இன்னைக்கு நிறைய பொண்ணுங்களோட க்ரஷ், நானிதான். எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அதை பக்காவா பண்ணக்கூடிய நானிக்கு ஹேட்டர்ஸ்னு யாருமே இல்லை. அவரை எல்லாருக்குமே புடிக்கும். எல்லாரையும் நடிப்பால தன்வசப்படுத்திய நானிக்கு முதல்ல நடிகனாக முடியும்னு நம்பிக்கையே இல்லை. அப்போ அவரோட கனவு என்னவா இருந்துச்சு தெரியுமா? நானியோட உண்மையான பெயர் என்ன? நானிக்கு ‘நேச்சுரல் ஆக்டர்’னு பட்டம் கொடுத்தது தமிழ் டைரக்டர்தா. அவர் யாரு? நானியை சிவகார்த்திகேயனோட கம்பேர் பண்ணுவாங்க. ஏன்? இதெல்லாம் பத்திதான் இந்த வீடியோல நாம தெரிஞ்சுக்கப்போறோம்.
ஹைதராபாத்ல பிறந்து வளர்ந்தவர்தான், நானி. ஸ்கூல், காலேஜ் எல்லாம் படிச்சது ஹைதராபாத்லதான். இவரோட உண்மையான பெயர், நவீன் பாபு காந்தா. வீட்டுல செல்லமா இவரை ‘நானி’னு கூப்பிடுவாங்க. சின்ன வயசுல இருந்தே சினிமானா நானிக்கு அவ்வளவு புடிக்கும். நிறைய படங்கள்லாம் பார்த்துட்டு எப்படியாவது நடிக்கப் போகணும்ன்ற கனவோடதான் சின்ன வயசுலலாம் இருந்துருக்காரு. கொஞ்சம் வளர்ந்து மெச்சூரிட்டி வந்ததுக்கு அப்புறம், ‘நம்மளால உண்மையிலேயே நடிகன் ஆக முடியுமா?’னு யோசிச்சிருக்காரு. சினிமா பேக்ரௌண்ட் இல்லை, சினிமால யாரையும் தெரியாது, யாரும் ரெக்கமண்ட் பண்ணவும் மாட்டாங்க, எல்லாத்தையும் தாண்டி ஒரு ஹீரோக்கான லுக்கும் நமக்கு இல்லைனு ஒவ்வொன்னா நினைச்சு நடிக்கணும்ன்ற ஆசையை விட்டுட்டாரு. இருந்தாலும் சினிமா மேல உள்ள காதல் கொஞ்சம்கூட குறையல.

நடிகனா ஆகுறதுக்குதான தகுதி நிறைய வேணும். டைரக்டர் ஆகுறதுக்கு டேலண்ட் மட்டும்போதும்னு முடிவு பண்ணி, டைரக்டர் ஆகலாம்னு நினைச்சு அந்த முயற்சில இறங்கியிருக்காரு. அவரோட கஸின்ஸ் எல்லாருமே வெளிநாட்டுல படிக்கிறாங்களாம். அவரோட ஃபேமிலல யூஸ்லெஸ் ஆன ஆளுனா அது நானி மட்டும்தானாம். சினிமாவைத் தவிர வேற எதுக்கும் சரிபட்டு வரமாட்டேன்னு முடிவும் பண்ணியிருக்காரி. நானி மிகப்பெரிய மணிரத்னத்தோட ஃபேன். அவர் வைக்கிற ஃப்ரேம்ல இருந்து டயலாக் வரை ஒவ்வொன்னையும் நோட் பண்ணுவாராம். நானி டைரக்டர் ஆகுறதுக்கு விதை போட்டதுல மணிரத்னம் முக்கியமான காரணம்னு சொல்லலாம். அப்புறம் அஸிஸ்டெண்ட் டைரக்டரா யார்கிட்டயாவது சேர முடியுமானு நிறைய கம்பெனிகள் ஏறி, இறங்கியிருக்காரு.
