மோஷன் போஸ்டர்

தமிழ் சினிமாவின் டாப் 10 மோஷன் போஸ்டர்கள்!

தமிழ் சினிமாவில் இன்றைக்கு படம் ரிலீஸ் அவதற்கு முன்பு படத்தை பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தவும் ரசிகர் பட்டாளம் உள்ள நடிகர்களின் ரசுகர்களை திருப்தி படுத்தவும் ஃபஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர், டிரெய்லர் மற்றும் ஸ்நீக் பீக் என்று பல விஷயங்களை வெளியிடுவார்கள். இவை சமூக வலைதளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வைரலாக்கி விடுவார்கள். ஆனால், முன்பெல்லாம் படத்தைப் பற்றிய போஸ்டர் ஒன்றும் ட்ரெய்லர் கட் ஒன்றும் மட்டும்தான் வெளியிடுவார்கள். இந்த நிலையில், சமீபத்தில் வெளியான வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எனினும், நீண்ட நாளாக அப்டேட் கேட்டு விரக்தியில் இருந்த நடிகர் அஜித்தின் ரசிகர்களுக்கு இந்த மோஷன் போஸ்டர் கொஞ்சம் ஆசுவாசத்தைக் கொடுத்தது என்றே கூறலாம். அந்த வகையில், ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஃபேமஸான மோஷன் போஸ்டர்களை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம். 

விஸ்வாசம்

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம், விஸ்வாசம். `தூக்குத்துரைனா அடாவடி.. தூக்குத்துரைனா அலப்பறை.. தூக்குத்துரைனா தடாலடி.. தூக்குத்துரைனா கட்டுக்கடங்காத கிராமத்து காட்டு அடி’ – அப்டினு மாஸான டயலாக்கோட வெளியான மோஷன் போஸ்டர் இது. அஜித் ரசிகர்களின் ஒன் ஆஃப் தி ஃபேவரைட் மோஷன் போஸ்டர்னு சொல்லலாம். இதுவரைக்கும் சுமார் 11 மில்லியன் மக்கள் இந்த மோஷன் போஸ்டரை பார்வையிட்டுள்ளனர்.

காஞ்சனா 3

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அவருடைய நடிப்பிலேயே கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா 3. இந்தப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இதுவரைக்கும் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை சுமார் 11 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

தர்பார்

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தர்பார். செமயான ஆக்‌ஷன் மோஷன் போஸ்டராக தர்பார் இருக்கும். அனிருத்தின் மாஸான இசையில் ரஜினியின் ஸ்டைலிஷான போலீஸ் லுக்கில் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் பட்டையை கிளப்பியிருக்கும். இதுவரை சுமார் 9.7 மில்லியன் மக்கள் இந்த மோஷன் போஸ்டரை பார்வையிட்டுள்ளனர்.

வலிமை

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதுவரை வலிமை மோஷன் போஸ்டரை சுமார் 7.7 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

பேட்ட

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பேட்ட. கலர்ஃபுல்லான ஒரு மோஷன் போஸ்டர் இது. ரஜினி இந்தப் படத்திலும் செம ஸ்டைலிஷாக இருப்பார். அனிருத்தின் இசையில் வெளியான இந்த மோஷன் போஸ்டரை 7.2 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

அண்ணாத்த

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இதுவரை சுமார் 6.2 மில்லியன் மக்கள் இந்த மோஷன் போஸ்டரை பார்வையிட்டுள்ளனர்.

சாமி 2

ஹரியின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சாமி 2. ஹரியின் படங்களில் இருக்கும் அதே எனர்ஜி அவரின் மோஷன் போஸ்டரிலும் இருக்கும். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் வெளியான இந்த மோஷன் போஸ்டரை இதுவரை சுமார் 5.2 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

ஜகமே தந்திரம்

கார்த்திம் சுப்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம். இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதுவரை இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை சுமார் 5.2 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

கத்தி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் அவரது ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட். இதுவரைக்கும் சுமார் 5.1 மில்லியன் மக்கள் இந்த மோஷன் போஸ்டரை பார்த்துள்ளனர். அனிருத்தின் இசை இந்த மோஷன் போஸ்டரில் வேற லெவலில் இருக்கும்.

மாநாடு

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் மாநாடு. இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை இதுவரை சுமார் 3.2 மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

Also Read : லயோலா நட்பு… வீக்லி மீட்டிங்… விஜய்யின் ஃப்ரண்ட்ஸ் கேங்கைத் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top