நக்கலைட்ஸ் முதல் ஜி.பி.முத்து வரை.. ஸ்லாங்கில் கலக்கும் யூ டியூப் சேனல்கள்!

தமிழில் பிரபலமான நிறைய யூ டியூப் சேனல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சேனலுக்கும் தனித்தன்மைனு ஒண்ணு இருக்கு. அப்படிதான், சில சேனல்களுக்கு அவங்க பேசுற ஸ்லாங்கே தனித்தன்மையா இருக்கும். ஸ்லாங்காலயே பிரபலமான டாப் சேனல்களைப் பற்றிதான் இப்போ தெரிஞ்சுக்கப்போறோம்.

நக்கலைட்ஸ்

கோயம்புத்தூர் ஸ்லாங்க்னு சொன்னதும் இவங்க சேனல் பேருதான் முதல்ல நியாபகம் வரும். இதுவரை சுமார் 3.67 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றிருக்கும் நக்கலைட்ஸ் சேனல் செய்யும் அலப்பறைகள் எல்லாம் மில்லியன் வியூஸ் ஹிட்தான். பேக் டூ ஸ்கூல், அம்முச்சி, அலும்புனாட்டீஸ்னு இவங்க எடுத்த வெப் சீரீஸ்களும் தாறுமாறு ஹிட். இதெல்லாம் நீங்க மிஸ் பண்ணியிருந்தீங்கனா.. கண்டிப்பா பாருங்க..!

சோனியா மகி

நம்ம வாழ்க்கைல நடக்குற அன்றாட விஷயங்களை கன்டென்டாக வைத்து வீடியோ போடுறவங்கதான் இந்த சோனி மகி சேனல். கன்னியாகுமரிகாரங்களுக்கு ரொம்பவே பரிட்சயம் ஆன சேனல் இது. குறிப்பா நாகர்கோவில் ஸ்லாங்கை அப்படியே இதுல வர்ற பூமாரி, சுபின், சோபி, சத்யா, சோனியா, சுடர், சுதன், மஹி, டினோ, ராணி போன்ற கேரக்டர்கள் பேசும். இதுவரைக்கும் சுமார் 2.60 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இந்த சேனலை ஃபாலோ பண்றாங்க. செம என்டர்டெயினிங்கான சேனல்… பாருங்க மக்கா!

மதுரை 360

`மதுரைவாசி.. வீரம் பொறந்த ஊரு’னு மெர்சலான டயலாக்கோட நம்மளை வரவேற்பாங்க. இதுவரைக்கும் 7.21 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இந்த மதுரை 360 சேனலுக்கு இருக்காங்க. இவங்க பண்ற பிராங்க் வீடியோக்கள் ரொம்பவே ஃபேமஸ். சிரிச்சிட்டே இருக்கலாம். மொரட்டு மொக்கை ஜோக்ஸூம் அப்பப்போ சொல்லுவாங்க. கேட்டு எஞ்சாய் பண்ணுங்க.

நெல்லை 360

`வாரான் வாரான் வாரான் லே.. திருநெல்வேலி மட்டும் போய்ராதீங்கப்பா அருவாள எடுத்து வாய்ல வெட்ராங்க’னு ஹெவியான பில்டப் கொடுத்து அவங்க சேனலுக்கு நம்மள வெல்கம் பண்றாங்க. இவங்களும் பிராங்க் பண்றதுல பேர் போனவங்கதான். பிராங்க் தவிரவும் பல வீடியோக்கள் கிரியேட்டிவா போட்றாங்க. இதுவரைக்கும் சுமார் 3.57 லட்சம் சப்ஸ்கிரைபர்களைப் பெற்றிருக்காங்க.

கப்பிஸ் கலாட்டா

பூவையார் பத்தி சொல்லவே தேவையில்ல. இப்பவே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதிச்சு வச்சிருக்காரு. இவரும் தன்னுடைய சேனல்ல விளாக் வீடியோக்களை போடுவாரு. சேலஞ்ச் வீடியோக்கள் நிறைய இவருடைய சேனல்ல இருக்கும். சென்னை தமிழ கேக்கனும்னு தோனிச்சுனா மறக்காம கப்பிஸ் கலாட்டாவ நீங்க சப்ஸ்கிரைப் பண்ணி வச்சிருக்கலாம். இதுவரை 1.40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் கப்பிஸ் கலாட்டா சேனலுக்கு இருக்காங்க.

உங்கள் மீனவன் மூக்கையூர்

“கடல் ஆழம் எங்களுக்கு சும்மா, கடல் தான் எங்கள் அம்மா….!!!!” – இதுதான் உங்கள் மீனவன் மூக்கையூர் சேனலோட டிஸ்க்ரிப்ஷன்னு சொல்லலாம். வேற லெவல்ல இருக்குல?! கடல் சார்ந்த நிறைய விஷயங்களை நமக்கு இவங்க தெரியப்படுத்திட்டு வர்றாங்க. ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்களை விரைவில் தொடப் போறாங்க. மீனவர்களின் வாழ்க்கையை ராமநாதபுரம் ஸ்லாங்க்ல நீங்க தெரிஞ்சுக்கனும்னு ஆசைப்பட்டா உங்கள் மீனவன் மூக்கையூர் சேனலை ஃபாலோ பண்ணுங்க.

ஜி.பி.முத்து

ஜி.பி.முத்து பேர சொன்னதும் அவரோட வார்த்தைகளும் ஸ்லாங்கும்தான் நமக்கு முதல்ல ஞாபகம் வரும். அந்த அளவுக்கு இவரோட ஸ்லாங்க் ஃபேமஸ். தூத்துக்குடி ஸ்லாங்கை நீங்க தெரிஞ்சுக்கனும்னு நினைச்சா தைரியமா ஜிபி முத்துவோட சேனலை ஃபாலோ பண்ணலாம். அதுமட்டுமில்ல வெறும் லெட்டர வாசிச்சே நம்மள என்டர்டெயின்மென்ட் பண்ணக்கூடியவர். இதுவரைக்கும் சுமார் 7.97 லட்சம் சப்ஸ்கிரைபர்களை இவர் பெற்றிருக்காரு.

இந்த லிஸ்ட்ல உங்க ஃபேவரைட் யூ டியூப் சேனல் எதுனும் எதாவது நாங்க மிஸ் பண்ணி இருந்தா அதையும் கமென்ட்ல சொல்லுங்க மக்களே!

Also Read : வடிவேலு டயலாக் இது.. எந்தப் படம்னு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top