டாலிவுட்ல ஃபேமஸ் டைரக்டரான பாபு இயக்கிய ‘ராதா கோபாலம்’ படத்துல கிளாப் அஸிஸ்டண்டா ஜாயின் பண்ண நானிக்கு அப்போ வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஃபஸ்ட் டைம் இன்டஸ்ட்ரீக்குள்ள என்டர் ஆகியிருக்காரு. அங்கதான் நிறைய விஷயங்களைப் பார்த்து கவனிக்க ஆரம்பிச்சிருக்காரு. படிக்கும்போதே இந்த மாதிரி சின்ன சின்ன வேலைகள்லாம் பார்க்க ஆரம்பிச்சிட்டாரு. அஸிஸ்டண்ட் டைரக்டரா அல்லாரி புல்லோடு, தீ, அஸ்ட்ரம் படங்கள்ல வொர்க் பண்னியிருக்காரு. டிகிரி படிச்சு முடிச்சதும் அவரோட ஃப்ரெண்ட் நந்தினி, அவங்க வேலை பார்த்த எஃப்.எம்ல ஆர்.ஜே வேலை ஒண்ணு இருக்கு ஜாயின் பண்றியானு கேட்ருக்காங்க. அவரும் அந்த ஆஃபரை அக்சப்ட் பண்ணிக்கிட்டு விசாகப்பட்டிணத்துல ஆர்.ஜே-வா ஜாயின் பண்ணியிருக்காரு. ‘நான் ஸ்டாப் நானி’னு ஒரு ஷோவை நடத்தியிருக்காரு. மக்கள் மத்தியில செம ஹிட். இந்த ஷோல நானி ஃபிலிம் பத்தி நிறைய விஷயங்கள் பேசுவாராம். அப்படியே டைரக்டர் ஆகுறதுக்காக ஸ்கிரிப்ட் எழுதுற வேலைலயும் இருந்துருக்காரு.

நானியோட ஃப்ரெண்ட் நந்தினிக்கும் சினிமால டைரக்டர் ஆகணும்னுதான் ஆசை. அதுக்கு முன்னாடி சின்ன சின்ன விளம்பரங்களை எடுத்துட்டு இருந்தாங்க. அப்படி ஒருநாள் ஷூட்டிங்ல வேற வழியில்லாமல் நானி நடிக்க வேண்டிய நிலைமை வந்துருக்கு. முதல்ல முடியவே முடியாதுனுதான் சொல்லியிருக்காரு. அப்புறம் ஒருவழியா கன்வைன்ஸ் பண்ணி நடிக்க வைச்சிருக்காங்க. அந்த விளம்பரம் பார்த்துட்டு இயக்குநர் மோகன் கிருஷ்ண இந்திராகாந்தி தன்னோட முதல் படத்துல நானியை இரண்டாவது ஹீரோவா நடிக்க கமிட் பண்ணியிருக்காரு. ஆனால், கொஞ்சம் நாள் போனதும் அவர்தான் முதல் ஹீரோனு சொல்லியிருக்காரு. அதைக் கேட்டு ரொம்பவே பதற்றம் ஆகியிருக்காரு. அப்புறம் நானி அந்த புராஸஸ எஞ்சாய் பண்ண ஆரம்பிச்சிட்டாரு. இவர் முதல் படத்தோட பெயர், ‘அஸ்தா சம்மா’. ஷூட்டிங் அப்போ டைரக்டர்கிட்ட திரும்ப திரும்ப, “நான்தான் லீட் ரோல்ல நடிக்கணுமா? மக்கள் பார்க்க வருவாங்களா?” அப்டினு கேப்பாராம்.
