நிலால போய் பியானோ வாசிக்கணும்… லிடியன் நாதஸ்வரம் சக்ஸஸ் ஜர்னி!

உலகமே திரும்பி பார்க்குற அளவுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டுல நடக்குது. அதன் தொடக்க விழால எல்லாரையும் பியானோ வாசிச்சி வைப் ஆக்கி விட்டு “யார்ரா இந்த பையன்?”னு ஆச்சரியப்பட வைச்ச ஆளு, லிடியன் நாதஸ்வரம். இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா? ‘World’s Best’னு டைட்டில் வாங்கி, 7 கோடியும் வாங்கிட்டாரு. அவரோட எய்ம் கேட்டா வாயடைச்சு போவீங்க. அது என்ன? லிடியன் நாதஸ்வரம் உலக அரங்குல ஜெயிச்சதும், ஏ.ஆர்.ரஹ்மான் அவரைப் பத்தி புகழ்ந்து ஒண்ணு சொன்னாரு. அடுத்த நாள் எல்லா நியூஸ் பேப்பர்லயும் ஹெட்லைன் அதுதான். அப்படி என்ன சொன்னாரு? ஒரு படத்துலயும் லிடியன் நடிச்சிருக்காரு. அந்தப் படம் என்ன? இதெல்லாம் தான் இந்த வீடியோல நாம பார்க்கப்போறோம்.

லிடியன் நாதஸ்வரம்
லிடியன் நாதஸ்வரம்

லிடியன் நாதஸ்வரம், பெயரே ரொம்ப வித்தியாசமான பெயர். இந்தப் பெயருக்கு செமயான அர்த்தம் இருக்கு. தமிழ்ல கல்யாணி ராகம்னு சொல்லுவாங்க. அதோட கிரீக் பேருதான் இந்த லிடியன். லிடியன் பிறக்கும்போது அவங்க அப்பா லிடியன் ராகத்தைப் படிச்சிட்டு இருந்துருக்காரு. அதனால, அந்தப் பெயரை வைச்சிட்டாரு. ரொம்பவே யூனிக்கான, கஷ்டமான ஒரு மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட், நாதஸ்வரம். அதுலதான் நாதமும் இருக்கு. ஸ்வரமும் இருக்கு. அதையும் லிடியன் பெயர்கூட சேர்த்து, லிடியன் நாதஸ்வரம்னு வைச்சிருக்காரு. லிடியன் 2 வயசுல இருந்தே மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் பிளே பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டாரு. முதல்ல அவர் வாசிக்கத் தொடங்கினது, ட்ரம்ஸ்தான். சின்ன வயசுலயே லிடியனுக்கு மியூசிக்தான் வரும்னு தெரிஞ்சு அவங்க அப்பா அவரை ஸ்கூல்க்கு அனுப்புறதையே நிப்பாட்டிட்டாரு.

வர்ஷன்
வர்ஷன்

சதீஷ் வர்ஷன், அதாவது லிடியனோட அப்பா அவங்கள ஸ்கூல்க்கு அனுப்ப வேணாம்னு முடிவு பண்ணதும் அவங்கள சுத்தி இருக்குறவங்க, பசங்க வாழ்க்கையை கெடுத்துட்டான்னுலாம் சொன்னாங்களாம். ஏன், அவரை ஸ்கூல்க்கு அனுப்பலைனு கேட்டா, “சின்ன வயசுலயே அவங்களுக்கு மியூசிக்தான் வரும்னு தெரிஞ்சுது. அதுமட்டுமில்ல, ஸ்கூல்க்கு அனுப்புனா பிரிவுகள் வரும். நான் பெருசு, நீ சின்னதுனு நினைக்கத் தோணும். அடுத்தவங்க கதைகளை கேட்கணும். வீட்டுல ஒண்ணு, ரெண்டு பசங்களயே பார்க்க முடியாமல் தவிக்கிறாங்க. ஸ்கூல்ல 50, 60 பேரை எப்படி பார்த்துப்பாங்க? அதனாலதான் அனுப்பல”னு சொல்லுவாரு. இருந்தாலும் ஸ்கூல்னா என்னனு பசங்களுக்குத் தெரியணும் அப்டின்றதுக்காக ஒரு மூணு வருஷம் லிடியனை ஸ்கூல்க்கு அனுப்பியிருக்காரு.

லிடியன்
லிடியன்

சின்ன வயசுல இருந்தே லிடியன் எது பண்ணாலும் அவங்க அப்பா, “எது பண்ணாலும் அதுல நீ வேர்ல்ட்ஸ் பெஸ்ட்டா இருக்கணும். அவ்வளவு பிராக்டிஸ் பண்ணு”னு சொல்லுவாராம். அந்த வார்த்தையை சின்ன வயசுல இருந்தே லிடியன் கேட்டு கேட்டு எது பண்ணாலும் பெஸ்ட்டா இருக்கணும்னு அவருக்கே ஒரு கட்டத்துல தோண ஆரம்பிச்சிடுச்சு. அவங்க அப்பா நிறைய வேர்ல்ட் லெவல்ல நடக்குற நிகழ்ச்சிகளை எல்லாம் ஃபாலோ பண்ணிட்டே இருந்துருக்காரு. அப்போதான், இந்த வேர்ல்ஸ்ட் பெஸ் நிகழ்ச்சி பத்தி கேள்வி பட்ருக்காரு. அதுக்கு அப்ளை பண்ணி லிடியன் செலக்ட்டும் ஆயிட்டாரு. ஒரு மாசத்துக்கு முன்னாடி லிடியன்கிட்ட அவங்கப்பா, “ஒரு புரோகிராம் இருக்கு. நல்லா பிரிபேர் ஆயிக்கோ”னு சொல்லியிருக்காரு. அப்படிதான் அந்த வேர்ல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சில லிடியன் கலந்துகிட்டாரு.

