சின்ன ரோல்

எல்லாமே ரோலக்ஸ் மாதிரி பவர்ஃபுல்.. சின்ன ரோல். ஆனால், பெரிய இம்பாக்ட்!

தமிழ் சினிமா படங்கள்ல சின்ன ரோல்லதான் சில கேரக்டர்கள் வந்துருப்பாங்க. ஆனால், அவங்களால பெரிய அளவுல அந்தப் படமே பெரிய ட்விஸ்ட் அடிச்சு மாறிடும். அப்படியான சில கேரக்டர்களையும் என்னென்ன இம்பாக்ட்டை ஏற்படுத்தியிருக்காங்கன்றதையும் பார்ப்போம். சோஷியல் மீடியால செம டிரெண்டிங்ல இந்த டாப்பிக் போய்ட்டு இருக்கு.

96 வசந்தி

ராம் – ஜானு காதல் வெறும் பெயரோ.. கதையோ.. வார்த்தைகளோ இல்லை. பலரோட எமோஷன். அந்தப் படத்தைப் பார்த்த எல்லாருமே ராமும் ஜானுவும் சேர்ந்து வாழ்ந்துருக்கணும்னுதான் ஏங்கியிருப்பாங்க. அவங்க பிரிஞ்சதுக்கு படத்துல ஒருசில நிமிஷமே வந்துட்டுப் போற வசந்திதான் காரணம். ராம் சென்னைக்கு சொல்லாமல் கொள்ளாமல் வந்துட்டு திரும்ப ஜானுவை மீட் பண்ணபோகும் போது வசந்திகிட்டதான் சொல்லி அனுப்புவாங்க. ஆனால், வசந்தி ராமோட பெயரை மறந்துடுவாங்க. அதுனால, ஜானுவுக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் ஆகும். ராம் கல்யாணமே பண்ணிக்காமல் சுத்திட்டு இருப்பான். இப்படி ரெண்டு பேரோட வாழ்க்கையவே புரட்டிப் போட்ட கேரக்டர்தான் வசந்தி.

சின்ன ரோல் - பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள் அப்பா

பரியேறும் பெருமாள் படம் முழுக்கவே ஏகப்பட்ட சீன்ஸ் நம்மள அழ வைக்கும். அப்படியான சீன்கள்ல ஒண்ணுதான் பரியன் தன்னோட அப்பாவை கூட்டிட்டு வர்ற சீன். இவ்வளவு அப்பாவியான அப்பாவை வைச்சுட்டு ஆள மாத்தி கூட்டிட்டு வந்துருக்கியேடானு பிரின்சிபல் கேட்கும்போது கண்ணீர் வரும். அதே நேரத்துல வெளிய கூட படிக்கிற பசங்க அப்பாவோட வேஷ்டியை கழட்டிட்டு விரட்டும்போது அழுகையும் கூடவே, அவனுங்க மேல எக்கச்சக்கமான கோவமும் வரும். படம் பார்த்து முடிச்சுட்டு வந்ததும், அப்பா கேரக்டரும் நம்ம மனசுல பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்குறதை உணர முடியும்.

இயற்கை அருண் விஜய்

ஒரு கதைல ஒரு பொண்ணை ரெண்டு பேர் காதலிக்கிறாங்க. ரெண்டு பேரும் நல்லவங்கதான். அந்தப் பொண்ணு யாரை காதலிப்பான்ற லைனை சொன்னா எந்த தயாரிப்பாளரும் சொல்ற முதல் விஷயம். இப்படி படமே எடுக்க முடியாது. கண்டிப்பா ஒருத்தன் கெட்டவனாதான் இருக்கணும்ன்றதுதான். அங்கதான் நம்ம தஸ்தயெவ்ஸ்கி வெண்ணிற இரவுகள் எழுதி காவியத்தை படைச்சிருக்காரு. இதைதான் இயற்கையா எடுத்துருக்காங்க. இந்தப் படம் பெயர் சொன்னா, அருண் விஜய் இருக்காரான்ற அளவுக்குதான் தோணும். ஆனால், கடைசில ஷ்யாமோட காதல் சேர்ற நேரத்துல கரெக்ட்டா வந்து இறங்கி, ட்விஸ்ட் கொடுத்து மொத்த எதிர்பார்ப்பையும் மாத்திவிடுவாரு. கிறிஸ்துமஸ் தாத்தா மாஸ்க்கை கழட்டும்போது நமக்கே ச்சே.. இவரு வராமலேயே இருந்துருக்கலாமேனுதான் தோணும்.

