விஜய், ஹரிஷ் கல்யாண் வீடுகள்ல இதுதான் ஸ்பெஷல் – செலிபிரெட்டி வீடு எப்படி இருக்கும்?

யூட்யூபில் Celebrities luxury Life-னு பல வீடியோக்கள் பார்த்திருப்போம். செலிபிரெட்டி வீடு எப்படி இருக்கும்… வீட்டுக்குள்ள 10 கார் இருக்கு, 10 பைக் இருக்குனு அடிச்சு விடுற தகவலாவே இருக்கும். ஆனால், உண்மையிலேயே என்ன இருக்குனு பல பேருக்குத் தெரியாது. அதனால இந்த வீடியோவுல ஒவ்வொரு செலிப்ரிட்டிகள் வீட்ல இருக்குற விஷேசமான பொருட்களைத்தான் இப்போ பார்க்கப் போறோம்.

Vijay House
Vijay House

முதல்ல தளபதி விஜய் வீட்ல இருக்குற ரெண்டு ஸ்பெஷல் விஷயங்களைப் பார்க்கலாம். ஒண்ணு அவர் பிரியமுடன் படத்துல இருக்கும்போது உடல்ல ஏற்பட்ட சின்ன ப்ராப்ளத்தால வெயிட் லிப்டிங் பண்ணக்கூடாதுனு மருத்துவர்கள் சொல்லிட்டாங்களாம். அதனால எப்பவுமே வீட்ல ரெண்டு தம்பிள்ஸ் மட்டும் வச்சு உடற்பயிற்சி செய்துகிட்டு வர்றார். இதுதான் அவரோட தினசரி முக்கியமான உடற்பயிற்சி. அப்புறம் எப்படி திமிங்கலம் ஸ்லிம்மா இருக்காருனு நீங்க நினைக்கிறது கேட்குறது. உணவு விஷயத்துல அவர் காட்டுற அக்கறைதான் அதுக்கு முக்கியமான காரணம். ரெண்டாவது வீடல் தோசைக்கலும், மாவும் எப்பவுமே இருக்கும். இவர் ஒரு தோசைப் பிரியர். மூணு வேளையும் தோசை கொடுத்தாலும் சாப்பிடுவார்னு மனைவியே ஒரு பேட்டியில சொல்லியிருக்காங்க. தானே தோசை சுட்டு சாப்பிறதுலதான் திருப்தி கிடைக்குதுனு நண்பர்கள் வட்டாரத்துல பேசிக்கிறாங்க.

Seeman
Seeman

அடுத்ததா நாம் தமிழர் சீமான்… இவரோட வீட்டு பூஜை அறை மாதிரி வேற எங்கயும் பூஜை அறையை பார்க்க முடியாது. கடவுளா திருவள்ளுவர் சிலை வச்சு வழிபட்டுகிட்டு வர்றார். இதுதான் தமிழர்கள் பின்பற்றியிருக்க வேண்டிய வேதம்னு அடிக்கடி தன் நண்பர்கள்கிட்ட சொல்றார். அதேபோல விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் அஸ்தியும், ஈழத்துக்காக தமிழகத்தில் தீக்குளித்து உயிரிழந்த முத்துக்குமார் அஸ்தி, அப்புறம் சீமானோட வீட்டு பிடி மண்னு பூஜை அறைகள்ல வச்சிருக்கார். இதுபோக பிரபாகரனோட போட்டோவுல இருந்து பல போராளிகளோட புகைப்படங்களை பூஜை அறையில அடுக்கி வச்சிருக்கார். இவர் வீட்டு பூஜை அறையில இருக்கிற ஒரே கடவுள் முருகன் மட்டும்தான். வீட்டு சுவத்துல எப்பவுமே ஏர்கலப்பை மாட்டப்பட்டிருக்கும். இதுபோக வீரைய்யானு ஒரு நாயும், பூனை, வாத்து, கோழினு எல்லாத்தையும் வளர்த்துக்கிட்டு வர்றார்.

அடுத்து நம்ம ஹரிஷ் கல்யாண்… இவர் நடிகராகுறதுக்கு முன்னால இருந்தே நல்ல கீபோர்டு பிளேயர். சின்ன வயசுலயே கீபோர்டு வாங்கி கத்துக்கிட்டார். அப்பப்போ ஃப்ரீ டைம் கிடைக்கும்போது பாடலும் கம்போஸ் பண்ணுவாராம். ஏதாவது மூடவுட்னா இந்த ரூமுக்கு வந்து மியூசிக் கேட்குறது, கம்போஸ் பண்றதுனு வேலை பார்க்க ஆரம்பிப்பாராம். இதுக்கு இவர் வச்சிருக்கிற பேர் தெரபிக் ரூம். சீக்கிரமே இசையமைப்பாளர் அவதாரம் எடுக்கிறதுக்கும் வாய்ப்பு இருக்கு.

Andrea
Andrea

ஆண்ட்ரியா ஹோம், சமைக்கவே தெரியாது, ஆனா இப்போ ஆண்ட்ரியா கேக் செய்றதுல ஸ்பெஷலிஸ்ட். கேக் செய்ய ஸ்டார்ட் பண்ணிட்டா ஆண்ட்ரியா-க்கு அது தான் பிடித்தமான இடம். அதுக்கு அடுத்து அவங்க பியானோ வைத்திருக்கும் இடம். சோகமா இருந்த இங்க வந்து வாசிக்க ரொம்ப பிடிக்குமாம். வீட்ல ஒரு ஷூ கடையே வெச்சிருக்காங்க. அப்படியே ஒரு காபியா போட்டு, கேக் சாப்பிட்டுக் கொண்டே பறவைகளோட கீச் கீச் ஒலியைக் கேட்டுட்டு பால்கனில நிக்குறது ஆண்ட்ரியாவக்கு ரொம்ப புடிச்ச விஷயமாம்.

