல் நிரம்பி இருக்கும். மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்துக்கு விக்ரம் பண்ண விளம்பரங்களும் செமயான ரீச். அந்தப் பாட்டு நல்லாருக்கும். கையில இருக்கு தங்கம், கவலை ஏன்டா சிங்கம்னு பாட்டு வரும். விக்ரம் – திரிஷா சேர்ந்த நடிச்ச விளம்பரங்கள் எல்லாமே செமயா இருக்கும். 3 ரோஸஸ் டீ நல்லதா கேட்டதானு வந்து பேசி ஃபோன் நம்பர்லாம் கொடுத்துருப்பாங்க. அதை சேவ் பண்ணிட்டு திரிஷா நம்பர் இருக்குனு சுத்துன ஆள்கள் எல்லாம் இருக்காங்க. இப்போ திரிஷா எவ்ளோ அழகா இருக்காங்க. இதே அழகோடதான் அப்பவும் இருக்காங்க. தேன், உதயம் நெய் பொருள்களுக்கும் திரிஷா விளம்பரம் பண்ணியிருக்காங்க.

பொன்னியின் செல்வன் படத்துல விக்ரமோட ஆதித்த கரிகாலன் கேரக்டர் எல்லாருக்கும் புடிச்சுது. இந்த கள்ளும் பாட்டும் போரும் ரத்தமும் எல்லாம் அவளை மறக்கத்தான்னு போஸ்ட் போட்டு சுத்திட்டு இருக்காங். விக்ரம் ஆரம்ப காலங்கள்ல நிறைய விளம்பரங்களுக்கு மாடலா இருந்துருக்காருல, அதுல சோழா டீக்கு மன்னர் கெட்டப்ல போஸ் கொடுத்த ஃபோட்டோவும் ரீசன்டா டிரெண்ட் ஆச்சு. தனுஷ் நடிச்ச விளம்பரங்கள் பெரும்பாலும் நமக்கு நியாகம் இல்லை. ஏன்னா, படங்கள்ல பெர்ஃபாமென்ஸ் பண்ணி அதெல்லாம் மறக்க வைச்சிடுறாரு. அவர் அனிருத்கூட சேர்ந்து நானோ கார்க்கு விளம்பரம் ஒண்ணு பண்ணியிருப்பாரு. அனிருத் மியூசிக் தனுஷ் வாய்ஸ் எல்லாம் அந்தப் பாட்டுல அட்டகாசமா இருக்கும். கொலவெறி ரிலீஸ் ஆகி ஹிட்டான சமயம் வேற. இந்தப் பாட்டும் சும்மா நார்மல் பாட்டு கேக்குற மாதிரி கேட்டுட்டு இருந்தோம். இடைல ராப்லாம் வரும். அனிருத் – தனுஷ் காம்போனா சும்மாவா! மிடில் கிளாஸ் பையன் ஒருத்தன் கார் வாங்குறான், அந்த கார்னால அவனுக்கு என்னலாம் பலன் இருக்கு, பெயர் கிடைக்குதுனு சொல்லிருப்பாங்க. 7 அப், டாடா ஸ்கை, ஓ.எல்.எக்ஸ், செண்டர் ஃப்ரெஷ், கல்யாண் சில்க்ஸ்னு நிறைய புராடக்ட்ஸ்க்கு தனுஷ் விளம்பரங்கள் பண்ணிருக்காரு. எல்லாமே ஹிட்டுதான்.

ரஜினியும் கோலா விளம்பரத்துலதான் நடிச்சிருக்காரு. அங்கயும் மனுஷன் தன்னோட ஸ்டௌல்ல புகுந்து விளையாடுவாரு. பாட்டில் ஓப்பன் பண்றதுல இருந்து குடிக்கிறது வரை எல்லாமே ஸ்டைல்தான். அப்புறம், நம்ம ஆண்டவர் பண்ண விளம்பரங்கள் சொல்லவே தேவையில்லை. “என்னதான் வருஷாவருஷம் வயசு ஏறிட்டே போனாலும், தீபாவளி அன்னைக்கு எனக்கு வயசு பத்துதான்”னு அதே கிண்டலோட போத்தீஸ் விளம்பரத்தை ஆரம்பிப்பாரு. ஸ்வீட் சாப்பிடுறது, பட்டாசு வெடிக்கிறது, புது டிரெஸ் போடுறதுனு எல்லாமே சொல்லி வேட்டியை மடிச்சுக் கட்டிச்சு எனர்ஜியா பெர்ஃபாமென்ஸ் போட்டுட்டு போய்கிட்டே இருப்பாரு. அப்புறம் விஜய் டி.வி புரொமோஷன்ஸ் எல்லாம் பார்த்து பழகிருப்போம். தனுஷை சொல்லிட்டு அப்படியே ரஜினிக்கு தாவிட்ட? சிம்பு நடிக்கலையா?னு நீங்க கேக்கலாம். சிம்புவும் நிறைய 7 அப் விளம்பரத்துல நடிச்சிருக்காரு. எல்லாத்துலயும் டான்ஸ்லாம் சும்மா மாஸா போட்ருப்பாரு. நடிகர்கள் நடிச்ச விளம்பரங்கள் சொல்லணும்னா இன்னும் சொல்லிட்டே போகலாம். நடிகைகளும் நிறைய அழகான விளம்பரங்கள்ல நடிச்சு நம்மள அவங்க அழகுல விழ வைச்சிருக்காங்க.

கமர்ஷியலான விளம்பரங்கள் தவிர்த்து, சமூக அக்கறையோடும் சில விளம்பரங்களை முன்னணி நடிகர்கள் பண்ணியிருக்காங்க. இப்போ, நான் சொன்ன லிஸ்ட்ல உங்களோட ஃபேவரைட் என்னணு கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top