நாட்டாமை டீச்சர்

சின்ன ரோல் -  நாட்டாமை டீச்சர்

நாட்டாமை குடும்பத்தை பழி வாங்க வில்லன் பொன்னம்பலம் அந்த ஊருக்கு டீச்சரை கூட்டிட்டு வருவான். இருக்கதுலயே சின்ன கேரக்டர் இதுதான். வில்லனே கொன்னுட்டு தம்பி மேல பழியும் போட்ருவான். ஆனால், அண்ணன் தம்பி பிரிஞ்சுடுவாங்க. பொண்டாட்டி கூட்டிட்டு வெளிய வந்து பசுபதி கஷ்டப்படுவான், தாய் கிழவி இவன் சொல்றதை கேட்ரும்.. அதையும் மிரட்டிருவான். இப்படி அந்த டீச்சர் வந்து கதைல ஏகப்பட்ட திருப்பங்களை ஏற்படுத்திட்டுப் போய்டும்.

குஷி எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யாவே சொல்லிடுவாரு. கண்ணாடி போட்டுட்டு கூட்டத்துல நடந்து வரானே, இவனை நல்லாவே நோட் பண்ணிக்கோங்க. இவனுக்கு இந்தக் கதைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால், கதையே மாத்தப் போரது இவன்தான்னு. விஜய் கனடா போகும்போது இவர் குறுக்க விழுந்து கார் ஆக்ஸிடண்ட் ஆகியிடும். வேற வழியில்லாமல் மெட்ராஸ்ல படிக்க வேண்டியது வரும். அங்கதான் ஜோதிகாவை மீட் பண்ணிவாரு. காதல் தொடங்கும்.. அப்படியே கதை நகரும். அதேமாதிரி, அந்தப் படத்துல ஜோதிகா இடுப்பு சீனும் ரொம்ப ஃபேமஸ். அதையும் ஸ்கிரீன்ஷாட் போட்டு சின்ன ரோல்.. ஆனால், பெரிய இம்பாக்ட்னு போட்ருந்தாங்க.

விக்ரம் ரோலக்ஸ்

சின்ன ரோல் -  விக்ரம் ரோலக்ஸ்

விக்ரம் படம்னு சொன்னாலே ரோலக்ஸா வந்த சூர்யாதான் நியாபகம் வருவாரு. அவ்வளவு பெரிய இம்பாக்ட இந்த கேரக்டர் கிரியேட் பண்ணிச்சுனு சொல்லலாம். படம் பார்த்துட்டு வந்த சாதாரண சினிமா ஃபேன்ஸ், விக்ரம் படம் புடிச்ச ஃபேன்ஸ், லோகேஷ் ஃபேன்ஸ், சூர்யா ஃபேன்ஸ், ரோலக்ஸ் ஃபேன்ஸ்னு எல்லாருமே ஒரு விஷயம் கேக்குறாங்கனா.. அது ரோலக்ஸ் கேரக்டர வைச்சு எப்போ முழுப்படம் வரும்ன்றதுதான். சூர்யா லுக்கே அந்த கேரக்டருக்கு மிகப்பெரிய பிளஸ். லைஃப் டைம் செட்டில்மெண்ட்னு சொல்லும்போதுலாம் தியேட்டர்ல எவனும் சீட்ல இல்லை. இன்னைக்கும் சூர்யா எங்கயாவது போயாச்சுனா ரோல்கஸ் ரோலக்ஸ்னு
தான் கத்துறாங்க. அதுதான் அந்த கேரக்டருக்கான இம்பாக்ட்னு சொல்லலாம்.

Also Read – மயிலாட்டம் ஆடவைக்கும் மைக்கேல் ஜாக்சன் – புஷ்பவனம் குப்புசாமி கதை!