முதல் படம் ரிலீஸ்க்கு முன்னாடி, “நான் யாருனு மக்களுக்கு தெரியாது. என் படத்தை ஏன் அவங்க பார்க்க வரணும்?”னு கேள்வி ஓடிட்டே இருந்துருக்கு. முதல் நாள் ஒரு தியேட்டருக்கு டீமோட போய்ருக்காரு. 11:45-க்கு முதல் ஷோ. 11:40-க்கு எல்லாரும் அங்க இருக்காங்க. தியேட்டர் வெளிய ஒரு ஆள்கூட இல்லையாம். கூட வந்தவங்க அதை நினைச்சு கவலை ஒண்ணும் படாமல் அமைதியா நின்னுட்டு இருந்துருக்காங்க. நானிக்கு என்ன நடக்குது படத்துக்கு ஒருத்தர்கூட வரலையேனு கவலை. கொஞ்சம் நேரத்துல தியேட்டருக்கு உள்ள இருந்து மக்கள் கத்துற சவுண்ட்லாம் கேட்ருக்கு. நானிக்கு செம சந்தோஷம். எப்படியும் 800 சீட் உள்ள அந்த தியேட்டர்ல 300, 400 பேர் இருப்பாங்கனு நினைச்சிருக்காரு. உள்ளப் போய் பார்த்தா 80% சீட் ஃபுல் ஆயிருக்கு. அப்போதான் இவருக்கு ஒரு கான்ஃபிடன்டே வந்துருக்கு. பாக்ஸ் ஆஃபிஸ்லயும் செம ஹிட்டு இந்தப் படம்.

தெலுங்குல அதுக்கப்புறம் இவர் நடிச்ச படங்கள் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வந்துச்சு. வெண்ணிலா கபடிக் குழு படத்தோட தெலுங்கு வெர்ஷன்ல நடிச்சாரு. அதுவும் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆச்சு. அலா மொடலைண்டி, பில்லா சமீண்டார் படங்களும் நல்ல வரவேற்பை பெற்றுச்சு. இதுல அலா மொடலைண்டி படம் அவரோட பெஸ்ட் ஃப்ரெண்ட் நந்தினி டைரக்ட பண்ண படம். நானிக்கு நிறைய ஆடியன்ஸை ஏற்படுத்திக் கொடுத்தப் படம்னா அது ‘நான் ஈ’தான். இந்தப் படத்துல கொஞ்சம் நேரம்தான் வருவாரு. அந்த கொஞ்சம் நேரத்துலயே செம பெர்ஃபாமன்ஸ் ஒண்ணை காட்டிருப்பாரு. செம சார்மிங்கா இருப்பாரு. ராஜமௌலி இந்த படத்துல நடிக்க நானியை கூப்பிட்டு அனிமேஷன் படம் எடுக்கப்போறேன்னு சொல்லியிருக்காரு. நானிக்கு அனிமேஷன் படம்னா ரொம்ப புடிக்கும். ஏற்கெனவே, இவர் இதைப் பத்தி கேள்விபட்டதும், ‘என்னோட வாய்ஸ்காகதான் என்னைக் கூப்பிடுறாருபோல’னு நினைச்சு செம சந்தோஷப்பட்ருக்காரு.
”நான் ஈ படத்துல அந்த ஈ-க்கு வாய்ஸ்லாம் இல்லை. ஈ எப்படி பேசும்?”னு ராஜமௌலி கேட்டு நானிகிட்ட இதுதான் கதைனு ராஜமௌலி சொன்னதும் செம மூட் அவுட் ஆகியிருக்காரு. இதுக்கடுத்து ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தோட தெலுங்கு வெர்ஷன்ல நடிச்சாரு. அதுக்கப்புறம் வந்த படங்கல் எல்லாமே கலவையான விமர்சனங்களைதான் கொடுத்துச்சு. சில படங்கள் ஃப்ளாப்பும் ஆச்சு. ஆனால், 2015 க்கு அப்புறம் நானியோட ஆட்சினே சொல்லலாம். சமுத்திரகனி டைரக்ஷன்ல நிமிர்ந்து நில் படத்தோட தெலுங்கு வெர்ஷன்ல நடிச்சாரு. செம ஹிட் ஆச்சு. அந்தப் படத்துலதான் ஃபஸ்ட் சமுத்திரகனி நானிக்கு ‘நேச்சுரல் ஆக்டர்’னு பட்டம் ஒண்ணு போட்டாரு. அதுக்கு அடுத்து இயக்குநர் மாருதி இயக்கத்துல ‘பலே பலே மகாதிவோய்’னு படம் நடிச்சாரு. செம ஹிட்டு இந்தப் படம். இதுலதான் ஃபஸ்ட் ‘நேச்சுரல் ஸ்டார்’னு டைட்டில் போட்டாங்க. நானிக்கு பொதுவா இந்த டைட்டில்லலாம் நம்பிக்கை இல்லை. ஆனால், யாரும் கேக்கலை. தொடர்ந்து சோஷியல் மீடியாலலாம் அப்படியே கூப்ட ஆரம்பிச்சாங்க. அந்தப் பெயர் அவருக்கே சொந்தமாகிடுச்சு.

