Village Cooking Channel: இன்டர்நெட் வசதியே இல்லாத ஊரிலிருந்து யூ-டியூப் டைமண்ட் பட்டன் – வில்லேஜ் குக்கிங் சேனலின் கதை!

இன்டர்நெட்டே இல்லாத ஊருல இருந்து நடத்துற சேனலுக்கு இன்றைக்கு உலகம் முழுக்க கிட்டத்தட்ட ஒன்றரை கோடி சப்ஸ்கிரைபர்ஸ்..! யூ-டியூப்ல டைமண்ட் பட்டன் வாங்கின முதல் தமிழ் சேனல்.

15,000 ரூபாய் லேப்டாப்ல ஆரம்பிச்ச இவங்க, இன்னைக்கு 10 லட்ச ரூபாய் கொரோனா நிதியா தர்றாங்க. வெறும் 40 வீடு இருக்குற கூகுள் மேப்புல கூட காட்டாத குக் கிராமத்துல இவங்க சமைக்கிறதைப் பார்க்க ராகுல் காந்தி வர்றாரு. யாரு இந்த வில்லேஜ் குக்கிங் சேனல்? எப்படி ஆரம்பிச்சாங்க… அவங்களோட வரலாறு என்ன?

புதுக்கோட்டை பக்கத்துல சின்ன வீரமங்கலம்னு ஒரு கிராமம். அங்க சுப்ரமணினு ஒருத்தர். எம்.காம், எம்.ஃபில் படிச்சிருக்காரு. ஒரு வேலைக்கு போறாரு. அது செட் ஆகாம திரும்ப வந்துடுறாரு. 15 ஆயிரம் செலவு பண்ணி ஒரு லேப்டாப் வாங்கி அவரே சொந்த முயற்சில கம்ப்யூட்டர் ப்ரோகிராமிங் கத்துக்குறாரு. சின்னதா ஒரு வெப்சைட்டும் ரெடி பண்றாரு. அந்த ஊர்ல இண்டர்நெட்லாம் அப்போ கிடையாது. எல்லாமே மொபைல் ஹாட்ஸ்பாட்லதான். பார்த்தா அந்த வெப்சைட் நல்லா போக ஆரம்பிக்குது. ஓரளவுக்கு வருமானம் கிடைக்குது. அந்த சமயத்துல ஒரு சின்ன நெருக்கடில அந்த வெப்சைட்டை அவர் விக்க வேண்டியதாகிடுது. வித்துடுறாரு.

வில்லேஜ் குக்கிங் சேனல்
வில்லேஜ் குக்கிங் சேனல்

வில்லேஜ் குக்கிங் சேனல்

‘பொண்டாட்டி, பிள்ளையைக் காப்பாத்துறதுக்காவது வெளிநாட்டுக்குப் போடான்னு’ அப்பா, அம்மா சொல்றாங்க. சுப்ரமணிக்கு உள்ளூர்ல இருந்தே சம்பாதிக்கணும்னுதான் ஆசை. அப்போதான் யூடியூப் கொஞ்ச கொஞ்சமா பிரபலமாகத் தொடங்குது. இவருக்கும் ஒரு குக்கிங் சேனல் ஆரம்பிக்கலாம்னு ஐடியா வருது. ஏன்னா அம்மா, அப்பா வயல் வேலைக்கு போயிட்டா வீட்ல சமையல் இவங்கதான். அதே போல விசேஷ வீடுகள்ல சமைச்ச அனுபவமும் இருந்துச்சு. அதனால 6 பேர் சேர்ந்து 2018 ஏப்ரல் மாசம் வில்லேஜ் குக்கிங் சேனலைத் தொடங்குறாங்க.

அந்த 6 பேரும் யாருன்னா…

சுப்ரமணி:

எம்.காம். எம்.பிஃல். இந்த சேனலின் ஃபவுண்டர். கேமரா மேன்.