லிடியன் நாதஸ்வரம்
லிடியன் நாதஸ்வரம்

லாஸ் ஏஞ்சல்ஸ்ல நடந்த அந்த புரோகிராம்ல நிறைய நாடுகள்ல இருந்து கலந்துகிட்டாங்க. இந்தியா சார்பா ரெப்ரசண்ட் ஆனது லிடியன் மட்டும்தான். அந்த நிகழ்ச்சில கடைசில ரெண்டு பியானோ ஒரே டைம்ல வாசிப்பாரு. அதுவும் வேற வேற மியூசிக். ஒரே பியானோல ரைட் ஹேண்ட்ல ஒரு மியூசிக், லெஃப்ட் ஹேண்ட்ல ஒரு மியூசிக் வாசிப்பாரு. அந்த ஐடியா ஒரு நாள் முன்னாடிதான் அவருக்கு வந்துதாம். 1960’ஸ் ஒருத்தங்க அதே மாதிரி பண்ணிருக்காங்களாம். அதைப் பார்த்து இன்ஸ்பைர் ஆகி ஒருநாள் பிராக்டிஸ் பண்ணி அடுத்தநாள் அந்த நிகழ்ச்சில வாசிச்சிருக்காரு. வேர்ல்ட்ஸ் பெஸ்ட்னு டைட்டிலும் வாங்கிட்டாரு. அந்த மொமன்ட் பார்த்தா செம கூஸ்பம்ப்ஸா இருக்கும். அந்த நிகழ்ச்சில ஜெயிச்சதும் ரெண்டு பேரும் ஒரு ஹோட்டலுக்கு போய் நல்லா சாப்பிட்டாங்களாம். அவ்வளவுதான் அவங்க கொண்டாட்டம். அடுத்து அவங்க நார்மலா மியூசிக் பிராக்டிஸ் பண்ண பொய்ட்டாங்க. லிடியன் கலந்துகிட்ட ஒரே போட்டி இதுதான்.

ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான், லிடியன் நாதஸ்வரத்தைப் பத்தி “இந்தியாவின் இசைத் தூதுவன்”னு அவர் ஜெயிச்சதும் சொன்னாரு. அதுதான் அடுத்தநாள் நியூஸ் பேப்பர்லலாம் ஹெட்லைனா இருந்துச்சு. இவ்வளவு சின்ன வயசுல அவ்வளவு பெரிய அரங்கம், அவ்வளவு அதிக கைதட்டல்கள், லெஜண்ட்ஸ்களின் பாராட்டுகள் எல்லாம் லிடியன் வாங்கிட்டாரு. அவரோட கனவு என்னவா இருக்கும்னு தெரிஞ்சுக்க செம ஆசை. என்னனு அவர் இண்டர்வியூக்கள் எல்லாம் பார்த்தா, லிடியனுக்கு நிலவுல போய் மூன்லைட் சொனாட்டா மியூசிக் வாசிக்கணும்னு ஆசையாம். அதேமாதிரி ஹாலிவுட் படங்களுக்கு மியூசிக் பண்ணனும். குறிப்பா, அனிமேஷன் படங்களுக்கு மியூசிக் பண்ணனும்னு ரொம்பவே ஆசையாம். மோகன்லால் டைரக்ட் பண்ர பரோஸ் படத்துக்கு லிடியன் மியூசிக் பண்றாரு. அந்தப் படம் 3டி அனிமேஷன் படம்.

இளையராஜா
இளையராஜா

இளையராஜாகிட்டயும் லிடியன் மியூசிக்லாம் கத்துகிட்டு இருக்காரு. ஒருதடவை சோஷியல் மீடியால அவர் கூட எடுத்த ஃபோட்டோவை ஷேர் பண்ணி, “இசைஞானி இளையராஜாதான் என் இசை ஆசிரியர். மிகவும் அன்புடனும் அக்கறையுடன் எனக்கு தினமும் இசை கத்துக்கொடுக்குறார். அவருடைய முதல் மற்றும் ஒரே மாணவர் நான்தான்னு சொன்னார்”னு ரொம்பவே ஹேப்பியா ஒரு போஸ்ட் போட்ருந்தாரு. ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோலயும் கொஞ்சம் நாள் மியூசிக் கத்துக்கிட்டாரு. இந்தில ‘Atkan chatkan’ அப்டின்ற படத்துலயும் லிடியன் நடிச்சிருக்காரு. இசைக்கலைஞர்களே பார்த்து இன்னைக்கு வியக்குற ஒரு இசைக்கலைஞன்னா அது லிடியன்தான். இதெல்லாம் லிடியன்கிட்ட சொன்னா, “Its just beginning”னு சொல்லுவாரு. அந்த எண்ணம் தான் இன்னும் உங்களை எங்கயோ கூட்டிட்டுப் போகப்போகுது. 

Also Read: காமெடியன் சந்தானத்தை நாம ஏன் மிஸ் பண்றோம்… 3 காரணங்கள்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top