வைகோ

`கண்ணா எனக்கு இன்னொரு பேர் இருக்கு…’ – வைகோ பார்லிமெண்ட் சம்பவங்கள்!

எனக்கு இன்னொரு பேர் இருக்கு’னு பாட்ஷா ரஜினி டயலாக் அரசியல்வாதிகள்ல வைகோவுக்குப் பொருந்திப் போகும்னே சொல்லலாம். தேர்தல் அரசியலில் ராசியில்லாத ராஜா, கூட்டணிகளை மாற்றிக்கொண்டே இருப்பவர்னு வைகோவை சிலர் அடையாளப்படுத்தலாம். ஆனால், நாடாளுமன்றத்தில் அவர் சிறப்பான, தரமான சம்பவங்கள் பலவற்றை செஞ்சு காட்டி, `Parliament Tiger’னு பேர் வாங்குனவர். நாடாளுமன்றப் புலினு அவரைக் கொண்டாடியிருக்காங்க. இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய், ராஜீவ்காந்தி தொடங்கி இன்னிக்கு பிரதமர் மோடி வரைக்கும் பிரதமர்களுக்கே அவரோட உரைகள் சிம்ம சொப்பனம்தான். பார்லிமெண்ட்ல வைகோ பண்ண சம்பவங்களைப் பத்திதான் நாம பார்க்கப்போறோம்.

வைகோ

நாடாளுமன்றத்துல வைகோவோட குரல் 1978-,மே 2-ம் தேதிதான் முதல்முறையா ஒலிச்சது. மத்திய – மாநில உறவுகள் குறித்த தனிநபர் மசோதா ஒன்றில், முதல் பேச்சை அவர் பேசியிருந்தார். 1996 வரைக்குமே நாடாளுமன்றத்தில் மாநில உரிமைகள், இந்தி எதிர்ப்பு, காவிரி பிரச்னை, ஈழத் தமிழர் பிரச்னை, முல்லைப் பெரியாறு விவகாரம்னு தமிழ்நாடு, தமிழர் நலன் சார்ந்து அவரோட வாய்ஸ் ஒலிச்சுட்டே இருந்துச்சு. எம்பியான முதல் வருஷத்துலேயே முக்கியமான சம்பவம் பண்ணார். இந்தி எதிர்ப்புக்கு எதிரா முரசொலி மாறன் கொண்டு வந்த மசோதா பத்தி பேசுன அவர், மத்திய அரசு அவருக்கு இந்தியில் அனுப்பியிருந்த லெட்டரை கிழித்து எறிந்தார். அத்தோடு, `இதேபோல் இந்தித் திணிப்பு முயற்சிகளை தமிழ்நாட்டு மக்கள் கிழித்தெறிவார்கள்’ என்று பிரதமர் மொரார்ஜி தேசாயை நோக்கி காட்டமாகக் குறிப்பிட்டார்.

1984 காலகட்டத்தில் இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றிச் சென்ற விமானத்துக்கு திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பியது சர்ச்சையானது. இதுபற்றிய விவாதத்தில் பிரதமர் ராஜீவ் காந்தி, அந்த ஆயுதங்களில் இலங்கைத் தமிழர் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை’ என்றார். அதற்கு,உங்கள் அம்மா இந்திரா காந்தியைத் துளைத்த குண்டுகளிலும் இந்திரா காந்தி என்று பெயர் எழுதப்பட்டிருக்கவில்லை’னு சொல்லி ராஜீவ்காந்தியையே அதிரவைத்தார். ஒரு கட்டத்தில் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற முயன்ற அவரை, `Mr. Rajiv Gandhi don’t run away. Answer my question and then go’ என்று பெயரைக் குறிப்பிட்டு சீறியிருந்தார் வைகோ.