பெரியதம்பி ஐயா:

விசேஷ வீடுகளில் சமைக்கும் சமையல் கலைஞர்

ஐயனார்:

“மங்களகரமா மஞ்சள்ல ஆரம்பிக்குறோம்” டயலாக்குக்குச் சொந்தக்காரர். மஞ்சள், சோம்பு, சீரகம் அரைத்துக்கொடுப்பது இவர் டிபார்ட்மெண்ட்

முருகேசன்:

காய்கறி வெட்டுற வேலை இவர் கண்ட்ரோல்

முத்துமாணிக்கம்:

சமையல் கலையில் பட்டப்படிப்பு முடிச்சவர்.

தமிழ்ச்செல்வன்:

நானோ டெக்னாலஜியில் எம்.பிஃல் முடிச்ச கோல்டு மெடலிஸ்ட்.. கறி வெட்டுவதில் ஸ்பெஷலிஸ்ட்.

இதுல ஸ்பெஷல் என்னன்னா.. இவங்க எல்லாருமே சொந்தக்காரங்க.

வில்லேஜ் குக்கிங் சேனல்
வில்லேஜ் குக்கிங் சேனல்

முதல்ல ஒரு எட்டு மாசத்துக்கு இவங்க பண்ற எந்த வீடியோவும் சரியா போகல. ஆயிரம் வியூஸ், 100 லைக்ஸ் வந்தா போதும்னுதான் நினைக்குறாங்க. ஆனா, அதுவே சிரமமமாதான் இருக்கு. அப்போதான் அவங்க என்ன மிஸ்டேக் பண்றாங்கனு அனலைஸ் பண்றாங்க. திடீர்னு ஒரு ஐடியா தோணுது. வழக்கமா மத்த சேனல்ஸ் பண்றதுல இருந்து விலகி வேற எதாவது பண்ணலாம்னு நினைக்குறாங்க. அந்த ஊருக்குள்ள இருந்தே என்ன பெஸ்ட்டா பண்ண முடியும்னு யோசிச்சு இயற்கையான சூழல்ல வெளில போய் சமைக்கலாம். ஊர்ல என்ன சமையல் பண்ணுவோமோ, அதே மாதிரி ஈசல் வச்சு சமைக்கலாம்னு முடிவு பண்றாங்க. அந்த வீடியோ வைரல் ஆகுது. அப்படியே பிக் அப் ஆகி அதே ஃபார்முலால இன்னைக்கு மில்லியன் கணக்குல வியூஸ் அள்ளுறாங்க. மூணே வருசத்துல ஒரு கோடி சப்ஸ்கிரைபர்ஸ் வர்றாங்க.

இவங்க சேனல்ல நடந்த இன்னொரு முக்கியமான சம்பவம் ராகுல் காந்தி வந்ததுதானாம். ஏன்னா அதுக்கப்பறம்தான் ஊருக்குள்ள இவங்க என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னே தெரிஞ்சதாம். “எங்க ஊர்க்காரங்களுக்கு நாங்க என்ன செய்யுறோம்னே தெரியாது. வேலை வெட்டி இல்லாம கூட்டாஞ்சோறு ஆக்கி சமைச்சி சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறாங்கன்னு தான் நினைச்சிக்கிட்டு இருந்தாங்க. ஆனா, ராகுல்காந்தி அண்ணன் சந்திப்புக்கு அப்புறம் எல்லாமே மாறியிடுச்சு. இந்திரா காந்தி அம்மாவோட பேரனுக்கே சமைச்சுப் போட்ட பயலுவன்னு ஊரே தூக்கி வச்சி எங்களைக் கொண்டாடுறாங்க” என்கிறார் சுப்ரமணி.

வில்லேஜ் குக்கிங் சேனலோட வெற்றி மூலமா சுப்ரமணி அண்ணன் நமக்கு சொல்லிக்கொடுக்குற ஒரு சக்ஸஸ் சீக்ரெட் என்னன்னா… “உங்ககிட்ட என்ன ப்ளஸ்ஸோ அதையே பெருசா பண்ணுங்க!”

Also Read – Mr.Minister: மிளகாய் மண்டி டு அறிவாலயம்… `புல்லட்’ நேரு அமைச்சர் நேருவான கதை! #KNNehru

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top