MM Keeravani

கீரவாணி… சாரி, மரகதமணிக்கும் தமிழ் சினிமாவுக்குமான கனெக்‌ஷன்ஸ்!

இசையமைப்பாளர் கீராவாணி… ‘பாகுபலி’ பார்ட் 1, பார்ட் 2-வுக்குப் பின் இப்போது ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக கோல்டன் குளோப் விருது பெற்ற  ‘ஆர்ஆர்ஆர்’ மூலம் நம்மிடையே பரிச்சயமாகியிருக்கும் இவர், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ்த் திரையுலகிற்கு 90ஸ்-களிலேயே மிகவும் நெருக்கமானவர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?

நிச்சயம் 80ஸ், 90ஸ் கிட்ஸுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், 2K கிட்ஸ்களில் தீவிர சினிமா ஆர்வலர்களுக்கு மட்டும் தெரிந்திருக்கக் கூடும். தெலுங்கில் கீரவாணி, இந்தியில் எம்.எம்.க்ரீம், தமிழில் மரகதமணி என மொழிக்கு ஒரு பெயரும் வலம் வரும் இவருக்கும் தமிழுக்குமான உறவு பத்திதான் இந்த வீடியோ ஸ்டோரில பார்க்கப் போகிறோம். நீங்க அடிக்கடி கடந்து வரும் பாடல்கள் ரெஃபரன்ஸ் இருக்கும் என்பதால், நிறைய ‘வாவ்…’ மொமன்டுகளை நிச்சயம் இதுல எக்ஸ்பீரியன்ஸ் பண்ணலாம்.

எம்.எம்.கீரவாணி
எம்.எம்.கீரவாணி

ஆந்திராவில் திரைக் குடும்பத்தில் பிறந்தவர். முழுப் பெயர் ‘கொடுரி மரகதமணி கீரவாணி’. இயக்குநர் ராஜமெளலி இவருக்கு கஸின் பிரதர். இந்திய திரை இசை ஜாம்பவன் எஸ்.டி.பர்மன்தான் இருவருக்கு மிகப் பெரிய இன்ஸ்பிரேஷன். எண்பதுகளின் இறுதியில் தெலுங்கு இசையமைப்பாளர் கே.சக்ரவர்த்தி, மலையாள இசையமைப்பாளர் ராஜாமணி ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த கீரவாணி, முதலில் இசையமைத்த படம் ‘கல்கி’ன்ற தெலுங்குத் திரைப்படம். அந்தப் படமும் சரி, அதோட இசையும் வெளிவரலை. 1990-ல் கீரவாணி இசையமைத்த முதல் படமான ‘மனசு மமதா’ (Manasu Mamata)-ன்ற படம் ரிலீஸாகுது. அங்கேயே தமிழ் கனெக்‌ஷன் ஸ்டார்ட் ஆகுது. ஆம், அந்தப் படத்தை இயக்கியவர் நம்ம மெளலி.

அந்த வருஷத்துலயே தமிழுக்கும் என்ட்ரி ஆகிட்டாரு. திறமையாளர்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவதில் ஜாம்பவான் ஆன இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர்தான் மரகதமணியாக தமிழ்ல கொண்டு வந்தார். படம் ‘அழகன்’. அந்தப் படத்துக்கு தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதும் மரகதமணிக்கு கிடைத்தது.

அந்தப் படத்துல எல்லா பாட்டுமே சூப்பர் ஹிட். சில பாடல்கள் இன்றளவும் மீம்ஸ்ல கூட கடந்து வருவோம். ரொம்ப நேரம் கடலை போட்டாலே இந்தப் பாட்டை பின்னணில போட்ருவாங்க. யெஸ்… “சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா…”தான் அந்தப் பாட்டு. “வந்தேன் வந்தேன் கோழி கூவும் நேரமாச்சு”, “துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்குப் பாடி”, “தத்தித்தோம்”, “சாதி மல்லி பூச்சரமே”-ன்னு ‘அழகன்’ படத்துல வந்த எல்லா பாடல்களும் செம்ம ஹிட்டு. ஆடியோ கேசட் சக்கைப் போடு போட்டுச்சு.

அதே வருஷத்துல, கே.பாலச்சந்தரின் உதவி இயக்குநரான வசந்த் தன்னோட ‘நீ பாதி நான் பாதி’ படத்துக்கு அலேக்கா தூக்கிட்டுப் போய் செம்மயான ரொமான்ட்டிக் சாங்ஸ் வாங்கிக்கிட்டார். குறிப்பாக, லிரிக்ஸே இல்லாமல் – நிவேதா என்ற பெயரை மட்டும் வெச்சுகிட்டு போட்ட பாட்டெல்லாம் கேட்டு தமிழ் சினிமா ரசிகர்கள் மிரண்டு போயிட்டாங்கன்னே சொல்லலாம்.  

