திவீர அஜித் வெறியர்களுக்கு இந்த அலசல் கொஞ்சம் எரிச்சலைத் தரத்தான் செய்யும். அதேசமயம் அஜித்தின் ரசிகர்களுக்கோ நாம் சொல்லவரும் உண்மை புரியும். கடந்த 14 வருடங்களாக அதாவது 2007- ஆம் ஆண்டு முதல் தற்போது அஜித் நடித்துவரும் `வலிமை’ வரை இரண்டே விதமான கதைகளில்தான் அவர் மாறி மாறி நடித்துவருகிறார்.
பொதுவாக சினிமாவில் `Fugitve type’ எனப்படும் `தப்பிப் பிழைத்தல் கதைகள்’ என்றொரு ஜானர் உண்டு. போலீஸிடமிருந்தோ அல்லது அதிகாரவர்க்கத்திடமிருந்தோ கதையின் நாயகன் தப்பியோடி பிழைப்பது என்பது அதன் பிரதான கதையாக இருக்கும். கடந்த 14 வருடங்களில் அஜித் நடித்த இருவகைப் படங்களில் ஒன்று இந்தத் `தப்பிப் பிழைத்தல்’ டைப் கதைகள். அந்த இரண்டாவது வகை என்னவென்றால் போலீஸ் கதைகள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஒன்று கிரிமினலான இவரை போலீஸ் தேடும் அல்லது இவர் போலீஸாகி கிரிமினலைத் தேடுவார்.
![`விஸ்வாசம்’ அஜித்](https://tamilnadunow.com/wp-content/uploads/2021/08/Ajith-2-2-1024x583.jpg)
இதில் முதல் வகையில் மட்டும் எல்லாப் படங்களிலுமே போலீஸ் இவரைத் தேடாமல் அதற்கு இணையான நெகட்டிவ் கலந்த கேரக்டரில் அஜித் இருக்குமாறு கதை இருக்கும். 2007 –ஆம் ஆண்டு வெளியான ஆழ்வார்’,
கிரீடம்’, பில்லா’ இந்த மூன்று படங்களிலுமே அஜித்தைப் போலீஸ் தேடும். (கிரீடம்’ படத்தில் போலீஸாக ஆசைப்பட்டவர் பிறகு கிரிமினலாகிவிடுவார் என்பது கூடுதல் சுவாரஸ்யம்தான்). அடுத்த ஆண்டு வெளியான `ஏகன்’ படத்தில் இவர் போலீஸாகி கிரிமினல்களைத் தேடுவார்.
2010 முதல் 2014 வரை வெளியான அசல்’.மங்காத்தா’, பில்லா-2’,ஆரம்பம்’ ஆகிய படங்களில் அஜித்தை போலீஸ் தேடும். 2014-ல் வெளியான வீரம்’ படத்தில் அஜித்தை போலீஸ் தேடவில்லையென்றாலும் அதற்குத் தகுதியான நெகட்டிவ் தன்மை கலந்த கேரக்டரில்தான் அந்தப் படத்தில் நடித்திருப்பார் . மறுவருடம் வெளியானஎன்னை அறிந்தால்’ படத்தில் போலீஸாக நடித்தவர், அதே ஆண்டு வெளியான `வேதாளம்’ படத்தில் போலீஸ் தேடக்கூடியவராக இருப்பார்.
![`வலிமை’ அஜித்](https://tamilnadunow.com/wp-content/uploads/2021/08/Ajith-1-2-1024x574.jpg)
அதன்பிறகு 2017-ல் வெளியான `விவேகம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த அஜித், 2019-ஆண்டு வெளியானவிஸ்வாசம்’ படத்தில் கிராமத்து தாதாவாக நடித்திருப்பார். அவரது அடிதடி பிடிக்காமல் மனைவி பிரிந்து செல்வதுபோலத்தான் கதையின் போக்கே இருக்கும். இந்நிலையில் தற்போது `வலிமை’ படத்தில் மீண்டும் போலீஸாகத்தான் நடித்திருக்கிறார் அஜித்.
இந்த 14 வருடங்களில் அஜித் இந்த இரண்டு டைப் படங்களிலிருந்து விலகி நடித்த ஒரேயொரு படம் என்றால் அது `நேர்கொண்ட பார்வை’ படம் மட்டும்தான். அதுவும் `பிங்க்’ ஹிந்திப் படத்தின் ரீமேக்.
ஆகவேதான் சொன்னோம். தீவிர அஜித் வெறியர்களுக்கு இந்த அலசல் கொஞ்சம் எரிச்சலைத் தரத்தான் செய்யும். அதேசமயம் அஜித்தின் ரசிகர்களுக்கோ நாம் சொல்லவரும் உண்மை புரியும் என்று. சரிதானே பாஸ்..!
அஜித் வேற எந்த ஜானர்ல நடிக்கணும்னு நீங்க ஆசைப்படுறீங்க… உங்க கருத்துகளை கமெண்டில் சொல்லுங்க..!
Also Read – வடிவேலுவுக்கு புது சிக்கல் – `நாய் சேகர்’ டைட்டில் யாருக்குச் சொந்தம்..?