மணி ஹெய்ஸ்ட்

`வாத்தியார் தப்பித்தாரா… புது டீம் என்ட்ரி’ – மணி ஹெய்ஸ்ட் வால்யூம் 1… 5 ஹைலைட்ஸ்!

பல எதிர்பார்ப்புகளுக்கு பின் மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸின் 5-சீசன் முதல் வால்யூம் வெளியாகியிருக்கிறது. 4-வது சீஸன் முடிவில் புரொஃபசர் அலிசியாவின் பிடியில் சிக்கியது போல நிறைவு பெற்றிருக்கும். அது என்னவானது என்பதோடு சேர்த்து பல்வேறு விஷயங்களுக்கு முடிவு சொல்லும் விதமாக 5-வது சீஸன் கட்டாயம் இருக்கும் என்பது ரசிகர்களுக்கே தெரிந்த ஒன்று. அப்படிப்பட்ட சூழலில்தான் வெளியாகியிருக்கிறது மணி ஹெய்ஸ்ட் 5-வது சீஸன். This is war!

மணி ஹெய்ஸ்ட்
மணி ஹெய்ஸ்ட்

5-வது சீஸனின் முதல் Volume-ல் நம்மை கவர்ந்த 5 விஷயங்கள் இதோ!

முன் குறிப்பு : முதல் 4 சீசன்கள் பார்க்காதவர்கள் இந்த Window-வை க்ளோஸ் செய்துவிட்டு வேறு வேலை இருந்தால் பார்க்கவும். Spoilers Ahead. ஒருவேளை நீங்கள் 5-வது சீசன் பார்க்கப்போகும் ரசிகர்களாக இருந்தால் கவலை வேண்டாம், ஸ்பாய்லர்கள் இல்லை.

மனி ஹெய்ஸ்ட்
மணி ஹெய்ஸ்ட்

* புரொஃபஸர் என்ன செய்யப்போகிறார் என்கிற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் காத்திருக்கும் நமக்கு பல்வேறு சர்ப்ரைஸ்கள் இந்த சீஸனில் இருந்தது. காந்தியா நைரோபியை கொன்ற பிறகு அவர்களின் டீம் மேட்ஸ்களோடு சேர்த்து நமக்கு செம கடுப்பாக இருந்தது. அவரை என்ன செய்யப் போகிறார்கள் என்கிற எரிச்சலுக்கு விடை சொல்லும் விதமாக பயங்கர சண்டை ஒன்றும், அப்போது அரங்கேறிய சில எமோஷனல் வசனங்களும் படுபயங்கரமாக ஈர்த்து புரொஃபசரின் நிலையையே மறக்கடிக்கச் செய்தது.

* இதுவரை நாம் பார்த்த புரொஃபசரின் மீது ஏதோவொரு எதிர்பார்ப்பும் மரியாதையும் வைத்திருப்போம். இந்த சீஸனில் அது அடுத்த நிலைக்குச் சென்று அலாதியான ஒரு அன்பையும், மரியாதையையும் கூட்டச் செய்திருக்கிறது. பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படக்கூடாது என்பதுதான் கோல்டன் ரூல். அதுவே அடுத்த நிலைக்குச் சென்று எதிரி என்று புறம்தள்ளி விடாமல் இக்கட்டான சூழலில் அவருக்கு உதவியாக இருந்திருப்பார் நம் புரொஃபசர். யூ ஆர் கிரேட் வாத்தியாரே!

மணி ஹெய்ஸ்ட்
மணி ஹெய்ஸ்ட்

* காந்தியா, அலிசியாவைத் தொடர்ந்து நமக்கு எரிச்சல் தரும் இன்னொரு கேரக்டர் அர்துரோ ரோமன். நம்மை எரிச்சல் நிலையில் வைத்திருந்த அவர், அதில் இருந்து ப்ரொமோட் ஆகி வெறி வர வைக்கும் நிலைக்குச் சென்றுவிட்டார். இவன் வேற குறுக்கும், மறுக்கும் ஓடிக்கிட்டு இருக்கான் என்கிற மனநிலை ஏற்பட்டாலும் இறுதியில் அவருக்கு ஏற்பட்ட அவல நிலை பாவமாக இருந்தது. பதற வேண்டாம். ஆள் இன்னும் உயிரோடதான் இருக்காப்டி.

* This is war என்று புரொஃபசர் சொல்லும்போது நமக்கு ஒருவித வெறி ஏற்படும். அந்த வெறிக்குத் தகுந்த தீனியாகத்தான் இந்த 5-வது சீஸனின் 5 எபிசோடுகளும் அமைந்திருந்தன. ஆக, அந்த எதிர்பார்ப்பை எந்தவித தொய்வு இல்லாமல் சிறப்பாக சம்பவம் செய்திருக்கிறது 5-வது சீசனின் முதல் வால்யும். இன்னும் 2-வது Volume என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ.

மணி ஹெய்ஸ்ட்
மணி ஹெய்ஸ்ட்

* இருப்பவர்கள் போதாது என்று புதிதாக ஒரு டீமை உள்ளே இறக்கியிருக்கிறார்கள். அவர்கள்தான் மிலிட்டரி. ஒருத்தன் காந்தியாவா இருந்தா பரவாயில்லை. அதில் இருக்கும் ஒவ்வொருவரும் காந்தியாதான். பார்வையாளர்களைப் பதைபதைக்க வைப்பதில் தொடங்கி எரிச்சல் தரும் செயல்கள் வரை அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை மிஸ் செய்யாமல் கொடுத்துள்ளனர்.

Bella Ciao!

Also Read : ரங்கன் வாத்தியார் முதல் டான்சிங் ரோஸ் வரை… இசைப்பட்டா பரம்பரை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top