இப்படி ஆரம்ப காலத்துல மரகதமணி எனும் கீரவாணியை தமிழ் சினிமாதான் தூக்கிவிட்டுச்சு. அப்புறம் ‘தி கிரேட்’ ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ‘க்‌ஷண க்‌ஷணம்’ (Kshana Kshanam) அப்படின்ற படம்தான் அவரை தெலுங்கில் கவனத்துக்குரிய இசைமைப்பாளரா எமர்ஜ் ஆக வைக்குது. அப்புறம் தெலுங்கில் அடுத்தடுத்த ஆண்டுகளில் ‘அல்லாரி பிரியுடு’ (Allari Priyudu), ‘கிரிமினல்’ ஆகிய படங்கள் அவரை அடுத்தடுத்த லெவலுக்குக் கொண்டு போகுது.

இதுல, ‘கிரிமினல்’ பத்தி சொல்லியே ஆகணும். பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மகேஷ் பட் இயக்கி நாகார்ஜூனா, ரம்யா கிருஷ்ணன், மனிஷா கொய்ராலா நடிச்ச இந்தப் படத்தோட தமிழ் டப்பிங் படத்துக்கும் செம்ம ரெஸ்பான்ஸ். குறிப்பா, இந்தப் படத்தொட இந்தி வெர்ஷன்ல வர்ற இந்தப் பாட்டை நீங்க நிச்சயம் கடந்து வந்திருப்பீங்க. இந்தப் பாட்டு பாடப்படாத இசை மேடையே இன்றளவும் இல்லைன்னே சொல்லலாம். ‘தூ மிலே தில் கீ லே…’ (Tu Mile Dil Khile) பாடல் தான் அது. தமிழ்ல ‘உயிரே.. உயிரே… இது தெய்வீக சம்பந்தமே..’ன்னு செம்ம ஹிட் ஆச்சு.

எம்.எம்.கீரவாணி
எம்.எம்.கீரவாணி

92-ல் தமிழ்ல ரெண்டு முக்கியமான படங்களுக்கு இசையமைச்சர். ரெண்டுமே கே.பாலச்சந்தர் படம். ஜாதிமல்லி, வானமே எல்லை. ‘வானமே எல்லை’ படத்தில் எல்லா பாடல்களுமே வெரைட்டியான எக்ஸ்பீரியன்ஸ் தரக்கூடியது. ‘தோல்வி இனியில்லை… அட இனி வானமே எல்லை’, ‘ஜன கண மன என ஜதி சொல்லும் நேரம்’, ‘நாடோடி மன்னர்களே வணக்கம் வணக்கம்’, ‘ஜனனமும் மரணமும் ஜதி சொல்லும் நேரம்’, ‘நீ ஆண்டவனா…’ பாடல்கள் ஒருபக்கம்னா, அதே படத்துல வந்த ‘கம்மங்காடே கம்மங்காடே’ பாட்டு அந்த நேரத்துல பட்டி தொட்டியெல்லாம் பட்டையக் கிளப்புச்சு.

அப்புறம் தமிழ்ல மூணு அர்ஜுன் படங்களுக்கு மியூஸிக் பண்ணியிருக்கார். சேவகன், பிரதாப், கொண்டாட்டம்.

இதைத் தவிர்த்து கீரவாணி நேரடியாக தமிழ்ப் பாடல்கள் பண்ணலைன்னாலும், தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப் செய்யப்பட்ட பாடல்கள் அவருக்கும் தமிழுக்குமான பந்தத்தை ‘ஆர்ஆர்ஆர்’ வரைக்கும் கொண்டு வந்திருக்கு. இதில், கே.விஸ்வநாத் இயக்கத்தில் கமல் நடித்த ‘பாசவலை’ மிக முக்கியமானது. அதேமாதிரி, பரதன் இயக்கத்தில் அரவிந்த் ஸ்வாமி, ஸ்ரீதேவி நடித்த ‘தேவராகம்’ படத்தோட தமிழ் வெர்ஷன் பாடல்கள் எல்லாமே செம்ம ஹிட்.