நண்பன் பன்னீர் செல்வம்

எந்தன் கண் முன்னே.. கண் முன்னேனு காணாமல் போனேனேன்றது அந்த கேரக்டருக்கான வெறும் பாட்டு மட்டுமில்ல. அந்த கேரக்டரா வாழ்ந்த, வாழ்ந்துட்டு இருக்குற, பேஷன் மேல காதலோட சுத்துற நிறைய பேரின் எமோஷன்னு சொல்லலாம். ரொம்பவே பிரில்லியண்டான ஆளா, கஷ்டப்பட்ட ஃபேமில இருந்து வந்து சிறப்பா படிக்கிற ஆளா காமிப்பாங்க. ஆனால், அவன் சாகும்போது எல்லார் கண்ணும் அப்படி கலங்கும்.

சின்ன ரோல் -  அன்பே சிவம் நாய்

அன்பே சிவம் நாய்

கமலோட உருவம் மாறுறதுல தொடங்கி கதையவே புரட்டிப் போடுறது வரைக்கும் ஏகப்பட்ட விஷயத்துக்கு இந்த நாய்தான் முக்கியமான காரணமா இருக்கும். ஆனால், அந்த நாய் மேல படம் பார்க்குற நமக்கு கொஞ்சம்கூட கோவமே வராது. கமல் அந்த நாயோட கேரக்டரை அவ்வளவு அழகா எழுதியிருப்பாரு. கடைசில நாய் கார்ல ஏறும்போதுலாம் செம ஃபீல், அதேமாதிரி.. பிழைச்சுப் போங்கனு சொல்லிட்டு போகும் போது நாய் மட்டும் அவர்கூடவே போகும். அதுலாம் தரக்கூடிய உணர்வைதான் ஃபீல்குட்னு சொல்லுவாங்க.

துப்பாக்கி காஜல் அகர்வால்

விஜய் படத்துலதான் இந்த மாதிரி நிறைய கேரக்டர்ஸ் இருக்கும்போல. மாஸ்டர்ஸ்ல வர்ற 2 பசங்களைகூட சொல்லலாம். அதுக்கு அடுத்து வர்றேன். துப்பாக்கில காஜல் பைக் கீயை எடுத்துட்டு போய்டுவாங்க. அந்த நேரத்துலதான் பஸ்ல விஜய்யும் அவர் ஃப்ரண்டும் ஏறி போவாங்க. அப்போதான், தீவிரவாதியை புடிப்பாங்க. கதைல டர்னிங் பாயிண்ட் வரும். விறுவிறுப்பா போகும். காஜல் அகர்வால் மட்டும் கீயை எடுக்கல. அந்தக் கதையே இல்லைனுதான் சொல்லணும்.

மாஸ்டர்ல வர்ற பசங்க

லோகேஷ் படங்கள் எல்லாத்துலயும் இந்த மாதிரி ஒரு கேரக்டர் இருக்கும். மாநகரம்ல குட்டிப்பையன், கைதில பொண்ணு, மாஸ்டர்ல ஹோம்ல விஜய் சேதுபதி கொல்ற பசங்க, விக்ரம்ல கமல் பேரன், அவர் பையன்னு சொல்லிட்டே போகலாம். அவங்கதான் கதையோட பேஸாவே இருப்பாங்க. மாஸ்டர்ல அந்த பையனுங்கள கொன்ன பிறகுதான் விஜய் டிரான்ஸ்ஃபர்மேஷனாகி விஜய் சேதுபதி சாம்ராஜ்ஜியத்தை அடி வெளுப்பாரு. கமல் தன்னோட பையன கொன்ன பிறகு, பேரனை காப்பாத்தனும்னுதான் வெளிய கர்ணன்ன்ற பெயர்ல இருந்து வருவாரு. அதேமாதிரி நான் லிவிங் திங் ஒண்ணு, எமோஷனா அவரோட படங்கள்ல இருக்கும். கைதில கம்மல், மாஸ்டர்ல பசங்க எழுதுன லெட்டர் எல்லாம்.

தமிழ்படம்ல மறு, சிவாஜில ஒரு ரூபாய் காயின்னு ஏகப்பட்ட விஷயங்களை சொல்லிட்டு போய்கிட்டே இருக்கலாம். எல்லாமே சின்ன விஷயங்கள்தான். அதுதான் மிகப்பெரிய இம்பாக்ட்டை கிரியேட் பண்ணியிருக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top