முதலில் தொகுப்பாளினி மற்றும் நடிகை அர்ச்சனா-வின் வீடு. செலிபிரெட்டி வீடு எப்படியெல்லாம் இருக்கும்ங்குறதுக்கு இவங்க வீடு ஒரு உதாரணம். இதெல்லாம் எப்படி யோசிச்சு பண்ணுவிங்க, எங்க இந்த பொருட்கள்லாம் உங்களுக்கு மட்டும் கிடைக்குது-ன்னு வீட்டுக்கு வரவாங்க கேட்கும் அளவுக்கு வீட்டை செதுக்கி வெச்சு இருக்காங்க. அவங்க மாமியார் கொடுத்த குத்துவிளக்குல இருந்து அவங்க ஊஞ்சல் வரை எல்லாமே வீட்டில் கனகச்சிதமான இருக்கும். அர்ச்சனாக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ஒரு போட்டோ ஃப்ரேமும், 120 வருஷம் கிட்ட பழமையான அவங்க குத்துவிளக்கும் தான் ரொம்ப பிடிச்ச விஷயமாம். அந்த போட்டோவை யாரும் தொடைக்க கூட விட மாட்டாங்களாம். வீடு முழுக்க கலர் வால்பேப்பர் ஸ்டிக்கர்ஸ், புடிச்ச போட்டோஸ், குட்டி குட்டி தாவரங்கள்னு வீடு அவ்ளோ அம்சமா இருக்கு.

VJ Archana
VJ Archana

அடுத்து குக் வித் கோமாளி ஸ்ருத்திகா, சுத்தம்னா சுத்தம் அப்படி ஒரு சுத்தம். ஒரு இடத்தில் கூட குப்பை பார்க்க முடியாதுன்னு சவால் விடுறாங்க. ஹால்ல இருக்க சக்ரா ஓவியம்தான் இவங்க வீட்ல ஸ்பெஷல். வீடு முழுக்க பாரம்பரியமா இருக்க பொருட்கள், வீட்டுக்குள்ள இருக்க GYM-னு எல்லாமே கிளாஸா இருக்கு.

Also Read – லோகேஷ் கனகராஜின் ஃபேவரைட் படம்.. செலிபிரிட்டிகளின் Round Table அலப்பறைகள்!

பிக் பாஸ் சாக்க்ஷி, இவங்க வீடு முழுக்க எல்லாமே ராஜஸ்தான்- குஜராத் ஸ்டைல்ல இருக்கும். வீட்டில் இருக்கும் எல்லா மரப்பொருள்லயும் பாரம்பரியமான டிசைன்ஸ் இருக்கும். இதுக்கெல்லாம் காரணம் அவங்க அம்மா தான். சாக்க்ஷி அம்மாக்கு ரொம்ப Traditional-ல இருந்த தான் பிடிக்குமாம். வீடு முழுக்க அவங்க அம்மா இஷ்டம் போல பிளான் பண்ணி எல்லாத்தையும் வாங்கி போட்டு இருக்காங்க. அம்மாக்கு பெண்ணுக்கும் காபி, டீ குடிக்க ரொம்ப விருப்பம், அதுக்காக சில ஸ்பெஷல் காபி கப்புகள் விதவிதமா இருக்கு.

இதெல்லாம் என்ன பிரமாதம் நம்ப நெப்போலியன் சார் அமெரிக்காவில் கட்டி வெச்சு இருக்க வீட்டை பார்க்கணுமே. ஆத்தி….இன்ச் இன்ச்சா பார்த்து 1200 Sq.ft-ல நச்சுன்னு ஒரு வீடு. அத்தனைக்கும் ஒரு ஒரு ஸ்பெஷல் இருக்குன்னு சொல்லலாம். ஆட்டோமேட்டிக் மெஷின்ஸ் தொடங்கி சன் ரூம் வரை எல்லாமே டாப் கிளாஸ். அவங்க பையனுக்காக எல்லாத்தையும் பார்த்து பார்த்து டிசைன் பண்ணி இருக்காரு, வீட்லயே Basket Ball court, நீச்சல் குளம், Home Theatre-ன்னு வீடு அம்புட்டு வசதிகளோட இருக்கு. இதுல நெப்போலியனுக்கு புடிச்ச இடம், சன் ரூம் தான், கிளாஸ் சுவரால் அமைந்திருக்கும் அந்த ரூம்ல இருந்து சன் லைட் வெளிச்சத்தை பார்த்து ரசிக்க முடியும். ஒரு ரூம் நிறைய அவரோட Wardrobe தான். வீட்டில் இருக்கும் எல்லாருக்கும் தனித்தனி ரூம்ஸ். இந்தியாவுல இருந்து எடுத்து வரப்பட்ட சில பொருட்கள் வரை எல்லாமே பார்க்கவே அற்புதமான இருக்கு.

மேல பார்த்த ஒவ்வொரு பிரபலங்களுக்கும் வீட்ல ஒவ்வொண்ணு ஸ்பெஷலா இருக்கு. உங்களுக்கு உங்க வீட்டில் இருக்கும் எந்த பொருள் மனசுக்கு நெருக்கமானதுன்னு  கமெண்ட்ல சொல்லுங்க. செலிபிரெட்டி வீடு பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top