அதுக்கு அப்புறம் தெலுங்கில் இருந்து டப் செய்யப்பட்ட ‘மாவீரன்’, ‘நான் ஈ’, ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’எல்லா படங்களின் தமிழ் வெர்ஷன் பாடல்களும் ரொம்பவே ஈர்த்துச்சுன்னு சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

1997-ம் ஆண்டு வெளிவந்த ‘அன்னமய்யா’ தெலுங்கு படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றார். ஃபிலிம் ஃபேர், நந்தி விருதுகளை டஜன் கணக்குல குவிச்சிருக்கார். இப்போ எல்லாத்துக்கும் உச்சமா ‘கோல்டன் க்ளோப்’ அமைஞ்சிருக்கு.

இடையில், 2014-ல் ஒரு ஃபேஸ்புக் போட்டு தன்னோட ரசிகர்களை டிஸ்டர்ப் பண்ணார். அங்கேயும் தமிழ் கனெக்‌ஷன் இருக்கு. சென்னையை அப்ப மென்ஷன் பண்ணியிருந்தார்.

“என்னோட முதல் பாடலை 9 டிசம்பர் 1989 சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் தொடங்கினேன். அன்றைய தினமே என்னுடைய ஓய்வு பெறும் நாளை தீர்மானித்தேன். 8 டிசம்பர் 2016 தான் நான் ஓய்வு பெறும் நாள். அதற்கு இன்னும் மூணு வரும் இருக்கு”ன்ற ரேஞ்சுல ஒரு ஃபேஸ்புக் போஸ்ட் போட்டார்.

எம்.எம்.கீரவாணி- எஸ்.எஸ்.ராஜமௌலி
எம்.எம்.கீரவாணி- எஸ்.எஸ்.ராஜமௌலி

ஏதோ ஒரு விரக்தில அப்படி போட்ட மாதிரி இருந்துச்சு. ஆனால், ராஜமெளலி தலையெடுக்க ஆரம்பிச்சதும் கீரவாணியை விடவே இல்லை. ஆல்மோஸ்ட் செகண்ட் இன்னிங்ஸ்தான் கீரவாணிக்கு. ஆனா, இந்த முறை செம்ம விளாசல்.

எஸ்டி பர்மனுக்கு அப்புறம் கீரவாணிக்கு ரொம்பவே ஃபேவரிட்னா, அது இளையராஜாதான். அதுவும் இளையராஜாவோட மியூஸிக்தான் அவருக்கே டானிக். உதாரணத்துக்கு ஒரு சம்பவம்…

Also Read – வானத்துல இருந்துலாம் குதிக்கிறீங்க… தமிழ் சினிமாவின் வித்தியாசமான புரமோஷன்கள்!

கோவிட் – லாக்டவுன் சமயத்துல கீரவாணி ஒரு வீடியோ ட்வீட் போட்டார். அதுல அவர் சொல்றார்: “இனிப்புகள் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்றார்கள். நான் இனிப்புகளை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டேன். ஆனால், அதற்குப் பதிலாக இளையராஜாவின் பாடல் ஒன்றைப் பாடினால் அதிலிருக்கும் இனிமை, நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும்” என்று சிலாகித்ததோடு ‘தேனே தென்பாண்டி மீனே’ பாடலையும் பாடினார்.

இதே கீரவாணியை கோல்டன் குளோப் விருது வென்றதற்காக இளையராஜா ட்வீட்டில் வாழ்த்தியிருக்கார். அதுல, அவர் குறிப்பிட்ட விஷயம்… உழைப்பும் தகுதியான வெற்றியும்.

இந்த ரெண்டுமே நிறைந்தவர் கீரவாணி. ஆனா, நமக்கு எப்பவும் மரகதமணிதான்!

துள்ளல் இசை, மெலடி ரெண்டுமே கீரவாணியோட ஹைலைட்ஸ். அதைத் தாண்டி அவரோட மியூஸிக்ல ஒருவித ஸ்பிரிட் (உத்வேகம்) எப்பவுமே இருக்கும். அதுதான் தமிழுக்கு அவரை கே.பாலச்சந்தர் இழுத்துட்டு வர முக்கியமான காரணம்.

அழகன் படத்துல நேம் கிரெடிட் கொடுக்கும்போது, தன்னோட முழுப் பெயரான மரகதமணி கீரவாணின்னே கொடுத்திருக்கார் கீரவாணி. ஆனா, பாலச்சந்தர்தான் எனக்கு மரகதமணிதான் ரொம்ப பிடிச்சிருக்கு. அதுவே போதும்னு தமிழுக்கு அந்தப் பெயர் வெச்சுட்டார். அதே பெயர்தான் மலையாளத்திலும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top