வைகோ

வைகோவோட உரைவீச்சைக் கேட்டு இந்திரா காந்தியே ஒருமுறை, காங்கிரஸின் 200 எம்.பிகளுக்கு வைகோ ஒருவர் சமம்’ என்று பாராட்டியிருந்தார். அதேபோல், சங்கர்தயாள் ஷர்மா அவைத் தலைவராக மாநிலங்களவைக்கு முதன்முறை வந்திருந்த சமயத்தில், ஈழ விவகாரம் தொடர்பாக வைகோ பேசத் தொடங்கினார்.கேள்வி நேரம் வரை பொறுமையா இருங்கள்’ என்று அவர் சொல்லவே, `எங்கள் மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், கேள்வி நேரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள்’ என்று முழங்கினார். அப்போது வைகோவை அவையை விட்டு வெளியேற்றிய அதே சங்கர் தயாள், பின்னாட்களில் வைகோவுடன் நெருங்கிய நட்பு பாராட்டினார்.

2022ல மறுபடியும் எம்பியானப்போ பழைய மாதிரி அவரால இருக்க முடியுமானு எழுந்த விமர்சனங்களுக்கு முதல் கூட்டத்தொடரிலேயே பதில் கொடுத்தார் வைகோ. ஜவுளித் துறை விவாதத்தில் பேசிய அவர், அவைத்தலைவர் அவர்களே, 23 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த மேலவையில் கன்னி உரையாக முதல் துணைக்கேள்வி எழுப்ப வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி’ என்று குறிப்பிட்டார். அப்போது பிரதமர் மோடி, மேசையைத் தட்டி வரவேற்றிருந்தார்.நீங்கள், இந்து ராஷ்டிரவெறியர்கள். உங்கள் கூச்சலுக்கு நான் அஞ்சமாட்டேன். இந்தியை எதிர்த்து இந்திய அரசியல் சட்டத்தை எரித்து ஜெயிலுக்குப் போனவன் நான்’ என்றும் கொந்தளித்தார். காஷ்மீர் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் தனியாளாக அவையின் நடுப்பகுதிக்குச் சென்று எதிர்ப்பைப் பதிவு செய்தபோது, வைகோவுக்கு பேச அனுமதி கொடுங்கள்’ என்று அமித் ஷா குறிப்பிட்டார்.காஷ்மீர் பிரச்னையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பி.ஜே.பி இனி தீர்வு காணவே முடியாத கொடுமையான தவறைச் செய்துவிட்டது’ என்று ஆக்ரோஷமாகப் பேசினார். அதேபோல், `Vaiko is a Ferocious Speaker in the whole Country’ என்று அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஒருமுறை பதிவு செய்திருந்தார்.

வைகோ

“நமக்காக பேச நாதியில்லை என யார், யார் இந்த நாட்டிலே கவலைப்படுகிறார்களோ, நம் ஓலக்குரலை எடுத்துச் சொல்வதற்கு ஒருவருமில்லை என வேதனைப்படுகிறார்களோ, ஆதரவற்றவர்களாக, திக்கற்றவர்களாக எவரெல்லாம் துன்பப்படுகிறார்களோ அவர்களுக்காக நான் நாடாளுமன்றத்தில் பேசுவேன்…’’- முதல்முறையாக எம்.பியாவதற்கு முன்பு தான் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டதாக வைகோ சொல்லியிருந்தார்.

Also Read – “ஸ்மைலிக்கெல்லாம் அக்கப்போரா…. உதயநிதி தக்லைஃப் மொமண்ட்ஸ்!”

`தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்றவர் எம்பியாகக் கூடாது’னு வைகோவுக்கு எம்பிக்களான சசிகலா புஷ்பாவும், சுப்ரமணியன் சுவாமியும் எதிர்ப்புத் தெரிவித்தனர். முதல்நாள் நாடாளுமன்ற சென்ற வைகோ, வளாகத்தில் இருந்த தமிழகத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தியபோது, எதேச்சையாக அந்த வழியாக வந்த சுப்ரமணியன் சுவாமி, வைகோவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அப்போ, `என்ன சுவாமி சௌக்கியமா. பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சு’னு தக்லைஃப் பண்ணிருந்தார்.

நாடாளுமன்றத்துல வைகோ பண்ண சம்பவங்கள்லயே எது மாஸ்னு நீங்க நினைக்கிறீங்க. அதை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top