ஜெண்டில்மேன், நேனு லோக்கல், மிடில் கிளாஸ் அப்பாயினு தொடர்ந்து ஹிட் கொடுக்க ஆரம்பிச்சாரு. அவரை வேறலெவல்ல சூப்பர் ஸ்டாரா தூக்கி நிறுத்துன படம்னா அது ‘ஜெர்ஸி’தான். என்னோட பெர்சனல் ஃபேவரைட்டும் இந்தப் படம்தான். அந்தப் படத்தை நிறைய மொழிகள்ல ரீமேக் பண்ணியிருக்காங்க. படம் பார்த்து முடிச்சதும் ஒரு வைப் வரும்ல செமயா இருக்கு. எல்லா எமோஷன்லயும் மனுஷன் கலக்கி எடுத்துருப்பாரு. அதுக்கு அடுத்த அவர் நடிச்சப் படமும் வொர்த்து. கேங் லீடர். இந்தப் படத்துலயும் செமயா கலக்கியிருப்பாரு. ஆக்ஷன்லாம் செமயா இருக்கும். நேச்சுரலான ஒரு ஆக்டிங்கை எல்லாப் படத்துலயும் கொடுக்குறதாலதான் அவருக்கு அந்த டைட்டில் கார்டே. தெலுங்கு சினிமான ஏர்லயேதான் பறப்பாங்கனு சொல்ற பேச்சு ஒண்ணு இருக்கு. அதை மாத்துன நடிகர்கள்ல நானியும் ஒருத்தர்.
ஷ்யாம் சிங்கா ராய் படத்துல அதுக்கு முன்னாடி வந்த படங்களைவிட வேற மாதிரியான ஆக்டிங்கை வெளிப்படுத்தியிருப்பாரு. அதேமாதிரி சமீபத்துல வந்த அன்டே சுந்தரானிகியும் பார்க்குறதுக்கு வொர்த்து. நானி வாய்ஸும் செமயா இருக்கும். ஓகே பங்காரம் படத்துக்கு துல்கர் சல்மானுக்கு வாய்ஸ் கொடுத்தது நானிதான். அப்படியே டி.வி பக்கமும் போய் தெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்குனாரு. அதுவும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுச்சு. புதிய டைரக்டர்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்னு தயாரிப்புலயும் கவனம் செலுத்துறாரு. நல்ல படங்களையும் இப்போ தயாரிச்சுட்டு இருக்காரு. ஆர்.ஜே-வா இருந்து இன்னைக்கு தெலுங்கு சினிமால சூப்பர் ஸ்டாரா வளர்ந்துருக்காரு, நானி. இந்த உயரத்தைப் பார்த்து டோலிவுட், கோலிவுட் ரசிகர்கள் அவரை தெலுங்கு சினிமாவின் சிவகார்த்திகேயன்னு சொல்லுவாங்க. நானி இன்னும் பல நல்ல படங்களை இந்திய சினிமாவுக்குத் தரணும்.
நானி எந்த தமிழ் டைரக்டரோட சேர்ந்தா மாஸா இருக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!



For most up-to-date news you have to go to see world-wide-web and on internet I found this site
as a best website for hottest updates. https://bookofdead34.wordpress.com/
Tham gia cộng đồng game thủ tại Go88 để trải nghiệm các trò chơi bài, poker phổ biến nhất hiện nay.
kuwin sở hữu kho game đa dạng từ slot đến trò chơi bài đổi thưởng, mang đến cho bạn những giây phút giải trí tuyệt vời.