பவன் கல்யாண்

`கராத்தே பிளாக் பெல்ட்; 2014 தேர்தல்’ – `பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் பற்றிய 9 சுவாரஸ்யங்கள்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான `பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் பற்றிய 9 சுவாரஸ்யத் தகவல்கள்..!

  • பவன் கல்யாணின் உண்மையான பெயர் `கொனிடேலா கல்யாண் பாபு’. தான் கற்றுத்தேர்ந்த கராத்தே கலையைப் பற்றி அவர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றுக்குப் பின்னர் பவன் என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
  • டோலிவுட்டின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் இளைய சகோதரரான பவனுக்கு சினிமா இயக்குவதில்தான் தீவிர ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால், ஹீரோவாக நடியுங்கள் என சிரஞ்சீவியின் மனைவி சுரேகா ஆலோசனை சொன்னதை அடுத்து நடிக்க வந்திருக்கிறார்.
பவன் கல்யாண் - சிரஞ்சீவி
பவன் கல்யாண் – சிரஞ்சீவி
  • 1996-ல் வெளியான `Akkada Ammayi Ikkada Abbayi’ படம் மூலம் நடிகராக அறிமுகமானர். இவரது நான்காவது படமானTholi Prema’ சிறந்த தெலுங்குப் படத்துக்கான தேசிய விருதோடு, ஆந்திர அரசின் 6 நந்தி விருதுகளையும் வென்றது.
  • கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றிருப்பவர். மார்ஷியல் ஆட்ர்ஸில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் பவன் கல்யாண், தனது படங்களான Khushi’,Teen Maar’ மற்றும் `Badri’ ஆகிய படங்களுக்கு ஸ்டண்ட் கொரியோகிராஃபராகவும் பணியாற்றியிருக்கிறார்.
  • சேகுவராவின் தீவிர ரசிகரான பவன், ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் இருக்கும் தோட்டத்தில் பழங்கள், காய்கறிகளை வளர்த்து வருகிறார்.
  • மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கு அவர், 2014-ல் `ஜனசேனா’ என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி, தெலுங்குதேசம், பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டார்.
  • 2014 மக்களவைத் தேர்தலின்போது கூகுளில் அதிகம் தேடப்பட்ட அரசியல் பிரபலம்.
  • 2013-ல் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட `Top 100 Celebrities’ பட்டியலில் பவனுக்கு 30-வது இடம் அளிக்கப்பட்டிருந்தது.
  • நடிகர், இயக்குநர், ஸ்டண்ட் கொரியோகிராஃபர், திரைக்கதையாசிரியர் என பன்முகம் கொண்டவர். 2003-ல் ஸ்போர்ட்ஸ் டிராமாவான Johnny படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆந்திராவில் முதல்முறையாக 250 தியேட்டர்களில் வெளியான அந்தப் படம், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

Also Read – `தேனிசைத் தென்றல்’ தேவா ரசிகர்களே… அவரைப் பற்றி உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்? #Quiz

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top